Monday, 29 November 2010

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

நாம் நமது கணினியில் டாக்குமெண்டுகள், புகைப்படங்கள், MP3 பாடலகள், வீடியோ க்ளிப் போன்ற பலவகையான கோப்புகளை வைத்திருப்போம். பல சமயங்களில் ஒரே கோப்பு உங்கள் வன் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ் மற்றும் ஃபோல்டர்களில் இருப்பதுண்டு. இதனால் உங்கள் வன் தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. 


இந்த பிரச்சனையை தீர்க்க பல கட்டணம் செலுத்த வேண்டிய மென்பொருட்கள் இருந்தாலும், ஒரு இலவச மென்பொருள் Duplicate Cleaner. வெறும்  3 எம்பி அளவுள்ள மிகவும் பயனுள்ள கருவி!. உங்கள் கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதன் Installation Wizard இல் Registry Reviver பகுதியில் Registry Cleaner தேவையில்லை என்றால், Do not Install Registry Reviver ஐ தேர்வு செய்து Install பொத்தானை அழுத்தி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

 

இந்த கருவியை இயக்கும் பொழுது, முதல் திரையில் எச்சரிக்கை செய்தியை வாசித்து, OK பொத்தானை அழுத்துங்கள்.


இப்பொழுது திறக்கும் Duplicate Cleaner திரையில், இடதுபுற பெட்டியில் தேவையான ட்ரைவ் மற்றும் கோப்புறைகளை தேர்வு செய்து அடுத்த பெட்டிக்கு ADD செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வலது புறமுள்ள File Search பகுதியில் உள்ள File Filter இல் கோப்பு வகையை கொடுங்கள் (Word கோப்பு எனில் *.DOC எனவும், படங்களுக்கு *.JPG.. )


பிறகு, கீழே உள்ள GO பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புகளின் அளவை பொறுத்து தேடும் வேகம் மாறுபடும்.


அடுத்த திரையில் தேடுதல் பணி முடிந்து விட்டதற்கான அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.


இனி தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை கவனமாக தேர்வு செய்து கீழே உள்ள பொத்தான்களில் தேவையானதை க்ளிக் செய்து, டூப்ளிகேட் கோப்புகளை உங்கள் கணினியிலிருந்து நீக்கி, உங்கள் வன் தட்டினை பராமரிக்கலாம்.





.

13 comments:

எஸ்.கே said...

பயனுள்ள தகவல்! நன்றி!

roshaniee said...

பயனுள்ள பகிர்வு தொடருங்கள்

பிரபாகர் said...

ரொம்ப உபயோகமா இருக்கும்... நீண்ட நாட்களாய் உபயோகித்து வருகிறேன். ஒரு பைலை காப்பி செய்து ரீநேம் செய்தாலும் சரியாய் டெலிட் செய்யும்...

பிரபாகர்...

Anonymous said...

Useful tips
Also visit
http://signincomputers.blogspot.com/

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

உபயோகமான பதிவு. நன்றி !

Unknown said...

அருமையான உபயோகமான தகவல் .. மிக்க நன்றி.. .தொடரட்டும் உங்கள் பணி.

சினிமா தரவிறக்கம் செய்து சேமிப்பது எப்படி என்று தகவல் தந்தால் நல்லது

மாணவன் said...

மிகவும் பயனுள்ள அவசியமான மென்பொருள் சார்,

பகிர்வுக்கு நன்றி

Speed Master said...

useful one thanks

S.முத்துவேல் said...

வணக்கம் நண்பரெ ..

மிக அற்புதமான பதிவு...

நன்றி ...

Raja said...

MP3 பிரியர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.

சங்கர் said...

நன்றி

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

Many thanks !!

ManonmaniAmman said...

ரொம்ப நல்ல தகவல் தமிழ் டப்பிங் பட இலவச தளம் சொல்லுங்களேன்

நன்றி!

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)