Showing posts with label பென் ட்ரைவ் ட்ரிக்ஸ். Show all posts
Showing posts with label பென் ட்ரைவ் ட்ரிக்ஸ். Show all posts

Wednesday, 3 August 2011

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 
பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 
ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 





டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 



.

Saturday, 27 November 2010

PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க

இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.





அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.




.

Tuesday, 26 October 2010

மைக்ரோசாப்ட் வேர்டு: பயனுள்ள Tabs நீட்சி!

மைக்ரோசாப்ட் Word 2007 பயன்பாட்டில் நாம் ஒரே சமயத்தில் பல்வேறு டாக்குமெண்டுகளிலிருந்து, தேவையானவற்றை காப்பி செய்து, அல்லது ஒப்பிட்டு பார்த்து பணிபுரியும் பொழுது, ஒவ்வொரு டாக்குமெண்டிற்கும் Switch செய்வது சற்று சிரமமான, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு காரியமாகும்.

நமது உலாவிகளில் உல்லது போன்று, Tab வசதி வேர்டு தொகுப்பில் இருந்தால், இந்த செயல் எளிதாக்கப் படும். இந்த Tabs வசதியை நமக்கு வேர்டு தொகுப்பில் உருவாக்கி தருவதுதான் Tabs நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த நீட்சியை நிறுவும் பொழுது வேர்டு பயன்பாட்டை மூடிவிடுங்கள். மேலும், உங்கள் கணினியில் ஏற்கனவே Visual Studio for the Office system கருவி நிறுவப் பட்டிருக்காவிடில், அதனை நிறுவுவதற்கான செய்தியுடன் வரும் வசனப் பெட்டியில், Accept பொத்தானை அழுத்தி நிறுவிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது தேவையான கருவிகள் அனைத்தும் இணையத்திலிருந்து தரவிறக்கப்பட்டு நிறுவப்பட்ட பின்னர், Microsoft Office customization installer திரையில் Install பொத்தானை அழுத்துங்கள். 


அனைத்தும் நிறுவப்பட்ட பின்னர், வேர்டு பயன்பாட்டை திறக்கும் பொழுது, ரிப்பன் மெனுவிற்கு கீழாக, புதிதாக Tabs தோன்றியிருப்பதை கவனிக்கலாம். 



இனி இந்த டேப்களை பயன்படுத்தி வேர்டு பயன்பாட்டில் மிக விரைவாகவும், துல்லியமாகவும் பணியாற்ற முடியும். 





.

Microsoft Excel:- உதவி

மைக்ரோசாப்ட் எக்சல் பயன்பாட்டில் நாம் சில சமயங்களில், பெரிய வொர்க்‌ஷீட்டை கையாளும் பொழுது, அதில் ஷீட்டில் உள்ள குறிப்பிட்ட ஏரியாவை (செல்கள்) மட்டும் ஜூம் செய்து பார்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

எக்சல் பயன்பாட்டில் உஙளுக்கு தேவையான வொர்க்‌ஷீட்டை திறந்து கொள்ளுங்கள்.


இப்பொழுது இந்த வொர்க் ஷீட்டில் தேவையான செல்களை மட்டிலும் தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு, மேலே உள்ள View ரிப்பன் செனுவிற்கு சென்று Zoom to Selection பொத்தானை அழுத்துங்கள். 





நீங்கள் தேர்வு செய்த செல்கள் மட்டும் ஜூம் செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.


இந்த வசதி பெரிய வொர்க்‌ஷீட்களில் பணி புரியும் பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபடியும் பழையபடி மாற்ற, Zoom to Selection பொத்தானுக்கு அருகில் உள்ள 100% எனும் பொத்தானை அழுத்தினால் போதுமானது.




.

Wednesday, 28 July 2010

பென் டிரைவ் பாதுகாப்பு - Autorun.inf

இப்பொழுது அனைவரின் கைகளிலும் பென் டிரைவ் புழங்குவது, நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு சிறு அடையாளமே.ஒரு  குறிப்பிட்ட  கணினியிலிருந்து, தங்களுக்கு தேவையான தகவல்களை உடனடியாக சேமித்துக் கொள்ள CD/DVD ஆகியவற்றை விட ஒரு சிறந்த எளிய சாதனமாக இருப்பது இந்த Flash/Pen டிரைவ்கள்தான்.


ஆனால், இந்த பென் டிரைவ்களின் மூலமாகவே பெரும்பாலான NewFolder.exe virus, kinza.exe virus, W32.Rontokbro.B@mm virus,  Regsvr.exe போன்ற வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் வெகு விரைவாக உங்கள் கணினியை தாக்குகின்றன. இது போன்ற மோசமான பாதிப்புகளை உருவாக்கக் கூடிய இந்த வைரஸ்கள் விரைவாக, நமது கண்காணிப்பை மீறி நமது கணினியில் பரவுவதற்கு அதில் உள்ள Autorun.inf என்ற ஃபைல் தான் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி என்னதான் சக்தி இருக்கிறது இந்த Autorun.inf கோப்பில் என்று பார்த்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் windows 95 பதிப்பு வெளி வந்த பொழுது, இது புழக்கத்திற்கு வந்தது. அதாவது, விண்டோஸ் 95 இயங்குதளத்தில்  CD யை திறப்பதற்கு முன்பாகவே அல்லது அந்த சிடியை My Computer -ல் இரட்டை க்ளிக் செய்யும் பொழுது,    இந்த Autorun அந்த CD யின் ரூட் டைரக்டரியில் உள்ள Autorun.inf  கோப்பை படித்து அதில் தரப்பட்டுள்ள கட்டளைகளை செயல்படுத்தும் பங்காற்றுகிறது. உதாரணமாக கீழே தரப்பட்டுள்ளது ஒரு Autorun.inf கோப்பில் உள்ள கட்டளைகள்.

[autorun]
open=autorun.exe
icon=autorun.ico
label= My Thumb Drive(98XXXXXXXX)
   

ஒரு பாதிக்கப்பட்ட பென் ட்ரைவை நல்லதொரு Antivirus மற்றும் Anti malware  உள்ள கணினியில் திறந்து, Tools -> Folder Options சென்று Show hidden files and folders க்ளிக் செய்து விட்டு, அதில் உள்ள கோப்புகளின் விவரங்களை பார்க்கும் பொழுது,


Hidden வடிவில் அந்த பென் டிரைவில் உள்ள வைரஸ்களை (நமக்கு சம்பந்தமில்லாத / நாம் உருவாக்காத கோப்புகள்) காண முடியும். (இப்படி காண்பிப்பது போல, வைரஸ் தாக்கப்பட்ட கணினியில் காண்பிக்காது. அவற்றில் Folder Options வசதி நீக்கப் பட்டிருக்கும்.) இவற்றை நமது கணினியில் ஏற்றுகின்ற வேலையை இந்த Autorun.inf கோப்புகள் செய்கின்றன. 

இப்படி சந்தேகமுள்ள பென் ட்ரைவ்களை நமது கணினியில் இணைத்த பிறகு, நேரடியாக My Computer -இல் சென்று திறக்காதீர்கள். Start -> Run இற்கு சென்று அந்த பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை கொடுங்கள் (H:) இனி திறக்கும் Explorer -இல் மேலே குறிப்பிட்டிருப்பது போல, Show hidden files and folders என்ற வசதியை enable செய்து கொள்ளுங்கள். இனி அந்த பென் டிரைவில், உங்களுக்கு சம்பந்தமில்லாத, .EXE கோப்புகள் ஸ்கிரிப்ட் கோப்புகளை shift+del கொடுத்து நீக்கி விடுவது நல்லது.      

இது போன்ற தாக்குதல்களிலிருந்து நமது கணினியை காக்க No Autorun என்ற இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இந்த மென்பொருள் கருவியை நமது கணினியில் பதிந்து கொள்வதன் மூலமாக இது போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பலாம்.


.

Wednesday, 24 February 2010

"This Device can perform faster" அறிவிப்பை நீக்க

.
வழக்கமாக நமது கணினிகளில் பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை கனெக்ட் செய்யும் பொழுது, டாஸ்க் பாரில் "This Device can perform faster" என்ற பலூன் அறிவிப்பு வருவதை கவனிக்கலாம். 


இந்த அறிவிப்பு நாம் ஒவ்வொருமுறையும் பார்க்க வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பலூன் அறிவிப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம். 

விண்டோஸ் எக்ஸ்பியில், My Computer ஐ வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இங்கு Hardware டேபில் உள்ள Device Manager பொத்தானை அழுத்தி Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள பட்டியலில் இறுதியாக உள்ள  Universal Serial Bus Controllers என்பதற்கு நேராக உள்ள + குறியை க்ளிக் செய்து, பிறகு USB Host Controller -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லவும். 

  
இங்கு Advanced டேபில் "Don't tell me about USB errors" என்பதை check செய்து விடுங்கள் அவ்வளவுதான். 

விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 -இல், இந்த பலூன் அறிவிப்பு தோன்றும் பொழுது அதன் மீது க்ளிக் செய்தால், This Device Can Perform Faster  என்ற விண்டோ திறக்கும். இதில் கீழே உள்ள "Tell me if my device can perform faster" என்பதை Uncheck செய்து விடுங்கள். 

 

.

Thursday, 4 February 2010

பென் ட்ரைவில் மறைந்துபோன ஃபோல்டர்களை மீட்டெடுக்க

.

நாம் வழக்கமாக நமது பென்ட்ரைவில் அத்தியாவசியமான கோப்புகளையும் அவற்றை உள்ளடக்கிய கோப்புறைகளையும் (Folders) சேமித்து வைப்பது வழக்கம். மால்வேர் மற்றும் ஸ்பைவேர்கள் உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது பென் ட்ரைவை என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான கோப்புறைகள் மறைக்கப் பட்டுவிடலாம். அதாவது உங்கள் பென் ட்ரைவில் கோப்புறைகள் இருக்கும் ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. பென் ட்ரைவில் Usage space ஐ சோதித்தால் கோப்புறைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

ஒரு சில மால்வேர்களின் வேலையே பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூற்றை (attribute) மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூறு Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer -ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் (Greyed out) செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.

இந்த நிலையில் என்ன செய்யலாம்? 

முதலில்  உங்கள்  பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக I: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு i: என டைப் செய்து என்டர் கொடுங்கள். 


இனி வரும் I:> என்ற ப்ராம்ப்ட்டில் attrib -r -s -h *.* /s  /d என டைப் செய்து என்டர் கொடுங்கள். 



உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் I:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து விண்டோஸ் க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று பென் ட்ரைவை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம். 

இந்த பணியை செய்ய Files & Folders Reset Tool என்ற கருவி உள்ளது. ஆனால் ஒரு சில பென் ட்ரைவ்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. எதற்கும் முயற்சித்துப் பாருங்கள். 


.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)