Showing posts with label விஸ்டா ட்ரிக்ஸ். Show all posts
Showing posts with label விஸ்டா ட்ரிக்ஸ். Show all posts

Monday, 15 August 2011

விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி

விண்டோஸ் இயங்குதளத்தை  உபயோகிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் NirCmd எனும் ஒரு சிறிய இலவச Command Line Utility ஐ குறித்து ஒரு விளக்கம். 

நமது கணினியில் அல்லது மடிக்கணினியில் உள்ள DVD ட்ரைவை திறக்க / மூட, வால்யூமை மியூட் செய்ய  மற்றும் சத்தத்தை கூட்ட, குறைக்க, மானிட்டரை அணைக்க, ஸ்கிரீன் சேவரை துவக்க, Logoff செய்ய Standby mode இற்கு செல்ல, கணினியை அணைக்க, திறந்துள்ள அனைத்து இன்டர்நெட் Explorer விண்டோக்களை ஒரே நொடியில் மூட, என 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்களுக்கான டெஸ்க்டாப்  ஷார்ட்கட்களை  உருவாக்க இந்த NirCmd கருவி பயன்படுகிறது. (தரவிறக்கவும், இதன் மேலதிக பயன்பாட்டின் பட்டியலை காணவும்  சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)      

உதாரணமாக இந்த கருவியை பயன்படுத்தி நமது கணினியில் இணைக்கப்பட்டுள்ள CD /DVD ட்ரைவை Eject செய்ய ஒரு ஷார்ட்கட்டை உருவாக்குவது எப்படி என்பதை காணலாம். முதலில் கீழே தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து NirCmd கருவியை உங்கள் வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக D:\)

இப்பொழுது  Desktop இல் வலது க்ளிக் செய்து, திறக்கும் Context மெனுவில் New மற்றும் Shortcut ஐ க்ளிக் செய்யுங்கள்.      


அடுத்து திறக்கும் விசார்ட்டில்  Type the Location of the Item என்பதற்கு நேராக, D:\nircmd.exe cdrom open F: என டைப் செய்து Next பட்டனை சொடுக்குங்கள். (D:\ என்பது NirCmd.exe கோப்பை நமது கணினியில் சேமித்து வைத்திருக்கும் லொகேஷனை குறிக்கும், F: என்பது CD/DVD ட்ரைவை குறிக்கும், உங்கள் கணினிக்கு தகுந்தவாறு இவற்றை மாற்றிக் கொள்ளவும்).


  அடுத்து திறக்கும் உரையாடல் பெட்டியில், ஷாட்கட்டிற்கான பெயராக Eject CD/DVD என தட்டச்சு செய்து Wizard ஐ முடித்து, உருவாக்கிக் கொள்ளலாம். அடுத்து இதனை வலது க்ளிக் செய்து Prperties சென்று,  இந்த ஷார்ட்கட்டிற்கு தகுந்த ஐகானை நமது விருப்பத்திற்கு ஏற்ற படி உருவாக்கிக் கொள்வதோடு, சுருக்கு விசையையும் உருவாக்கி கொள்ளலாம். 


இதே வழிமுறையில் CD/DVD ட்ரைவை Close செய்ய,  Cdrom open f: என்பதற்கு பதிலாக CdRom Close f: என மற்றொரு ஷார்ட் கட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். 


இந்த NirCmd கருவியில் உள்ள 50 க்கும்  பிற கட்டளைகளை காணவும், தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.

.  

Monday, 13 December 2010

Windows 1 லிருந்து Windows 7 வரை

துவக்க திரைகளின் தொகுப்பு : - நன்றி - deviantart.com








































.

Monday, 18 October 2010

Default OS: விண்டோஸ் 7 / விஸ்டாவா அல்லது எக்ஸ்பியா

விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 என புதிது புதிதாக மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளங்கள் வந்தாலும், பலரும் எக்ஸ்பி விரும்பிகளாகவே இருக்கிறார்கள். 



இதற்கு பல காரணங்கள் உள்ளன. கணினியை அப்க்ரேட் செய்ய வேண்டிய கட்டாயம். புதிதாக ஒரு சிலவற்றை கற்றுக் கொள்வதில் உள்ள சோம்பல். தற்பொழுது சந்தையில் வரும் பெரும்பாலான மடிக்கணிகள் விண்டோஸ் 7 - 64 பிட் இயங்குதளத்துடன் கிடைப்பதால், ஏற்கனவே நம்மிடம்  உள்ள ஆட்டோ கேட், 3டி ஸ்டுடியோ போன்ற 32 பிட் மென்பொருட்களை இயக்குவதற்கு என பல காரணங்களால், விண்டோஸ் 7 அல்லது விஸ்டா இயங்குதளம் இருந்தாலும் அதனுடனாக விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தையும் இரட்டை பூட்டிங் முறையில் வைத்துக் கொள்வது இன்று பலரும் பயன்படுத்தி வரும் நடைமுறையாகும். 



இப்படி இரண்டு இயங்குதளங்களை தங்களது கணினியில். பதிந்து வைத்திருப்பவர்கள். ஒரு குறிப்பிட்ட இயங்குதளத்தை உதாரணமாக, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி ஆகிய இரண்டையும் நிறுவி வைத்திருப்பவர்கள், விண்டோஸ் எக்ஸ்பியை முதன்மை படுத்த (Default OS ஆக மாற்ற), என்ன செய்யவேண்டும் என்ப்தை பார்க்கலாம். 



இப்படி இரண்டு OS களை வைத்திருப்பவர்கள், விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 இவற்றில் எது பிந்தைய பதிப்போ, அந்த இயங்குதளத்தில் பூட் செய்து கொள்ளுங்கள். Start க்ளிக் செய்து, Computer -இல் வலது க்ளிக் செய்து, Properties செல்லுங்கள்.

அடுத்து திறக்கும் திரையில் Advanced System Settings லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து Startup and Recovery பகுதியில் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.


இப்பொழுது திறக்கும் Startup and Recovery திரையில் Default Operating System என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் முதன்மை படுத்த வேண்டிய இயங்குதளத்தை தேர்வு செய்து, Apply செய்தால் போதுமானது.



.

Friday, 24 September 2010

விண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க

விண்டோஸ் XP/விஸ்டா/7 இயங்குதளங்களை பயன்படுத்தி வரும்பொழுது, ஒரு சில சமயங்களில், Error Reporting அறிவிப்பு உங்களுக்கு அலுப்பை தரலாம். Windows (app name) has stopped working திரையும், விண்டோஸ் XP யில் Send , Don't send திரையும் வந்து உங்களை டென்ஷன் ஆக்கலாம்.


மற்றும்


இந்த பிழைச்செய்தியை விண்டோஸ் XP யில் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். My Computer - ஐ வலது கிளிக் செய்து properties செல்லவும். அங்கு Advanced tab -ஐ கிளிக் செய்து அதில் உள்ள  error reporting பொத்தானை அழுத்தி, திறக்கும் Error Reporting வசனப் பெட்டியில்  ' Disable error reporting ஐ தேர்வு செய்து OK கொடுக்கவும்.
விண்டோஸ்  விஸ்டாவில், Control Panel சென்று, முதலில் Classic View விற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு, Problem Reports and Solutions  ஐ  க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து திறக்கும் Problem Reports and Solutions திரையில், இடது புற பேனில் உள்ள Change Settings link ஐ க்ளிக் செய்து, 
அடுத்த திரையில், Advanced settings லிங்கை க்ளிக் செய்து  Advanced settings for problem reporting என்பதற்கு கீழாக உள்ள Off ரேடியோ பட்டனை க்ளிக் செய்து, OK கொடுங்கள்.  
 
இந்த பிழைச் செய்தியை விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் நீக்க, Start menu வில் சர்ச் பாக்ஸில் problem reporting settings என டைப் செய்து, மேலே தோன்றும் Choose how to report problems லிங்கை  க்ளிக் செய்து கொள்ளுங்கள். 

அடுத்து திறக்கும் விண்டோவில்,
Never check for solutions ஐ தேர்வு செய்து, OK பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
.

Wednesday, 15 September 2010

விண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ...

நமது விண்டோஸ் இயங்குதளங்களில், தேவையான ஃபோல்டர்களை திறந்து அதிலுள்ள கோப்புகளின் விவரங்களை Details view வில் பார்க்கும் பொழுது, அல்லது Search சென்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட கோப்புகளை தேடும் பொழுது, விண்டோஸ் explorer திரையில் Name, In Folder, Size, Type மற்றும் Date modified போன்ற Column களில் தேவையான விவரங்களை காண முடியும். 
 
 
ஆனால் இந்த column களின் அளவு மாறுபடுவதால் அந்த குறிப்பிட்ட column த்தில் உள்ள விவரங்கள் அடுத்துள்ள column த்தால் சிறிதாக்கப் பட்டுள்ளதை அறியலாம். இதனால் கோப்புகளின் பெயர் அல்லது ஃபோல்டரின் விவரங்களை முழுமையாக பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது. வழக்கமாக நாம் இது போன்ற column களின் இடையே உள்ள பிரிவில் க்ளிக் செய்து டிராக் செய்து விவரங்கள் முழுமையாக தெரியும்படி பெரிதாக்கி கொள்கிறோம். 
 
 
இப்படி ஒவ்வொரு column த்தையும் அளவு மாற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு அருமையான ஷார்ட் கட் உள்ளது. உங்கள் கீ போர்டில் Ctrl மற்றும் Number pad உள்ள + பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும். 
 
 
இப்பொழுது  column கள் ஒவ்வொன்றும் அதிலுள்ள விரங்கள் முழுமையாக தெரியும்படி தானாகவே அளவை மாற்றிக்கொள்ளும். 
 
இதற்கெல்லாம் ஒரு இடுகையா? என்று கேட்பவர்கள், ஓட்டு போட்டு விட்டு பின்னூட்டத்தில் கேட்கலாம்.  
 
 .   

Monday, 6 September 2010

உங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்

சில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா? வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா? இணைய வேகம் குறைந்துள்ளதா? உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க..   இதோ உங்களுக்கான தோழன் - Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி. (பெயரில் பெண்பால் உள்ளதால் தோழியாகவும் பாவிக்கலாம்)

இது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது  கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த கருவியை பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry  யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை  நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும், 
 
 
Startup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .

கோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம். 


ஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.



.

Friday, 3 September 2010

விண்டோஸ் விஸ்டா/ஏழில் விரைவாக பணிபுரிய

நாம் வழக்கமாக கணினியில் பணிபுரியும் பொழுது, ஸ்டார்ட் மெனுவிற்கு சென்று தேவையான ஐகான்களை க்ளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது ஷார்ட் கட் ஐகான்களை க்ளிக் செய்வதன் மூலமாகவோ நாம் விரும்பும் பயன்பாடுகளை இயக்கி வருகிறோம். 
 
இன்னும் கொஞ்சம் எளிதாக, நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் பயன்பாடுகளை நமது விரல்களின் கட்டுப்பாட்டில்,  அதாவது டெஸ்க் டாப் திரையில் வலது க்ளிக் செய்து வரும் Context மெனுவில் பொதிந்து கொண்டு தேவையான நேரத்தில் விரைவாக அந்த பயன்பாடுகளை இயக்க விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழு இயங்குதளத்திற்கான ஒரு இலவச மென் பொருள் கருவி Context Menu Editor.   





நாம் சாதாரணமாக மௌசின் வலது பொத்தானை க்ளிக் செய்யும் பொழுது வரும் context menu , மற்றும் Shift கீயை அழுத்தியபடி வலது க்ளிக் செய்யும் பொழுது வரும் Extended Context menu ஆகிய  இரண்டிலும் நமக்கு தேவையான ப்ரோகிராம்களின் ஷார்ட் கட்டை  உருவாக்கி விரைவாக பணியாற்ற (Registry Editor க்கு சென்று நாம் தேவையில்லாத குழப்பங்களுக்கு ஆளாகாமல்) இந்த கருவியை உபயோகித்து விரைவாகவும் எளிதாகவும் செய்து விட முடியும்.
 
 


இதில் நமது அபிமான வலைப்பக்கங்களுக்கு லிங்கையும் உருவாக்க முடியும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.இந்த கருவியை இயக்கி Add டேபிற்கு சென்று சரியான அப்ளிகேஷன் path மற்றும் icon path ஐ கொடுத்து விட்டால் போதுமானது. (பெரும்பாலும் EXE கோப்பிலிருந்து அதற்கான ஐகானை அதுவாகவே எடுத்துக் கொள்ளும்) Extended Context மெனு தேவையெனில் அதற்கு நேராக உள்ள செக் பாக்சை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இப்படி உருவாக்கிய context மெனு ஷார்ட்கட்களை நீக்க வேண்டுமெனில், Remove டேபிற்கு சென்று குறிப்பிட்ட பயன்பாட்டில் வலது க்ளிக் செய்து delete தேய்வதன் மூலமாக  எளிதாக நீக்கிக்கொள்ளலாம். 


 
.

விண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா?

விண்டோஸ் இயங்குதளத்தில் 32 Bit, 64 Bit என இரண்டு வகைப்பட்ட இயங்குதளங்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வந்த காலங்களில் நமக்கு இந்த 32 Bit / 64 Bit -ல் எதை உபயோகிப்பது என்பதைப் பற்றிய யோசனை தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது நாம் புதிதாக வாங்கும் மடி கணினிகள் பெரும்பாலும் 64 பிட் விண்டோஸ் 7 இயங்குதளம் நிறுவப்பட்ட நிலையில் தான் விற்பனைக்கு வருகின்றன. 

முதலில் உங்கள் விண்டோஸ் 7 இயங்குதளம் 32 பிட்டா அல்லது 64 பிட்டா என்பதை எப்படி அறிய முடியும் என்பதை (பலருக்கு தெரிந்தாலும், புதியவர்களுக்காக) பார்க்கலாம்.  Start menu வில் Computer -ல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். 
இப்பொழுது திறக்கும் System information திரையில் System Type -ல் உங்களது இயங்குதளம் 32/64 பிட்டா என்பதை அறிய முடியும். 


சரி! இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலே உள்ள படத்தை கவனியுங்கள், அதில் Installed Memory (RAM)   8 GB. விண்டோஸ் 32 பிட் இயங்குதளங்கள் 4 GB க்கு மேல் நினைவகத்தை ஏற்றுக் கொள்ளாது.


இது கணினியின் நினைவகம் மட்டுமல்ல, நீங்கள் உபயோகிக்கும் வீடியோ கார்டும்தான். 4 GB க்கு மேலாக RAM அல்லது வீடியோ கார்டு பயன் படுத்த வேண்டுமானால் நீங்கள் 64 பிட் இயங்குதளத்திற்குத்தான் மாற வேண்டும். 

மேலும் 32 பிட் மென்பொருட்கள் பெரும்பாலானவை 64 பிட் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு சில மென்பொருட்கள் உதாரணமாக AutoCAD, 3 D Studio போன்றவைகள் நிச்சயமாக 64 பிட் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும். 

மற்றொரு முக்கிய செய்தி 64 பிட் என்றவுடன் 32 பிட்டுக்கு அப்படியே இரட்டை வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கக் கூடாது. 

.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)