Showing posts with label free PDF editor. Show all posts
Showing posts with label free PDF editor. Show all posts

Tuesday, 23 November 2010

நமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைக்க

நாம் அன்றாடம் பல பயனுள்ள வலைப்பக்கங்களை படித்து வருகிறோம்.இந்த வலைப்பக்கங்களில் நாம் விரும்பும் பக்கங்களை PDF கோப்புகளாக நமது கணினியில் சேமித்து வைப்பதற்கு, பல வழிகள் இருந்தாலும், Web2Pdf Converter என்ற தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமக்கு வேண்டிய வலைப்பக்கத்தின் URL காப்பி செய்து இந்த தளத்தில் உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து Convert PDF பொத்தானை அழுத்துங்கள்.


அடுத்த திரையில் PDF Successfully Created என்ற செய்தியை அடுத்து கீழே உள்ள Download PDF File என்ற லிங்கை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



ஒவ்வொரு முறையும் இது போன்று URL காப்பி செய்து பேஸ்ட் செய்வதை தவிர்க்க, இந்த தளத்தில் உள்ள Save Page as PDF என்ற புக்மார்க்லெட்டை ட்ராக் செய்து உங்கள் உலாவியில் புக்மார்க்ஸ் உடன் இணைத்து விட்டால்,
தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும் பொழுது, இந்த புக்மார்க்கை க்ளிக் செய்து, PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.





.

Friday, 25 June 2010

PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்

PDF என்றவுடன் உடனே நம் மனம் உச்சரிப்பது Adobe Acrobat. PDF கோப்புகளை படிப்பதற்கு Adobe Reader உட்பட பல  மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் ஒரு PDF கோப்பை உருவாக்க, ஸ்ப்ளிட் அல்லது மெர்ஜ் செய்ய, எடிட் செய்ய Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்களை பணம் செலவழித்து வாங்க வேண்டியுள்ளது. 

 
இந்த பணியினை எளிதாக செய்ய ஒரு கட்டற்ற சுதந்திர இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் PDFsam (sam= Split and Merge). தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இந்த மென்பொருளை உருவாக்கியவர்  Andrea Vacondio. இவர் பல வருடங்களுக்கு முன்பாக தனது இளநிலை பட்டப்படிப்பின் போது சமர்ப்பிக்க வேண்டிய தீசிஸ் உருவாக்கத்தின் போது, PDF கோப்பில் சில பகுதிகளை நீக்கவும், இணைக்கவும் அவசிமிருந்ததால், இதற்கான இலவச மென்பொருளை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இந்த எளிய மென்பொருள் கருவியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு தோன்றி  தனது வார இறுதி விடுமுறை நாட்களில் இதனை உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார். 
 

ஆரம்ப காலங்களில் Split and Merge இற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கம், பின்னர் விரிவடைந்து, split, merge, decrypt, encrypt, rotate, mix, set metadata, visually compose மேலும் பல வசதிகளை கொண்ட மென்பொருள் கருவியாக உருவெடுத்தற்கு காரணமாக இவர் சொல்லுவது, தினமும் காலையில் இவருடைய இணைய Forum த்தில் ‘Hey man, you saved my job yesterday with your software, thanks!’ போன்ற போஸ்டுகள் தான்.

  
இதனை உருவாக்க இவர் பயன்படுத்தியவை  Ubuntu, Eclipse, Ant போன்ற இலவச மென்பொருட்களையே. 


மிகவும் பயனுள்ள மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். 


.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)