Thursday 30 July, 2009

உபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ

உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில், விண்டோஸ் செயலிழந்தால், விண்டோசை மறுபடியும் இன்ஸ்டால் செய்வோம்.

இப்படி இன்ஸ்டால் செய்யும்பொழுது உபுண்டு வின் Grub BootLoader காணாமல் போய்விடும். இதனால் உபுண்டுவை இயக்க முடியாமல் போய் விடும்.

உபுண்டுவை மறுபடியும் இன்ஸ்டால் செய்யாமல், கிரப் பூட் லோடரை மறுபடியும் நிறுவ என்ன செய்யலாம்?

உபுண்டு லைவ் சிடியில் உங்கள் கணினியை பூட் செய்திடுங்கள்.



உபுண்டு பூட் ஆன பிறகு, Terminal க்கு சென்று,
sudo grub
என்ற கட்டளையை கொடுத்து என்டர் கொடுங்கள். இது grub prompt இற்கு கொண்டு செல்லும்.
>
இந்த பிராம்ப்டில் கீழ்கண்ட மூன்று கட்டளைகளை கொடுக்கவும்.

( (hd0,0) என்பது உங்கள் கணினியின் முதல் டிரைவின் முதல் பார்டீஷனை குறிக்கிறது. உங்கள் கணினியின் அமைப்பிற்கு ஏற்ப இது மாறுபடும்)

> root (hd0,0)

> setup (hd0)

> exit

சிடியை வெளியே எடுத்து விட்டு கணினியை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது.

Grub Boot Loader திரும்ப கிடைத்துவிடும்.







Tuesday 28 July, 2009

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில் உபுண்டு வை Uninstall செய்வது எப்படி?


உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில், உபுண்டு வை உங்கள் கணினியிலிருந்து நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.


மை கம்ப்யுட்டரில் வலது கிளிக் செய்து 'Manage' என்பதை கிளிக் செய்தால் Computer Management என்ற Window திறக்கும் இதில் Storage section -ல் Disk Management என்ற பகுதிக்கு செல்லவும்.

இதன் வலதுபுற pane -ல் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து partition களையும் காண்பிக்கும். இவற்றில் நீங்கள் உபயோகிக்கும் partition கள் தவிர மீதமுள்ள (உபுண்டு பதிந்திருக்கும் பர்டிடின்) ஐ வலது கிளிக் செய்து Context menu வில் 'Delete Logical Drive' என்பதை தேர்ந்தெடுங்கள், இதில் வரும் வழிமுறையை தெளிவாக பின்பற்றி Ubuntu partition ஐ நீக்கிவிடுங்கள்.


இனி Grub Boot Loader ஐ நீக்கி விட்டு Windows boot loader ஐ நிறுவவேண்டும்.


பிறகு விண்டோஸ் எக்ஸ்பி பூட் சிடியை உபயோகித்து உங்கள் கணினியை சிடியிலிருந்து பூட் செய்திடுங்கள். இந்த Wizard ல் 'To Repair a Windows XP installation using Recovery Console. Press 'R' என்ற திரை வரும்பொழுது, விசைப்பலகையில் 'R' கொடுத்து டாஸ் பிராம்ப்ட் க்கு வந்து விடுங்கள்.

இப்பொழுது திரையில்,

1: C:\WINDOWS
Which Windows Installation would you like to log onto
(To Cancel, Press Enter)?

(இதில் C:\ என்பது ஒரு உதாரணம் மட்டுமே, உங்கள் கணினியில் விண்டோஸ் எந்த டிரைவில் உள்ளதோ அந்த டிரைவ் லெட்டர் ஐ காண்பிக்கும்)

இங்கு 1 என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

C:\WINDOWS>
என்ற பிராம்ப்டில் 'fixmbr' என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

சில வரிகள் எச்சரிக்கை செய்திகளுக்குப்பின்,

Are you sure you want to write a new MBR?

என கேட்கும் இடத்தில் Y டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

மறுபடியும்,

C:\WINDOWS>

என்ற பிராம்ப்ட் வந்தவுடன் Windows CD ஐ வெளியே எடுத்துவிட்டு, கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விடவும்.


இப்பொழுது Ubuntu வின் Grub boot loader க்கு பதிலாக Windows boot loader வந்திருக்கும். உபுண்டு வும் நீக்கப்பட்டிருக்கும்.

இனி Disk Management க்கு சென்று Unpartition space -ல் வலது கிளிக் செய்து புதிதாக partition ஐ தேவைப்படும்படி நிறுவிக்கொள்ளுங்கள்.



விண்டோஸ் டெஸ்க் டாப் ஐகான்களை சிறிய லிஸ்ட் வியூவாக மாற்ற



விண்டோசில் டெஸ்க்டாப் ஐகான்கள் வழக்கமாக டைல்ஸ் வியூவில் இருக்கும். சில சமயங்களில் டெஸ்க்டாப்பில் நிறைய ஐகான்கள் இருந்தால், அவற்றை லிஸ்ட் வியூவில் மாற்றினால் நன்றாக இருக்குமே எனக் கருதுபவர்களுக்கு.

இங்கே சொடுக்கி Deskview என்ற இலவச மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் தரவிறக்கம் செய்த கோப்பை unzip செய்து கொள்ளுங்கள்.

Deskview.exe என்ற இந்த கோப்பை இரட்டை கிளிக் செய்தால் டெஸ்க்டாப் ஐகான்கள் சிறிய லிஸ்ட் வியூவிற்கு மாறிவிடும்.


எப்படி இருந்த டெஸ்க்டாப் இப்படி ஆயிடும்.

மறுபடியும் டைல்ஸ் வியூவிற்கு மாற்ற, மீண்டும் அதே கோப்பை இரட்டை கிளிக் செய்யுங்கள்.

Wednesday 22 July, 2009

நெருப்பு நரி உலவியில் எளிதான Image Zoom நீட்சி


வழக்கமாக நாம் வலைப்பக்கங்களை பார்வையிடும்பொழுது, நமக்குத் தேவையான படங்களில் சில படங்கள் சிறிதாக இருப்பதால், அவற்றில் உள்ள சில நுணுக்கமான விவரங்களை காண்பதற்கு மிகவும் சிரமமான காரியமாகும்.

ஆனால், நீங்கள் நெருப்பு நரி உலவியை உபயோகப்படுத்துபவராக இருந்தால், Image Zoom எனும் ஒரு சிறிய நீட்சியை உங்கள் நெருப்பு நரி உலவியில் பதிந்து கொள்வதன் மூலம் எந்த ஒரு சிறு படத்தையும் அதனுடைய உண்மையான அளவிலிருந்து 10% முதல் 400% வரை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ காணமுடியும்.

மொத்தப் பக்கமும் பெரிதாகாமல் ஒரு வலைப்பக்கத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட படம் மட்டும் Zoom ஆவது இந்த நீட்சியின் தனிச்சிறப்பு.

இங்கே சொடுக்கி Image Zoom நீட்சியை தரவிறக்கம் செய்து நெருப்பு நரியில் பதிந்து கொள்ளுங்கள்.

இனி வலைப்பக்கத்தில் உள்ள எந்த படத்தை Zoom செய்ய வேண்டுமோ அந்த படத்தில் கர்சரை வைத்து மெளசின் வலது பட்டனை தட்டினால் Context menu வில் Zoom Image என்ற மெனு வந்திருக்கும் இதில் சென்று உங்களுக்கு தேவையான அளவிற்கு அந்த படத்தை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும்.




மேலும், படத்தை அதனுடைய உண்மையான அளவிற்கு மறுபடியும் மாற்ற இந்த மெனுவில் உள்ள Zoom Reset ஐ கிளிக்கினால் போதுமானது.


Real time zoom இற்கு குறிப்பிட்ட படத்தின் மீது மெளஸ் கர்சரை வைத்து மெளசின் வலது பட்டனை அழுத்தியபடி மேலும் கீழும் ஸ்குரோல் செய்தால் படம் பெரிதாகவும், சிறிதாகவும் உங்கள் தேவைக்கு ஏற்றபடி வைத்துக் கொள்ளலாம். மேலும் Custom Zoom மற்றும் Custom Dimension க்கு சென்று நமக்கு தேவையான விகிதங்களை மற்றும் Horizantal / Vertical அளவுகளை கொடுப்பதன் மூலமாக நம் தேவைகளை பூர்த்தி செய்யலாம். இதில் Image Fit போன்ற பயன்பாடுகளும் இதில் உள்ளன.

FireFox -ல் Tools menu சென்று Add-ons ஐ கிளிக் செய்து அதில் Image Zoom -ல் உள்ள Options பொத்தானை அழுத்தி மேலும் நமக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.






enthiran Rajini video movie download


Thursday 16 July, 2009

CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3

Absolute Co-ordinate System மற்றும் Relative Co-ordinate System ஆகியவைகளைப் பற்றி முந்தைய இடுகைகளில் பார்த்தோம்.

மேற்கண்ட இரு முறைகளும் அனைவருக்கும் நன்றாக விளங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில், இதோ இன்னமும் எளிதான முறை..,

Relative Polar Co-ordinate System (syntax: @distance '<' angle)

'@' அடையாளம் எதைக் குறிக்கிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்திருந்தோம். இதன் syntax -ல் '@' என்பது கடைசிப் புள்ளியை குறிக்கிறது. distance என்பது கடைசிப் புள்ளியிலிருந்து தற்சமயம் நாம் குறிக்கப்போகும் புள்ளிக்கு இடையே உள்ள தொலைவு, '<' என்பது கோணத்தை குறிக்கிறது பிறகு என்ன கோணம் என்பதை கொடுக்கவேண்டும். AutoCAD -ல் கோணங்களை பற்றிய விவரம் அறிய கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.

கீழ்கண்ட வரைப்படத்திற்கு நாம் ஏற்கனவே, Absolute மற்றும் Relative முறைகளில் புள்ளிகளைக் குறித்திருக்கிறோம். Polar முறையில் புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.
A(0,0)
B @60<0
C @40<90
D @60<180
A @40

இந்த முறை தெளிவாக விளங்கியிருக்கும் என நம்புகிறேன். இப்பொழுது வழக்கம்போல கீழே உள்ள வரைபடத்தை முயற்சித்துப் பாருங்கள்.


இனி AutoCAD திரையைப் பற்றி சிறிது பார்க்கலாம்.
சில Screenshot களை கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.








இவற்றில் கருப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கும் திரையை (Drawing Area) Electronic Drawing Sheet என அழைக்கலாம்.

வழக்கமாக நாம் கையால் வரையும் வரைபடங்களுக்கான தாள்கள் (Drawing Sheet) குறிப்பிட்ட அளவை கொண்டிருக்கும். உதாரணமாக A4,A3,A2,A1 மற்றும் A0 போன்றவைகள். ஒரு கட்டடத்தின் வரைப்படத்தையோ அல்லது இயந்திரங்களின் வரைபடங்களையோ நாம் வரைய முற்படும்பொழுது, மேலே சொன்ன பேப்பர் அளவுகளுக்கேற்ப வரைபடத்தை Scale செய்யவேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளோம். (உதாரணமாக 1:4, 1:8, 1:16 or 1:5000).

ஆனால் AutoCAD -ல் உள்ள Drawing Area என்பது ஒரு Electronic Drawing Sheet என்பதால் நமக்கு Scale செய்ய வேண்டிய அவசியமில்லால் போகிறது.

இந்த பயன்பாட்டினால் நாம் எந்த ஒரு வரைபடத்தையும் வரையும் பொழுதும் அதனுடைய உண்மையான Scale இற்கு வரைய முடியும். மேலும் இப்படி Actual Scale -ல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 1:4, 1:8, 1:16 என எந்த Scale இற்கு வேண்டுமானாலும் பிரிண்ட் எடுத்து கொடுக்க முடியும் என்பது இதனுடைய முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று.

AutoCAD -இன் கட்டளைகள் அனைத்தும் Menu Bar, Toolbar(Drawing tools, Modify tools போன்றவைகள்) ஆகியவற்றில் உள்ளடக்கியுள்ளது. இவற்றைத் தவிர நாம் AutoCAD இற்கு கட்டளைகளை, Drawing Area விற்கு கீழேயுள்ள Command Window விலும் கொடுக்க முடியும்.

AutoCAD ஐ பொறுத்தமட்டில் நாம் அதிகமாக உபயோகிக்கும் அனைத்து கட்டளைகளுக்கும் ஷார்ட்கட் கீகள் இருப்பதால் Menu bar மற்றும் Toolbar மூலமாக கட்டளைகளை கொடுப்பதைவிட Command Window வில் கட்டளைகளை கொடுப்பதுதான் விரைவானதும், எளிதானதுமாகக் கருதப்படுகிறது.

UCS Icon:
Drawing Area வில் இடது கீழ் மூலையிலுள்ள உள்ள X,Y குறியீட்டை UCS Icon எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதில் ஐகான் என்பது அனைவரும் அறிந்ததே, UCS என்பது User Co-ordinate System -இன் சுருக்கமாகும். இது AutoCAD ல் 3D வரைபடங்களை உருவாக்குவதற்கு உதவும் மிக மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். (இதை உருவாக்கியவருக்கு ஒரு ஓ! போடுவோம்.).

இது
X மற்றும் Y அச்சின் ஏறுமுகத்தை குறிக்கிறது. 2D வரைபடங்களுக்கு இது பெரும்பாலும் உபயோகப்படுவதில்லை. ஆனால் 3D யில் மூன்று axis கள் தேவைப்படுவதால் UCS icon மிக மிக அவசியமான ஒன்று. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

மற்ற டூல் களைப் பற்றி பிறகு பார்ப்போம்.


Command Window வில் நாம் எந்த ஒரு கட்டளையை அல்லது மதிப்பை கொடுத்தபின்பும் Enter key ஐ தட்ட வேண்டும் ஆனால் AtuoCAD -ல் Enter key யின் பயன்பாட்டை Space Bar கீயும் கொடுத்துவிடுவதால். இதையே உபயோகியுங்கள்.



இந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

suryakannan@gmail.com


Thursday 9 July, 2009

Print Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கிளியர் செய்வது எப்படி?

ஏதாவது ஒன்றை பிரிண்ட் கொடுத்தப்பின் பிரிண்ட் வரவில்லையென்றால்,
முதலில் பிரிண்டர் ஆன்லைனில் இருக்கிறதா என சோதித்தப் பிறகு, Print Spooler Window ஐ திறந்து பார்ப்போம்.

இது வழக்கமாக டாஸ்க்பாரில் Notification Area வில் ஒரு பிரிண்டர் ஐகானுடன் இருக்கும், இதை சொடுக்குவதன் மூலமோ அல்லது Printers & Faxes சென்று அந்த குறிப்பிட்ட பிரிண்டரை திறப்பதன் மூலமாகவோ Print Spooler Window வை திறக்க முடியும்.

இதில் queue வில் உள்ள டாக்குமெண்டுகள் பட்டியல் இருக்கும். இதை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது வழக்கம். ஆனாலும் queue வில் உள்ள ஒரு சில டாக்குமெண்டுகள் டெலிட் ஆகாமல் அடம்பிடிக்கும். பொறுமையிழந்து கணினியை ரீ-ஸ்டார்ட் செய்த பிறகே queue வில் உள்ள அனைத்து டாக்குமெண்டுகளும் டெலிட் ஆக வாய்ப்புள்ளது.

இதனை எளிதாக்க ஒரு வழி,

Start க்கு சென்று Run ல் cmd என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது MS-Dos prompt விண்டோ திறக்கும் இதில் கீழ்கண் வரிகளை ஒவ்வொன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.


net stop spooler
del c:\windows\system32\spool\printers\*.shd
del c:\windows\system32\spool\printers\*.spl
net start spooler


இந்த முறையில் Print queue வில் அனைத்து டாக்குமெண்டுகளும் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே நீக்கப்படும்.




(Mouse Jam ஆனதால் வேலை செய்யாமல் போன பிரிண்டர்.)






Monday 6 July, 2009

CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -2

Absolute Co-ordinate System என்பது என்ன என்பதை சென்ற இடுகையில் பார்த்தோம்.

இரண்டாவதாக Absolute Co-ordinate System ஐ விட சற்று எளிதான ஒரு Co-ordinate system..,

Relative Co-ordinate System (syntax: @dx,dy)

இந்த முறையில், '@' (Shift+2) என்பது கடைசியாக நாம் கொடுத்த புள்ளியை குறிக்கிறது. அதாவது கடைசியாக நாம் குறித்த புள்ளியிலிருந்து, தற்பொழுது நாம் குறிக்கப் போகும் புள்ளிக்கு இடையே உள்ள X அச்சின் தொலைவு, Y அச்சின் தொலைவு. (X=Horizontal Distance; Y=Vertical Distance என வைத்துக் கொள்ளலாம்).


மேற்கண்ட வரைபடத்திற்கு இந்த Relative Co-ordinate system ஐ உபயோகித்து புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.

A (0,0)
B @60,0
C @0,40
D @-60,0
A @0,-40

அதாவது A என்ற புள்ளியை Absolute Co-ordinate system -ல் குறித்திருக்கிறோம்.

B புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் A என்ற புள்ளி (B க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் A யிலிருந்து B க்கு X தொலைவு 60 ஆகும். Y தொலைவு 0 ஆகும்.

C புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் B என்ற புள்ளி (C க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் B யிலிருந்து C க்கு X தொலைவு 0 ஆகும். Y தொலைவு 40 ஆகும்.

D புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் C என்ற புள்ளி (D க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் C யிலிருந்து D க்கு X தொலைவு -60 (Opposite Direction) ஆகும். Y தொலைவு 0 ஆகும்.

மறுபடியும் A புள்ளியை கொடுத்தால்தான் செவ்வகம் பூர்த்தியாகும் எனவே,
A புள்ளியை குறிக்கும் பொழுது '@' கொடுத்தவுடன் D என்ற புள்ளி (A க்கு முன் கடைசியாக கொடுத்த புள்ளி) Reference point ஆக எடுத்துக் கொண்டால் D யிலிருந்து A க்கு X தொலைவு 0 ஆகும். Y தொலைவு -40 (Opposite Direction) ஆகும்.

'@' ஐ உள்ளீடு செய்தவுடன், AutoCAD '@' ஐ தொடர்ந்து கொடுக்கப்படும் புள்ளிகளை Relative System ல் எடுத்துக் கொள்கிறது.

இப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Relative Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.


முடிந்தால் இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த முறையை விட எளிதான முறையை அடுத்த இடுகையில் பார்த்த பின்னர், AutoCAD -ல் வரைபடங்களை உருவாக்கும் முறைகளைப் பார்க்கலாம். அதற்குள்ளாக இந்த இரண்டு முறைகளையும் உபயோகித்து, வேறு சில வரைபடங்களுக்கு புள்ளிகளை குறிக்க முயற்சித்துப் பாருங்கள்.




இந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.





Wednesday 1 July, 2009

CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1

எந்த ஒரு வரைபடத்தை எடுத்துக் கொண்டாலும் அது Line, Point மற்றும் Arc களினால் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். எனவே, ஒரு வரைபடத்தை எளிதாக வரையறுக்க வேண்டுமெனில் 'Lines & Arcs' என வைத்துக் கொள்ளலாம். இவற்றை மாறுபட்ட இடங்களில், மாறுபட்ட கோணங்களில் அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான வரைபடத்தை உருவாக்க, எனக்குத் தெரிந்த முறையில் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த பதிவு. (வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடரும்!)

ஒரு Line ஐ வரைய வேண்டுமெனில் நமக்கு அதன் துவக்கப் புள்ளியும், இறுதிப்புள்ளியும் தெரிந்திருக்க வேண்டும். (ஒரு Line இன் Start point மற்றும் End Point தெரிந்தால், நமக்கு அதன் கோணமோ(Angle), அளவோ தெரிய வேண்டியதில்லை). இதனை Co-ordinates என வைத்துக் கொள்வோம். AutoCAD ஐ பொறுத்தமட்டில் ஒரு வரைபடத்தில் குறிப்பிட்ட object -இன் இருப்பிடம் x,y Co-ordinates இனால் நிர்ணயிக்கப்படுகிறது. இது AutoCAD-ல் World Co-ordinate System (WCS) என வரையறுக்கப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் CAD மிக எளிதாகிவிடும்.

முதல் இரு பதிவுகளில் CAD -இன் அடிப்படை பாடங்களை பார்க்கப்போவதால், சிறிது போரடித்தாலும், மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

AutoCAD-ல் குறிப்பிடும்படி மூன்று Co-ordinate System-கள் உள்ளன.

முதலாவது,

Absolute Co-ordinate system:- (Syntax: x,y)

இந்த முறை வரைபடத்தாளில் (Graph Sheet) x,y புள்ளிகளைக் குறித்துக்கொண்டு பின் அந்த புள்ளிகளை இணைக்கும் வகையில் கோடு வரைவது போல் ஆகும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள், இது 60 x 40 அளவு கொண்ட ஒரு செவ்வகமாகும்.


Absolute Co-ordinate system ஐ உபயோகித்து A,B,C மற்றும் D Co-ordinates ஐ தெரிந்து கொள்வது எப்படி? கீழேயுள்ள படத்தை கவனியுங்கள்.


இதில் A என்ற புள்ளி X அச்சில் 0 விலும் Y அச்சில் 0 விலும் உள்ளது, அதாவது A(0,0) [0,0 என்பது Origin], B என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளது, அதாவது B(60,0). C என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் C(60,40). D என்ற புள்ளி X அச்சில் 0 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் D(0,40) ஆகும்.

அதாவது முதலில் சொன்ன 60 x 40 செவ்வகத்தை வரைய நமக்கு தேவைப்படும் புள்ளிகள்.

A(0,0)
B(60,0)
C(60,40)
D(0,40)

இப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.
இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.


வாசகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து, அடுத்தப் பதிவில் சந்திப்போம்.

AutoCAD சம்பந்தமான நண்பரின் வலைப்பதிவை காண http://cadlearn.blogspot.com

இந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)