DVD வீடியோக்களை MP4 அல்லது MKV வீடியோ வகைகளுக்கு கன்வெர்ட் செய்ய ஒரு சில மென்பொருட்கள் சந்தையில் இருந்தாலும் HandBrake எனும் கருவி ஓர் கட்டற்ற சுதந்திர இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் OS இயங்குதளங்களில் இயங்கும் படியாக தனித்தனியாக பொதிகளில் தரவிறக்க கிடைக்கிறது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.
இதன் File மெனுவில் உள்ள Source பொத்தானை அழுத்தி, மாற்ற வேண்டிய DVD வீடியோ கோப்பு அல்லது Video_TS Folder ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
Tools menu வில் Options க்ளிக் செய்து General டேபில் output folder - location ஐ கொடுக்கலாம். பிறகு மூலத்திரையில் Output settings இற்கு கீழாக உள்ள container drop down list -இல் MP4 அல்லது MKV கோப்பு வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் இதில் Video filters, Sub Titles, Chapters, Audio, video codec மாற்றுவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.
தேவையான அனைத்து settings களையும் செய்த பிறகு மேலே உள்ள Start பொத்தானை அழுத்தி காத்திருக்க வேண்டியதுதான்.
மொத்தத்தில் வீடியோ பிரியர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் கருவியாகும்.
.
4 comments:
pspக்கும் உதவும் தானே!!!
Great info..........Thanks
you are doing Very Good service to all. Best wishes. Please continue your service. God bless you.Arasu
சும்மா சொல்ல கூடாது பாஸ் நிறையா நல்ல மேட்டர் போடுறீங்க கலக்குங்க
Post a Comment