Saturday 5 June, 2010

NetBook / CD/DVD Drive இல்லாத கணினிகளில் இயங்குதளத்தை நிறுவ

சமீப காலமாக சந்தையில் களமிறங்கியுள்ள Netbook என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கணினிகளை மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். அவற்றின் விலை குறைவாக இருப்பதும், கையில் எடுத்துச் செல்வது எளிது என்பது போன்ற காரணங்களால் அனைவரையும் கவர்ந்திருப்பது ஆச்சர்யமல்ல. 



ஆனால் இந்த நெட்புக்கில் DVD ட்ரைவ் இல்லை என்ற ஒரு குறைபாடு உண்டு. இதன் ஒரு சில மாடல்களில் இயங்குதளம் நிறுவப்படாமல், Free DOS  உடன் வருகிறது. இது போன்ற நெட் புக் களில் விண்டோஸ் 7 , விஸ்டா போன்ற இயங்குதளங்களை நிறுவ, External DVD ட்ரைவ்களை நாட வேண்டியுள்ளது. 

இந்த Netbook அல்லது DVD ட்ரைவ் இல்லாத/பழுதடைந்த கணினிகளில் பென் ட்ரைவ் மூலமாக இயங்குதளத்தை நிறுவ முடியுமா?   இதற்கு நமக்கு தீர்வாக அமைகிறது WinToFlash  என்ற மென்பொருள் கருவி. 

இந்த மென்பொருளை உபயோகித்து உங்கள் பென் ட்ரைவை ஒரு  Windows Bootable Installation Drive ஆக உருவாக்க, விண்டோஸ் 7  அல்லது தேவையான விண்டோஸ் இயங்குதள Installation CD/DVD இருக்க வேண்டும். மேலும் CD/DVD டிரைவ் உள்ள கணினி இருக்க வேண்டும்.

முதலில் நீங்கள் இதற்காக உபயோகிக்கும் பென் ட்ரைவை (8GB அளவு இருத்தல் நன்று) NTFS முறையில் Format செய்து கொள்ளுங்கள்.     

WinToFlash மென்பொருள் கருவியை திறந்து கொள்ளுங்கள். Windows Setup Transfer Wizard ஐ க்ளிக் செய்யுங்கள்.

   
அடுத்து Task tab -இல் Task type இற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் உங்களுக்கு தேவையான இயங்குதளத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வரும் Basic Parameters திரையில் Windows Files path என்பதில் உங்கள் Windows Installation CD/DVD யின் path ஐ கொடுங்கள். USB Drive இற்கு நேராக USB ட்ரைவின் path ஐ கொடுங்கள். சில சமயம் திறக்கும் விண்டோஸ் லைசன்ஸ் அக்ரீமென்ட் திரையில் I Accept கொடுத்து Continue பொத்தானை அழுத்துங்கள். 

இப்பொழுது பென் ட்ரைவ் மறுபடியும் போர்மட் செய்யப்பட்டு, கோப்புகள் காப்பியாக துவங்கும். இதற்கு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் எடுக்கலாம். இது உங்கள் கணினியின் வேகத்தைப் பொருத்து மாறுபடும்.    


அவ்வளவுதான்!. உங்கள் பூட்டபிள் USB டிரைவ் ரெடி. இதை தேவையான Netbook அல்லது கணினிகளில் Boot from USB drive option இல் சென்று எளிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம். 


. 

2 comments:

Anonymous said...

நெட்புக்னா என்ன நண்பா?கொஞ்சம் விபரமா சொல்லுங்க.எவ்ளோ ரூபா முதல் வாங்கலாம்

சூர்யா ௧ண்ணன் said...

//ஆகமக்கடல் said...

நெட்புக்னா என்ன நண்பா?கொஞ்சம் விபரமா சொல்லுங்க.எவ்ளோ ரூபா முதல் வாங்கலாம்//

நெட் புக் என்பது மடிக்கணினியின் (LAPTOP) சிறிய வடிவம் ஆகும். அதாவது திரையின் அளவு 9 inch முதல் 10.1 inch வரை இருக்கும். பெரும்பாலும் இன்டெல் atom processor கொண்டதாகவும், 1 GB ராம் கொண்டதாகவும் இருக்கும், DVD ட்ரைவ் இருக்காது.. இதன் விலை ரு. 15000 முதல் சந்தையில் கிடைக்கிறது..

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)