Friday 25 June, 2010

PDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்

PDF என்றவுடன் உடனே நம் மனம் உச்சரிப்பது Adobe Acrobat. PDF கோப்புகளை படிப்பதற்கு Adobe Reader உட்பட பல  மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் ஒரு PDF கோப்பை உருவாக்க, ஸ்ப்ளிட் அல்லது மெர்ஜ் செய்ய, எடிட் செய்ய Adobe Acrobat Professional போன்ற மென்பொருட்களை பணம் செலவழித்து வாங்க வேண்டியுள்ளது. 

 
இந்த பணியினை எளிதாக செய்ய ஒரு கட்டற்ற சுதந்திர இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் PDFsam (sam= Split and Merge). தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இந்த மென்பொருளை உருவாக்கியவர்  Andrea Vacondio. இவர் பல வருடங்களுக்கு முன்பாக தனது இளநிலை பட்டப்படிப்பின் போது சமர்ப்பிக்க வேண்டிய தீசிஸ் உருவாக்கத்தின் போது, PDF கோப்பில் சில பகுதிகளை நீக்கவும், இணைக்கவும் அவசிமிருந்ததால், இதற்கான இலவச மென்பொருளை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இந்த எளிய மென்பொருள் கருவியை உருவாக்கும் எண்ணம் இவருக்கு தோன்றி  தனது வார இறுதி விடுமுறை நாட்களில் இதனை உருவாக்கும் பணியில் இறங்கி விட்டார். 
 

ஆரம்ப காலங்களில் Split and Merge இற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கம், பின்னர் விரிவடைந்து, split, merge, decrypt, encrypt, rotate, mix, set metadata, visually compose மேலும் பல வசதிகளை கொண்ட மென்பொருள் கருவியாக உருவெடுத்தற்கு காரணமாக இவர் சொல்லுவது, தினமும் காலையில் இவருடைய இணைய Forum த்தில் ‘Hey man, you saved my job yesterday with your software, thanks!’ போன்ற போஸ்டுகள் தான்.

  
இதனை உருவாக்க இவர் பயன்படுத்தியவை  Ubuntu, Eclipse, Ant போன்ற இலவச மென்பொருட்களையே. 


மிகவும் பயனுள்ள மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். 


.

13 comments:

க.பாலாசி said...

மிக்க நன்றிங்க.. என்னுடைய அலுவலகப் பயன்பாட்டிற்கு இதுபோன்றதொரு மென்பொருளைத் தேடிக்கொண்டிருந்தேன்... தக்க சமயத்தில் தங்களால் கிடைத்தது. நன்றிங்க...

suthanthira.co.cc said...

/இதனை உருவாக்க இவர் பயன்படுத்தியவை Ubuntu, Eclipse, Ant போன்ற இலவச மென்பொருட்களையே. //ஆஹா! ஆஹா!! விண்டோசுக்கே இப்போ லினக்சில்தான் புரோகிராம் பண்றாங்களா?நடக்கட்டும். நடக்கட்டும்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அதிக நாட்களாக இருந்த சந்தேகம் இன்று தீர்ந்துவிட்டது .பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே

mohan said...

வணக்கம் சார், சில இணையதளங்களை pdf கோப்பாக சேமிக்கும் போது அதனுடன் சேர்ந்து விளம்பரங்களும் சேமிக்கப்படுகின்றன, விளம்பரங்களை எவ்வாறு நீக்குவது, ஏதேனும் இலவச மென்பொருள் உள்ளதா தெரிவிக்கவும் நன்றி....

சிவபாலன் said...

Excellent Post!Thanks for Sharing!

Ramachandran said...

thx .,.,

செந்திலான் said...

nandri, naanum thedik kondirunthen meendum nandri

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பா

பிரவின்குமார் said...

மிகவும் பயனுள்ள தகவல். எளிமையாக விளக்கும் படங்களுடன் அவசியமான பதிவு நண்பரே..!

kk samy said...

தாங்கள் கொடுத்த இந்த மென்பொருளை install செய்தேன். Run பன்னும் போது, "Sorry, no suitable JRE version found on your System." என்று Error சொல்கிறது. மென்பொருளை இயக்க முடியவில்லை. தாங்கள் இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

//kk samy said... தாங்கள் கொடுத்த இந்த மென்பொருளை install செய்தேன். Run பன்னும் போது, "Sorry, no suitable JRE version found on your System." என்று Error சொல்கிறது. மென்பொருளை இயக்க முடியவில்லை. தாங்கள் இதற்கு தீர்வு சொல்லுங்கள்.//வருகைக்கு நன்றி திரு. சாமி அவர்களே! உங்கள் கணினியில் உள்ள Java VM ஐ Java தளத்திற்கு சென்று அப்டேட் செய்து கொள்ளுங்கள்.. சரியாகிவிடும்..

Anonymous said...

You can use NitroPDF too.

Unknown said...

மிக அருமையான தகவல்கள்..
நன்றி.. என் போன்ற புதியவர்களுக்கு இது ஆச்சர்யமாக உள்ளது...


And please give to me a tips.. while connecting my pc to internet through nokia pc suite, frequently disconnected automatically.. wats the solution sir

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)