நமது கணினிகளில் சில சமயங்களில் இயங்குதளம் பூட் ஆகாமல் போவதும், நமது முக்கியமான டேட்டாக்கள் உள்ளே இருக்கிறதே என்ன செய்வது? என டென்ஷன் ஆவதும் வாடிக்கைதான்.
சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள், நாம் கடைசியாக நிறுவிய மென்பொருளால் கூட ஏற்பட்டிருக்கலாம். சிஸ்டம் ரீஸ்டோர் செய்வதற்கு கூட விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே சென்றுதான் செய்ய முடியும். இதோ உங்களுக்காக ஒரு எளிய முறையில் விண்டோஸ் 7 இயங்குதளம் உள்ள கணினிக்கு ரிப்பேர் டிஸ்க் ஐ நீங்களாகவே எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.
விண்டோஸ் 7 சர்ச் பாக்ஸில் system repair disc என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இந்த ரிப்பேர் டிஸ்க் ஐ உருவாக்க வெறும் 142 MB போதுமானது என்பதால், ஒரு Blank CD ஐ உபயோகித்தால் போதுமானது.
அடுத்து திறக்கும் Create a System Repair Disc வசனப் பெட்டியில் உங்கள் CD/DVD writer இன் ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Create Disc பொத்தானை அழுத்தி recovery disc ஐ உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இனி எப்பொழுதாவது உங்கள் கணினியில் ஏதாவது பிரச்சனை உருவாகி பூட் ஆகாமல் போனால் இந்த Recovery Disc ஐ உபயோகித்து பூட் செய்து Windows Setup [EMS Enabled] என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி வரும் system recovery options வசனப் பெட்டியில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து உங்கள் கணினியை நீங்களே சரி செய்து கொள்ளலாம்.
எப்பொழுதுமே கணினி நல்ல நிலையில் வேலை செய்யும் பொழுது System Image ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்வது நல்லது.
.
19 comments:
இப்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் மானவர்களுக்கு கணினியை பற்றிசொல்லித்தரலாம்
வாங்க சௌந்தர்! நீங்க சொல்றது நல்ல விஷயம்தான்.. ஆனால் சிறுவர்களுக்கு எழுதுவதற்கு நிறைய பொறுமை வேண்டும்.. முயற்சி செய்கிறேன்..
நன்றி சூர்யா கண்ணன்.
ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே!இது மிகவும் உபயோகப்படும்.
அப்பாடா! இது ஒன்னு நானே பண்ணிட்டேன்:). நன்றி தலைவா.
மிக்க நன்றிஉபயோகமானது
நன்றி ஜமால்
நன்றி சைவகொத்துப்பரோட்டா
நன்றி ஜில்தண்ணி
நன்றி தலைவா!
தேவையான ஒன்னுதான்.
சூர்யா சார்,நான் இப்போது தான் உங்களுடைய தளத்தை கண்டேன்.அனைத்து பதிவுகளும் நன்றாக எழுதி உள்ளீர்கள்.நான் தான் உங்களுடைய பதிவுகளை தவற விட்டு விட்டதாக கருதுகிறேன்.அதனால் நான் உங்களுடைய முந்தய பதிவுகளை படித்து கொண்டு இருக்கின்றேன்.இதில் நீங்கள் எழுதிய ஒரு பதிவில் "ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது" என்பதை நானும் செய்து பார்த்தேன்.ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.நீங்க சொன்ன மாதிரி நானும் செஞ்சு பார்த்தேன்.ஆனா அது எப்பவும் போல ரைட் கிளிக் பண்ண ஓபன் ஆகாம நு சொல்லுது.அது போல டபுள் கிளிக் பண்ண டாஸ் ப்ராம்ப்ட் ,நோட் பாட் பைல் ஓபன் ஆகுது.நீங்க சொன்ன மாதிரி எப்டி தான் ஓபன் ஆகுமா இல்லன நான் தப்பா பண்றேனா நு எனக்கு புரியல.அது போல எனக்கு பழைய படி எந்த ஆப்சன் வேண்டாம் நா என்ன பண்றது.நீங்க கண்டிப்பா பதில் சொல்லுவேங்க நு உங்ககிட்ட கேக்குறேன்.பை,உங்கள் தீவிர வாசகர்.annes.
நன்றி அனீஸ்!.. மறுபடியும் my computer - folder options - File types சென்று File Folder தேர்வு செய்து advanced button ஐ க்ளிக் செய்து 'Folder Contents' ஐ remove செய்து விடுங்கள். சரியாகிவிடும்.. இந்த பதிவையும் பாருங்க.. http://suryakannan.blogspot.com/2009/09/blog-post_1276.html
சார் வழக்கம் போல உங்கள் பதிவு அருமை , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வணக்கம்.இதே போல் விண்டோ எக்ஸ்பி க்கும் உண்டா?
உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html
நீங்க சொன்ன மாதிரி எல்லாம் பண்ணேன்.பட் remove option disable ah eruku இல்ல.
நான் நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்த்தேன்.ஆனால் நான் "set as default option" தெரியாமல் கிளிக் செய்து விட்டேன்.அதனால் அது disable ஆகிவிட்டது.எனக்கு எப்போதும் போல் ஓபன் ஆகா என்ன செய்ய வேண்டும்??
//anees said... நான் நீங்கள் சொன்னது போல் முயற்சி செய்து பார்த்தேன்.ஆனால் நான் "set as default option" தெரியாமல் கிளிக் செய்து விட்டேன்.அதனால் அது disable ஆகிவிட்டது.எனக்கு எப்போதும் போல் ஓபன் ஆகா என்ன செய்ய வேண்டும்??//அனீஸ்! கீழே தரப்பட்டுள்ள சுட்டியிலிருந்து ரெஜிஸ்ட்ரி ஃபைலை தரவிறக்கம் செய்து ரன் செய்யுங்கள் .. சரியாகி விடும்.. http://www.dougknox.com/xp/fileassoc/folder_reg.zip
Post a Comment