இப்பொழுதெல்லாம் கணினியும், இணையமும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் வீட்டிலும் பயன்பாட்டில் உள்ளது. பெரியவர்கள் தங்களுக்கான வேலைகளை இணையத்தில் செய்து கொள்கிறார்கள். சிறுவர்கள் உள்ள இல்லங்களில் உள்ள பெரியவர்களுக்கு எப்பொழுதுமே உள்ளூர ஒரு கலக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமது குழந்தைகள் ஏதாவது பலான, பலான வலைப்பக்கங்களை பார்த்து விடுவார்களோ என்ற பீதி வருவது நியாயமானதுதான்.
இது போன்ற பலான பலான பக்கங்கள் உங்கள் கணினியில் திறக்காமல் இருக்க (திறக்கலையின்னா.. இருக்கவே இருக்கு ப்ரொவ்சிங் சென்டர்.. என்று நீங்கள் புலம்புவது தெரிகிறது.. ஆனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது) நிறைய மென்பொருட்கள் சந்தையில் விற்கப்படுகிறன. ஆனால் பணம் செலவழித்து வாங்க வேண்டுமே?
இதோ இலவசமாக இவற்றை உங்கள் கணினியில் தடை செய்ய கூகிள் க்ரோமிற்க்கான எளிய நீட்சி Kid safe - LinkExtend உங்களுக்காக. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).
இந்த நீட்சியை உங்கள் கூகிள் க்ரோம் உலாவியில் நிறுவியபிறகு, நீங்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான செயல், இதன் Option பகுதிக்குச் சென்று Allow entering unsafe sites என்ற ஆப்ஷனை uncheck செய்து விடுவதுதான்.
மேலும் இந்த நீட்சி Web of Trust, Alexa, Browser Defender, Web Security Guard, ICRA மற்றும் Google Safe Search போன்ற சக்தி வாய்ந்த கருவிகளால் கட்டுப்படுத்தப் படுவதால், உங்கள் வயிற்று கலக்கம் மட்டுப்பட்டிருப்பது உங்களால் உணர முடியும்.
இந்த நீட்சியை நிறுவிய பிறகு எந்த தேடுபொறியில் சென்று பலான பக்கங்களை தேடினாலும். No Chance.
முயற்சி செய்து பாருங்கள்.
.
3 comments:
மிகப்பயனுள்ள பகிர்வு. நன்றி சூர்யா
Dear: Is there any web to consult with online doctor? I am really love ur blogs..
அப்படியே தொலைக்காட்சியில் வரும் ஆபாச நிகழ்ச்சிகளையும் குழந்தைகள் பார்க்க முடியாமல் தடுக்க வழி இருந்தா சொல்லுங்க....
Post a Comment