Saturday 8 May, 2010

கணினியின் வேகத்தை அதிகரிக்க சில யோசனைகள்

நாம் புதியதாக கணினி வாங்கிய பொழுது இருந்த வேகத்தை விட தற்போதைய வேகம் குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?. இதோ உங்கள் கணினின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க சில யோசனைகள்.
1.  கணினி முழுவதுமாக பூட் ஆகுவதற்கு முன்பாக எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறக்க முயற்சிக்காதீர்கள். 
 2. டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper ஆக இட வேண்டாம். ஏனெனில் அதிக அளவுள்ள படங்களை வால் பேப்பர் ஆக இடும் பொழுது அதிகப்படியான மெமரியை எடுத்துக் கொள்கிறது. 

3. ஒவ்வொரு அப்ளிகேஷனை நீங்கள் மூடிய பிறகு, டெஸ்க்டாப்பை Refresh செய்து கொள்ளுங்கள். (மௌஸ் வலது க்ளிக் - Refresh அல்லது F5)  

4.  Desktop இல் நிறைய Shortcutகளை உருவாக்கி வைக்காதீர்கள். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளையோ ஃபோல்டர்களையோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut ம் 500 bytes மெமரியை எடுத்துக் கொள்கிறது. 

5.  அவ்வப்பொழுது Recycle Bin ஐ காலியாக்கி விடுங்கள். 

6.  Temporary internet files ஐ அவ்வப்பொழுது நீக்கி விடுங்கள். 

7.  மாதம் ஒருமுறை உங்கள் வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும். 

8.  AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய மென் பொருட்களை, உங்கள் வன்தட்டில், இயங்குதளம் நிறுவப் படாத பார்ட்டீஷனில் பதிந்து கொள்ளுங்கள். 

9. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல் வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்.

10. உங்கள் கணினியை தூசு துகள்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது பிராசசர் சூடு ஆகிக்கொண்டிருக்கும் இதனை தணிக்க பிராசசர் ஃபேன், மற்றும் ஹீட் சின்க் -இல் தூசிகள் படிந்து படிந்து, ஃபேனின் வேகம் குறைந்து போவதால் ப்ராசசரின் வெப்பம் அதிகரிப்பதால், கணினியின் வேகம் குறையும்.

   

.

16 comments:

MANIKANDAN said...

good and useful post.

soundar said...

நன்றி எனக்கு தெரியாத பல தகவல்களை தெரிந்துகொண்டேன்

அஹமது இர்ஷாத் said...

useful tips

பா.ராஜாராம் said...

மிக உபயோகமான தகவல்கள்.

ஸ்ரீராம். said...

நல்ல யோசனைகள்..நன்றி.

Venkatesan ,vridhachalam. said...

பதிவுக்கு நன்றி.எனக்கு ஒரு ஆலோசனை தேவை.நொக்கியா புதிதாக NOKIA C 3 என்ற மாடலை வெளியிட்டுள்ளதாக சில தளத்திலும்,வெளிவர இருக்கிறது என்று சில தளத்திலும் உள்ளது.வெளிவந்துவிட்டதா இல்லையா?
2.அதில் voice chat செய்யமுடியும் என்கின்றனர்.அது உண்மையா?
இதற்கான பதிலை gvsivam@gmail.com மிற்கு அனுப்பவும்

vimalavidya said...

D GOOD IDEAS sURIA--WELL

+யோகி+ said...

இதோ உடனே செய்துவிடுகிறேன்
நன்றி!!!

வானம்பாடிகள் said...

நன்றி தல:)

நித்தி said...

பயனுள்ள பதிவு திரு.சூர்யாகண்ணன்......

"எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல் வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து விடுங்கள்."

ஆன்டிவைரஸ் மென்பொருளுக்கு இந்த செட்டிங் சரிபட்டு வராது சார்.....ஆன்டிவைரஸ் மென்பொருள் எப்போதுமே Windows Startup உடனே இயங்கவேண்டும்.....

பகிர்வுக்கு நன்றி சார்....

colvin said...

பயனுள்ள குறிப்பு. கணினியை வேகமாக இன்னுமொன்றையும் செய்யலாம். தேவையற்ற Visual Effect களை அகற்றவிட்டால் படு ஸ்பீடாக கணினி இயங்கும்
இதற்கு My computer இல் Right Click செய்து Properties ---> Advance ---> (Performance)Setting---> Adjust fot Best Performance ஐ Click செய்து OK செய்தால் போதும்.
இப்போது கணினியின் வேகத்தை உணரலாம்.

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

sir,very useful information....thanks sir....

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

very useful information,thanks sir.....

vijay said...

thank u suriya reg.ur advise. really is helpful . due to urgent many short cuts are occupied in desktop. thank u . give useful tips

Tech Shankar said...

Hi.. Top First Poster of this Month. Great man. You did well. Congrats Buddy.

venky said...

Very very Thanks..... for your useful informationVenkatesh G

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)