Wednesday 20 January, 2010

எந்தவித வீடியோ கோப்பையும் DVD ப்ளேயரில் பார்க்கும்படியாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்


கணினியில் நாம் பார்க்கும், உபயோகிக்கும் வீடியோ கோப்புகள் பல வடிவிலானவை, உதாரணமாக AVI, WMV, MPEG, FLASH போன்றவைகள். இது போன்ற மேலும் பலத்தரப்பட்ட வீடியோ வடிவுகளை கணினியில் நாம் கண்டு களிக்கினறோம். இவற்றை நமது வீட்டிலுள்ள DVD ப்ளேயரில் காண முடியுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் DVD ப்ளேயர்கள் ஒரு சில வீடியோ வகைகளை மட்டுமே இயக்கக் கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இது போன்ற கோப்புகளை DVD ப்ளேயரில் இயங்கும் படியாக மாற்றுவதற்கு ஒரு சுதந்திர இலவச மென்பொருள் DVD Flick (தரவிறக்கச்  சுட்டி  இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதனை கணினியில் பதிந்து கொள்வது எளிதானது. இதில் டைட்டில் கொடுப்பது மற்றும் வீடியோ கிளிப்புகளை இணைப்பது எளிதானதுதான்.

AVI, WMV, FLV போன்ற வீடியோ கோப்புகளை நீங்கள் Explorer இல் Browse செய்தோ அல்லது ப்ராஜக்ட் விண்டோவில் ட்ராக் அன்ட் ட்ராப் மூலமாகவோ இணைக்க முடியும்.

இதன் ப்ராஜக்ட் திரை பகுதியில் நீங்கள் இணைத்த வீடியோ கோப்புகளை வரிசை மாற்றுவது, டைட்டில் மாற்றுவது போன்றவற்றோடு, விருப்பத்திற்கேற்ப மெனு வடிவை அமைக்கலாம்.

இதனுடைய Burning  பகுதி மற்ற DVD Burning மென் பொருட்களில் தரப்பட்டுள்ள வசதிகளை உள்ளடக்கியுள்ளது. Burn பட்டனை க்ளிக் செய்தவுடன் வீடியோ கோப்புகள் என்கோடிங் ஆக துவங்கிவிடும். இதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு போரடிக்காமல் இருக்க இந்த திரையில் உள்ள Entertain me பொத்தானை க்ளிக் செய்து Tetris விளையாட்டை விளையாடலாம்.
 

அவ்வளவுதான். இனி இந்த DVD ஐ உங்கள் வீட்டு DVD player இல் பயன் படுத்தலாம். இதற்காக பணம் கொடுத்து மென்பொருட்களை வாங்குவதை விட இந்த சுதந்திர இலவச மென் பொருளை பயன் படுத்தி பயன் பெறுங்கள்.




 

.

16 comments:

யவனராணி said...

அருமையான உபயோகமான பதிவுங்க சூர்யா சார்... நன்றி!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி யவனராணி!..,

சங்கர் said...

நன்றி தல, Resolution தானாகவே Adjust ஆகுமா?

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி சங்கர்! ஓரளவுக்கு ஆகும் .. முயற்சித்துப் பாருங்கள்..

வானம்பாடிகள் said...

super

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தலைவா!

பின்னோக்கி said...

இப்ப வர்ற நிறைய டிவிடி பிளேயர் avi files ப்ளே பண்ணுது. அதுனால டேட்டாவா, பதிவு பண்ணுனாலே பார்க்க முடியுது.

சூர்யா ௧ண்ணன் said...

உண்மைதாங்க! ஆனால் FLVநன்றி பின்னோக்கி!

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றிங்கோஎன்கிட்ட நிறைய AVI Filesஆ இருக்கு

thenammailakshmanan said...

thanks surya

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க தேனம்மை!..

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ஜமால்!

Feros said...

அருமையான உபயோகமான பதிவுThanks...

Feros said...

அருமையான உபயோகமான பதிவுThanks...

SURESH KS said...

நன்றி அருமையான பதிவு சூர்யா கண்ணன் சார்,என்னுடைய விட்டில் சோனி பழைய மாடல் டி.வி.டி பிளேயர் உள்ளது.. இதில் divx format கிடையாது.. இதில் படம் பார்க்க நிரோவில் எழுதும் போது அதிக நேரமாகிறது (dvd for 3 to 4 hr and cd for 1 hr).. இந்த dvd flick யில் எழுத எவ்வளவு நேரமாகும்.. இதை என்னுடைய பிளேயரில் பார்க்க முடியுமா?

Venu said...

மிக்க நன்றி தலைவா. என்னிடம் நிறைய AVI வீடியோ இருக்கு. மிக்க நன்றி....

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)