Saturday 23 January, 2010

பவர் பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக எளிதாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்..

நாம் உருவாக்கும் பவர்பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ்  கோப்புகளாக மாற்றி நமது வலைப் பக்கங்களில் உபயோகிக்க அல்லது நண்பர்கள் எவருக்காவது அனுப்ப ஏதாவது வழி இருக்கிறதா என பதிவுலக நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

இதோ அவருக்கும் மற்றும் உங்களுக்காக,  பவர் பாயின்ட் கோப்புகளை ஃப்ளாஷ் கோப்புகளாக எளிதாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்.. iSpring Free (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதனை தரவிறக்கம் செய்து  பதிந்து கொள்வது மிகவும் எளிதான விஷயமாகும்.


இந்த மென் பொருள் பவர் பாயிண்டில் ஒரு Add-on ஐப் போன்று செயலாற்றுகிறது. இதை நமது கணினியில் பதிந்து கொண்ட பிறகு, பவர்பாயின்டை திறந்தால் அதில், புதிய மெனு உருவாகியிருப்பதைப் பார்க்கலாம்.




  இனி நாம் உருவாக்கிய பவர்பாயின்ட் ஸ்லைடு ஷோ கோப்பை திறந்து கொண்டு மேலே மெனுபாரில் உள்ள Publish என்ற பொத்தானை அழுத்தினால் திறக்கும் விண்டோவில் புதிதாக உருவாக்கப் போகும் SWF ஃப்ளாஷ் கோப்பின் பெயர் மற்றும் நமக்கு தேவையான மாற்றங்களை செய்து பப்ளிஷ்  பொத்தானை அழுத்தினால் போதுமானது.

நமது பவர் பாயின்ட் கோப்பில் உள்ள ஸ்லைடுகளின் எண்ணிக்கை மற்றும் அதிலுள்ள படங்களின் அளவுகளைப் பொருத்து ஃப்ளாஷ் கோப்பு உருவாக்கப்படும் நேரம் மாறுபடும்.

அவ்வளவுதான்!.. உங்களுக்கான ஃப்ளாஷ் கோப்பு தயார்!..


PowerPoint to Flash Converter  iSpring Free 




.

 


6 comments:

வானம்பாடிகள் said...

romba useful tool. thanks surya.

ஆ.ஞானசேகரன் said...

நன்றி கண்ணன்

ismail said...

நன்றாக உள்ளது இந்த பதிவு உங்களிடம் தொலினுப்பத்தைப்பற்றி சந்தேகம் கேட்கலாமா அப்படியன்றால் மின்னஞ்சல் முகவரி தரவும்

நட்புடன் ஜமால் said...

இப்போதைக்கு எனக்கு தேவையில்லையென்றாலும்நோட் பன்னிக்கிட்டேன் நண்பரேதொடர்க தங்கள் பணி.

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல் நண்பரே..தெளிவாகச் சொன்னீர்கள்..

2009kr said...

நண்பரே, என்னுடைய ஹர்ட் டிஸ்க் வைரஸ் காரணமாக பார்மெட் செய்தபோது சிஸ்டத்தில் இருந்த சில முக்கிய பைல்களும் பார்மட் ஆகிவிட்டது அதனை திருப்பி கொண்டுவர ஏதேனும் சாப்ட்வேர் இருக்கிறதா?

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)