நாம் இணையத்தில் சில விக்கிபீடியா போன்ற தளங்களிலிருந்து, நமக்கு தேவைப்படும் ப்ராஜெக்டிற்காகவோ, அல்லது வேறு ஏதாவது உபயோகத்திற்காகவோ, டெக்ஸ்டை காப்பி செய்து வேர்டு போன்ற எடிட்டரில் பேஸ்ட் செய்யும் பொழுது, ஐபர் லிங்க், இமேஜ், டெக்ஸ்ட் பாக்ஸ், டேபிள் போன்றவைகள் Text Format செய்யும் பொழுது பெரும் இடைஞ்சலாக இருக்கும். உதாரணமாக கீழே உள்ள படங்களை பாருங்கள்.
இப்படி காப்பி செய்த டெக்ஸ்டை வேர்டில் பேஸ்ட் செய்யும் பொழுது,
இப்படி வரும் இதை ஃபார்மேட் செய்வதற்குள் பெரும் பாடாக இருக்கும். அல்லது இதை நோட்பேடில் முதலில் காப்பி செய்து பிறகு வேர்டுக்கு எடுக்க வேண்டும்.
இந்த பணியை மிகவும் எளிதாக்க நெருப்பு நரியின் Copy Plain Text என்ற நீட்சியை இறுதியில் உள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளூங்கள். (அதற்கு முன்பாக ஓட்டு போடுங்கள்.. ஹி ஹி )
Copy Plain text என்ற நீட்சியை நிறுவிய பிறகு, மேலே குறிப்பிட்ட பணி எவ்வளவு எளிதாகிறது என்று பாருங்கள்.
இப்படி டெக்ஸ்டை தேர்வு செய்து வலது கிளிக் செய்து, Context மெனுவில் Copy as Plain Text என்பதை கிளிக் செய்து, வேர்டில் பேஸ்ட் செய்தால்..,
இது மட்டுமல்லாமல், இதனுடைய Options சென்றால், மேலும் சில வசதிகள் தரப்பட்டுள்ளன.
இந்த நீட்சி அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
.
34 comments:
மிகவும் தேவையான தகவல்... நன்றி...
Good one... Voted...
நன்றி சூர்யா
நன்றி தலைவா!
நன்றி விஜய் ஆனந்த்!
நன்றி பேநா மூடி!
Nice one Mr.Surya
அதென்ன நெருப்பு நரி? Firefox என்பது ஒரு brand name. இதை ஏன் இவ்வளவு அசிங்கமாக தமிழ்பபடுத்துகிறீர்கள்? உங்கள் பெயரை ஒரு ஆங்கில மனிதன் suneyeman (சூர்யாகண்ணன்) என்று ஆங்கிலப்படுத்தினால் எவ்வளவு விகாரமாக இருக்கும்? உங்களை போன்றவர்களால் தமிழ் இனி மெல்ல சாகாது. அதற்க்கு மிக விரைவில் சமாதி கட்டவேண்டியதுதான்.
மீண்டும் நன்றி
நன்றி திரு. நித்தியானதம்
//Sai said... அதென்ன நெருப்பு நரி? Firefox என்பது ஒரு brand name. இதை ஏன் இவ்வளவு அசிங்கமாக தமிழ்பபடுத்துகிறீர்கள்? உங்கள் பெயரை ஒரு ஆங்கில மனிதன் suneyeman (சூர்யாகண்ணன்) என்று ஆங்கிலப்படுத்தினால் எவ்வளவு விகாரமாக இருக்கும்? உங்களை போன்றவர்களால் தமிழ் இனி மெல்ல சாகாது. அதற்க்கு மிக விரைவில் சமாதி கட்டவேண்டியதுதான்.//வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. சாய்! நீங்கள் குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கோ, அல்லது வேறு எந்த நிறுவனங்களுக்கோ கூஜா தூக்குபவன் கிடையாது... அவர்களுடைய பிராண்ட் நேமை நான் உபயோகப்படுத்தி அவர்களுக்கு விளம்பரம் செய்யும் அல்லது சிபாரிசு செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை... நான் எழுதுகிற ஏதாவது ஒரு தகவல் யாராவது ஒரு தமிழனுக்கு உபயோகமாக இருந்தால் அதுவே போதும் என்று, எனது எனது ஆன்ம திருப்திக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.//தமிழ் இனி மெல்ல சாகாது. அதற்க்கு மிக விரைவில் சமாதி கட்டவேண்டியதுதான்//என்னைப் போன்றவர்களின் இது போன்ற செயல்களால் (வளரும் தொழில் நுட்பத்தை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்ப்பது) "தமிழ் இனி மெல்ல சாகுமா?" அல்லது "வெல்லத் தமிழ் இனி வெல்லுமா" என்பதை மற்றவர்களும் கருத்து சொல்லட்டும்.. ஒருவேளை அநேக தமிழர்களின் கருத்து அதுவாக இருந்தால்.. நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன்....
//என்னைப் போன்றவர்களின் இது போன்ற செயல்களால் (வளரும் தொழில் நுட்பத்தை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்ப்பது)//Firefox-ஐ நெருப்பு நரி என்று மொழிபெயர்த்தால் தொழில்நுட்பம் அனைத்து தமிழர்களுக்கும் சென்றுவிடுமா? என்ன லாஜிக்? நீங்கள் ஹமாம் சோப்பு பற்றி எழுத நேர்ந்தால் அந்த பெயரை எப்படி மொழிமாற்றம் செய்வீர்கள்? மற்றமொழியில் இருக்கும் சொற்றொடர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழ்வழியாக அதை மக்களிடம் எடுத்துசென்றால் எவரும் எளிதில் புரிந்துகொள்வது சுலபமாக இருக்கும். தமிழில் கணினி பயின்ற ஒருவர் அவர் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆங்கிலத்தில் படிக்க நேரும்போது குழப்பம் வராமல் இருக்கும். பேச்சுத்தமிழில் இல்லாமல் மிக கரடுமுரடாக மொழிபெயர்ப்பதால் இதுபோன்ற தொழில் சார்ந்த வார்த்தைகள் மிகவும் அன்னியப்பட்டுபோகும். அதன் விளைவாக தமிழில்கல்வி பயின்றவர்களே இது போன்ற நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாத மொழியை கண்டு காததூரம் ஓட வேண்டியிருக்கும்.
நன்றி ஆ.ஞானசேகரன்!
Firefox என்பதை நெருப்புநரி என்று வலையுலகில் அழைப்பது வழக்கம்.நெருப்பு நரி என்றால் ஃபயர்ஃபாக்ஸ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். புதிதாக வந்துள்ள நண்பர் சாய் அவருக்குத் தெரியவில்லை. அவ்வளவே!செந்தழல் ரவி இவரை மையமாக வைத்து நெருப்பு நரி என்பதை செந்தழல் நரி என்று செல்லப் பெயரெல்லாம் கூட வைத்துக் கும்மி அடித்தோம். அது ஒரு காலம். யாரும் யாரும் கூஜா தூக்குவதில்லை. அவரவர் கூஜாவை அவரவர் தூக்கினாலே போதும். (:-தமிழை யாரும் சாகடிக்க முடியாது. அது தானாகச் செத்தால் தான் உண்டு.நெருப்பு நரி என்று பெயர் வைத்ததால் தமிழ் செத்துப்போகுமா?தமிழ் வளருமா என்பதைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.நெருப்புநரி என்றே சொல்லிச் சொல்லித் திரிவோம் (:-
ப்ரொஃபைலில் பெயரில்லாத அனானிமசின் கூற்றுக்கு எல்லாம் செவி சாய்க்க வேண்டாம். சாய் - இவரது ப்ரொஃபைல் காலியாக உள்ளது. அவர் 6 என்றே தெரியவில்லை. லூஸ்ல விடுங்க பாஸ். நீங்க தொடர்ந்து எழுதுங்க.. உங்கள் எழுத்தை வாசிக்க நிறையப் பேர் இருக்கோம். ப்ரொஃபைலில் பெயர் இல்லாத அனானிமஸைக் கருத்தில் கொள்ள வேண்டாம். //என்னைப் போன்றவர்களின் இது போன்ற செயல்களால் (வளரும் தொழில் நுட்பத்தை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்ப்பது) "தமிழ் இனி மெல்ல சாகுமா?" அல்லது"வெல்லத் தமிழ் இனி வெல்லுமா" என்பதை மற்றவர்களும் கருத்து சொல்லட்டும்..ஒருவேளை அநேக தமிழர்களின் கருத்து அதுவாக இருந்தால்.. நான் எழுதுவதையே விட்டு விடுகிறேன்....
யார் கருத்து சொல்கிறார்கள் என்பதைப்பற்றி ஏன் கவலை படுகிறீர்கள்? என்ன சொல்லப்படுகிறது என்று மட்டும் கவனியுங்கள். Firefox-ஐ நெருப்புநரி என்று கூறும்போது ஏன் Windows-ஐ ஜன்னல்கள் என்று தமிழ்படுத்தவில்லை. இங்கே இருக்கும் பதிவுகள் அனைத்திலும் ஆங்கில வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த பதிவருக்கே தெரியும் அனைத்து ஆங்கில வார்த்தைகளையும் மொழிபெயர்த்தால் மிக காமெடியாக இருக்கும் என்று. அமெரிக்க அதிபர் ஒபாமாவை தமிழில் எவ்வாறு மொழிபெயர்க்கலாம் என்றும் கையோடு யோசித்துவிடுங்கள். அடுத்த தலைமுறைக்கு உபயோகமாகஇருக்கும்.
அருமையான பதிவுக்கு நன்றி...நாங்கள் நெருப்புநரி என்றுதான் வழக்கில் பேசிக்கொள்கிறோம், fireboxஐ..
சாய் தங்களின் கருத்தை சற்று அமைதியான முறையில் சொல்லுங்கள்,என்ன பயர்ஃப்வாக்ஸ் என உச்சரிக்க சொல்கிறீர்கள் இதை எழுதவதற்குள் ப்-ஆ, வ்-ஆ என குழப்பம் எனக்கு வந்து விட்டது,இந்த மனசு கம்முனா இருக்குது பயர்பாக்ஸ்ன்னா தீப்பெட்டி அப்படின்னு கமென்ட் அடிக்குது.கண்ணனின் விருப்பம் என்பதை விட வலையுலகில் எனக்குத் தெரிந்து நெருப்புநரி என்பது வழக்கம், வழக்கத்தை ஒட்டி அவர் எழுதி இருக்கிறார். தாங்கள் ஒரு பதிவு ஆரம்பித்து உங்களது கருத்துக்களை அதில் பதியுங்கள், ஆக்கபூர்வமாக உரையாடி மகிழ்வோம்நமக்குள் எதுக்கு இடைவெளி வரவேண்டும், கைகோர்ப்போம் வாருங்கள்
அட நல்ல தகவல்.அப்புறம், டேபிள் எதாவது காப்பி பண்ணி, எக்ஸ்செல்ல போட்ட சரியா காப்பி ஆக மாட்டேங்குது நெருப்பு நரியில. internet explorer அப்படியே காப்பி ஆகுது. இதுக்கு எதாவது இருந்தா சொல்லுங்க.
எனக்கு தெரிந்த வரை Firefoxயை நெருப்பு நரி என்று தமிழ் படுத்தியது, தமிழை வளர்ப்பதற்காக இல்லை. சாய் அவர்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார் என்று தெரியவில்லை. தமிழில் பையர்பாக்ஸ் என்று அடிப்பது கடினம் என்பதால் யாரோ ஒருவர் இப்படி பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.
சுய விவரம் கிடைக்காத நண்பர் சாயின் கருத்துரையை மதித்துத் தாங்கள் வெளியிட்டது தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது...பெயர்ச்சொற்களை அப்படியே கையாள்வது இயல்புதான்..பயர்பாக்சு என்று ப்யர் ஃபாக்ஸ் என்றோ கையாள்வதற்கு நெருப்புநரி உலவி என்று கூறுவது தமிழ்மீது தங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது..நெருப்பு நரி உலவி என்றழைப்பதில் எந்த தவறும் இல்லை நண்பரே...இவ்வாறு அழைப்பதால் தமிழ் அழிந்துவிடாது...எத்தனையோ மொழித்தாக்கங்களைக் கடந்து உயிர்த்தன்மையோடு இருக்கும் மொழி தமிழ்.....நண்பர் சாய் அவர்கள் பயர்பாக்ஸ் ப்ரௌசர் என்பதற்கான நல்லதமிழ்ப் பெயரையும்..தங்கள் சுயவிவரங்களையும் வெளிப்படையாகவே வெளியிடலாமே...
உங்களுக்கு எது சரி எனப் படுகிறதோ அதை பயன்படுத்துங்கள் சூர்யா. இத்தனை நாட்களில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. சந்தேகம் வந்தபோது தீர்த்து வைக்கவும் நீங்கள் தவறியதில்லை. அக்கப்போர் பதிவல்ல இது. தகவல் மட்டுமே முக்கியம்.
நண்பரே,... பின்னூட்டங்களை கவனித்தேன்... நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை தொடருங்கள் உங்கள் பணியை.. கொஞ்சமேனும் தமிழ்ப்படுத்தாமல் விட்டுவிட்டால் தமிழ் மெல்ல இல்லை இப்பொழுதே சாகும்...
சூரியநாராயன சாஸ்திரி என்ற பெயரைபரிதிமார்கலைஞர் என்றும்.........ஸ்வாமி.வேதாசலம் என்ற பெயரை மறைலையடிகள் என்பது மாற்றியது சரி என்றால் பயர்பாக்ஸ் என்பதை நெருப்பு நரிஉலவி என்று கூறியது தவறே இல்லை நண்பரே..
அய்யா சூர்யா! computer அய் கணினி என எழுதும்போதும் இதுபோன்ற கயவர்கள் எதிர்த்தார்கள்.ஆனால் இன்றோ எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்.மற்றும் தமிழை அழிக்க எவனாலும் முடியாது. எனவே தொடர்ந்து எழுதுங்கள்."தமிழை தமிழன் தாய் என்பதாலும்தமிழ் பழித்தானை அவன் நாய் என்பதாலும்" - புரட்சிக்கவிஞரின் வரிகள் நமக்கெல்லாம் உந்துதல்.
நெருப்பு நரியும் பெயர்சொல்தான் நண்பரே.., இதைப்பற்றி ஜாலியாக விவாதித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் உபயோகப் படுத்தி இருப்பது சரியா தவறா என்று விவாதம் தேவையற்றது
Vert very useful one.thanking you.
நான் அவன் இல்லை.
புரியுது.. நல்லவேளை நீங்க இல்லை.//shirdi.saidasan@gmail.com said... நான் அவன் இல்லை.
Skip it anna , its doesnt matter ...
அன்பின் சூர்யா கண்ணன் இடுகையின் நோக்கம் நெருப்பு நரியில் உள்ள ஒரு அருமையான பயன்பாட்டினை மற்றவர் அறியச் சொல்வது தான்நண்பர் சாய் நோக்கத்தினை மறந்து இடுகையினை வேறு பக்கம் திசை திருப்புகிறார்.மற்ற பதிவர்களும் அவ்வழியில் விவாதம் செய்கின்றனர். கவலைப்படாமல் மேன்மேலும் அரிய தகவல்கள் அளிக்க் நல்வாழ்த்துகள்
திரு. சாய் அவர்களுக்கு, பொதுவாக மற்றவர் பதிவின் பின்னூட்டத்தை தவிர அவருக்கு வரும் பின்னூட்ட கருத்துக்கு நான் பின்னூட்டம் தருவதில்லை என்றாலும், உங்கள் பின்னூட்டம் சற்று வேதனை தருவதால் சொல்கிறேன். அவருடைய வேலை நேரத்தை ஒதுக்கி மற்றவர்களுக்காக பதிவில் நேரம் தருகிறார், அதில் உங்கள் கருத்தை பதிய உங்களுக்கு எந்த அளவு உரிமை உண்டோ அதே அளவு சொல்லும் விதமும் முக்கியம். "நெருப்பு நரி" என்பதை விட "Firefox" என்பதே புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்" என்று சொல்லி இருந்தால் முடிந்தது, அதை தவிர்த்து அவரை வேதனை படுத்துமாறு அவரின் பெயரை பயன்படுத்தும் அளவு போக தேவையில்லை என்பது என் கருத்து. 140 வார்த்தைகள் இருக்கும் இந்த பதிவில் அந்த ஒரு வார்த்தையை சுட்டி காட்டி நீங்கள் சொல்லிய விதம் மொத்த பதிவின் நோக்கத்தை திசை திருப்பி பின்னூட்ட விவாத்தில் கொண்டு வந்து விட்டது. இருந்தாலும், "படித்ததும் என் மனதில் பட்டதை சொல்லி விட்டேன், நான் "சொல்லியவிதம்" உங்களை காயபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்" என்று சொல்லும் ஒரு வார்த்தையால் இந்த பதிவில் பின்னூட்டம் தந்த அனைவரிலும் நீங்கள் உயர்ந்து விடுவீர்கள் என்பது ஒரு நல்ல நண்பனாக உங்களுக்கு என் கருத்துநன்றி.
வழக்கம் போலவே ஒரு நல்ல தகவல் சூர்யா கண்ணன். ஆனால், நான் வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை சிறிது இடம் அதிகமாக பின்னூட்டத்தில் எடுத்துக்கொள்கிறேன் மனிக்கவும். தெரிந்த கதைதான், ஒரே நாட்டில் நகர்வலம் சென்ற தர்மனும் துரியோதனனும், முடிவில் நாட்டில் அனைவரும் நல்லவர்கள் என்று தர்மனும், நாட்டில் அனைவரும் கொடியவர்கள் என்று துரியோதனனும் சொல்ல இதில் உணர்த்தும் கருத்து, அவரவர் எண்ணங்களை பொருத்து நல்லதும் கெட்டதும் மாறுபடுகிறது. அதுபோல உங்கள் பதிவின் நோக்கம் உங்களுக்கு தெரியும், அதை யார் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவரவர் நோக்கத்தை பொருத்து, ஆகவே மனம் தளர்ச்சியடையாமல் தொடந்து "எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே "நீ" முழங்கு".
மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலைப்பகுதிக்கு வந்துள்ளேன். அதனால் உங்கள் பதிவுகளை பார்க்கமுடியவில்லை. சாய் அவர்கள் அவர்வழி நின்று அவர் கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவ்வளவுதான். இப்படியே இருக்கும் சொற்களை அப்படியே பயன்படுத்தி பயன்படுத்தி அதற்கான தமிழ் வார்த்தைகள் இல்லாமலே போய்விட்டது. அதனால் இப்போது சாய் மாதிரி ஒருசில பேர் குறை சொன்னாலும் வரும் தலைமுறைகள் நெருப்பு நரி என்று பயன்படுத்த ஆரம்பித்தால் நமக்கு வெற்றிதான். சென்னை என்று பெயர் மாற்றம் செய்து சில ஆண்டுகள் வரை மெட்ராஸ் என்றுதானே நாமும் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது மாறவில்லையா? அதனால் இதுபோல பின்னூட்டங்களை பற்றி கவலைப்படாமல் தங்களது பணி தொடர என் வாழ்த்துகள் சூர்யா....
Post a Comment