நெருப்பு நரி உலவியில் நாம் உலவிக் கொண்டிருக்கும் பொழுது, வலைப் பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. ஃப்ளாஷ் கோப்புகள் மற்றும் வீடியோக்கள் இடையில் நின்று நின்று ஓடுவது போன்ற, நம்மில் பல பேர் அதிகம் இதைப்பற்றி சிரத்தை எடுத்துக் கொள்ளாத சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன அடிப்படை காரணம்?
நீங்கள் நெருப்பு நரியில் உலவும்போழுது, உங்களது உலவியில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தொடர்ந்து 10 வினாடிகளுக்கு ஒரு முறை நெருப்பு நரியினால் Snapshot எடுத்து சேமித்து வைக்கப்படுகிறது.
எதற்காக?
எதிர்பாராதவிதமாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ அல்லது உலவி மூடப்பட்டாலோ, நெருப்பு நரியில் உள்ள Session Restore எனும் வசதி உங்கள் உலவியில் உள்ள அனைத்து டேப்களையும், மறுபடியும் நெருப்பு நரியை துவங்கும் பொழுது Restore செய்வதற்காக, ஒவ்வொரு பத்து வினாடிகளுக்கு தொடர்ந்து Snapshot எடுத்து சேமித்து வைத்து கொள்கிறது. இந்த செயலுக்காக எடுத்துக் கொள்ளும் நேரத்தில்தான், வலைப்பக்கம் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதும், வீடியோ தடங்கலுடன் ஓடுவதும் நிகழ்கிறது.
இந்த Session Restore நேரத்தை பத்து வினாடியிலிருந்து இரண்டு நிமிடங்களுக்கோ அல்லது ஐந்து நிமிடங்களுக்கோ மாற்ற என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
நெருப்பு நரி உலவியை திறந்து கொண்டு, அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்து என்டர் கொடுங்கள். (இந்த செயலை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்யவும்) கீழே படத்தில் உள்ளது போல ஒரு பயமுறுத்தல் செய்தி வரும்
பயந்துடாதீங்க.. , I'll be careful, I promise! ன்னு சத்தியம் பண்ணி அந்த பட்டனை கிளிக் செய்யுங்கள். அடுத்து திறக்கும் பக்கத்தில், Filter Box -ல் browser.sessionstore.interval என டைப் செய்து என்டர் கொடுங்கள், அதில் 10000 என்ற மதிப்பு இருப்பதை காணலாம், அதாவது 10000 மி. செகண்டுகள். இதனை இரட்டை கிளிக் செய்து திறக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து நிமிடங்கள் என்றால் 300000 என்றும் இரண்டு நிமிடங்கள் என்றால் 120000 என்ற மதிப்பையும் கொடுத்து OK பட்டனை கிளிக் செய்யுங்கள்.
ஒருமுறை உலவியை மூடிவிட்டு, மறுபடி திறந்து, உலவிப் பாருங்கள், வித்தியாசத்தை உணருவீர்கள்.
.
25 comments:
தெய்வமே! நீங்க எங்கயோ போய்ட்டீங்க. நன்றி
ஆஹா! நன்றி தலைவா!
நிச்சயம் அருமையான தகவல்வாழ்த்துக்கள்
அட இது தெரியாம ஏன் இவ்வளவு ஸ்லோவா இருக்குன்னு நினைச்சேன். ரொம்ப உபயோகமா இருந்துச்சு. நன்றி.
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்தமிழ்நெஞ்சம்
மிகவும் நன்றி
Great one, Thanks, I can see the speed difference, Anandh Toronto
your post is best great oneThanks
நன்றி நிகழ்காலத்தில்...பின்னோக்கி...TamilNenjam ... Sai.. .Feros
call me immediate
Nice one Mr.Surya...thanks for sharing...
நன்றி திரு. நித்தியானந்தம்
பதிவு நல்லா இருக்கு..உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.
பதிவு நல்லா இருக்கு..உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.
thanks,Please let me know something about googlecrome speed work
நன்றி தல..,
ம்ம்ம்ம் நன்றி.....
நன்றி ஆ.ஞானசேகரன் !..,
நன்றி SUREஷ்!...
very useful one.we are expecting sucha wonderful information.Thanking you.
நண்பரேஅருமையான தகவல்நெருப்பு நரியை நான் ரொம்ப சந்தேகப்பட்டுட்டேன்
அருமையான உதவிநெருப்பு நரியை நான் ரொம்பவே சந்தேகப்பட்டுட்டேன்
sir super sir...enaku super ah purinjidu...aana english la irunda innum neraya members ku useful ah irukum...
Dear sir, Ayya, very nice......
Thank you, Good Info.
Post a Comment