இதுவரை விண்டோஸ் எக்ஸ்பி உபயோகித்துக் கொண்டிருந்துவிட்டு, புதிதாக விண்டோஸ் ஏழு உபயோகிக்க ஆரம்பித்திருப்பவர்களுக்கு, இதில் புதிதாக பயனர் கணக்கை எருவாக்குவது எப்படி என்ற சிறு குழப்பம் உண்டாவது இயற்கை. அவர்களுக்கான பதிவு இது.
விண்டோஸ் ஏழில் புதிய பயனர் கணக்கை துவங்க, Control Panel ஐ திறந்து கொண்டு,
User Accounts and Family Safety என்ற லிங்கில் கிளிக் செய்து Add or remove user account செல்லவும்.
இதில் கீழே உள்ள Create a New Account லிங்க்கை கிளிக் செய்து, பின் திறக்கும் டயலாக் பாக்ஸில் விரும்பும் பயனர் பெயரை கொடுக்கவும். உங்களைத் தவிர வேறு எவருக்கேனும் கணக்கு உருவாக்குவதாக இருந்தால், இங்கு Account Type என்பதில் Standard User என்பதை தேர்வு செய்வது நல்லது. இப்படி Standard User வகையில் உருவாக்கப்படும் பயனர் கணினியில் உள்ள System Settings ஐ மாற்றவோ, மற்ற பயனர்களின் முக்கியமான கோப்புகளை நீக்கவோ, Security settings ஐ மாற்றவோ இயலாது.
எனவே Standard User ஐ தேர்வு செய்து Create Account பொத்தானை அழுத்தவும். பிறகு கணினியை ரீ ஸ்டார்ட் செய்தால் புதிய பயனர் பெயரை காண்பிக்கும், தேவைப்பட்டால் இதே முறையில் சென்று Change Account இல் கடவு சொல் கொடுக்கலாம்.
இது போன்ற Standard User வகை பயனர் system settings ஐ மாற்ற முயற்சிக்கும் பொழுது Administrator கடவுச் சொல்லை கேட்கும்.
ஒரு Administrator ஆக நீங்கள் கணினியில் புதிதாக ஒரு மென் பொருளை நிறுவும்பொழுது , அந்த மென்பொருளை மற்ற பயனர்கள் உபயோகிப்பதற்கான அனுமதியை தரவேண்டும் என்பது ஒரு நல்ல விஷயம்.
.
2 comments:
thanks surya
நன்றி தலைவா!
Post a Comment