Monday, 6 September 2010

உங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்

சில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா? வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா? இணைய வேகம் குறைந்துள்ளதா? உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க..   இதோ உங்களுக்கான தோழன் - Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி. (பெயரில் பெண்பால் உள்ளதால் தோழியாகவும் பாவிக்கலாம்)

இது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது  கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்த கருவியை பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry  யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை  நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும், 
 
 
Startup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .

கோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம். 


ஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.



.

10 comments:

Thomas Ruban said...

தகவலுக்கு நன்றி சார்...

Anonymous said...

”வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்ற பழமொழி படி ccleanerயை விட கூடுதல் வசதி கொண்ட மென்பொருளை வரவேற்கிறோம். அறிமுகப்படுத்திய நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
தமிழார்வன்.

vasu balaji said...

தலைவா நன்றியோ நன்றி:)

இமலாதித்தன் said...

நல்ல பயனுள்ள தகவல்.. பகிர்ந்தமைக்கு நன்றி.

- இமலாதித்தன்

Unknown said...

மிக்க நன்றி சார்...! மிக பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறீர்கள் ...

வாழ்த்துக்களுடன் நன்றியும்

Good citizen said...

I have been Glary Utilities since thee years,,It's a very good and efficient software

கிரி said...

சூர்யாகண்ணன் உங்கள் தளம் மெதுவாக அல்ல ரொம்ப ரொம்ப ரொம்ப மெதுவாக இருக்கிறது. படிக்கவே பொறுமை போய் விடுகிறது.

தொழில்நுட்ப பதிவரான நீங்களே உங்கள் தளத்தை இப்படி பராமரிக்கலாமா! தேவையில்லாத விட்கெட் நிரலிகளை நீக்கி கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

// கிரி said...

சூர்யாகண்ணன் உங்கள் தளம் மெதுவாக அல்ல ரொம்ப ரொம்ப ரொம்ப மெதுவாக இருக்கிறது. படிக்கவே பொறுமை போய் விடுகிறது.

தொழில்நுட்ப பதிவரான நீங்களே உங்கள் தளத்தை இப்படி பராமரிக்கலாமா! தேவையில்லாத விட்கெட் நிரலிகளை நீக்கி கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள்.//

அறிவுறுத்தலுக்கு மிக்க நன்றி நண்பரே.. ஆனால் நான் சோதித்துப் பார்த்தபொழுது, அதிகபட்சம் ஐந்து விநாடிகள்தான் எடுத்துக் கொள்கிறது.. ஒருவேளை தமிழ்மணம் ஏதாவது பிரச்சனையில் உள்ளபோது நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..

மிக்க நன்றி கிரி!..

Raja said...

மிக பயனுள்ளது. நன்றி சூர்யா.

Iam in Internet said...

CCleanerஐ விட கிளரி யுடிலிடிஸ் சிறப்பாக இருக்கிறது கண்ணன். என்னுடைய கணினியில் பயன்படுத்திப் பார்த்தேன். அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். K.தணிகாசலம், மலேசியா

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)