Tuesday 17 August, 2010

பவர் பாயிண்ட் - ட்ரிக்

நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனையும் அதற்கான தீர்வும் உங்களுக்கும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்.. (இது பலரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும்.. அறியாத சிலருக்காக..)

அவருடைய பிரச்சனை என்னவென்று முதலில் பார்ப்போம். அவர் தனது கணினியில் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன்   ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தார். சுமார் 250 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக இன்செர்ட் செய்து உருவாக்கி கொண்டிருக்கும் பொழுது, முதல் 11 படங்களை இணைத்த பிறகு சேமித்ததோடு சரி, பிறகு சேமிக்க மறந்து போனார், இறுதியில் சேமிக்க முயன்ற போது, சிஸ்டம் ஹேங் ஆகி, கணினியை Reset செய்ய வேண்டி வந்தது. மறுபடியும் அந்த கோப்பை திறந்த போது  அந்த முதல் 11 படங்கள் மட்டுமே இருந்தது. அவர் கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கும் மேலாக செய்த பணி அனைத்தும் பறிபோன கவலை ஒரு புறமும், இதை உடனடியாக முடித்து தனது மேலதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டிய நெருக்கடியும் சேர்ந்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தார். 

முதலில் இந்த பிரச்னைக்கு ஞாபக மறதி தவிர வேறு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். 

அவர் தனது பவர்பாயிண்ட் கோப்பில் இணைத்த கோப்புகள் அனைத்தும் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டவை. 


அந்த புகைப்பட கோப்புகளின் அளவை சோதித்தபோது, சராசரியாக 3 MB ஆக இருந்தது. ஒரு படத்திற்கு 3 MB எனில் 250 படங்களுக்கு 750 MB. ஆக சராசரியாக அந்த பவர்பாயின்ட் கோப்பின் அளவு 750 Mb க்கும் அதிகமானது. இதன் காரணமாகவே இதை சேமிக்கும் பொழுது, ஹேங் ஆகி சேமிக்க முடியாமல் போனது. 

இதற்கு தீர்வாக முதலில் நாம் செய்ய வேண்டியது, அந்த புகைப்படங்களின் அளவுகளை குறைப்பது, இதற்காக உபயோகிக்கப் போகும் கருவி மைக்ரோசாப்ட்டின் Power Toys Image Resizer.  இந்த கருவியை கணினியில் நிறுவிய பிறகு, தேவையான அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து, வலது க்ளிக் செய்து Resize Pictures ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Medium என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.

 
இனி புதிதாக உருவாக்கப்படும், அந்த புகைப்படக் கோப்புகளின் அளவை பார்த்தால்,
 
    3 MB இருந்த கோப்பின் அளவு வெறும் 69 KB யில் அடங்கி விட்டது. இப்பொழுது கோப்புகளின் அளவை குறைத்தாகிவிட்டது, இனி உடனடியாக பவர்பாயிண்ட்டில் அனைத்து புகைப்படங்களையும் விரைவாக இணைக்க வேண்டும். ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருப்பது வேலைக்கு ஆகாது.

மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்டை (2007) திறந்து கொண்டு, Insert மெனுவில் உள்ள Photo Album க்ளிக் செய்து New Photo Album செல்லுங்கள்.

 
இங்கு இடது புறமுள்ள Insert picture from என்பதற்கு கீழாக உள்ள File/Disk பொத்தானை க்ளிக் செய்து, அளவு மாற்றப்பட்ட அனைத்து புகைப்பட கோப்புகளையும் தேர்வு (Ctrl+A) செய்து கொள்ளுங்கள்.


பிறகு, Picture Layout க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில்  தேவையான வசதியை தேர்வு செய்து கொண்டு Create பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


அவ்வளவுதான் சில நொடிகளில் கிட்டத்தட்ட 250 க்கும் மேலான புகைப்படங்களைக் கொண்ட பவர் பாயிண்ட் பிரெசென்டேஷன் தயார், அதுவும் வெறும் 15 MB அளவிற்குள்.

'இதென்ன பெரிய விஷயமா?'   என்று சலித்துக் கொள்பவர்களும் ஓட்டு போடலாம்.

. 

21 comments:

vasu balaji said...

நன்றி சூர்யா

மணிகண்டன்.பா said...

பின் அந்த நண்பர் என்ன ஆனார்!
--தகவலுக்கு நன்றி !

Vin said...

Interesting!!.

I really appreciate your effort and patience.

Thank you
Aravind

RK நண்பன்.. said...

அருமையான தகவல் சூர்யா.....

நன்றி.....

Thiruppullani Raguveeradayal said...

XPயில் மட்டுமே இது இயங்கும் போலிருக்கிறதே! விண்டோஸ் 7 ஏற்க மறுக்கிறது. compatible இல்லை எனச் சொல்லுகிறது.

Unknown said...

migavum bayanulla oru thagaval...
ithu verum powerpointku mattumalla

matra inayathalangalilum pugaippadaththai inaikka oru arumayaana elimayaana vazhi....:))

nandri sagothara...:))

PAATTIVAITHIYAM said...

மிகவும் உபயோகமான தகவல். புகைப்படங்களின் அளவை மாற்றும்போது புகைப்படங்களின் தரம் மாறாமல் இருக்குமா? என தெரிவியுங்கள் சுா்யா

சத்ரியன் said...

சூர்யா,

உங்களின் பதிவுச் சேவை வழக்கமாக மிகவும் மகத்தானது.

arumugamks said...

Man!! Its Awesome!. Simple but very useful. So nice of you to post it though. Good work. Keep posting.

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான தகவல் நண்பா..

சூர்யா ௧ண்ணன் said...

// thiruthiru said...

XPயில் மட்டுமே இது இயங்கும் போலிருக்கிறதே! விண்டோஸ் 7 ஏற்க மறுக்கிறது. compatible இல்லை எனச் சொல்லுகிறது. //

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிற்கு இதற்கு மாற்றாக Prish Image Resizer என்ற இலவச கருவியை பயன் படுத்தலாம்..

Prish Image Resizer 64 Bit

Prish Image Resizer 32 Bit

movithan said...

சூப்பர்.

யூத்ராசு said...

அருமை

யூத்ராசு said...

அருமை

எஸ்.கே said...

தகவலுக்கு நன்றி சார்!

Venu said...

நன்றி நண்பா... இததான் உங்கல்ட
கேக்கணும்னு நெநசுட்டு இருந்தேன்.
மிக்க நன்றி.....

Muthuselvam said...

AHA AHA

REMPA NANTRI ANNA
PONA VARAM SINGAPORE (LTA) BEST SAFETY AWADUKU NANA PATTA AWASTHAI GONJAM NENJAM ELLI ANNA
ETHAI MUNNAMAY PATIKAMMA POITENNEY !!

MIKKA NANTRI ANNA

Unknown said...

நன்றி திரு. சூர்யா
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

விண்டோஸ் ௨௦௦௭ இல் டூல்ஸ் மெனு ஒப்டிஒன் எங்கு உள்ளது என்று குறிப்பிடவும்

ரமேஷ்-குவைத்

DREAMER said...

நல்ல பயனுள்ள தகவல்கள்... புகைப்பட பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

elwin said...

Dear brother Thanks...very useful information...
I could read your tips in my official system only not in home system...So would you please send the Tamil fond...

velu said...

VERY VERY USEFUL TIPS



THNAKS

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)