நாம் Google Images, Flickr, PhotoBucket போன்ற படங்களுக்கான வலைத்தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவற்றில் தரப்பட்டுள்ள பல படங்களின் thumbnail களில் ஒரு சில படங்களை தெளிவாக காண முடிவதில்லை. இது போன்ற குறிப்பிட்ட படங்களை ஒவ்வொருமுறையும் மற்றொரு டேபிலோ அல்லது விண்டோவிலோ திறந்து பார்த்துக் கொள்ளவேண்டியதாக உள்ளது.
இப்படி ஒவ்வொரு படத்தையும் திறந்து பார்த்து பிறகு நமக்கு தேவையான படத்தை தேர்வு செய்து தரவிறக்கம் செய்வது, சில சமயங்களில் எரிச்சலை உண்டுபண்ணும். ஒரு வேளை நீங்கள் Google Chrome உலாவியை பயன்படுத்துபவராக இருந்தால், இதோ உங்களுக்கான ZoomZoom நீட்சி (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது- இது கூகிள் க்ரோமிற்க்கானது என்பதால், க்ரோம் உலாவியில் இருந்துதான் இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள இயலும்)
இந்த நீட்சியை கணினியில் பதிந்து கொண்ட பிறகு கூகிள் க்ரோம் உலாவியில்
* Google Images
* deviantART
* Flickr
* TinyPic
* PhotoBucket போன்ற தளங்களில் உள்ள புகைப்படங்களின் thumbnail மீது மெளசின் கர்சரை கொண்டு நிறுத்தும் பொழுது அதனுடைய பெரிது படுத்தப்பட்ட படம் திரையில் காண்பிக்கப்படும்.
தரவிறக்க..,
இதேபோல நெருப்பு நரிக்கான ImageZoom நீட்சியை பற்றிய மற்றொரு பதிவு,
13 comments:
wow. thankyou surya
தகவலுக்கு நன்றி சார்.
Test பண்ண கூகிள் இமேஜ் தேடல்ல புவனேஸ்வரி படம் பார்த்தேன்.. ஹி ஹி பக்காவா வேலை செய்யுது! ;-)
//வானம்பாடிகள் said...
wow. thankyou surya//
நன்றி தலைவா!
// Thomas Ruban said...
தகவலுக்கு நன்றி சார்.//
வாங்க ரூபன்! ரொம்ப நாளாச்சு!
// கிரி said...
Test பண்ண கூகிள் இமேஜ் தேடல்ல புவனேஸ்வரி படம் பார்த்தேன்.. ஹி ஹி பக்காவா வேலை செய்யுது! ;-)//
வாங்க தல!
அடடா! ரஞ்சிதாவ பாக்கலையா?
கலக்கல், நன்றி சூர்யா கண்ணன்.
அசத்தீட்டிங்க
// சைவகொத்துப்பரோட்டா said...
கலக்கல், நன்றி சூர்யா கண்ணன்.//
நன்றி தல!
// தமிழ் மகன் said...
அசத்தீட்டிங்க//
நன்றி தமிழ் மகன்!
நல்ல பதிவு திரு.சூர்யா..........பகிர்விற்க்கு நன்றி.....ஸ்கிரீன் ஷாட்டுகள் ஏன் பார்க்க ஒரு மாதிரி இருக்கின்றது?
வாக்களித்துவிட்டேன்....நன்றி!!!
நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி சூர்யா .எப்படித்தான் இது மாதிரி பதிவுகளை யோசிக்கிறேங்க தெரியலை .நாங்கெல்லாம் ஒரு பதிவு இடுமுன் கண்முழி பிதுங்கி விடுகிறது .எனக்கு உபயோகமான பதிவு இது .thanks once again.
Post a Comment