Friday, 19 March 2010

க்ளிக் கூகிள் வியூ - நீட்சி

நாம் நமக்கு தேவையான படங்களை இணையத்தில் தேட Google Image ஐ பெரும்பாலும் பயன் படுத்துகிறோம், கூகிள் இமேஜ் இல் இப்படியாக தேடப்படும் படங்கள் முதலில் அந்த படம் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கமும் திறக்கப்பட்டு அதன் இடது மூலையில், நாம் தேர்வு செய்த படம் சிறிய Thumbnail ஆக தோன்றும், அருகில் See Full size image என்ற லிங்கும் தோன்றும், அதனை க்ளிக் செய்த பின்னர் தான் படம் உண்மையான அளவில் தனித்து காண்பிக்கப்படும்.

 
இப்படி சுற்றி வளைத்து போகாமல் படத்தை க்ளிக் செய்தவுடனே திரையில் உண்மையான அளவில் தோன்ற கூகிள் க்ரோமிற்கான ஒரு எளிய நீட்சி clickGOOGLEview
 


பதிவு திருடர்களின் கவனத்திற்கு .., 
ஒவ்வொரு பதிவு எழுதுவதற்கு முன்னரும், அதை குறித்த யோசனை, தகவல்கள் திரட்டுதல், தளங்களை கண்டறிதல், பயன்பாடுகளை தேடுதல், சோதித்துப் பார்த்தல் இவை அனைத்தும் போக நண்பர்களின் ஒரு சில சந்தேகங்களை போக்குதல் என பல வேலைகளை எனது மற்ற அலுவல் நேரங்களை மிச்சப் படுத்தி நான் செய்து வருகிறேன். 

ஆனால் ஒரு சில பதிவு திருடர்கள், நோகாமல் பதிவை திருடி தங்களின் வலைபக்கங்களில் இட்டுக் கொள்வது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கும் அவரது பெயரில் அனுப்பி வைத்து சம்பாதித்து கொள்கிறார். இதனால் எழுதுகிற ஆர்வமும் குறைந்து வருகிறது..

இதற்கு மேல் எனது பதிவுகளை திருட வேண்டாம் என கேட்டுக் கொள்வதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?...  

.

26 comments:

ஸ்ரீராம். said...

பதிவு திருடர்களின் கவனத்திற்கு .., "//



!!!!!!!!!!!

Menporul.co.cc said...

அந்த திருட்டு ஆள் யாருன்னு என் தளத்தில் போட்டு இருக்கிறேன். அதிகபட்சம் அவனாத்தான் இருக்கும்.
MCA படிச்சிருக்கானாம்.
Master of Copying Articles.

வானம்பாடிகள் said...

/ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கும் அவரது பெயரில் அனுப்பி வைத்து சம்பாதித்து கொள்கிறார். //

இப்படியுமா?

வானம்பாடிகள் said...

நமக்கு ரொம்ப உதவும். நன்றி தலைவா.

வானம்பாடிகள் said...

அந்த நாளிதழுக்கு ஆதாரத்துடன் எழுதுங்க தலைவரே.பத்திக்கிட்டு வருது.

Thomas Ruban said...

//ஒரு சில பதிவு திருடர்கள், நோகாமல் பதிவை திருடி தங்களின் வலைபக்கங்களில் இட்டுக் கொள்வது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கும் அவரது பெயரில் அனுப்பி வைத்து சம்பாதித்து கொள்கிறார். இதனால் எழுதுகிற ஆர்வமும் குறைந்து வருகிறது..//

நானும் இன்று வாசித்த தமிழில் சிறந்த வலைப்பூக்கள் கணினிக்கு
இரஜகை ராபர்ட்
(http://denaldrobert.blogspot.com/) என்று காமெடி பண்ணிருக்கிறார்.இந்த இரஜகை ராபர்ட் எல்லாமே உங்கள் தொழில்நுட்ப பதிவுகளை திருடி போட்டுள்ளார்.மனதை தளர விடாதிர்கள் எங்களை போன்ற வாசர்களுக்கு உண்மை தெரியும்.

பதிவுக்கு நன்றி சார்.

PRAKASH said...

வணக்கம் சூர்யா! இது தொடர்பில் முன்னரும் ஒரு பதிவு இட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இரண்டுமே வேறுவேறு கூகிள் நீட்சி மென்பொருட்களா?

Menan said...

இதற்கு மேல் எனது பதிவுகளை திருட வேண்டாம் என கேட்டுக் கொள்வதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?...

Mrs.Menagasathia said...

நல்ல பகிர்வு சகோ!! பதிவு திருடர்கள் தானாக திருந்தினால்தான் உண்டு...

இளமுருகன் said...

இந்த கேவலமான வேலையை யார் செய்து கொண்டிருந்தாலும் மனசாட்சிக்கு பயந்து இத்தோடு நிறுத்திக்கொள்ளட்டும்.
தயவு செய்து நீங்கள் மனச்சோர்வு அடையாமல் எங்களுக்காக தொடர்ந்து எழுதுங்கள்
இளமுருகன்
நைஜீரியா

சைவகொத்துப்பரோட்டா said...

தொடருங்கள் உங்கள் பணியை மனம் தளராது, வாழ்த்துக்கள் சூர்யா கண்ணன்.

நட்புடன் ஜமால் said...

அந்த பத்திரிக்கைக்கு எழுதுங்கள்.

இப்படி திருடர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் - அவிங்களா திருந்தினாத்தான் உண்டு.

ananth.s said...

vanakkam anna atutthavan thiruthgiran ennru neenga ezuthamal irukka vendaam neengal thodarnthu ezuthungal thirutugiravan athan vilaiugalai avan ataivaan

ananth.s said...

vanakkam anna atutthavan thiruthgiran ennru neenga ezuthamal irukka vendaam neengal thodarnthu ezuthungal thirutugiravan athan vilaiugalai avan ataivaan

thenammailakshmanan said...

உங்கள் பகிர்வுகள் அருமை சூர்யா ..திருடர்கள் வேறா இதிலும்.. அடக் கடவுளே ...அதற்காக நீங்க்ள் எழுதாமலிருக்க வேண்டாம்

தமிழன் said...

உங்களின் பதிவு அருமை. அதே நேரத்தில் திருட்டினையும் தடுக்கவேண்டும்.
கையாலாகாத தனமாக என்ன செய்வது என்று கேட்பது சரியில்லை.
யார் உங்கள் பதிவினை திருடுகிறார் என்று ஆதாரத்தோடு ஒரு பதிவிடுங்கள்.
அந்தப் பதிவினை அனைத்துப் பதிவர்களும் அவரவர் வலைப்பூவில் பதிவிட்டு
பதிவுலகில் இருந்தே அவரை அனுப்பி வைப்போம்.
நோகாமல் நொங்கு தின்பவருக்கு தண்டனை நாம்தான் கொடுக்கவேண்டும்.
அதைவிடுத்து என் செய்வது என்று கூறுவது ஆகாது.

Saalram said...

அன்பான கண்ணன் அவர்களுக்கு,

ஒரு தமிழனின் படைப்பை உலகுக்கு தெரிவிக்க தமிழனாகிய உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்.

எனது படைப்பு : http://saalram.com

என்னை பற்றி : http://saalram.com/venki

நன்றி!

Menporul.co.cc said...

அந்த திருடரின் பெயரை உங்கள் பதிவில் போட்டு "மரியாதை" செய்யவும்.

hayyram said...

///ஆனால் ஒரு சில பதிவு திருடர்கள், நோகாமல் பதிவை திருடி தங்களின் வலைபக்கங்களில் இட்டுக் கொள்வது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கும் அவரது பெயரில் அனுப்பி வைத்து சம்பாதித்து கொள்கிறார். இதனால் எழுதுகிற ஆர்வமும் குறைந்து வருகிறது..///

தோழரே எனது பதிவுகள் திருடப்பட்டு அவரவர் வலைதளங்களில் ஏதோ தாங்களே எழுதியது போல் பிரசுரித்து பாராட்டுக்களும் பெற்று பதிலும் சொல்லப்பட்டது. அவர்களது பின்னூட்டத்திலேயே நீ எனது பதிவிலிருந்து திருடிவிட்டாய் இது ஞாயமா என்றும் கேட்டிருக்கிறேன். சிலர் திருந்தினார்கள். சிலர் திருந்தவில்லை. இருப்பினும், நீங்கள் நேரடியாக எந்த பதிவு எந்த நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டது. மற்றும் உங்கள் பதிவு வெளியான நாள், அந்த நாளிதழ் பிரசுரம் வெளியான நாள் போன்றவற்றை வெளிப்படையாக எழுதுங்கள். நாளிதழ் முகவரிக்கு இந்த விபரங்கள் குறித்து கடிதம் எழுதுங்கள். இப்படி நேரடியாக செயல்படாவிட்டால் இந்த திருட்டு தொடர்வதை தவிர்க்க முடியாது.

காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் உதவி நாடப்படும் என்று உங்கள் வலை தளத்திலேயே ஒரு இடத்தில் தொடர்ச்சியாக தெரியுமாறு பிரசுரித்து விடவும். பின் யார் திருடுகிறார்கள் என்று பார்ப்போம்.

anbudan
ram

www.hayyram.blogspot.com

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////////தமிழன் said...
உங்களின் பதிவு அருமை. அதே நேரத்தில் திருட்டினையும் தடுக்கவேண்டும்.
கையாலாகாத தனமாக என்ன செய்வது என்று கேட்பது சரியில்லை.
யார் உங்கள் பதிவினை திருடுகிறார் என்று ஆதாரத்தோடு ஒரு பதிவிடுங்கள்.
அந்தப் பதிவினை அனைத்துப் பதிவர்களும் அவரவர் வலைப்பூவில் பதிவிட்டு
பதிவுலகில் இருந்தே அவரை அனுப்பி வைப்போம்.
நோகாமல் நொங்கு தின்பவருக்கு தண்டனை நாம்தான் கொடுக்கவேண்டும்.
அதைவிடுத்து என் செய்வது என்று கூறுவது ஆகாது. ////////////


ஆஹா இது நல்ல யோசனையா இருக்கே

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவலை வேண்டாம் நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் பார்த்துக்கொள்வோம் .

கிரி said...

சூர்யா கண்ணன் இதற்க்கெல்லாம் அசராதீங்க.. தொடர்ந்து செய்திகளை தாருங்கள்.

நித்தி said...

நல்ல தகவல் திரு.சூர்யா கண்ணன் பகிர்ந்தமைக்கு நன்றி!!!!!

தங்களின் பதிவு திருட்டு குறித்து கவலையடைகிறேன். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல அவர்களுக்கே தவறு என தெரியவேண்டும்.....என்ன செய்வது சார்...ஒரு சிலர் இப்படி செய்கிறார்கள் என்பதற்காக நம்முடைய தளங்களுக்கு வரும் பல வாசகரை ஏமாற்றமடைய செய்யக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து சார்...எனவே இவர்களுக்காக எல்லாம் உங்களின் எழுத்தார்வம் குறையவேண்டாம்...........

தொடர்ந்து எழுதவும்.

முடிந்தால் என்னுடைய தளத்தில் பயன்படுத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை பயன்படுத்தவும்.இது நமது வலதளத்தின் ரைட் கிளிக் மற்றும் டெக்ஸ்ட் தேர்வு செய்வதை டிஸேபிள் செய்துவிடும். விபரங்களுக்கு என்னுடைய நண்பர் திரு.மோகனகிருஷ்ணனை தொடர்பு கொள்ளுங்கள்..

நன்றி

யவனராணி said...

மனம் வருந்தாதீர்கள் சூர்யா சார்...
உங்களையும் உங்கள் பதிவுகளுக்கு இருக்கும் வரவேற்பும் பதிவுலகம் அறிந்தது.

போலிகளின் பதிவுகள் நிச்சயம் புறக்கணிப்பிற்கு உள்ளாகும். கட்டுரை வெளி வரும் இதழுக்கு உங்கள் எதிர்ப்பை நிச்சயம் தெரிவிக்க வேண்டும் என்பது வேண்டுகோள்.

Menporul.co.cc said...

//மற்ற அலுவல் நேரங்களை மிச்சப் படுத்தி நான் செய்து வருகிறேன். //

இனிமேல் மிச்சப்படுத்த வேண்டாம். முதலில் பிழைப்பை பாருங்கள்.

எப்படியும் திருடப் போறான்.

அவன் முகவரி என்னிடம் உள்ளது.

சோத்துக்கு வழி இல்லை என்றால் நம்மிடம் சொல்லி இருக்கலாம்.

*** வந்து வயித்துப் பிழைப்புக்காக செய்யறாங்கன்னு சொன்னாலும் சொல்லுவார்.

haroon said...

யார் என்ன செய்தால்என்ன சார் யாரும்செய்ய முடியாத அரும் பனியாற்றும் தாங்களை யாரும் எதுவும்
செய்துவிடமுடியாது.இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு தொடர்ந்து தாங்கள் பனியைதொடருங்கள்.எல்லாம் வல்ல இறைவன் அவர்களை பார்த்துக்கொள்ளட்டும்.அன்புடன்
சிக்கந்தர்

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)