Friday 1 October, 2010

Don't Panic! : இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா?

அலுவலகத்தில் உங்கள் பணி நேரத்தில் ஆணி பிடுங்காமல், கணினி முன் அமர்ந்து Solitaire game விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அல்லது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள். திடிரென உங்கள் பாஸ் வருகிறார். உடனடியாக என்ன செய்வீர்கள்?  ஆணி சமந்தபடாத அனைத்து விண்டோக்களையும் மூட வேண்டும். ஆணி சம்பந்தப்பட்ட  கோப்புகளை திறக்க வேண்டும். இவையனைத்தும் ஓரிரு வினாடிகளில் நடைபெற வேண்டும். இல்லையென்றால் இப்படி மானிட்டரை கவிழ்த்து வைக்க வேண்டியதுதான்.      



இதையெல்லாம் ரூம் போட்டு யோசித்து இதற்கான தீர்வாக ஒரு சுதந்திர இலவச மென்பொருள் கருவியை தந்திருக்கிறார்கள். அதுதான் Don't Panic எனும் 488 kb மட்டுமே அளவுள்ள பயனுள்ள(!?) கருவி! 


தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. ஓட்டு போட்டு விட்டு தரவிறக்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் கேட்கவா போறீங்க?. 


உங்கள் கணினியில் இதனை நிறுவியபிறகு, இது விண்டோஸ் உடன் துவங்க வேண்டுமா என்பதையும் துவங்கும் பொழுது Panic mode -இல் துவங்க வேண்டுமா என்பதையும் Options பகுதிக்கு சென்று General tab இல் தேர்வு செய்து கொள்ளுங்கள். 


அடுத்து, உங்கள் பாஸ் வரும் வேளையில், நீங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் அப்ளிகேஷனை என்ன செய்ய வேண்டும் என்பதை Options ல் Actions டேபில் சென்று  Force closing the selected software அல்லது Force hiding the selected software  ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  மேலும் இதன் Other actions பகுதியில், நீங்கள் சற்றுமுன் பயன்படுத்திய Recent Files Folders, Browsing history, typed url, cache, cookies, recycle bin என எதுவெல்லாம் க்ளின் செய்யப்பட வேண்டுமோ அவற்றை எல்லாம் தேர்வு செய்து கொள்ளலாம். 
அடுத்து Close (hide) டேபிற்கு சென்று Add பொத்தானை க்ளிக் செய்து எந்தெந்த அப்பிகேஷன்களை மூடவோ அல்லது மறைக்கவோ செய்ய வேண்டும் என்பதை browse செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். 

Run டேபிற்கு சென்று, மேலே இணைத்திருந்த அப்ளிகேஷன்களை close அல்லது hide செய்த பிறகு, வேறு எந்த ஆணி சம்பந்தப்பட்ட அப்ளிகேஷன் அல்லது கோப்புகளை உடனே திறக்க வேண்டும் என்பதை இணைத்துக் கொள்ளலாம்.


இனி Don't Panic! ஐ திறந்து Panic mode -இல் மினிமைஸ் செய்த பிறகு உங்கள் Taskbar -இல் அமர்ந்திருக்கும். அலுவலகத்தில் உங்கள் பாஸ் அல்லது வீட்டில் உங்கள் மனைவி திடிரென வரும்பொழுது, டாஸ்க்பாரில் உள்ள இந்த Don't Panic! பொத்தானை அழுத்தினால் போதும். உடனடியாக நொடியில் மூடப்பட வேண்டியவை  அனைத்தும் மூடப்பட்டு, ஆணி சம்பந்தப் பட்ட கோப்புகள் திறக்கப்பட்டு நீங்கள் நல்ல பிள்ளையாக ஆணி பிடுங்குவது போல காண்பித்துக் கொள்ளலாம். 

   

.   

21 comments:

கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா....

கலகலப்ரியா said...

உலகம் உருப்பட்ட மாதிரிதான்... :))

சிவகுமார் said...

Ok Thala thanksssssssssssssssss......

சூர்யா ௧ண்ணன் said...

// கலகலப்ரியா said...

அடப்பாவிங்களா....//

அபப.. இது உங்களுக்கு பயன்படாதா?..

இளங்கோ said...

:)

பொன் மாலை பொழுது said...

Hope, you could have been tried the Don't panic software in you home ( in front of your better half) then recommending the same to your readers. am I right Surya? :)
Great God! You have got a lap top already.
good post.
Thanks.

ப.கந்தசாமி said...

பரவாயில்லையே.

Kousalya Raj said...

இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களா......??!!

நடக்கட்டும்...
:))

எல் கே said...

nice one surya neraya iruku intha maathiri
double desktop kelvi patrukeengala???

Admin said...

எப்படீயெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....

எம் அப்துல் காதர் said...

அட...!! இது வேறயா!!??

சரவணன்.D said...

பகிர்வுக்கு நன்றி சார்!!!
வேலையில் OP அடிப்போர்க்கு இது மிகவும் பயன்படும்...

சரவணன்.D said...

பகிர்வுக்கு நன்றி சார்!!!
வேலையில் OP அடிப்போர்க்கு இது மிகவும் பயன்படும்...

vasu balaji said...

சுத்தம்:))))

Geetha6 said...

wav!!!U tried?

KTM Nizar said...

தல கலக்கிடீங்க...

ரொம்ப நன்றி...

அணில் said...

ஆஹா.. இது வேல செய்யாம போனா கத கிழிஞ்சிடாதா? எனக்கேன் வம்பு.

மாயாவி said...

இனிமேல் தைரியமா ஆணி புடுங்கலாம்............!

Anonymous said...

nalla dhan irukku!!!!!:):)

Anonymous said...

NALLA DHAN IRUKKU!!:)

ALHABSHIEST said...

ரொம்ப பிரயொசனமானதுங்கோவ்.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)