Facebook கணக்கு வைத்திருக்கும் பல பதிவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் பிளாக்கை அப்டேட் செய்யும் பொழுதும், Facebook இல் நுழைந்து தங்களது புதிய இடுகையின் லிங்கை கொடுத்து அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உங்கள் பிளாக்கில் புதிய இடுகைகளை இடும்பொழுது Facebook இல் ஆட்டோமாடிக்காக அப்டேட் ஆக வேண்டுமெனில் ஒரு எளிய வழி உங்களுக்காக.
Facebook இல் உங்கள் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புறத்தில் உள்ள Account லிங்கில் உள்ள Application Settings ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு திறக்கும் திரையில் Notes லிங்கை க்ளிக் செய்து மறு திரையில் மேலே வலது புறமுள்ள Notes Settings பாக்ஸில் Import blog லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
இனி Import a Blog டேபில் Web URL க்கு நேராக உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பக்கத்தின் feed url ஐ கொடுத்து (உதாரணமாக http://suryakannan.blogspot.com/feeds/posts/default) Confirmation check box இல் டிக் செய்து Start Importing பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்த திரையில் Confirm Import பொத்தானை சொடுக்குங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்கள் ப்ளாக் அப்டேட் செய்யப்படும் பொழுது தானாகவே உங்கள் Facbook சுவற்றில் வெளியிடப்படும். இதன் மூலம் உங்கள் பிளாக்கின் டிராபிக்கும் அதிகரிக்கும்.
.
24 comments:
இவ்ளோ சுலபமா!!!
நன்றி.
திருனெல்வேலிக்கே அல்வா வித்து பாக்கலாம். தலைவா. ஃபீட்பர்னர் குடுத்திருக்கிங்களா RSS ku. அதான் தமிழ்மணம் அமுக்கினாலும் போகல. பாருங்க தலைவா.:)
// சைவகொத்துப்பரோட்டா said...
இவ்ளோ சுலபமா!!!
நன்றி.//
நன்றிங்க!..
அட!
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே..
நான் அடிக்கடி இது தொடர்ந்து உள்நுழைய வேண்டியிருக்கிறதே என்று நினைத்திருக்கிறேன்.. தமிழிஷ் செல்லும் போது அங்கிருந்து அப்படியே சப்மிட் செய்து வந்தேன். தாங்கள் கூறும் வழி எளிமையாகவுள்ளது.
//வானம்பாடிகள் said...
திருனெல்வேலிக்கே அல்வா வித்து பாக்கலாம். தலைவா. ஃபீட்பர்னர் குடுத்திருக்கிங்களா RSS ku. அதான் தமிழ்மணம் அமுக்கினாலும் போகல. பாருங்க தலைவா.:)//
நச்சுன்னு தலைய ஒரு கொட்டு கொட்டுனீங்க.. நன்றி தலைவா! ..
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே
நன்றி
நன்றி. இந்த பதிவு மிக பயன்னுள்ளதாக உள்ளது.
நன்றி நண்பா
Useful Article...
Thank you surya Kannan
thx sir:)
நல்ல உபயோகமான Tips.மிகவும் நன்றி. எனக்கு Pen Drive போர்மட் பண்ணாமல் தடுப்பதற்கு ஏதேனும் வழி உண்டா என்பதை அறியத்தரவும்.
அருமை, அருமை, மிக்க நன்றி நண்பா..,
வணக்கம் சூர்யா!என்னுடைய இந்த கேள்விக்கும் இந்த இடுகைக்கும் தொடர்பில்லை. கணணி வகைகளுக்கு ஏற்ப பயஸ் செட்டப்பில் நுழையும் கீ(key)மாறுபடுமா? அவ்வாறெனில் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது?. நான் பயன்படுத்தும் asus k40ab வகை மடிக்கணணியில் துவக்கும் பொழுது Esc Key அழுத்தினால் BOOT OPTION மட்டும் தான் காட்டுகிறது. BIOS SETUP ஐ காட்டவில்லை. வேறு என்ன வழிகளில் எனது மடிக்கணணியில் பயஸ் அமைப்பை பார்வையிடலாம்?. உதவி செய்வீர்களா? (வேறு சில கீ களை அழுத்தி பார்த்தேன். ஆனாலும் பயஸ் செட்டப்பில் நுழைய முடியவில்லை.
மிக்க நன்றி
நன்றி நண்பரே!நானும் எனது வலைப்பதிவை import செய்துவிட்டேன்
செய்து விட்டேன்:)! தகவலுக்கு ரொம்ப நன்றிங்க.
Useful.
முன்னால ஒரு கேள்க்வி கேட்டேன் பதில் சொல்லவில்லை!! இப்போ ஒரு கேள்வி...இந்தத் தமிழ் மணத்துல எப்படி வோட்டுப் போடறது? உயர்த்திய கட்டைவிரலில் போட முடியவில்லையே...!
உங்கள் இந்தப் பதிவு யூத்புல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியுள் வதுல்லதை கவனித்தீர்களா?
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
பயனுள்ள தகவல். நன்றி.
தலைவரே.. நீங்கள் சொன்னதுபோல் செய்தேன் முதல் நாள் மட்டும் ஆனது.. அத்ன் பிறாகு ஆக மாட்டென் என்கிறது.
கேபிள் சஙக்ர்
// shortfilmindia.com said...
தலைவரே.. நீங்கள் சொன்னதுபோல் செய்தேன் முதல் நாள் மட்டும் ஆனது.. அத்ன் பிறாகு ஆக மாட்டென் என்கிறது.
கேபிள் சஙக்ர்//
தலைவா! சில சமயங்களில் சற்றே அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது..
ரொம்ப நன்றி தெய்வமே! நீங்க நல்லா இருக்கனும் http://www.s-teamholidays.com
இது BLOG இற்கு மட்டும் தான் சரியா வருமா ??? நான் சும்மா டைம் பாசுக்காக உருவாக்கிய இந்த http://makaarim.webs.com/ தளத்தை அதில் இணைக்க முடியவில்லை
அது ஏன்??
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே..
மிக்க நன்றி
i cannot see application settings
Post a Comment