Friday, 30 April 2010

ஃபார்மேட் செய்ய போறீங்களா? கொஞ்சம் நில்லுங்க..

கணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள். 

ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?'  என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது,  உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ  அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள்  கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை  படி எடுத்து  கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver (தரவிறக்கச் சுட்டி இறுதியில்..) 
இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும்  பட்டியலிடப்படும். 
இந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும். 


நீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு. 


இயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.


.

47 comments:

இளமுருகன் said...

உபயோகமான பதிவு,நன்றி நன்றி

இளமுருகன்
நைஜீரியா

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி இளமுருகன்!

சைவகொத்துப்பரோட்டா said...

மிக்க நன்றி.

cheena (சீனா) said...

பயனுள்ள இடுகை - நன்றி
நல்வாழ்த்துகள் சூர்யா
நட்புடன் சீனா

ஜில்தண்ணி said...

நல்லா இருக்கு சார்

சில நேரங்களில் os இன்ஸ்டால் செய்த பின் டிவைஸ் ட்ரைவர் இன்ஸ்டால் செய்யும் போது
driver installation failed ஆகிறது,திரும்ப ஃபார்மட் செய்ய வேண்டி இருக்கு,என்னா பன்னலாம் சார்

நித்தி said...

பயனுள்ள பதிவு திரு.சூர்யா சார்.....

வானம்பாடிகள் said...

ஆஹா! நன்றி தலைவா

bala said...

really very nice mr.Surya Kannan.......

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..
அவசியமான பதிவு
பகிர்வுன்னு நன்றி
சூர்யா கண்ணன்....../

vimalavidya said...

regularly without tired you are giving very useful in formations.. all they are very useful for regular users..really best work..thank you surya <<congratulations

Thomas Ruban said...

மிகவும் பயனுள்ள பதிவு.

பதிவுக்கு நன்றி சார்.

RK நண்பன் said...

rknanbann

Super Mr. Surya.. very very usefull info... Ethana naala kaathu irunthen itharkaka....

mikka nandri..

arulmozhi r said...

.விண்டோஸில் மட்டும்தான் இந்த பிரச்னை. ஆனால் இதற்கு தீர்வாக உங்கள் பதிவு இருக்கிறது.

Thamizhan said...

அருமையான பதிவு. நன்றி சூர்யா... இத்தனை நாள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் பெரும்பாடு பட்டுவிட்டேன்.

சத்ரியன் said...

சூர்யா கண்ணன்,

எப்போதும் போல் மிகவும் பயனுள்ள பதிவு.

சூர்யா ௧ண்ணன் said...

//சைவகொத்துப்பரோட்டா said...

மிக்க நன்றி. //

வாங்க.. சைவகொத்துப்பரோட்டா!

சூர்யா ௧ண்ணன் said...

//cheena (சீனா) said...

பயனுள்ள இடுகை - நன்றி
நல்வாழ்த்துகள் சூர்யா
நட்புடன் சீனா //

நன்றிங்க திரு. சீனா!

சூர்யா ௧ண்ணன் said...

//ஜில்தண்ணி said...

நல்லா இருக்கு சார்

சில நேரங்களில் os இன்ஸ்டால் செய்த பின் டிவைஸ் ட்ரைவர் இன்ஸ்டால் செய்யும் போது
driver installation failed ஆகிறது,திரும்ப ஃபார்மட் செய்ய வேண்டி இருக்கு,என்னா பன்னலாம் சார் //

driver installation failed வந்தால் ஃபார்மெட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. அதிக பட்சமாக நீங்கள் அந்த ட்ரைவரை பதிந்ததற்கு முன்புள்ள நேரத்திற்கு சிஸ்டம் ரீஸ்டோர் செய்தால் போதுமானது..

சூர்யா ௧ண்ணன் said...

//நித்தியானந்தம் said...

பயனுள்ள பதிவு திரு.சூர்யா சார்..... //

மிக்க நன்றிங்க திரு. நித்தியானந்தம்!

சூர்யா ௧ண்ணன் said...

//வானம்பாடிகள் said...

ஆஹா! நன்றி தலைவா //

தலைவா வாங்க!

சூர்யா ௧ண்ணன் said...

//bala said...

really very nice mr.Surya Kannan....... //

நன்றி திரு. பாலா

சூர்யா ௧ண்ணன் said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..
அவசியமான பதிவு
பகிர்வுன்னு நன்றி
சூர்யா கண்ணன்....../ //

மிக்க நன்றி திரு. மணி! உங்களுக்கும் எனது உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..

சூர்யா ௧ண்ணன் said...

//vimalavidya said...

regularly without tired you are giving very useful in formations.. all they are very useful for regular users..really best work..thank you surya <

மிக்க நன்றி விமலவித்யா!

சூர்யா ௧ண்ணன் said...

//Thomas Ruban said...

மிகவும் பயனுள்ள பதிவு.//

மிக்க நன்றி தாமஸ் ரூபன்!

சூர்யா ௧ண்ணன் said...

//RK நண்பன் said...

rknanbann

Super Mr. Surya.. very very usefull info... Ethana naala kaathu irunthen itharkaka....
//

நன்றி RK நண்பன்!

சூர்யா ௧ண்ணன் said...

//arulmozhi r said...

.விண்டோஸில் மட்டும்தான் இந்த பிரச்னை. ஆனால் இதற்கு தீர்வாக உங்கள் பதிவு இருக்கிறது. //

உண்மைதாங்க.. உபுண்டுவில் இந்த பிரச்சனை வருவதில்லை..

மிக்க நன்றி அருள்மொழி!

சூர்யா ௧ண்ணன் said...

//Thamizhan said...

அருமையான பதிவு. நன்றி சூர்யா... இத்தனை நாள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் பெரும்பாடு பட்டுவிட்டேன். //

மிக்க நன்றி தமிழன்

சூர்யா ௧ண்ணன் said...

//’மனவிழி’சத்ரியன் said...

சூர்யா கண்ணன்,

எப்போதும் போல் மிகவும் பயனுள்ள பதிவு. //

மிக்க நன்றி சத்ரியன்!

KTM Nizar said...

மிகவும் நன்றி நண்பரே.. பல தடவை இது போன்ற காரணங்களால் நான் தடுமாறி இருக்கிறேன்...

உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி ...

தொடரட்டும் உங்கள் பணி ....

Kiyass said...

கணணி உபயோகப்படுதுகின்ற எல்லோரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று இது. பதிவுக்கு மிகவும் நன்றி சார்.

நட்புடன் ஜமால் said...

மிகத்தேவையான இடுக்கை

மிக்க நன்றி சூர்யா.

henry J said...

superb tips to backup driver files. Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software

ஸ்ரீராம். said...

மிக உபயோகமான, தேவையான இடுகை. நன்றி.

arulmozhi r said...

உங்களின் இந்த பதிவு அப்படியே வேறு ஒரு blogspot ல் வந்துஇருக்கிறது.எழுத்து படம் எதுவும் மாறவில்லை

Sivakaran said...

http://aakayam.blogspot.com/2010/05/blog-post_1695.html

இந்த திருட்டையும் பாருங்க நண்பரே..

venkatesan,siva said...

பதிவுக்கு நன்றி.ஒரு சந்தேகம்.நோக்கியா மொபைலில் இணைய சேவையை பயன்படுத்தி கம்பியூட்டர் TO மொபைல் அல்லது மொபைல் TO மொபைலில் YAHOO,GTALK போன்றவற்றின் மூலமாக இணைய அரட்டை(voice chat)செய்ய முடியுமா?முடியும் எனில்.
எந்த போன்?என்ன மாடல்?என்ன விலை?
கேள்விக்கு உதவமுடியுமா?எனது மெயில் tvetsi@gmail.com

கலகலப்ரியா said...

நின்னுட்டேன்..

KVR said...

உபயோகமான பதிவு

வரதராஜலு .பூ said...

மிகவும் உபயோகமானதொரு பதிவு சூர்யா. பகிர்வுக்கு நன்றி

சசிகுமார் said...

வழக்கம் போல கலக்கீடீங்க நண்பரே உபயோகமான பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

soundar said...

என் ப்ளாக் கை எதனை பேர் பார்த்தார்கள் என்ன்று எப்படி பார்ப்பது
http://rasikan-soundarapandian.blogspot.com/

சூர்யா ௧ண்ணன் said...

// soundarapandian said...

என் ப்ளாக் கை எதனை பேர் பார்த்தார்கள் என்ன்று எப்படி பார்ப்பது //


http://www.google.com/analytics/
சென்று உங்கள் ஜிமெயில் கணக்கை உபயோகித்து, ஒரு அக்கௌன்ட் ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்..
பிறகு பார்வையாளர்கள் மட்டுமின்றி மேலும் பல உபயோகமான தகவல்களை பெறலாம்.

soundar said...

மிகவும் நன்றி சூர்யா ௧ண்ணன் அவர்களே

soundar said...

மிகவும் நன்றி சூர்யா ௧ண்ணன் அவர்களே

ஷர்புதீன் said...

உபயோகமான பதிவு
:)

KUMARESAN said...

நன்றி அருமையான பதிவு,தொர்ந்து எழுதவும்.

Nazmeer said...

நண்பர்களுக்கு வணக்கம்....

நான் பிளாக்கர்கு புது ஆள்..சூர்யா கண்ணன் அண்ணா உங்களின் பிளாக்கர் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு.. பல தெரியாத தகவல்கள் சொல்லி இருக்கீங்க எனக்கு உங்களின் உதவி ரொம்ப தேவை ஹெல்ப் பண்ணுவிங்களா?

உங்க மெயில் ஐடி இல்லை என்றால் உங்களோட face book ஐடி தர முடியுமா ? கணணி சம்பந்தமாக தனிப்பட்ட கேள்விகளை கேட்டால் பதில் சொல்விங்களா அண்ணா ?

நான் இலங்கையில் இருந்து நண்பன்

Nazmeer

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)