Wednesday 17 February, 2010

அடடா!.. வடை போச்சே!.. - ஜிமெயில் ட்ரிக்ஸ்

.
ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை தனது பணி நிமித்தமாக அத்தியாவசியமாக பயன் படுத்தி வரும் நண்பர் ஒருவர் இன்று காலை தொலைபேசியில் அழைத்து மிகவும் அவசரமாய், அவசியமாய் ஓரு உதவி கேட்டிருந்தார்.
.
அந்த நண்பர் வழக்கமாக காலையில் அலுவலகத்திற்கு வந்து கணினியில் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் முதலில் இன்பாக்ஸ் இல் மின்னஞ்சல்களை திறக்காமலேயே, தேவையற்ற மின்னஞ்சல்களை வரிசையாக தேர்வு செய்து டெலிட் செய்துவிடுவது வழக்கம். இன்றும் வழக்கம் போல அவருக்கு தேவையற்ற நியூஸ் லெட்டர் போன்ற மின்னஞ்சல்களை தேர்வு செய்து டெலிட் செய்யும் பொழுது, தவறுதலாக மிக முக்கியமான மேலதிகாரியிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலையும் சேர்த்து டெலிட் செய்து விட்டார். 

அதற்கு முன்பாக அவரது மேலதிகாரி தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு மின்னஞ்சலை படித்தீர்களா? பதில் வரலையே,  என கேட்டிருந்த போது, மின்னஞ்சலை படித்து விட்டேன்.. இன்னும் சிறிது நேரத்தில் பதில் அனுப்புகிறேன், என்று வேறு அளந்து விட்டார். 

இப்பொழுது மின்னஞ்சலை டெலிட் செய்துவிட்ட நிலையில் 'அடடா!..  வடை போச்சே!.. ' என தலையில் கை வைத்தபடி என்னை தொடர்பு கொண்டார். 

'இன்பாக்ஸ் ஃபோல்டரிலிருந்து டெலிட் செய்திருந்தால் அந்த மெயில் ட்ராஷ் ஃபோல்டரில் இருக்கும்.. போய் பாருங்கள்' என்றேன்.

'ட்ராஷ் ஃபோல்டர் ஜிமெயிலில் எங்கேயும் காணோமே! .. இப்ப என்ன செய்றது' 

அவருக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் நேர்ந்தால்?..

உங்கள் ஜிமெயில் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு ஜிமெயில் திரையின் வலது மேல் மூலையில் உள்ள Settings லிங்கை சொடுக்குங்கள்.
இனி வரும் திரையில் Labels லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு பட்டியலிடப் பட்டிருக்கும் Inbox, Buzz, Draft போன்ற ஃபோல்டருக்கு கீழே உள்ள Trash  ஃபோல்டருக்கு நேராக உள்ள Show என்ற லிங்கை ஒருமுறை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

 
அவ்வளவுதான்! .. இனி ட்ராஷ் ஃபோல்டரும் உங்கள் ஜிமெயில் திரையில் இடது புற பேனில் தோன்றிவிடும். அங்கு சென்று டெலிட் செய்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொள்வதோடு, அதனை தேர்வு செய்து Move to பொத்தானை க்ளிக் செய்து மீண்டும் Inbox ஃபோல்டருக்கு  மாற்றிக் கொள்ளலாம். 


. 

28 comments:

சுந்தரா said...

நல்லவேளை, என்கிட்ட ட்ராஷ் ஃபோல்டர் இருக்குது.

நல்ல இடுகை...நன்றிங்க.

Mrs.Menagasathia said...

good post!!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க சுந்தரா!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி சகோதரி! மேனகா!

கவிதை காதலன் said...

என்னைப் போல அவசர குடுக்கைங்களுக்கு மிகவும் உபயோகமான பதிவு

சூர்யா ௧ண்ணன் said...

//கவிதை காதலன் said...

என்னைப் போல அவசர குடுக்கைங்களுக்கு மிகவும் உபயோகமான பதிவு//

நன்றி மணிகண்ட வேல்!

சிநேகிதி said...

பயனுள்ள பதிவு.. நன்றிங்க

சைவகொத்துப்பரோட்டா said...

முக்கியமான தகவலுக்கு நன்றி.

Jaleela said...

நல்ல தகவல் சூரியா கண்ணன் சார்,

இதை ப‌ற்றி தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌னுள்ள மிகவும் ப‌திவு.

நானும் இப்படி தான் டிராஸ் போய் பார்த்து கொள்வேன்
யாஹூவில் போல்டர்கள் போட்டு பதிவுகளை சேமிப்பது போல்.

ஜீமெயிலில் போல்டர் போடுவது எப்படி?

skishok said...

நல்ல பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே.!

abul bazar/அபுல் பசர் said...

பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள்.
நன்றி.

bala said...

Dear:

Really such a good post, Pls continue to learn something for all.

கலகலப்ரியா said...

trash can la iruntha vadai oosip poyirukkaathu...? o))

thenammailakshmanan said...

அட ரொம்ப ஈசியா இருக்கு சூர்யக்கண்னன்

sheik said...

good useful one

rajsteadfast said...

தகவலுக்கு நன்றி ஐயா..பலமுறை இப்படி திண்டாடி இருக்கிறேன்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க சிநேகிதி!,

நன்றி! சைவகொத்துபரோட்டா!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றிங்க ஜலீலா!

ஜிமெயிலில் ஃபோல்டர்களை உருவாக்க, செட்டிங்க்ஸ் லிங்கில் க்ளிக் செய்து Labels சென்று அங்கு உங்களுக்கு தேவையான பெயரில் label உருவாக்கினால் போதும்..

சூர்யா ௧ண்ணன் said...

// skishok said...

நல்ல பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே.!//

வருகைக்கு நன்றி நண்பரே!


//அபுல் பசர் said...

பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள்.
நன்றி. //

வருகைக்கு நன்றி நண்பரே!



//bala said...

Dear:

Really such a good post, Pls continue to learn something for all.//

நன்றி நண்பரே!

சூர்யா ௧ண்ணன் said...

//கலகலப்ரியா said...

trash can la iruntha vadai oosip poyirukkaathu...? o))//

ஆஹா!..

நல்லவேலைங்க ப்ரியா! அந்த வடை என்னுடையதில்லை..

சூர்யா ௧ண்ணன் said...

// thenammailakshmanan said...

அட ரொம்ப ஈசியா இருக்கு சூர்யக்கண்னன்//

நன்றிங்க தேனம்மை!

சூர்யா ௧ண்ணன் said...

// sheik said...

good useful one//
நன்றி ஷேக்!


// rajsteadfast said...

தகவலுக்கு நன்றி ஐயா..பலமுறை இப்படி திண்டாடி இருக்கிறேன்.//

வருகைக்கு நன்றி நண்பரே!

வானம்பாடிகள் said...

surya. intha blog address link ean ippadi varuthu
http://suryakannan.blogspot.com/2010/02/blog-post_17.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FmJNV+%28%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2..%2C+%29

சூர்யா ௧ண்ணன் said...

தலைவா!

ப்ளாக் டைட்டில் மற்றும் போஸ்ட் டைட்டில் ஐ ட்ராபிக் அதிகரிக்கும் பொருட்டு நண்பர், பதிவர் தமிழ்நெஞ்சம் ஆலோசனைப்படி மாற்றியிருக்கிறேன். அதனால்தான் என நினைக்கிறேன்.. ஆனால் லிங்க் சரியான பக்கத்திற்குத் தான் செல்கிறது.

News said...

Really good information for beginers and others also.

vivekanandan said...

How to show "next" button to display next message while we are reading current message.

சூர்யா ௧ண்ணன் said...

// vivekanandan said...

How to show "next" button to display next message while we are reading current message.//

இதற்கு "Next" button தேவையில்லை நண்பரே! வலது புறமுள்ள "Older" என்ற லிங்கை கிளிக் செய்தால் போதுமானது..

HariV is not a aruvujeevi said...

view from the other person's shoe, intha panniyil (kendal pannamel) ungal pathivugal ellame super. Mathavangaluku nallathu neinkum ullam kediatha negal, oru bhagiavan. All the best, keep it up.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)