Saturday, 12 December 2009

Microsoft Office 2007 -ல் Office 2003 -இன் மெனு வடிவை அமைக்க

நீங்கள் மைக்ரோசாப்ட் ஆஃபீஸ்  2007 உபயோகித்துக் கொண்டு இருக்கிறீர்களா? ரிப்பன் மெனுவில் நீங்கள் தேடும் கட்டளை எங்கு உள்ளது என்ற குழப்பம் தீர நெடு நேரமாகலாம். சில சமயங்களில் உங்கள் பாஸ் குறிப்பிட்ட சமயத்திற்குள்ளாக முடித்து தரச்சொல்லி  கொடுத்த வேலையை இந்த ரிப்பன் மெனு குழப்பத்தின் காரணமாக டென்ஷனாகி முடியை பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஒரு வேளை 2007 -ல்  2003 -இன் மெனு வடிவை அமைக்க வழி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறதா?

இதோ உங்களுக்காக.., UBitMenu Add-in.  இது ஒரு புதிய ரிப்பனில் 2003 மெனுவை உங்கள் 2007  அல்லது 2010 பதிப்பில் கொண்டு வரும். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த Add-in உங்கள் Word, Excel, மற்றும்  PowerPoint 2007 மற்றும் 2010 -ல் 2003 பதிப்பின் கிளாசிக் மெனுவை நிறுவும். அதுமட்டுமல்லாமல் 2007 -ல் உள்ள அனைத்து புதிய வசதிகளும் அப்படியே இருப்பது இதன் சிறப்பு. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இதில் 2003 -nam மெனுவும் நிறுவப்பட்டுள்ளது, அதோடு 2007- ல் உள்ள PDF ஆக சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.


Power Point -ல் எளிதாக வேலை செய்யுங்கள்.



இந்த UBitMenu நிறுவிய பிறகும் 2007-ல் தரப்பட்டுள்ள Mini Formatting Toolbar வசதி மாறாமல் அப்படியே உள்ளது இதன் சிறப்பு.


இந்த Add-in சொந்த உபயோகத்திற்கு மட்டும் இலவச உரிமத்துடன் தரப்பட்டுள்ளது.



 இந்த குழப்பம் சம்பந்தமாக எனது மற்றொரு பதிவு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய
.

.

10 comments:

வானம்பாடிகள் said...

தலைவா நேத்துதான் 2010 பீட்டா இன்ஸ்டால் செய்தேன். இது ரொம்ப உதவியாக இருக்கும். நன்றி.

இராகவன் நைஜிரியா said...

நன்றி சூர்யா கண்ணன்.. இது கிடைக்குமா என்றுதான் ரொம்ப நாளாத் தேடிகிட்டு இருந்தேன்.எனக்கு 2007 பழகிடுச்சு... எங்க பாசுக்குத்தான் பழகலை. 2003 வச்சுகிட்டு இருக்கார். அதனால் நானும் சேவ் செய்யும் பைல்களை 2003 -ல் சேவ் செய்ய வேண்டியிருக்கு.இப்ப 2007 போட்டு, இந்த மெனுவை இன்ஸ்டால் செஞ்சா அவரும் நிம்மதியா இருப்பாரு, நானும் இருப்பேன்.

சங்கர் said...

இதைத்தான் நானும் கொஞ்ச நாளாய் தேடிக்கிட்டிருந்தேன், நன்றி சூர்யா

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி நண்பா,...

வேலன். said...

நல்ல தகவல் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

ஜிஆர்ஜி allways cool said...

நல்ல தகவல்களை படிக்கும்போது..மனது இதமாகின்றது..அதுபோல தங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் சூரியா...!ஜிஆர்ஜிபுதுவை.

sahib said...

hello leader very goood update in computer and very useful valuable updated

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு கண்ணன்.வழக்கம் போல தாமதமாக வந்தாலும் படித்து ஓட்டை போட்டாச்சு :-)

MaNi said...

MS Office 2007 - ல் எனக்கு வரும் மின்னஞ்சல்களில் உள்ள படங்கள் (*.GIF , Animated)அசையாமல் சாதாரண படங்களாகவே தெரிகின்றன. இதை எப்படி சரி செய்வது?

சூர்யா ௧ண்ணன் said...

Symptoms:-When you receive an e-mail message that contains animated graphics, such as animated .gif files, only a static image appears.Cause:-Microsoft Office Outlook 2007 does not display animated graphics files in the body of e-mail messages. Only the first frame of the animation appears.You can view the message in your Web browser to see the animation.View an e-mail message in your Web browser 1. Open the message. 2. On the Message tab, in the Actions group, click Other Actions. 3. Click View in Browser.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)