சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் பல சமயங்களில் நமக்கு பேருதவியாக இருக்கும். புதிதாக ஏதாவது மென்பொருள் பதிந்த பின்னரோ அல்லது புதிதாக ஏதாவது வன்பொருள் நிறுவிய பின்னரோ கணினியின் இயங்குதளம் பாதிக்கப்பட்டு சரிவர இயங்காமல் போய்விடுகிறது.
இது போன்ற சமயங்களில் நாம் ஏற்கனவே ஏதாவது ஒரு தேதியில் சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்கியிருந்தால், அந்த குறிப்பிட்ட தேதிக்கு கணினியை ரீஸ்டோர் செய்ய முடிவதால், நமது முக்கியமான டேட்டாக்களை இழக்காமலிருக்க முடியும். இந்த வசதி Windows Me பதிப்பிலிருந்து மைக்ரோ சாப்டினால் தரப்பட்டுள்ளது. (Windows 98 -ல் டாஸ் ப்ராம்ப்ட்டில் Scanreg / Restore என்ற கட்டளை கொடுத்து பயன் படுத்தலாம்.)
எப்பொழுதுமே புதிதாக எதாவது மென்பொருள் அல்லது வன்பொருள் நிறுவுவதற்கு முன்னதாக ஒரு சிஸ்டம் ரீஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவது பாதுகாப்பானதாகும்.
இந்த வசதி விண்டோஸ் எக்ஸ்பியில் All Programs -> Accessories -> System Tools -> System Restore சென்றால் கிடைக்கும்.
விண்டோஸ் ஏழில் இந்த வசதி சற்று வித்தியாசமாக தரப்பட்டுள்ளது.
My Computer ல் வலது கிளிக் செய்து Properties செல்லவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் இடதுபுற பேனில் System Protection என்பதை கிளிக் செய்யவும்.
இனி திறக்கும் System Properties திரையில் System Protection என்ற டேபில் 'Create' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
அடுத்து உங்களுக்கு இந்த ரீஸ்டோர் பாயிண்ட் எப்பொழுது எந்த நிகழ்விற்கு முன் உருவாக்கினோம் என்பதை நினைவூட்டும் வகையில் ஒரு விபரத்தை டைப் செய்து Create கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்!

2 comments:
நண்பருக்கு... நான் ஏதேச்சையாக Google ல் தேடிக்கொண்டிருந்த போது உங்களுக்கு வெப்சைட்டை காண நேர்ந்தது. மிகவும் பயனுள்ள தகவல்கள் கொடுத்து வருகிறீர்கள். எனது புக்மார்க்கில் உங்களது வெப்சைட்டை சேர்த்து தினமும் புதிய தகவல்களை தெரிந்து வருகிறேன். நன்றிகள் பல.....
மேலும் உங்களுடைய வெப்சைட்டை பார்த்துவிட்டுதான் எனக்கு உபுண்டு நிறுவ வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டறது. நீங்கள் தெரிவித்த தகவல்படி நிறுவினேன். ஆனால் என்னுடைய விண்டோஸ் 7ல் என்னால் பூட் செய்ய முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் உபுண்டுவில் லோட் செய்து அந்த கமாண்டுகள் கொடுத்து சேவ் செய்தால் சேவ் ஆகாமல் இக்னார் ஆகிவிடுகிறது.
இந்த விசயத்தில் எனக்கு உங்களுடைய உதவி தேவை.
பயனுள்ள பல தகவல்கள் தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு மீண்டும் நன்றியும், வாழ்த்துக்களும்..
அன்புடன்
முஹம்மது அப்துல் காதர்
பஹ்ரைன்
வருகைக்கு நன்றி! SMAKader!
Login as a administrator in Ubuntu and try again..
Post a Comment