Thursday, 16 July 2009

CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3

Absolute Co-ordinate System மற்றும் Relative Co-ordinate System ஆகியவைகளைப் பற்றி முந்தைய இடுகைகளில் பார்த்தோம்.

மேற்கண்ட இரு முறைகளும் அனைவருக்கும் நன்றாக விளங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில், இதோ இன்னமும் எளிதான முறை..,

Relative Polar Co-ordinate System (syntax: @distance '<' angle)

'@' அடையாளம் எதைக் குறிக்கிறது என்பதை சென்ற இடுகையில் பார்த்திருந்தோம். இதன் syntax -ல் '@' என்பது கடைசிப் புள்ளியை குறிக்கிறது. distance என்பது கடைசிப் புள்ளியிலிருந்து தற்சமயம் நாம் குறிக்கப்போகும் புள்ளிக்கு இடையே உள்ள தொலைவு, '<' என்பது கோணத்தை குறிக்கிறது பிறகு என்ன கோணம் என்பதை கொடுக்கவேண்டும். AutoCAD -ல் கோணங்களை பற்றிய விவரம் அறிய கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.

கீழ்கண்ட வரைப்படத்திற்கு நாம் ஏற்கனவே, Absolute மற்றும் Relative முறைகளில் புள்ளிகளைக் குறித்திருக்கிறோம். Polar முறையில் புள்ளிகளை எப்படி குறிப்பது என்பதைப் பார்க்கலாம்.
A(0,0)
B @60<0
C @40<90
D @60<180
A @40

இந்த முறை தெளிவாக விளங்கியிருக்கும் என நம்புகிறேன். இப்பொழுது வழக்கம்போல கீழே உள்ள வரைபடத்தை முயற்சித்துப் பாருங்கள்.


இனி AutoCAD திரையைப் பற்றி சிறிது பார்க்கலாம்.
சில Screenshot களை கீழே தந்திருக்கிறேன். பாருங்கள்.








இவற்றில் கருப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கும் திரையை (Drawing Area) Electronic Drawing Sheet என அழைக்கலாம்.

வழக்கமாக நாம் கையால் வரையும் வரைபடங்களுக்கான தாள்கள் (Drawing Sheet) குறிப்பிட்ட அளவை கொண்டிருக்கும். உதாரணமாக A4,A3,A2,A1 மற்றும் A0 போன்றவைகள். ஒரு கட்டடத்தின் வரைப்படத்தையோ அல்லது இயந்திரங்களின் வரைபடங்களையோ நாம் வரைய முற்படும்பொழுது, மேலே சொன்ன பேப்பர் அளவுகளுக்கேற்ப வரைபடத்தை Scale செய்யவேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளோம். (உதாரணமாக 1:4, 1:8, 1:16 or 1:5000).

ஆனால் AutoCAD -ல் உள்ள Drawing Area என்பது ஒரு Electronic Drawing Sheet என்பதால் நமக்கு Scale செய்ய வேண்டிய அவசியமில்லால் போகிறது.

இந்த பயன்பாட்டினால் நாம் எந்த ஒரு வரைபடத்தையும் வரையும் பொழுதும் அதனுடைய உண்மையான Scale இற்கு வரைய முடியும். மேலும் இப்படி Actual Scale -ல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை, வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 1:4, 1:8, 1:16 என எந்த Scale இற்கு வேண்டுமானாலும் பிரிண்ட் எடுத்து கொடுக்க முடியும் என்பது இதனுடைய முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று.

AutoCAD -இன் கட்டளைகள் அனைத்தும் Menu Bar, Toolbar(Drawing tools, Modify tools போன்றவைகள்) ஆகியவற்றில் உள்ளடக்கியுள்ளது. இவற்றைத் தவிர நாம் AutoCAD இற்கு கட்டளைகளை, Drawing Area விற்கு கீழேயுள்ள Command Window விலும் கொடுக்க முடியும்.

AutoCAD ஐ பொறுத்தமட்டில் நாம் அதிகமாக உபயோகிக்கும் அனைத்து கட்டளைகளுக்கும் ஷார்ட்கட் கீகள் இருப்பதால் Menu bar மற்றும் Toolbar மூலமாக கட்டளைகளை கொடுப்பதைவிட Command Window வில் கட்டளைகளை கொடுப்பதுதான் விரைவானதும், எளிதானதுமாகக் கருதப்படுகிறது.

UCS Icon:
Drawing Area வில் இடது கீழ் மூலையிலுள்ள உள்ள X,Y குறியீட்டை UCS Icon எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கலாம். இதில் ஐகான் என்பது அனைவரும் அறிந்ததே, UCS என்பது User Co-ordinate System -இன் சுருக்கமாகும். இது AutoCAD ல் 3D வரைபடங்களை உருவாக்குவதற்கு உதவும் மிக மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். (இதை உருவாக்கியவருக்கு ஒரு ஓ! போடுவோம்.).

இது
X மற்றும் Y அச்சின் ஏறுமுகத்தை குறிக்கிறது. 2D வரைபடங்களுக்கு இது பெரும்பாலும் உபயோகப்படுவதில்லை. ஆனால் 3D யில் மூன்று axis கள் தேவைப்படுவதால் UCS icon மிக மிக அவசியமான ஒன்று. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

மற்ற டூல் களைப் பற்றி பிறகு பார்ப்போம்.


Command Window வில் நாம் எந்த ஒரு கட்டளையை அல்லது மதிப்பை கொடுத்தபின்பும் Enter key ஐ தட்ட வேண்டும் ஆனால் AtuoCAD -ல் Enter key யின் பயன்பாட்டை Space Bar கீயும் கொடுத்துவிடுவதால். இதையே உபயோகியுங்கள்.



இந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

suryakannan@gmail.com


18 comments:

Mohamed Feros said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது,உங்கள் சேவைய் தொடரட்டும்,உங்களை போல் /#/தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்வதுதான் எனக்கும் பிடித்தது/#/

Anonymous said...

நன்முயற்சியை தொடர்ந்து வருகிறீர்கள் கண்ணன்.தொடருங்கள்.-Englishkaran.

Thomas Ruban said...

மிக நல்ல பதிவு அருமையாக உள்ளது. புரிம்படி எழுமையகவும் உள்ளது.தொடரட்டும்,உங்கள் சேவை.நன்றி..நன்றி

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி Mohamed Feros

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி Thomas Ruban

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி Englishkaran

shirdi.saidasan@gmail.com said...

எனக்கு autocad தெரியாது

பாலா... said...

எளிமையாய் புரியும்படி இருக்கிறது. என் மகளுக்கு மிகவும் உதவும். நன்றி சூர்யா.

asfar said...

very good work for learning students, I think there is no methametical knowledge to catch autocad while your explanation...Greeting..

Anonymous said...

THANK YOU VERY MUCH

சூர்யா ௧ண்ணன் said...

பாலா! உங்கள் பதிவை ரொம்ப நாளா காணவில்லை! என்ன ஆயிற்று?

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. பாலா

தமிழ்நெஞ்சம் said...

super.

Mrs.Menagasathia said...

சகோதரரே உங்களுக்கு விருது குடுத்திருக்கேன் ஏத்துக்குங்க.http://sashiga.blogspot.com/2009/07/blog-post_19.html

sivakumar said...

nice...keep writing more....very useful for starters like me..

வடுவூர் குமார் said...

நிறைய சொல்லுங்க...பயனுள்ள விஷயங்கள்.

Wilson said...

I recently came accross your blog and have been reading along. I thought I would leave my first comment. I dont know what to say except that I have enjoyed reading. Nice blog. I will keep visiting this blog very often.Margarethttp://cardrawing.net

dualplanet said...

மிகவும் பயனுள்ள பதிவு திரு. சூர்யா கண்ணன் அவர்களே, Relative polar co-ordinate system-ல் கடைசி புள்ளியின் உடைய கோணத்தை குறிக்கவில்லை..... தவறிவிட்டீர்கள் என நினைக்கிறேன்..... சரிபார்க்கவும்..... உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.....

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)