Wednesday, 1 July 2009

CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1

எந்த ஒரு வரைபடத்தை எடுத்துக் கொண்டாலும் அது Line, Point மற்றும் Arc களினால் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம். எனவே, ஒரு வரைபடத்தை எளிதாக வரையறுக்க வேண்டுமெனில் 'Lines & Arcs' என வைத்துக் கொள்ளலாம். இவற்றை மாறுபட்ட இடங்களில், மாறுபட்ட கோணங்களில் அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான வரைபடத்தை உருவாக்க, எனக்குத் தெரிந்த முறையில் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு சிறு முயற்சிதான் இந்த பதிவு. (வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடரும்!)

ஒரு Line ஐ வரைய வேண்டுமெனில் நமக்கு அதன் துவக்கப் புள்ளியும், இறுதிப்புள்ளியும் தெரிந்திருக்க வேண்டும். (ஒரு Line இன் Start point மற்றும் End Point தெரிந்தால், நமக்கு அதன் கோணமோ(Angle), அளவோ தெரிய வேண்டியதில்லை). இதனை Co-ordinates என வைத்துக் கொள்வோம். AutoCAD ஐ பொறுத்தமட்டில் ஒரு வரைபடத்தில் குறிப்பிட்ட object -இன் இருப்பிடம் x,y Co-ordinates இனால் நிர்ணயிக்கப்படுகிறது. இது AutoCAD-ல் World Co-ordinate System (WCS) என வரையறுக்கப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் CAD மிக எளிதாகிவிடும்.

முதல் இரு பதிவுகளில் CAD -இன் அடிப்படை பாடங்களை பார்க்கப்போவதால், சிறிது போரடித்தாலும், மனதில் பதிந்து கொள்ளுங்கள்.

AutoCAD-ல் குறிப்பிடும்படி மூன்று Co-ordinate System-கள் உள்ளன.

முதலாவது,

Absolute Co-ordinate system:- (Syntax: x,y)

இந்த முறை வரைபடத்தாளில் (Graph Sheet) x,y புள்ளிகளைக் குறித்துக்கொண்டு பின் அந்த புள்ளிகளை இணைக்கும் வகையில் கோடு வரைவது போல் ஆகும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள், இது 60 x 40 அளவு கொண்ட ஒரு செவ்வகமாகும்.


Absolute Co-ordinate system ஐ உபயோகித்து A,B,C மற்றும் D Co-ordinates ஐ தெரிந்து கொள்வது எப்படி? கீழேயுள்ள படத்தை கவனியுங்கள்.


இதில் A என்ற புள்ளி X அச்சில் 0 விலும் Y அச்சில் 0 விலும் உள்ளது, அதாவது A(0,0) [0,0 என்பது Origin], B என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளது, அதாவது B(60,0). C என்ற புள்ளி X அச்சில் 60 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் C(60,40). D என்ற புள்ளி X அச்சில் 0 க்கு நேராகவும், Y அச்சில் 40 க்கு நேராகவும் உள்ளதால் D(0,40) ஆகும்.

அதாவது முதலில் சொன்ன 60 x 40 செவ்வகத்தை வரைய நமக்கு தேவைப்படும் புள்ளிகள்.

A(0,0)
B(60,0)
C(60,40)
D(0,40)

இப்பொழுது கீழே உள்ள படத்திற்கு நீங்களாகவே Co-ordinates (A,B,C,D,E,F,G & H) ஐ கண்டுபிடியுங்கள்.
இதன் விடையை பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள். உங்கள் விடை சரிதானா? என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.


வாசகர்களின் ஆர்வத்தைப் பொறுத்து, அடுத்தப் பதிவில் சந்திப்போம்.

AutoCAD சம்பந்தமான நண்பரின் வலைப்பதிவை காண http://cadlearn.blogspot.com

இந்த பதிவை அனுமதியின்றி மறுபதிப்பு செய்யவோ, பிரசுரிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

33 comments:

அன்வர் said...

தாய்மொழியில் கற்பதால் நன்றாக பயிலலாம் உங்கள் சேவை மிகவும் உபயோகமாக இருக்கும். தொடருங்கள் நண்பரே.அன்புடன் அன்வர்.

பாஸ்கர் said...

மிக நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

Mrs.Menagasathia said...

A(0,0)B(0,60)C(60,40)D(40,40)E(20,40)F(20,20)G(40,20)H(0,40)விடை சரியா சகோதரரே?

வடிவேலன் ஆர். said...

super matter pls continue

வெ.காளிமுத்து said...

//"CAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1"//Very useful way to learn AutoCad....The co-ordinate points areA(0,0)H(0,40)G(20,40)F(20,20)E(40,20)D(40,40)C(60,40)B(60,0)Thank you,,

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. வடிவேலன்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. பாஸ்கர்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. அன்வர்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திருமதி. மேனகா சத்யா.B,E,G ஆகிய புள்ளிகளை மறுபடியும் முயற்சித்துப் பாருங்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. வெ. காளிமுத்து! விடையை இறுதியாக சொல்கிறேன்.

Feros said...

thanks thala

JOE2005 said...

மிக்க மகிழ்ச்சி மற்ற பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

தமிழ்நெஞ்சம் said...

well start. great start.

தமிழ்நெஞ்சம் said...

Hi.. My answers are hereA(0,0)B(60,0)C(60,40)D(40,40)E(40,20)F(20,20)G(20,40)H(0,40)

Anonymous said...

மிக்க நன்றிதொடரட்டும்.

Anonymous said...

very useful subject. please continue your lessions.

romba super said...

answersA(0,0)B(0,60)C(60,40)D(40,40)E(20,40)F(20,20)G(40,20)H(0,40)Please continue i am eagerly expect like this Vazthukkal Jayakumar

வடுவூர் குமார் said...

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி JOE

Thomas Ruban said...

//தாய்மொழியில் கற்பதால் நன்றாக பயிலலாம் உங்கள் சேவை மிகவும் உபயோகமாக இருக்கும். தொடருங்கள் நண்பரே.//வழி மொழிகிறேன்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தமிழ் நெஞ்சம்! சரியான பதில் தலைவா!ஆதரவுக்கு நன்றி தல!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி வடுவூர் குமார்!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி romba super!

சூர்யா ௧ண்ணன் said...

ஆதரவுக்கு நன்றி! Thomas Ruban

STAR said...

thayavu chethu thotarungal

சூர்யா ௧ண்ணன் said...

சரியான விடை A(0,0)B(60,0)C(60,40)D(40,40)E(40,20)F(20,20)G(20,40)H(0,40)பதிலளித்த அனைவருக்கும் நன்றி! இது போன்ற வேறு படங்களை நீங்களாகவே வரைந்து அதன் Co-ordinates ஐ கண்டறியுங்கள்.ஆட்டோ கேட் பற்றிய அடுத்த பதிவில் இதை விட எளிமையான முறையை பார்க்கலாம். நன்றி!

இங்கிலீஷ்காரன் said...

Good Post Boss..I thought of posting the basics of Pro-E software. Soon I will do....Thanks For ur effort..

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி இங்கிலீஷ்காரன்! Pro-E பற்றி அவசியம் எழுதுங்கள்! அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்!

Sampath said...

nanru. kandippaga thodaravum

anbudan_arun said...

மிகவும் உபயோகமான பதிவு. பாராட்டத்தக்க முயற்சி. தொடர்ந்து செய்யவும்.

thagavalkaran said...

மிக நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.நான் வெகு நாட்களாக ஆட்டோ காட் தமிழில் கற்க ஆர்வமுடன் இருந்தேன் தங்கள் மூலம் அது சரிசெய்யப்படுகிறது நன்றிகள் பல

Kiyass said...

anpudan sooriya kannan, mika naatkalahave autocad inai tamil padikka aasaippaten aanal athatkana sariyana santharpam ippothuthan kidaiththirukkintrathu mihavum nantry thodaraddum unathu sevai

Kiyass said...

miha neenda naatkalahave tamilil autocad padikka vendum enra asai ippodhudan theeruhindradu thank u very much

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)