உங்கள் கணினி திரையில் தோன்றும் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் (Screenshot) எடுப்பது மிகவும் எளிது..
Print Scrn Key ஐ அழுத்தி பின் Paint போன்ற இமேஜ் எடிட்டரில் பேஸ்ட் செய்தால் போதும்.
ஆனால், விண்டோஸ் மீடியா பிளேயரில் (Windows Media Player) ஏதாவது வீடியோவை பிளே செய்து ஒரு குறிப்பிட்ட ஸ்டில் மட்டும் எடுக்க மேற்சொன்ன வழியில் முயற்சித்துப் பார்த்தால் படம் வரவேண்டிய இடத்தில் கருப்பு ஸ்கிரீன் மட்டுமே வரும்.
இதை எப்படி செய்ய முடியும்?
எளிதான வழி.
Capture - ஐ support செய்யும் பிளேயரை (VLC Player போன்றவை) உபயோகப்படுத்தலாம். 'Video > Capture to capture a video frame ' -ல் கிளிக் செய்தால் போதும்.
இல்லை அதுவெல்லாம் முடியாது.., விண்டோஸ் மீடியா பிளேயரில்தான் Screenshot எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தால் இதோ ஒரு வழி..,
Windows Media Player - > Tools -> Options -> Performance -> Advanced சென்று அதில் ‘Use Overlays‘ என்பதை 'Un check ' செய்து OK கொடுத்து விடுங்கள்.இப்பொழுது 'Print Scrn ' கீ முறையில் முயற்சித்துப் பாருங்கள்.
என்ன வெற்றி தானே?
5 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்www.ulavu.com(ஓட்டுபட்டை வசதயுடன்)உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....இவன்உலவு.காம்
நல்ல நல்ல தகவல்கள். நிறைய நிறைய நன்றி:)
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி பாலா
All your tips are very good. I spent hours to take WMP screen. Please continue providing your tips. Thank you so much.
ஆஹா இப்படி ஒரு வழி உள்ளதா? பலருக்கும் முடியவோ முடியாது என்றல்லவா கூறினேன். மாற்று மென்பொருட்களை பதிந்தே Capture செய்தேன். பாவித்து பார்ப்போம். ஒரு சிறு சந்தேகம். மீடியா பிளேயரினால் Capture செய்யப்படும் படம் தரம் வாய்ந்ததாக இருக்குமா?அன்புடன்கொல்வின்இலங்கை
Post a Comment