கண்ணுக்கு தெரியாத (Invisible Folder) ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.
2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.) 3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.
கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி!
ப்பூ இவ்வளவுதானா!!!
13 comments:
Its good ! & expecting more titbits
சார், எனக்கு ‘0160’ பிரஸ் பண்ணா ஃபோல்டர் பேரு 160ன்னு ஆயிடுது.இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறையல? என்னா செய்ய? பின் குறிப்பு: Alt key பிரஸ் பண்ணிதான் டைப் பண்ணேன்.
follow up.
Use Numeric Keypad for '0160' (simultanously pressing ALT key)
Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' (Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
சார், நான் லெப் டாப் தான் உபயோக்கிறேன். அதுல எப்படி நுமரிக் கீ போர்ட் யூஸ் பண்றது.
Start->Run-ல் osk.exe என டைப் செய்து என்டர் அடிக்கவும். இப்பொழுது On-Screen Keyboard உங்கள் திரையில் வரும். தேவையான Folder-ல் ரைட் கிளிக் செய்து 'Rename' தேர்வு செய்யவும். இப்பொழுது On-Screen Keyboard -ல் nlk (Number Lock) கீயை Off செய்யவும். பிறகு Alt கீயில் கிளிக் செய்து Numberic Pad-ல் '0160' கிளிக் செய்து மறுபடியும் Alt கீயை Off செய்து என்டர் கிளிக் செய்யவும். முயன்று பார்த்து பின்னூட்டம் இடவும்.
சார், உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. என்ன மாதிரி ஒரு தற்குறிக்கு எல்லாம் புரியரமாதிரி இவ்ளோ விளக்கமா நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷமாய் இருக்கு. உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இட் வொர்க்ட் சார். ரொம்ப நன்றி மீண்டும்.
"சார்" எல்லாம் வேண்டாமே, பெயர் சொல்லி அழையுங்கள்...மீண்டும் வருகை தாருங்கள். எனது அடுத்த பதிவையும் பாருங்கள்
விஜய்! நீங்கள் tamilish.com -ல் register செய்து உங்களுக்கு பிடித்த பதிவிற்கு உங்கள் வாக்கை (Vote) அளிக்கலாமே..My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி? பதிவை படித்தீர்களா?
Very Useful Tip.. Thanks a lot Surya.. -Ganesh
உங்கள் பதிவு எல்லாமே நன்றாக உள்ளது சூர்யா
Razik ahamed.
Post a Comment