Showing posts with label விண்டோஸ் மருந்துக் கடை. Show all posts
Showing posts with label விண்டோஸ் மருந்துக் கடை. Show all posts

Friday, 24 December 2010

Antivirus: ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!

எனது கணினியில் வழக்கமாக Kaspersky Internet Security, (அதுவும் முறையாக உரிமம் பெற்ற) நிறுவப்பட்டிருக்கும். இதன் காரணமாக பெரும்பாலான வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து தப்ப முடிந்தது. இதன் காரணமாகவே எனது வாடிக்கையாளர்களுக்கும் இந்த Antivirus தொகுப்பையே பயன்படுத்தும்படி சொல்லி வந்தேன். 

சென்ற வாரம் திங்களன்று, எனது கணினியில் Kaspersky 2010 உரிமத்தின் காலம் நிறைவடைந்து விட்டது. 15 நாட்களுக்கு முன்னரே தொடர்ந்து அறிவிப்பு வந்துக் கொண்டிருந்தாலும், கைவசமே புதிய Kaspersky 2011 உரிமத்துடன் இருந்தாலும் ஏதோ ஒரு கவனக் குறைவினால், அதனை புதுப்பிக்காமல் தவற விட்டுவிட்டேன்.


பிறகு எனது வன்தட்டில் F ட்ரைவை திறந்து பார்க்கையில், Recycler ஃபோல்டர் உருவாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


'ரைட்டு சைத்தான் சைக்கிள்ள வருது!' என யோசித்தபடி, அதன் விவரங்களை சேகரித்தபோது, மேலும் அதிர்ச்சிதான். W32.Lecna.H worm வகையை சேர்ந்த இந்த வைரஸ் விண்டோசில் உள்ள Autorun வசதியை பயன்படுத்தி அனைத்து ட்ரைவ்களிலும் Recycler என்ற அழிக்க முடியாத hidden folder ஐயும், AutoRun.inf ஐயும் நிரந்தரமாக உருவாக்கி, தனது தாக்குதல்களை துவங்குகிறது.

மேலும் இது ஒவ்வொருமுறை கணினியை துவக்கும் பொழுதும் Windows Registry ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இருப்பதால், பாதிக்கப்பட்ட எந்த ஒரு ட்ரைவையும் Format செய்தாலும் பயனில்லை, இதன் பாதிப்பு தொடரும் என்பது கொடுமையான விஷயம்.

இதன் தாக்குதலுக்கு உள்ளான கணினியின் இயல்பான வேகம் குறைந்திருப்பதை கண்டறிய முடியும். ஒரு சில கணினியில் Folder option வசதியும் முடுக்கப்படுவதால் Hidden Folder களை காணமுடியாத நிலையம் ஏற்படுகிறது.  மிக முக்கியமாக இணையத்தில் உலாவும்போழுது, தானாகவே கெடுதல் விளைவிக்கும் வலைப்பக்கங்களுக்கு சென்று, மால்வேர்களை தரவிறக்கிக் கொள்கிறது. இது மெதுவாக உங்கள் தனிப்பட்ட விவரங்கள் (மின்னஞ்சல்  கணக்கின் கடவு சொல் மற்றும் விவரங்கள், வங்கி தொடர்பான விவரங்கள்)   அனைத்தையும் களவாடிய பிறகு ஒரு நல்ல நாளில் உங்கள் இணைய கணக்குகள் அனைத்தும் முடக்கப்படும் அபாயம் குறித்து பலரும் கவனத்தில் கொள்வதில்லை.

எனக்குத்தான் மோசமான முன் அனுபவம் இருப்பதால், உடனடியாக உஷாராகி, Kaspersky 2011 ஐ நிறுவத் தொடங்கினேன். ஏற்கனவே காலாவதியான Kaspersky 2010 ஐ நீக்கிவிடவா? என்று கேட்ட பொழுது, சரியென்று பொத்தானை சொடுக்கியது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிறகுதான் புரிந்தது. பேசாமல் 2011 இன்   License Key ஐ பயன்படுத்தி Kaspersky 2010 ஐ புதுப்பிக்காமல் போனது என்னுடைய முட்டாள்தனம்.

ரீ ஸ்டார்ட் ஆகி மறுபடி விண்டோஸ் துவங்கிய உடன், டாஸ்க்பாரில் தொடர்ந்து, Regsvr.exe தாக்கப்பட்ட அறிவிப்பு அலாரம் அடித்தது. (அப்ப சைக்கிள்ள வந்தது சைத்தான் தான்) NewFolder.exe என்றும் அழைக்கப்படும் இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது, டாஸ்க் மேனேஜர், registry முடக்கப்படும்,    கணினியின் வேகம் முற்றிலுமாக குறைந்து விடும்.

ஒவ்வொரு ஃபோல்டராக திறந்து பார்க்க, ஒவ்வொன்றினுள்ளும், அதே பெயரில் மற்றொரு ஃபோல்டர் உருவில் சைத்தான் அமர்ந்திருக்க..  Kaspersky 2011 ஐயும் நிறுவமுடியாமல் போக.. டென்ஷனாகி.. நேரடியாக UPS ஐ அனைத்து விட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

இந்த பிரச்சனையை Format செய்யாமல் தீர்வு காணவேண்டுமென்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டேன்..

நான் கண்ட தீர்வு அடுத்த இடுகையில்...

. 

Wednesday, 10 November 2010

உபயோகமான Desktop Icons - ON/OFF

ஒரு சிலரது கணினின் டெஸ்க்டாப்பில் கோப்புகள், ஷார்ட்கட்கள், ஃபோல்டர்கள் என நிரம்பி வழிவதை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கே என்ன என்ன ஐகான்கள் தங்கள் டெஸ்க்டாப்பில் உள்ளன என்பது நினைவில் வைத்திருப்பது கடினம்தான். 


இவ்வாறு தங்கள் டெஸ்க்டாப்பை வைத்திருப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான, அழகான ஒரு வால் பேப்பரை திரையில் அமைக்கும் பொழுது, இந்த ஐகான்களை OFF செய்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால், வழக்கமாக நாம் செய்வது, டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்து, Arrange Icons by --> Show Desktop Icons க்ளிக் செய்வதன் மூலமாக, ON/OFF செய்ய முடியும்.


ஆனால், இந்த பணியை எளிதாக்க, Hide Desktop Icons எனும் மிகச் சிறிய இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு இதற்கு ஒரு ஷார்ட்கட் ஐ உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்து விடாதீர்கள்.(ஏனென்றால் டெஸ்க்டாப் ஐகான்களை OFF செய்த பிறகு, மறுபடியும் ON செய்வதில் சிரமம் ஏற்படலாம்) மாறாக Start Menu / Quick Launch பாரில் இணைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு முறை க்ளிக் செய்ய, Desktop Icon கள் OFF ஆகும், மறுமுறை க்ளிக் செய்ய ON ஆகும். 






.

Sunday, 7 November 2010

Windows Vista / 7 ல் - 50 பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே இலவச கருவி!

விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளங்களை பயன்படுத்திவரும் பயனாளர்கள். ஒரு சில சமயங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் பலவகையானவை. உதாரணமாக CD/DVD drive கள்  My Computer -இல் காணாமல் போய்விடுவது, டெஸ்க்டாப்பிலிருந்து  Recycle bin ஐ காணாமல் போவது.  Task Manager மற்றும் Registry Editor திறக்காமல் போவது. Explorer.exe திறக்காமல் போவது. Thumbnail வேலை செய்யாமல் போவது. Internet Options காணாமல் போவது. Font install செய்யமுடியாமல் போவது. Aero peek வேலை செய்யாமல் போவது. 

இது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய இலவச மென்பொருள் கருவி  FixWin உங்களுக்காக..,(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு முதல் திரையில் தோன்றும் வசதிகளில் System File Checker Utility  ஐ முதலில் ரன் செய்யுங்கள். 
அடுத்ததாக create a System Restore Point   ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது. நாம் மேற்கொள்ளப் போகும் செயலில் ஏதேனும் தவறு நேர்ந்தால், இந்த System Restore Point ஐக் கொண்டு பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டுவர இயலும். 

அடுத்து ஒவ்வொரு வசதியாக தேர்வு செய்து Fix பொத்தானை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் Fix செய்தபிறகு கண்டிப்பாக உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்ய மறவாதீர்கள். 

.

Wednesday, 20 October 2010

Excel / Word 2007/2010 பயனுள்ள டிப்ஸ்

Excel 2003 பயன்பாட்டில் சரளமாக பணிபுரிந்து விட்டு, கடந்த சில காலங்களாக   Excel 2007 உபயோகிப்பவர்கள், சில சமயங்களில், அவசரமாக ஒரு சில கட்டளைகளை ரிப்பன் மெனுவில் வலைபோட்டு தேடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை காரணமாக எக்சலில் நல்ல முன் அனுபவம் இருந்தும், இந்த ரிப்பன் மெனுவினால் பெரும் கால தாமதத்திற்கு உள்ளாகிறார்கள். 

இதற்கான தீர்வாக ஏற்கனவே நான் எழுதியிருந்த இரண்டு இடுகைகளை அடுத்துள்ள சுட்டிகளில் காணலாம்.

Microsoft Office 2007 -ல் Office 2003 -இன் மெனு வடிவை அமைக்க

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய

இது மூன்றாவது வழிமுறை. Excel 2003 பயன்பாட்டில் உள்ள ஒவ்வொரு கட்டளைகளும், Excel 2007 பயன்பாட்டில் எந்த ரிப்பன் மெனுவில் உள்ளது என்பதை விளக்கும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ”Command Workbook" என்ற எக்சல் வொர்க்‌ஷீட்டில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.




மைக்ரோசாப்ட் வேர்டு 2007:-

நாம் Microsoft Word 2007 உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது டெக்ஸ்டை தேர்வு செய்ய ஹைலைட்  செய்தால் தானாகவே Mini Formatting Toolbar தோன்றிவிடும். 

இந்த வசதி சில சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், பல சமயங்களில் எரிச்சலூட்டுவதாக அமைந்து விடுகிறது. இந்த Mini Formatting Toolbar நிரந்தரமாக நீக்க முடியாதபடி உருவாக்கப் பட்டிருந்தாலும், நாம் டெக்ஸ்டை ஹைலைட் செய்யும் பொழுது இது தானாகவே தோன்றுவதை தடுக்க ஒரு எளிய வழி.

Word 2007 ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Office Button ஐ கிளிக் செய்து Word Options க்ளிக் செய்யுங்கள்.





இனி திறக்கும் வசனப் பெட்டியில் Popular பொத்தானை சொடுக்குங்கள். வலது புற பேனில் “Show Mini Toolbar on selection”  என்பதை Uncheck செய்து விடுங்கள்.



இனி இந்த மெனு தானாகவே தோன்றாது. இந்த மெனு தேவையெனில், மாற்றத்திற்கு தேவையான டெக்ஸ்டை தேர்வு செய்து வலது க்ளிக் செய்தால் போதுமானது.


.

Wednesday, 15 September 2010

விண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ...

நமது விண்டோஸ் இயங்குதளங்களில், தேவையான ஃபோல்டர்களை திறந்து அதிலுள்ள கோப்புகளின் விவரங்களை Details view வில் பார்க்கும் பொழுது, அல்லது Search சென்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட கோப்புகளை தேடும் பொழுது, விண்டோஸ் explorer திரையில் Name, In Folder, Size, Type மற்றும் Date modified போன்ற Column களில் தேவையான விவரங்களை காண முடியும். 
 
 
ஆனால் இந்த column களின் அளவு மாறுபடுவதால் அந்த குறிப்பிட்ட column த்தில் உள்ள விவரங்கள் அடுத்துள்ள column த்தால் சிறிதாக்கப் பட்டுள்ளதை அறியலாம். இதனால் கோப்புகளின் பெயர் அல்லது ஃபோல்டரின் விவரங்களை முழுமையாக பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது. வழக்கமாக நாம் இது போன்ற column களின் இடையே உள்ள பிரிவில் க்ளிக் செய்து டிராக் செய்து விவரங்கள் முழுமையாக தெரியும்படி பெரிதாக்கி கொள்கிறோம். 
 
 
இப்படி ஒவ்வொரு column த்தையும் அளவு மாற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு அருமையான ஷார்ட் கட் உள்ளது. உங்கள் கீ போர்டில் Ctrl மற்றும் Number pad உள்ள + பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும். 
 
 
இப்பொழுது  column கள் ஒவ்வொன்றும் அதிலுள்ள விரங்கள் முழுமையாக தெரியும்படி தானாகவே அளவை மாற்றிக்கொள்ளும். 
 
இதற்கெல்லாம் ஒரு இடுகையா? என்று கேட்பவர்கள், ஓட்டு போட்டு விட்டு பின்னூட்டத்தில் கேட்கலாம்.  
 
 .   

Friday, 27 August 2010

விண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நுழைய

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயங்குதளங்களில் விண்டோஸ் XP யில் உள்ளது போல Administrator கணக்கு இல்லையே என்று பலரும் யோசித்திருக்கக் கூடும். இந்த இயங்குதளங்களிலும் Administrator கணக்கு வழக்கம் போல உண்டு. ஆனால் மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை உங்கள் கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, இந்த Administrator கணக்கில் நுழைந்து சரி செய்து விடலாம் என்று சிந்திக்கும் பொழுது, இந்த கணக்கை எப்படி enable செய்வது என்று பார்க்கலாம். 

வழக்கம் போல உங்கள் விண்டோஸ் பயனர் கணக்கில் நுழைந்துக் கொள்ளுங்கள். search box இல் CMD என டைப் செய்து மேலே தோன்றும் Command Prompt லிங்கில் வலது க்ளிக் செய்து Run as Administrator க்ளிக் செய்து Command prompt சென்று விடுங்கள். 


இங்கு net user administrator /active:yes என டைப் செய்து என்டர் கொடுக்கவும். 

டைப் செய்யும் பொழுது சரியான space ஆகியவற்றை கவனித்து மேலே தரப்பட்டுள்ளது போல உள்ளீடு செய்யவும். The command completed successfully என்ற செய்தி வருவதை கவனிக்கவும். இப்பொழுது ஒருமுறை Logout செய்து பின்னர் வரும்பொழுது இந்த Administrator கணக்கும் திரையில் தோன்றுவதை கவனிக்கலாம். பெரும்பாலும் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் ஏதும் இருப்பதில்லை.
இந்த வசதியை இப்படியே தொடர்வதாக இருந்தால் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் இட்டு வைப்பது நல்லது. அல்லது உங்கள் வேலை முடிந்த பிறகு, இந்த கணக்கை மறுபடி பழையபடி மறைத்து வைக்க மேலே சொன்ன வழிமுறையின்படி சென்று net user administrator /active:no எனும் கட்டளையை கொடுத்துவிடலாம். 

இதே net user கட்டளையை பயன்படுத்தி விண்டோஸ் XP யில் மற்றொரு admin rights உள்ள பயனர் கணக்கில் நுழைந்து, DOS prompt  சென்று net user administrator * என்ற கட்டளையை உள்ளீடு செய்வதன் மூலமாக Administrator கணக்கின் கடவுசொல்லை மாற்றிவிடலாம். (பழைய கடவுச்சொல் நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை) 
.     

Monday, 21 June 2010

விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்

விண்டோஸ் XP இயங்குதளத்தில் பல தலைவலிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில வகைகளுக்கு மட்டுமான இலவச மருந்துகள் கிடைக்கும்  மருந்துக் கடையின் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வெவ்வேறு விதமான  தலைவலிகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

1. File Folder Association:- 
உங்கள் வன்தட்டில் உள்ள எந்த ஃபோல்டரையும் திறக்க இயலாது. Open with என்று கேட்கும். 

2. Gif file Association:-
Gif - Extension கொண்டுள்ள கோப்புகளை திறக்க இயலாது. 

3. Drive Association:- 
உங்கள் வன்தட்டில் உள்ள C,D,E போன்ற ட்ரைவ்களை திறக்க இயலாது. 
4. EXE file Association:-
பெரும்பாலான EXE கோப்புகளை திறக்க முடியாமல் போவது. 


5. LNK file Association:-
Application shortcut கள் .lnk Extension கொண்டுள்ளதால், அப்ளிகேஷன் ஷார்ட்கட் களை திறக்க முடியாமல் போவது.


6. Jpeg file Association:-
நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள், மற்றும் கணினியில் உள்ள jpeg கோப்புகளை திறக்க இயலாது. 
7. TXT file Association :-
Text கோப்புகள் எதுவும் திறக்க இயலாது. 

8. ZIP Folder Association:-
சொல்ல வேண்டுமா? 

விண்டோஸ் இயங்குதளத்தில் வருகின்ற பல வியாதிகளில் மேலே சொல்லப்பட்டவை ஒரு பகுதி மட்டுமே. மொத்த வியாதியும் ஒன்றாக வந்தால்..

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. 
ட்ரைவை திறக்க முடியாது, 
ஃபோல்டரை  திறக்க முடியாது 
கோப்புகளை திறக்க முடியாது.. 
படங்களையும் பார்க்க முடியாது..

விவேக் காமெடி தான் நினைவிற்கு வருகிறது.. 
"சாய்ங்காலம் 6 மணிக்கு மேல கண்ணு ரெண்டும் அவிஞ்சு போச்சு,
ஒரு காது தீஞ்சு போச்சு
சீட்டு மூலத்துல தேஞ்சு போச்சு,
நெஞ்சு TB-ல காய்ஞ்சு போச்சு
கால்'ல ஆணி பாய்ஞ்சு போச்சு"

இவையனைத்திற்கும் ஒரே தீர்வு.. உபுண்டு இயங்குதளத்திற்கு  நீங்கள் மாறுவதுதான்.. 

அதெல்லாம் முடியாது.. இருப்பதையே டிங்கரிங் வேலை பார்ப்போம்.. என்ற முடிவிற்கு வந்தவர்கள், மருந்து கடைக்கு போங்க.. 




.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)