Saturday, 27 February 2010

நெருப்புநரிக்கான தேடுபொறி நீட்சி!

.

நாம் கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தும் பொழுது, அட்ரஸ்பாரில் தட்டச்சு செய்வதை இணையத்தில் தேடித்தரும் பணியையும் செய்கிறது. கூகிள் க்ரோம் உலாவியின் சிறப்பம்சமே அது வெறும் இணைய உலாவியாக மட்டுமே அல்லாது ஒரு தேடுபொறியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளதுதான். 


நெருப்புநரி உலாவியை தொடர்ந்து உபயோகப்படுத்தி வருபவர்களுக்கு  கூகிள் க்ரோமில் உள்ளது போன்ற தேடுபொறி வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என யோசிப்பவர்களுக்காக இதோ நெருப்புநரி உலாவிக்கான Inquisitor 1.2 தேடுபொறி நீட்சி!


இந்த நீட்சியை உங்கள் நெருப்புநரி உலாவியில் நிறுவியபிறகு, அட்ரஸ் பாரில் உங்களுக்கு தேவையான விவரத்தை தட்டச்சு செய்ய துவங்குகையில், கூகிள் மற்றும் யாஹூ தேடுதல் முடிவுகள் பட்டியலிடப்படுகிறது. 


.

Wednesday, 24 February 2010

"This Device can perform faster" அறிவிப்பை நீக்க

.
வழக்கமாக நமது கணினிகளில் பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை கனெக்ட் செய்யும் பொழுது, டாஸ்க் பாரில் "This Device can perform faster" என்ற பலூன் அறிவிப்பு வருவதை கவனிக்கலாம். 


இந்த அறிவிப்பு நாம் ஒவ்வொருமுறையும் பார்க்க வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பலூன் அறிவிப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம். 

விண்டோஸ் எக்ஸ்பியில், My Computer ஐ வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இங்கு Hardware டேபில் உள்ள Device Manager பொத்தானை அழுத்தி Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள பட்டியலில் இறுதியாக உள்ள  Universal Serial Bus Controllers என்பதற்கு நேராக உள்ள + குறியை க்ளிக் செய்து, பிறகு USB Host Controller -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லவும். 

  
இங்கு Advanced டேபில் "Don't tell me about USB errors" என்பதை check செய்து விடுங்கள் அவ்வளவுதான். 

விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 -இல், இந்த பலூன் அறிவிப்பு தோன்றும் பொழுது அதன் மீது க்ளிக் செய்தால், This Device Can Perform Faster  என்ற விண்டோ திறக்கும். இதில் கீழே உள்ள "Tell me if my device can perform faster" என்பதை Uncheck செய்து விடுங்கள். 

 

.

Monday, 22 February 2010

வீடியோ DVDகளை AutoPlay செய்ய

.
சில சமயங்களில் நாம் வீடியோ டிவிடிகளை நமது கணினியின் DVD Drive இல் இட்டபிறகு அதுவாகவே ப்ளேயரை திறக்காமல் இருந்து விடுகிறது. My Computer அல்லது  Computer ஐ  திறந்து பார்க்கையில் VIDEO_TS மற்றும்  AUDIO_TS ஆகிய   கோப்புறைகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் ப்ளேயரை திறந்து பிறகு அந்த குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இது போன்ற வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?
My Computer ஐ திறந்து கொள்ளுங்கள். 

உங்களது DVD Drive ஐ வலது க்ளிக் செய்து Properties சென்று கொள்ளுங்கள். 

அங்கு AutoPlay டேபை க்ளிக் செய்யுங்கள்.

Dropdown மெனுவில் DVD Movie என்பதை தேர்வு செய்யுங்கள்.

Select an action to perform என்பதற்கு நேராக உள்ள Radio button ஐ க்ளிக் செய்யுங்கள்.

Play DVD movie using Windows Media Player என்பதை தேர்வு செய்து
OK button ஐ க்ளிக் செய்து விடுங்கள்.


அவ்வளவுதான்.


.

விண்டோஸ் எக்ஸ்பி - பூட் ஆகாத கணினியை சரி செய்ய..

.
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளது போன்ற பிழைச்செய்தி  கருப்புத்  திரையில் வந்திருக்கலாம்.
Windows could not start because the following file missing 
or corrupt: 
\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.
Select 'r' at the First screen to start repair.

அல்லது


என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode  சென்றாலும் இதே நிலைதான்.  

இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். 

முதலில்   வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM). 
இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும். 


ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள். 


இந்த திரையில் 'R' கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும். 


மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,

C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM
COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM  C:\WINDOWS\SYSTEM32\CONFIG

(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் 'C:' என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE  C:\WINDOWS\SYSTEM32\CONFIG

பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும். 
.

Thursday, 18 February 2010

நெருப்பு நரி உலாவியில் வேகமாக உலாவ - பாகம் - 2

.
முதல் பாகத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்து எனது பதிவை படித்துவிட்டு வரவும்.



நெருப்புநரி உலாவியில் about:config என்ற பயன்பாட்டை எப்படி உபயோகப்படுத்துவது என்பது சிலருக்கு தெரிந்திருக்கும். அறியாதவர்கள் மேலே கொடுத்துள்ள பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

நெருப்புநரி உலாவியில் அதனுடைய அனைத்து Configuration கள் அனைத்தும் இந்த About:config கட்டளையில் அடங்கிவிடும். இதிலுள்ள ஒரு சில வடிவமைப்புகளை மாற்றுவதன் மூலமாக நெருப்புநரி  உலாவியில் இன்னமும் வேகமாக உலாவ என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 

நெருப்புநரி உலாவியை திறந்து கொண்டு அட்ரஸ் பாரில் கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பின் மதிப்பையும் Filter box இல் டைப் செய்து என்டர் கொடுத்து,  ஒவ்வொன்றாக மாற்றிய பின் உலாவியை மூடி பின்னர் திறந்து முன்பை விட வேகமாக உலாவலாம்.




மாற்ற வேண்டிய வடிவம்                  தற்போதைய மதிப்பு                மாற்றவேண்டிய மதிப்பு
network.http.pipelining                                          False                                                True
network.http.proxy.pipelining                                 False                                                True
network.http.pipelining.maxrequests                           4                                         4- லிருந்து 8 ற்குள் 
network.http.max-connections                                   30                                                  96
network.http.max-connections-per-server                   15                                                  32

அவ்வளவுதான்!..




கொசுறு :- 
 உங்கள் நெருப்புநரி உலாவியின் அட்ரஸ் பாரில் ஏற்கனவே நீங்கள் சென்று வந்த வலைப்பக்கத்தின் முகவரியை டைப் செய்ய துவங்குகையில், அதுவாகவே மீதமுள்ள முகவரியை Autofill செய்ய கீழே தரப்பட்டுள்ள வடிவமைப்பின் மதிப்பை மாற்றுங்கள். 






மாற்ற வேண்டிய வடிவம்:  browser.urlbar.autofill
தற்போதைய மதிப்பு : False
மாற்றவேண்டிய மதிப்பு : True


. 

Wednesday, 17 February 2010

அடடா!.. வடை போச்சே!.. - ஜிமெயில் ட்ரிக்ஸ்

.
ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை தனது பணி நிமித்தமாக அத்தியாவசியமாக பயன் படுத்தி வரும் நண்பர் ஒருவர் இன்று காலை தொலைபேசியில் அழைத்து மிகவும் அவசரமாய், அவசியமாய் ஓரு உதவி கேட்டிருந்தார்.
.
அந்த நண்பர் வழக்கமாக காலையில் அலுவலகத்திற்கு வந்து கணினியில் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் முதலில் இன்பாக்ஸ் இல் மின்னஞ்சல்களை திறக்காமலேயே, தேவையற்ற மின்னஞ்சல்களை வரிசையாக தேர்வு செய்து டெலிட் செய்துவிடுவது வழக்கம். இன்றும் வழக்கம் போல அவருக்கு தேவையற்ற நியூஸ் லெட்டர் போன்ற மின்னஞ்சல்களை தேர்வு செய்து டெலிட் செய்யும் பொழுது, தவறுதலாக மிக முக்கியமான மேலதிகாரியிடமிருந்து வந்திருந்த மின்னஞ்சலையும் சேர்த்து டெலிட் செய்து விட்டார். 

அதற்கு முன்பாக அவரது மேலதிகாரி தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு மின்னஞ்சலை படித்தீர்களா? பதில் வரலையே,  என கேட்டிருந்த போது, மின்னஞ்சலை படித்து விட்டேன்.. இன்னும் சிறிது நேரத்தில் பதில் அனுப்புகிறேன், என்று வேறு அளந்து விட்டார். 

இப்பொழுது மின்னஞ்சலை டெலிட் செய்துவிட்ட நிலையில் 'அடடா!..  வடை போச்சே!.. ' என தலையில் கை வைத்தபடி என்னை தொடர்பு கொண்டார். 

'இன்பாக்ஸ் ஃபோல்டரிலிருந்து டெலிட் செய்திருந்தால் அந்த மெயில் ட்ராஷ் ஃபோல்டரில் இருக்கும்.. போய் பாருங்கள்' என்றேன்.

'ட்ராஷ் ஃபோல்டர் ஜிமெயிலில் எங்கேயும் காணோமே! .. இப்ப என்ன செய்றது' 

அவருக்கு ஏற்பட்டது போல உங்களுக்கும் நேர்ந்தால்?..

உங்கள் ஜிமெயில் பயனர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு ஜிமெயில் திரையின் வலது மேல் மூலையில் உள்ள Settings லிங்கை சொடுக்குங்கள்.
இனி வரும் திரையில் Labels லிங்கை க்ளிக் செய்யுங்கள். இங்கு பட்டியலிடப் பட்டிருக்கும் Inbox, Buzz, Draft போன்ற ஃபோல்டருக்கு கீழே உள்ள Trash  ஃபோல்டருக்கு நேராக உள்ள Show என்ற லிங்கை ஒருமுறை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

 
அவ்வளவுதான்! .. இனி ட்ராஷ் ஃபோல்டரும் உங்கள் ஜிமெயில் திரையில் இடது புற பேனில் தோன்றிவிடும். அங்கு சென்று டெலிட் செய்த மின்னஞ்சல்களை பார்த்துக் கொள்வதோடு, அதனை தேர்வு செய்து Move to பொத்தானை க்ளிக் செய்து மீண்டும் Inbox ஃபோல்டருக்கு  மாற்றிக் கொள்ளலாம். 


. 

Tuesday, 16 February 2010

நெருப்புநரியில் படங்களை உண்மையான அளவில் பார்க்க

.
இணையத்தில் நாம் வலைப்பக்கங்களில் பார்க்கும் ஒவ்வொரு JPG, PNG போன்ற வடிவிலான அனைத்து படங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட அளவிலானவை. (உதாரணமாக 640 x 480, 800 x 600, 1024 x 768) இது  போன்ற படங்களை நாம் உலாவியில் திறக்கும் பொழுது அந்த படங்கள்  அதனுடைய உண்மையான அளவில் காண்பிக்கப் படாமல், சிறிதாக்கப்பட்டு திரையில் காண்பிக்கப் படுகிறது.    

இது போன்ற படங்களை நெருப்பு நரி உலாவியில் அவற்றின் உண்மையான அளவில் தோன்றவைக்க ஒரு சிறிய  ட்ரிக்கை பார்க்கலாம். (நெருப்புநரி உலாவிக்கு மட்டும்)

கீழே உள்ள படத்தின் லிங்கில் மெளசின் ஸ்க்ரோல் பட்டனை அழுத்துங்கள். 


படத்தின் அளவை பார்த்துக்கொள்ளுங்கள்.

இனி புதிதாக ஒரு டேபை திறந்து கொண்டு (Ctrl + T) அங்கு Address Bar இல் about:config என டைப் செய்து என்டர் கொடுங்கள். 


இதனை தொடர்ந்து வரும் எச்சரிக்கை செய்தியில் I'll be careful, I promise! என்ற பொத்தானை சொடுக்குங்கள்.   

 இப்பொழுது வரும் Filter bar இல் browser.enable என டைப் செய்து என்டர் கொடுக்கவும். 


கீழே வரும் “browser.enable_automatic_image_resizing” என்பதை இரட்டை க்ளிக் செய்து value ஐ false ஆக மாற்றிக்கொண்டு, அந்த டேபை மூடி விடுங்கள். இப்பொழுது மேலே முன்பு க்ளிக் செய்த படத்தின் லிங்கை ஸ்க்ரோல் பட்டனில் மறுபடி க்ளிக் செய்து வித்தியாசத்தை உணருங்கள். இப்பொழுது அதே படம் அதனுடைய  உண்மையான அளவில் (1024 x 768) தோன்றுவதை கவனிக்கலாம். 

. 

Monday, 15 February 2010

தகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்லோடு செய்ய

.

உலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ இருக்கின்றன. இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்பட்டாலும், அவைகளை எல்லாம் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ள மனிதனின் வாழ்க்கை போதுமானதாக இருக்காது. மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ தகவல்கள் இந்த உலகில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மனிதனுடைய அறிவுத் தேடலுக்குத் தேவையான சில தகவல்களைத் தேடி அதைத் தெரிந்தவர்களிடம் செல்கிறோம். சில தகவல்களுக்காக நூலகங்களுக்குச் செல்கிறோம். சில தகவல்களுக்காக என்சைக்ளோபீடியாவைத் தேடுகிறோம். தற்போது இணையத்தின் வழியாகவும் தேடுகிறோம். இந்தத் தேடுதலுக்கு விடை கிடைத்து விடுகிறது. 

ஆனால் அரசுப் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பினால் மட்டும் நமக்கு எந்தத் தகவல்களுமே கிடைப்பதில்லை. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவன் விரும்பும் தகவல் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்த போது அதற்கு அரசின் சில சட்டதிட்டங்கள் இடையூறாக இருந்தது. இது மாற்றப்பட வேண்டும். அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005.

இந்த சட்டம் குறித்த பயனுள்ள தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.


.

Wednesday, 10 February 2010

கூகிள் தமிழ் உள்ளீடு (Google IME)

  .




ழக்கமாக நாம் வேர்டு, பவர்பாயின்ட் போன்றவற்றில் தமிழில் தட்டச்சு செய்ய குறள், எ-கலப்பை, அழகி, NHM போன்ற கருவிகளை பயன்படுத்தி வருகிறோம். சமீபத்தில் கூகிள் நிறுவனம்  Google IME (Input Method Editor) எனும் கருவியை இலவசமாக வழங்கி வருகிறது.  (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). இந்த கருவியை உபயோகித்து தமிழ் மட்டுமின்றி Arabic, Bengali, Farsi (Persian), Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Punjabi, Tamil, Telugu and Urdu    ஆகிய மொழிகளில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் (Transliteration) முறைப்படி யுனிகோட் வகையில் இணைய இணைப்பு இல்லாமலேயே  தட்டச்சு செய்யலாம்.
இந்த கருவி மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பி/ விஸ்டா/ விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் அனைத்துச் செயலிகளிலும் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யப் பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் ஆபீஸ், ஸ்டார் ஆபீஸ்,  கூகிள் டாக்ஸ் & ஸ்பிரட்ஷீட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்புலோரர், பயர்பாக்ஸ், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்.

மேலும் யாகூ மெசெஞ்சர், கூகுள் டாக், வின்டோஸ் லைவ் மெசஞ்ஜர் மற்றும் AOL   இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர் ஆகிய செயலிகளின் வழியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். இப்பொழுது இத்தொகுப்பின் மூலம் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும், யுனிகோட் தமிழிலேயே அரட்டை அடிக்கவும் முடியும். மேலும் யுனிகோட் தமிழ்த் தகவல்களை இணையம் வழியாகத் தேடவும் முடியும். 

இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து வரும் பக்கத்தில் தமிழ் மொழியை தேர்வு செய்து டவுன்லோட் பொத்தானை சொடுக்கி googletamilinputsetup.exe என்ற கோப்பை தரவிறக்கம் செய்து கொண்டு அந்த கோப்பை ரன் செய்யுங்கள். 


பிறகு வரும் விசார்ட் ஐ தொடர்ந்து Google IME கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பிறகு கண்ட்ரோல் பேனலுக்குச் சென்று Regional and Language Options ->  Languages tab -> Text services and input languages (Details)  -> Settings Tab இல் Google Tamil input என்பதை தேர்வு செய்து Key Settings பொத்தானை சொடுக்குங்கள்.


இனி திறக்கும் Change Key Sequence எனும் வசனப் பெட்டியில் நீங்கள் விரும்பும் short cut கீயை உருவாக்கிக் கொள்ளுங்கள். 


பிறகு உங்களுக்கு தேவையான செயலியை திறந்து கொண்டு short cut கீயை அழுத்தினால் கூகிள் தமிழ் உள்ளீடு செயல் பட துவங்கிவிடும்.


இதில் கேரக்டர்  பிக்கர் வசதியும் தரப்பட்டுள்ளது. 


இதனை உபயோகித்து நாம் தட்டச்சு செய்கையில் கீழே தரப்பட்டுள்ளது போல சொல் தேர்வு வசதியும் உள்ளது.




.

Tuesday, 9 February 2010

ஒரு கணினியில் ஒரே சமயத்தில் பல மௌஸ்களை இயக்குவது இனி சாத்தியமே

.

ரு வகுப்பறையை எடுத்துக் கொள்வோம். இங்கு ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வினாடிவினா போட்டி ஒன்றை நடத்த வேண்டும். இங்கு பெரிய நெட் வொர்கிங் வசதியோ, அல்லது பல கணினிகளோ இல்லை. ஒரே ஒரு கணினி கூடுதலாக ஒரு ப்ரொஜெக்டர் (தேவைப்பட்டால்) மட்டுமே உள்ளது என வைத்துக் கொள்வோம். வினாடி வினா கேள்விகள் மற்றும் அதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் Powerpoint 2007-இல் உருவாக்கி விட்டார். இதனை மாணவர்கள் முன்னிலையில் ப்ரொஜெக்டர் மூலமாக அல்லது தனது கணினி திரையில் காண்பிக்கிறார். 

இதில் உள்ள கேள்விக்கான பதிலை வாய் மொழியாக கேட்கப்படும் பொழுது, முதலில் பதில் அளிக்கும் மாணவரோ அல்லது குறிப்பிட்ட வரிசையில் உள்ள மாணவர்கள் மட்டுமே பதில் அளிக்கக் கூடிய அல்லது பங்கு பெறக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதற்கு பதிலாக அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பங்கு பெற, பதில் அளிக்க மைக்ரோசாப்ட் நிறுவன உருவாக்கத்தில் ஒரு இலவச மென்பொருள் Mouse Mischief கருவி   பலருக்கு பயனளிக்கும் வகையில் வெளிவந்துள்ளது. (தரவிறக்கச்  சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

இந்த கருவி மைக்ரோசாப்ட் Power Point 2007 -ல் மட்டுமே தற்பொழுது இயங்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனை உபயோகிக்க தேவையான எண்ணிக்கையில் USB அல்லது wireless மௌஸ் (PS2 அல்ல) மற்றும் அவற்றை கணினியில் பொறுத்த தேவையான எண்ணிக்கையில் USB port அல்லது Hub மற்றும் இடவசதி தேவைப்படும்.









இதனை தேவைப்படும் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, PowerPoint 2007 ரிப்பன் மெனுவில் Mouse Mischief தோன்றியிருக்கும். இதில் சென்று தேவையான வசதிகளை பெறலாம். பயனாளிகள் கலந்து கொண்டு கேள்விக்கான பதிலை க்ளிக் செய்யும் வசதியுடன் பவர் பாயின்ட் ஸ்லைடுகள் உருவாக்கப்பட வேண்டும். இனி பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட வெவ்வேறு  விதமான  மௌஸ் பாயிண்டர்களை பயன்படுத்தி பதிலளிக்க இயலும். 

மேலும் Special teacher controls எனும் வசதியில் ஒவ்வொரு மாணவருக்கும் தேவையான வசதிகளை  உருவாக்கவும் முடக்கவும் இயலும். 









இந்த பயனுள்ள கருவியை பயன் படுத்தி மேலே குறிப்பிட்டது மட்டுமின்றி மென்மேலும் பல உபயோகங்களை பெறுவது பயனாளிகள் திறமையில் உள்ளது. 


.
 

Monday, 8 February 2010

கூகிள் க்ரோம் உலாவிக்கான Webpage Screenshot நீட்சி

.

கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்துபவர்கள் தாங்கள் விரும்பும் வலைப் பக்கங்களை Screenshot எடுத்து வைக்க தனியான மென்பொருள் அல்லாமல் கூகிள் க்ரோமில் பயன்படுத்தக் கூடிய Webpage Screenshot நீட்சி மிகவும் பயனுள்ளதாக அமைக்கப் பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை கூகிள் க்ரோமில் பதிந்து கொள்வது எளிதான காரியமாகும். 

 .
 இதனை பதிந்து கொண்ட பிறகு, கூகிள் க்ரோமில் உள்ள டூல் பாரில் ஒரு கேமரா படவுருவில் இந்த கருவி அமைந்திருக்கும். 


 தேவையான வலைப்பக்கத்தை Screenshot எடுக்க, அந்த குறிப்பிட்ட வலைப்பக்கத்தை திறந்து கொண்டு  இந்த படவுருவை சொடுக்கவும். இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில்,

 Visible screenshot பொத்தானை சொடுக்கினால் க்ரோம் உலாவியில் தற்பொழுது திரையில் தெரியும் வலைப்பக்க பகுதி ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு திரையில் சிறிய அளவில் காண்பிக்கும்.

திரையில் உள்ளது மட்டுமின்றி வலைப்பக்கம் முழுவதுமாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்க வேண்டுமெனில், All page screenshot என்ற பொத்தானை சொடுக்கவும். 


இங்கு Click here to open the image எனும் லிங்கை சொடுக்கினால், புதிய டேபில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்ட படம் திறக்கும். இந்த பக்கத்தில் மெளசின் வலது க்ளிக் செய்து Save Image as என்பதை context மெனுவில் சொடுக்கி உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.
மேலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் முன்னர் திரையின் அளவை நமது தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க Resize the window before the capture எனும் வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த நீட்சி Offline  லும் வேலை செய்யும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.
(இந்த நீட்சி கூகிள் க்ரோம் உலாவிக்கானது மட்டுமே என்பதால் கூகிள் க்ரோம் உலாவில் இருந்துதான் இதனை பதிந்து கொள்ள முடியும்.)


.




Thursday, 4 February 2010

பென் ட்ரைவில் மறைந்துபோன ஃபோல்டர்களை மீட்டெடுக்க

.

நாம் வழக்கமாக நமது பென்ட்ரைவில் அத்தியாவசியமான கோப்புகளையும் அவற்றை உள்ளடக்கிய கோப்புறைகளையும் (Folders) சேமித்து வைப்பது வழக்கம். மால்வேர் மற்றும் ஸ்பைவேர்கள் உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது பென் ட்ரைவை என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான கோப்புறைகள் மறைக்கப் பட்டுவிடலாம். அதாவது உங்கள் பென் ட்ரைவில் கோப்புறைகள் இருக்கும் ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. பென் ட்ரைவில் Usage space ஐ சோதித்தால் கோப்புறைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

ஒரு சில மால்வேர்களின் வேலையே பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூற்றை (attribute) மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூறு Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer -ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் (Greyed out) செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.

இந்த நிலையில் என்ன செய்யலாம்? 

முதலில்  உங்கள்  பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக I: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு i: என டைப் செய்து என்டர் கொடுங்கள். 


இனி வரும் I:> என்ற ப்ராம்ப்ட்டில் attrib -r -s -h *.* /s  /d என டைப் செய்து என்டர் கொடுங்கள். 



உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் I:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து விண்டோஸ் க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று பென் ட்ரைவை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம். 

இந்த பணியை செய்ய Files & Folders Reset Tool என்ற கருவி உள்ளது. ஆனால் ஒரு சில பென் ட்ரைவ்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. எதற்கும் முயற்சித்துப் பாருங்கள். 


.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)