Tuesday, 30 March 2010

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது. 

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல்  இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம். 

 My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு 
\Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள். 
அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும். 

   
கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது. 


Saturday, 27 March 2010

உபுண்டு லினக்ஸில் Tally 9 உபயோகிக்க

உபுண்டு லினக்ஸில் நாம் பல விண்டோஸ் பயன்பாடுகளை உபயோகிக்க முடிவதில்லை என்ற குறை நிறைய பேருக்கு உண்டு. உதாரணமாக அலுவலகங்களில் நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் பயன்பாடுகள், வேர்டு பிராசசர், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன் போன்றவைகள் உபுண்டு போன்ற இலவச லினக்ஸ் இயங்குதளங்களில் உள்ளன, ஆனால் டேலி போன்ற பயன்பாடுகள் லினக்ஸில் நிறுவ முடியாது என்பது பலபேருடைய கருத்தாக உள்ளது.

ஆனால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தக் கூடிய பல பயன்பாடுகளை உபுண்டு லினக்சில் நிறுவி பயன்படுத்த முடியும் என்பது இனிப்பான செய்தி. இதற்கு வைன் (Wine) என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இதனை உபயோகித்து Tally 9  ஐ உபுண்டு லினக்சில் நிறுவி பயன்படுத்தும் முறையை பார்க்கலாம். "Wine" தரவிறக்க மற்றும் நிறுவும் முறைகள் பற்றிய விளக்க வலைப்பக்கத்தின் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் கொடுத்துள்ள வழிமுறைப்படி உபுண்டுவில் வைனை  நிறுவிக் கொள்ளுங்கள். பிறகு Applications மெனுவில் Wine இல் Browse C:\ Drive என்பதை க்ளிக் செய்யுங்கள்.

 
பிறகு திறக்கும் Drive C:\ File Browser இல் Program Files கோப்புறைக்குள், Tally 9 கோப்புறையை காப்பி செய்து கொள்ளுங்கள்.


பிறகு, அந்த Tally 9 கோப்புறைக்குள் உள்ள Tally9.exe கோப்பை திறந்தால் போதுமானது. உங்கள் அபிமான டேலி இப்பொழுது உபுண்டுவில் வேலை செய்யும்.


உபுண்டுவில் டேலி 9


UBUNTU வின் பொருள் - Humanity to Others.

Wine for Ubuntu and Ubuntu derivatives

.

Friday, 19 March 2010

க்ளிக் கூகிள் வியூ - நீட்சி

நாம் நமக்கு தேவையான படங்களை இணையத்தில் தேட Google Image ஐ பெரும்பாலும் பயன் படுத்துகிறோம், கூகிள் இமேஜ் இல் இப்படியாக தேடப்படும் படங்கள் முதலில் அந்த படம் இடம்பெற்றிருக்கும் வலைப்பக்கமும் திறக்கப்பட்டு அதன் இடது மூலையில், நாம் தேர்வு செய்த படம் சிறிய Thumbnail ஆக தோன்றும், அருகில் See Full size image என்ற லிங்கும் தோன்றும், அதனை க்ளிக் செய்த பின்னர் தான் படம் உண்மையான அளவில் தனித்து காண்பிக்கப்படும்.

 
இப்படி சுற்றி வளைத்து போகாமல் படத்தை க்ளிக் செய்தவுடனே திரையில் உண்மையான அளவில் தோன்ற கூகிள் க்ரோமிற்கான ஒரு எளிய நீட்சி clickGOOGLEview
 


பதிவு திருடர்களின் கவனத்திற்கு .., 
ஒவ்வொரு பதிவு எழுதுவதற்கு முன்னரும், அதை குறித்த யோசனை, தகவல்கள் திரட்டுதல், தளங்களை கண்டறிதல், பயன்பாடுகளை தேடுதல், சோதித்துப் பார்த்தல் இவை அனைத்தும் போக நண்பர்களின் ஒரு சில சந்தேகங்களை போக்குதல் என பல வேலைகளை எனது மற்ற அலுவல் நேரங்களை மிச்சப் படுத்தி நான் செய்து வருகிறேன். 

ஆனால் ஒரு சில பதிவு திருடர்கள், நோகாமல் பதிவை திருடி தங்களின் வலைபக்கங்களில் இட்டுக் கொள்வது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கும் அவரது பெயரில் அனுப்பி வைத்து சம்பாதித்து கொள்கிறார். இதனால் எழுதுகிற ஆர்வமும் குறைந்து வருகிறது..

இதற்கு மேல் எனது பதிவுகளை திருட வேண்டாம் என கேட்டுக் கொள்வதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்?...  

.

Wednesday, 17 March 2010

Tally 4.5 அல்லது பழைய DOS விளையாட்டுகளை Windows XP/Vista வில் நிறுவ

.
என்னதான் விண்டோஸ் XP, Vista, 7 என புதிது புதிதாக இயங்குதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உபயோகத்தில் இருந்தாலும், DOS தான் நமக்கு புடிச்ச OS என MS-DOS ஐ விரும்புபவர்கள் ஏராளம். ஆனால் DOS இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்ட மென்பொருட்கள், விளையாட்டுகள்  மற்றும் கருவிகள் பெரும்பாலும் விண்டோஸ் XP /Vista வில் இயங்குவதில்லை. 

இது போன்ற பயன்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் கருவிகளை தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகின்ற Windows Xp, Vista  & Windows 7 ஆகிய இயங்குதளங்களில் எப்படி இயங்க வைக்கலாம்?  

சமீபத்தில் Tally 4.5 ஐ பழைய DOS இயங்குதள கணினியில் பயன்படுத்தி வரும் நண்பர் ஒருவர், Tally 4.5 ஐ Windows XP யில் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டிருந்தார். Tally 4.5 இல் உள்ள டேட்டாக்களை Tally 7.2 விற்கு மாற்ற கருவி இருப்பதை சுட்டி காட்டிய பிறகும் அவருக்கு அவருடைய டேட்டா ஏதாவது ஆகிவிடுமோ என்ற ஐயம் இருந்தது. அவருடைய இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம். 

இதற்காக D-Fend Reloaded 0.9.1 என்ற மென்பொருளை பயன்படுத்தப் போகிறோம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். 


   இந்த Wizard தொடருங்கள். 




 Accept all settings க்ளிக் செய்து கொள்ளுங்கள். Wizard முடிந்த பிறகு D-Fend Reloaded ஐ திறந்து கொள்ளுங்கள்.


இந்த விண்டோவில் ADD எனும் டூல்பார் பட்டனை க்ளிக் செய்து ADD DOSBOX profile மெனுவை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் திரையில்,

Profile பெயர் மற்றும் Program file லொகேஷனை browse செய்து கொடுங்கள். தேவைப்பட்டால் ஐகானை தேர்வு செய்து கொண்டு OK பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


இனி வலது புற பேனில் Tally 4.5 பட்டியலிடப் பட்டிருப்பதை பார்க்கலாம். இதற்கு மேல் Tally 4.5 ஐ இயக்க D-Fend Reloaded ஐ திறந்து கொண்டு Tally 4.5 ஐ க்ளிக் செய்தால் போதுமானது. 



இதோ Windows XP யில் Tally 4.5

 
இதே முறையில் மற்ற பழைய டாஸ் விளையாட்டுகளையும் பயன்படுத்த முடியும். ஆனால் இதனுடைய நிலைத்தன்மை எப்படி இருக்கும் என்பது தொடர்ந்து உபயோகித்து பார்த்தால் மட்டுமே அறிந்து கொள்ள இயலும்.

D-Fend Reloaded 0.9.1 installer


.i

Tuesday, 16 March 2010

எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணுங்க?

.
நாம் கணினியில் முக்கிய பணியில் இருக்கும்பொழுது, பல விண்டோக்களில் பல வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகள், வலைப்பக்கங்கள்  போன்றவற்றை திறந்து வைத்திருப்போம். 

திடீரென்று ஒரு அவசர அழைப்பு! உடனடியாக வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம். கணினியில் திறந்து வைத்துள்ள அனைத்து விண்டோக்களையும் உடனடியாக க்ளோஸ் செய்து விட்டு கிளம்ப வேண்டும். என்ன செய்யலாம்?

இதோ உங்களுக்காக Close All இலவச கருவி.. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதனை கணினியில் நிறுவவேண்டும் என்ற அவசியம் இல்லை. தரவிறக்கம் செய்த பின்னர் அந்த கோப்புறைக்குள் உள்ள CloseAll.exe என்ற கோப்பை மட்டும் வலது க்ளிக் செய்து Context மெனுவில் Send To -> Desktop (create shortcut) க்ளிக் செய்து கொள்ளுங்கள். 

 
  இனி தேவைப்பட்டால் Rename செய்து கொண்டு, டாஸ்க் பாரில் ட்ராக் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

அவ்வளவுதான்! இதை க்ளிக் செய்வதன் மூலமாக அனைத்து விண்டோக்களையும் ஒரே சொடுக்கில் க்ளோஸ் செய்து விடலாம். (சேமிக்காத கோப்புகளை மட்டும் சேமிப்பதற்கான வசனப் பெட்டி தோன்றும்) 



.இனி எல்லாத்தையும் ஒரே சொடுக்கில் க்ளோஸ் பண்ணுங்க.. (அதுக்கு முன்னால ஓட்டு போடுங்க.. )

.

Thursday, 11 March 2010

மைக்ரோசாப்ட் வேர்டில் Table - உதவி

.

1. ஒரு Word Document இன்  முதல் பக்கத்தில் ஒரு டேபிளை உருவாக்கி விட்டீர்கள், அந்த டேபிளுக்கு மேலே ஏதாவது டெக்ஸ்டை சேர்க்க வேண்டுமானால் [Ctrl] + [Home]  கீயை அழுத்தி கோப்பின் முகப்பிற்கு வந்து விடுங்கள். பிறகு, [Ctrl] + [Shift] + [Enter] கீகளை ஒருசேர அழுத்தி புதிய வேற்று வரியை உருவாக்கி, அங்கு தேவையான வரிகளை சேர்க்கலாம்.    

2. டேபிளில் Column அல்லது  Row வின் அளவை மெளசை உபயோகித்து மாற்றும்பொழுது, ஒவ்வொரு Column/Row என்ன அளவில் இருக்கிறது, எந்த அளவிற்கு மாற்றப் போகிறோம்? என்பதை அறிந்து கொள்ள Resize செய்யும்பொழுது Alt கீயை அழுத்திக்கொண்டால் Column/Row வின் அளவை தெரிந்து கொண்டு எளிதாக Resize செய்து கொள்ளலாம்.

3.  ஒரு டேபிளில் முதல் Row வில் ஒவ்வொரு Column த்திலும் Heading ஐ கொடுத்துள்ளீர்கள். இந்த heading ஒவ்வொரு பக்கத்திலும் தொடர்ந்து தானாகவே வரவைக்க, முதலில் டேபிளின் header உள்ள  முதல் Row வை தேர்வு செய்து, பிறகு மேலே உள்ள Table menu வில் க்ளிக் செய்து Heading Rows Repeat என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. இனி ஒவ்வொரு பக்கத்திலும் தொடரும் டேபிளில் தானாகவே heading வந்து விடும். (இது Print Layout view வில் மட்டுமே திரையில் தெரியும், மற்றபடி பிரிண்ட் செய்யும்பொழுது வந்துவிடும்)  
4. மெளசை உபயோகிக்காமல் டேபிளை உருவாக்க, 
   +----+----+----+ என டைப் செய்தால் ஒரு Row மற்றும் மூன்று Column களுடன் டேபிள் உருவாக்கப்படும். இதில் minus (-) குறி அந்த Column த்தில் உள்ள கேரக்டர் Spacing ஐ குறிக்கிறது. 

Word டேபிளில் கணக்குகளை போட முடியுமா? மற்றொரு பதிவில் பார்ப்போம்.

 
மேலே படத்தில் உள்ளது போல வேர்டில் தேவையான ஓரு பகுதியை மட்டும் தேர்வு செய்ய, Alt கீயை அழுத்திக்கொண்டு தேர்வு செய்தால் போதும்.
.

Monday, 8 March 2010

100 MB வரையிலான கோப்புகளை மின்னஞ்சல்களில் இணைக்க

.
வழக்கமாக நாம் மின்னஞ்சல்களில் ஏதாவது கோப்புகளை இணைக்க முற்படும்பொழுது, நமக்கு வரும் பெரிய பிரச்சனை என்னவென்றால், நமக்கு வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வசதிகளில் 5 முதல் 10 MB வரையிலான அளவுள்ள கோப்புகளை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் நாம் இணைக்க விரும்பும் கோப்பு 10 MB க்கு மேற்பட்டதாயிருந்தால் என்ன செய்யலாம். நீங்கள் Outlook உபயோகிப்பவராக இருந்தால் Drop.oi எனும் ஓர் இலவச  (100 MB க்கு மேல் என்றால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்) நீட்சி! (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 

இந்த நீட்சியை தரவிறக்கி பதியும் பொழுது Outlook ஐ திறக்க வேண்டாம். பதிந்து கொண்டபிறகு, Outlook ஐ திறந்தால் அதில் புதியதாக ஒரு டூல்பார் வந்திருப்பதை கவனிக்கலாம். 


இதனை உபயோகித்து 100 MB வரையிலான கோப்புகளை எளிதாக மின்னஞ்சலில் இணைக்க முடியும். 
 


.

Saturday, 6 March 2010

Microsoft Word -இல் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய கட்டளை!

.
கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் பயன்பாடு மைக்ரோசாப்ட் வேர்டு என்பதில் ஐயமில்லை. இதை உபயோகிக்கும் பலருக்கு எப்பொழுதாவது நிகழகூடிய ஒரு பிழை என்னவென்றால்  நாம் ஏற்கனவே சேமித்த கோப்பை திறக்கும் பொழுதோ அல்லது, புதிதாக ஒரு கோப்பை தட்டச்சு செய்ய துவங்கும் பொழுதோ, நமக்கு சம்பந்தமில்லாத சில கேரக்டர்கள் (¶) திரையில் ஆங்காங்கே வந்து பயமுறுத்துவதை பார்த்து என்ன செய்வது என்று அறியாமல் விழித்திருப்போம்.  

உதாரணமாக கீழே உள்ள பக்கம்

இப்படி இருக்க வேண்டிய ஒரு கோப்பு, 


இப்படி இருந்தால் என்ன செய்வது?

வேர்டில் இது போன்ற கேரக்டர்கள் குறிப்பது Formatting Markகளைத்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக,
¶- paragraph break ஐயும்  
 ...- Space 
line break
→ Tab
போன்றவற்றையும்  குறிக்கின்றன. 

இவை எதனால் வருகின்றன? 
நாம்  உபயோகிக்கும் Microsoft Word பயன்பாட்டில் Standard Tool bar -இல் Zoom இற்கு மிக அடுத்து இருக்கும் Show/Hide ¶ என்ற பொத்தானை தவறுதலாக நாம் மெளசில் க்ளிக் செய்து விடுவதுதான் காரணம். 


எனவே இது போன்ற நிகழ்வு உங்கள் கணினியில் ஏற்பட்டால், மறுபடியும் அதே பொத்தானை க்ளிக் செய்தால் போதுமானது.

.

Friday, 5 March 2010

ZoomZoom - கூகிள் க்ரோம் உலாவிக்கான Image Zoom நீட்சி

.
நாம் Google Images, Flickr, PhotoBucket போன்ற படங்களுக்கான வலைத்தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவற்றில் தரப்பட்டுள்ள பல படங்களின் thumbnail களில் ஒரு சில படங்களை தெளிவாக காண முடிவதில்லை. இது போன்ற குறிப்பிட்ட படங்களை ஒவ்வொருமுறையும் மற்றொரு டேபிலோ அல்லது விண்டோவிலோ திறந்து பார்த்துக் கொள்ளவேண்டியதாக உள்ளது. 

இப்படி ஒவ்வொரு படத்தையும் திறந்து பார்த்து பிறகு நமக்கு தேவையான படத்தை தேர்வு செய்து தரவிறக்கம் செய்வது, சில சமயங்களில் எரிச்சலை உண்டுபண்ணும். ஒரு வேளை நீங்கள் Google Chrome உலாவியை பயன்படுத்துபவராக இருந்தால், இதோ உங்களுக்கான ZoomZoom நீட்சி (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது- இது கூகிள் க்ரோமிற்க்கானது என்பதால், க்ரோம் உலாவியில் இருந்துதான் இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள இயலும்)  


இந்த நீட்சியை கணினியில் பதிந்து கொண்ட பிறகு கூகிள் க்ரோம் உலாவியில்
* Facebook
* Google Images
* deviantART
* Flickr
* TinyPic
* PhotoBucket போன்ற தளங்களில் உள்ள புகைப்படங்களின் thumbnail மீது மெளசின் கர்சரை கொண்டு நிறுத்தும் பொழுது அதனுடைய பெரிது படுத்தப்பட்ட படம் திரையில் காண்பிக்கப்படும்.
தரவிறக்க.., 
 
இதேபோல நெருப்பு நரிக்கான ImageZoom நீட்சியை பற்றிய மற்றொரு பதிவு,
 

நெருப்பு நரி உலவியில் எளிதான Image Zoom நீட்சி

 .

 

Thursday, 4 March 2010

Number to Text நீட்சி Open Office மற்றும் StarOffice பயன்பாட்டிற்கு

.
MicroSoft Excel பயனாளர்களுக்கு அதில் எண்களை எழுத்தாக மாற்றுவதில் உள்ள சிரமத்தை நீக்க ஏற்கனவே Excel - ல் இந்தியன் ஸ்டைல் Comma, மற்றும் Numbers in Words மாற்ற..,என்ற பதிவில் எழுதியிருந்தேன். அதேபோல OpenOffice / StarOffice போன்ற மிகவும் பயனுள்ள இலவச மென்பொருட்களில் உள்ள Calc பயன்பாட்டிற்கு இது போன்ற நீட்சி ஏதேனும் உண்டா என்று சில நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்காக இலவச  Number to Text நீட்சி..,
 இதனை Calc பயன்பாட்டினை திறந்து கொண்டு, அங்கு Tools->Extension Manager->Add சென்று எளிதாக பதிந்து கொள்ளலாம். அடுத்தமுறை இந்த பயன்பாட்டை திறக்கையில் Calc function இல் புதிதாக NUMBERTEXT(), MONEYTEXT() என இரண்டு புதிய function கள் வந்திருப்பதை கவனிக்கலாம். இதனை உபயோகித்து எளிதாக எண்களை எழுத்தாக மாற்றி பயன்பெறலாம்.   
  
.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)