Tuesday, 31 August 2010

Internet Explorer பிரச்சனைக்கான தீர்வு

Internet Explorer 8 பயன்படுத்துபவர்கள் பல சமயங்களில் ஹேங் ஆவது, மற்றும் மிகவும் மெதுவாக இயங்குவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். மிக எளிய முறையில் இந்த பிரச்சனையை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம். (பல வழிகளில் இதுவும் ஒன்று. உடனடியாக ரீ இன்ஸ்டால் செய்வதை தவிர்த்து இதை முயற்சித்துப் பாருங்கள்) 

நாம் பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. IE யில் செட்டிங்க்ஸ் அனைத்தையும் reset செய்யப்போகிறோம் அவ்வளவுதான். முதலில் IE ஐ திறந்து கொள்ளுங்கள். (Normal mode இல் திறக்க இயலவில்லையெனில் safe mode -இல் திறந்துக் கொள்ளுங்கள்) Tools மெனுவில் Internet Options செல்லுங்கள்.

   
இப்பொழுது திறக்கும் விண்டோவில் Advanced tab இற்கு சென்று Reset Internet Explorer settings என்பதற்கு கீழாக உள்ள Reset பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 





இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில் Delete personal settings என்பதை தேர்வு செய்ய வேண்டியதில்லை.


Reset பொத்தானை மட்டும் க்ளிக் செய்தால் போதுமானது. அனைத்தும் reset ஆன பிறகு Close பட்டனை க்ளிக் செய்து IE ஐ Restart செய்து கொள்ளுங்கள். இத வழியில் IE 8 இல் உள்ள பெரும்பாலான பிரச்சனை தீர்ந்து விடும். 

.   

Monday, 30 August 2010

மௌஸ் பிடிச்சு கை வலிக்குதா?

சமீபகாலமாக பலரும் தங்கள் பணிகளை இணையத்தில்தான் செய்கிறார்கள். பொழுது போக்கிற்காக, ப்ளாக் படிப்பது,  பிற கட்டுரைகளை வாசிப்பது என பலவற்றிற்கும் இணையம்தான் என்ற நிலை உருவான பிறகு, நாம் பல இணைய வலைப்பக்கங்களில் மௌஸில் ஸ்க்ரோல் செய்து செய்து படிப்பது, அறிவிற்கு நல்லதென்றாலும் கூட, கைகளுக்கு வழியும், குடைச்சலும் வருவது தவிர்க்க இயலாதது. 
வழக்கமாக நாம் மௌஸில் க்ளிக் செய்வதைவிட ஸ்க்ரோல் செய்வதுதான் அதிகம் என்பதனால், நாமாக ஸ்க்ரோல் செய்வதை தவிர்த்து கொள்ள ஏதேனும் வழியிருக்கிறதா என்று தேடிய பொழுது, நெருப்புநரி உலாவிக்கான ஒரு பயனுள்ள ScrollyFox இலவச நீட்சி இணையத்தில் காணக்கிடைத்தது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில்.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்) 


இதனை நிறுவியபிறகு, Preferences பகுதிக்குச் சென்று  Scrolling speed மற்றும் Reverse Scroll வசதியை உங்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். 


ஆரம்பத்தில் இது disable ஆகத்தான் இருக்கும். Status பாரில் பார்த்து இதை enable செய்து கொள்ளுங்கள். 

அவ்வளவுதான் இனி நீண்ட வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும்பொழுது நீங்களாக   ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியமில்லை தானாகவே நீங்கள் கொடுத்துள்ள வேகத்திற்கு ஆட்டோ ஸ்க்ரோல் ஆகும், பக்க இறுதிக்கு வந்த பிறகு, மேல் நோக்கி ஸ்க்ரோல் ஆகும். ஸ்க்ரோல் வேகத்தை உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுங்கள். 

ஒரு சில நேரங்களில் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இணையத்தில் நீண்ட கட்டுரைகளை படித்து ரசிக்கலாம்.  



 
.

விண்டோஸ்:- பயனுள்ள இலவச கருவி

Nero/Roxio போன்ற மென்பொருட்கள் இல்லாத விண்டோஸ் இயங்குதளத்தில் பணிபுரியும் பொழுது, ஏதாவது அவசியமான CD /DVD களை ISO image களாக  சேமித்து வைக்க மைக்ரோசாப்ட் Power Toys -இன் ISO Recorder இலவச கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இதனை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு,தேவையான CD ஐ வலது க்ளிக் செய்து context மெனுவில் Copy CD to image file பொத்தானை கிளிக்கினால் போதுமானது. அதே போல image கோப்புகளை CD யில் பதிய அந்த இமேஜ் கோப்பின் மீது வலது க்ளிக் செய்து Copy image to CD என்பதை க்ளிக் செய்தால் போதுமானது.


.

Sunday, 29 August 2010

விண்டோஸ்: தடயங்களை அழிக்க..

ஒரு சில சமயங்களில் நாம் பிறரது கணினியிலோ அல்லது பொதுக் கணினிகளிலோ பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், அந்த குறிப்பிட்ட கணினிகளில் இணையத்தில் மெயில் அனுப்புவது, அல்லது முக்கியமான ஆன்லைன் பண வரிவர்த்தனை செய்து முடித்தப் பின்னர், நமக்கு பின்னர் அந்த கணினியை பயன்படுத்துபவர்கள், நமது இரகசியங்களை அல்லது நமது தனிப்பட்ட விபரங்களை அறியாமல் தடுக்க இந்த தடயங்களை அழிப்பது எப்படி? 
வழக்கமாக நாம் ஹிஸ்டரி க்ளின் செய்வது போன்றவற்றை செய்தாலும் கிளிப் போர்டு க்ளின் செய்வது போன்ற பல வகைகளில் நமது தடயங்களை அழிக்க CleanAfterMe என்ற இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் என்பதால், கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. இதனை நமது பென் ட்ரைவில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 





இதனை தரவிறக்கி CleanAfterMe.exe என்ற கோப்பை ரன் செய்தால் போதுமானது, நீக்க வேண்டிய விபரங்களை திரையில் தேர்வு செய்து Clean Selected Items பட்டனை க்ளிக் செய்து உங்கள் தடயங்களை அந்த கணினியிலிருந்து நீக்கி விடலாம். 

இந்த மென்பொருள் கோப்புகளை அழிப்பதற்கு முன்பாக அவற்றில் Zero க்களை நிரப்பி விடுவதால் வேறு எந்த Undelete மென்பொருள் கருவியைக் கொண்டும் மறுபடி மீட்டெடுக்க இயலாது என்பது இதனுடைய சிறப்பம்சம்.



Saturday, 28 August 2010

ஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு

இரண்டு வயது முதல் பத்து வயது வரையான குழந்தைகளுக்கான பலவகையான விளையாட்டு சார்ந்த கல்வி பயிற்றுவிக்கும்  இலவச மென்பொருள் தொகுப்புதான் ஜிகாம்பரி.  

இது லினக்ஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு லினக்ஸ்க்கு முற்றிலும் இலவசமாகவும், விண்டோஸிற்கு  ஒரு சில வசதிகள் மட்டும் கட்டணம் செலுத்தும் விதமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் சில மொழிகளில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 





இதில் குழந்தைகளுக்கு விருப்பமான பல விளையாட்டுகளை கொண்டு கல்வியை கற்றுக் கொடுப்பதால், குழந்தைகள் தானாகவே இதனை இயக்க கற்றுக் கொள்ளும்படியாக உள்ளது. 
பட நினைவாற்றல், பண பரிமாற்றம், எடைகளை சமன் செய்தல், கணிதம், அறிவியல், வரைகலை, சதுரங்க விளையாட்டு என பல பயனுள்ள அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உங்கள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்குமே.. 





.

Friday, 27 August 2010

பூமராங் - ஜிமெயிலுக்கான சூப்பர் நீட்சி!

நீங்கள் முக்கிய வேலை நிமித்தமாக நாளையோ அல்லது மறுநாளோ அல்லது வருகின்ற எதோ ஒரு குறிப்பிட்ட நாளோ பிசியாகி விடுவீர்கள்,  உங்களால்  அந்த நாளில் இணையத்தில் பணிபுரிய இயலாது என வைத்துக் கொள்வோம். அந்த குறிப்பிட்ட நாளில் ஒரு நண்பருக்கு இமெயிலில் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்ப வேண்டும், அல்லது அலுவலக  நிமித்தமாக ஒரு  முக்கிய மின்னஞ்சலை அந்த குறிப்பிட்ட நாளில் அனுப்ப வேண்டும்.     
இதோ நீங்கள் அனுப்பும் அல்லது பெறும் மின்னஞ்சல்களை schedule செய்ய  வந்து விட்டது பூமராங் பீட்டா! நெருப்புநரி மற்றும் கூகிள் க்ரோம் உலாவிக்கான நீட்சி! இது பீட்டா நிலையில் இருப்பதால் Invite Code மூலமாகவே இதனை தரவிறக்க முடியும். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் Invite Code கேட்கும் பொழுது htg (சும்மா வச்சுக்கங்க..) என்ற Code ஐ கொடுத்து தரவிறக்கி கொள்ளுங்கள்.     


இது க்ரோம் மற்றும் நெருப்புநரி உலாவிகளுக்காக தனித்தனியாக தரப்பட்டுள்ளதால், உங்களிடமுள்ள உலாவிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு ஒரு முறை உலாவியை மூடி பின் திறக்கவேண்டும். 


இனி உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து புதிய மின்னஞ்சலை உருவாக்கும் பொழுது, மேலே புதிதாக ஒரு பட்டன் வசதி Send Later (Boomerang) வந்திருப்பதை கவனிக்கலாம். 


இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி, உருவாக்கும் மின்னஞ்சலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியும்.  அதுவரை அந்த மின்னஞ்சல் உங்கள் ஜிமெயில் சர்வரில் இருக்கும். 




அதே போல receive செய்வதற்கும் (மீண்டும் இன்பாக்ஸில் வரும்) ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை திறக்கும் பொழுது வலது மேல் புறம் வரும் Boomerang பட்டனை க்ளிக் செய்து schedule செய்து கொள்ளலாம். 





.

விண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நுழைய

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயங்குதளங்களில் விண்டோஸ் XP யில் உள்ளது போல Administrator கணக்கு இல்லையே என்று பலரும் யோசித்திருக்கக் கூடும். இந்த இயங்குதளங்களிலும் Administrator கணக்கு வழக்கம் போல உண்டு. ஆனால் மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை உங்கள் கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, இந்த Administrator கணக்கில் நுழைந்து சரி செய்து விடலாம் என்று சிந்திக்கும் பொழுது, இந்த கணக்கை எப்படி enable செய்வது என்று பார்க்கலாம். 

வழக்கம் போல உங்கள் விண்டோஸ் பயனர் கணக்கில் நுழைந்துக் கொள்ளுங்கள். search box இல் CMD என டைப் செய்து மேலே தோன்றும் Command Prompt லிங்கில் வலது க்ளிக் செய்து Run as Administrator க்ளிக் செய்து Command prompt சென்று விடுங்கள். 


இங்கு net user administrator /active:yes என டைப் செய்து என்டர் கொடுக்கவும். 

டைப் செய்யும் பொழுது சரியான space ஆகியவற்றை கவனித்து மேலே தரப்பட்டுள்ளது போல உள்ளீடு செய்யவும். The command completed successfully என்ற செய்தி வருவதை கவனிக்கவும். இப்பொழுது ஒருமுறை Logout செய்து பின்னர் வரும்பொழுது இந்த Administrator கணக்கும் திரையில் தோன்றுவதை கவனிக்கலாம். பெரும்பாலும் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் ஏதும் இருப்பதில்லை.
இந்த வசதியை இப்படியே தொடர்வதாக இருந்தால் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் இட்டு வைப்பது நல்லது. அல்லது உங்கள் வேலை முடிந்த பிறகு, இந்த கணக்கை மறுபடி பழையபடி மறைத்து வைக்க மேலே சொன்ன வழிமுறையின்படி சென்று net user administrator /active:no எனும் கட்டளையை கொடுத்துவிடலாம். 

இதே net user கட்டளையை பயன்படுத்தி விண்டோஸ் XP யில் மற்றொரு admin rights உள்ள பயனர் கணக்கில் நுழைந்து, DOS prompt  சென்று net user administrator * என்ற கட்டளையை உள்ளீடு செய்வதன் மூலமாக Administrator கணக்கின் கடவுசொல்லை மாற்றிவிடலாம். (பழைய கடவுச்சொல் நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை) 
.     

Wednesday, 25 August 2010

VLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள்

VLC Media Player பெரும்பாலான கணினி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஆச்சர்ய படவைக்கும் வசதிகள், மற்றும் இது ஒரு சுதந்திர இலவச மென்பொருள் என்பதும் இதற்கு காரணமாக இருக்கிறது. இந்த ப்ளேயரை மேலும் அழகு படுத்த உங்களுக்காக அட்டகாசமான ஸ்கின்கள் (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை எப்படி VLC யில் பதிவது என்பதை பார்க்கலாம். 
உங்கள் கணினியில் VLC ப்ளேயரின் Shortcut ஐ வலது க்ளிக் செய்து Properties க்ளிக் செய்து அங்கு shortcut டேபில் சென்று, VLC உங்கள் வன்தட்டில் எங்கு பதியப்பட்டுள்ளது என்று பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கமாக C:\Program Files\VideoLan\VLC என்று இருக்கும். 

 
My Computer -ல் அந்து குறிப்பிட்ட லொகேஷனுக்கு சென்று அதிலுள்ள Skins ஃபோல்டருக்கு செல்லுங்கள்.

 
இந்த ஃபோல்டருக்குள்தான் நீங்கள் தரவிறக்கம் செய்யும் ஸ்கின்களை சேமித்து வைக்க வேண்டும். 





இப்படி சேமித்துக் கொண்ட பிறகு, VLC ப்ளேயரை திறந்து கொண்டு Tools மெனுவில் Preferences என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் Interface Settings திரையில் Use Custom Skin ரேடியோ பட்டனை க்ளிக் செய்து பிறகு Save பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். ஒரு முறை VLC ப்ளேயரை மூடி பின் திறக்கவும்.


இப்பொழுது Default skin உடன் VLC ப்ளேயர் திறக்கும்.  இந்த திரையில் வலது க்ளிக் செய்து Interface சென்று Select skin க்ளிக் செய்து, தேவையான Skin ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்.. இதோ இந்த முறையில் உங்கள் VLC ப்ளேயரை அழகுபடுத்துங்கள். 


.

Tuesday, 24 August 2010

விண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க

நாம் எச்செல் 2007 பயன்படுத்தி வரும்பொழுது, அதில் அவசர கணக்கு போட அடிக்கடி விண்டோஸ் கால்குலேட்டரை உபயோகிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் கால்குலேட்டரை ஸ்டார்ட் மெனுவிலோ, அல்லது டெஸ்க்டாப் ஷார்ட் கட்டிலோ திறந்து பணிபுரிவது நேர விரயமாகும். 

இந்த விண்டோஸ் கால்குலேட்டரை எக்சல் Quick Access Toolbar -இல் இணைக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம். 

எக்ஸ்செல் 2007 ஐ திறந்து கொண்டு மேலே உள்ள Customize Quick Access Toolbar ஐ க்ளிக் செய்யுங்கள். 

  
இப்பொழுது அந்த மெனுவில் உள்ள More Commands ஐ க்ளிக் செய்யுங்கள். திறக்கும் Excel options window வில் choose commands from என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Commands not in the Ribbon என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இப்பொழுது வரும் பட்டியலில் Calculator ஐ க்ளிக் செய்து அருகிலுள்ள ADD பொத்தானை க்ளிக் செய்து, கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.

இனி அடிக்கடி உபயோகிக்க விண்டோஸ் கால்குலேட்டர் உங்கள் எக்ஸ்செல் Quick Access Toolbar -இல் க்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 



.

ஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்டும் ஒளிந்துகொள்ள

ஃபேஸ்புக்கில் எப்பொழுதெல்லாம் நீங்கள் லாகின் செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்காகவே காத்திருந்தது போல, Hi, How are you என நீங்கள் விரும்பாத நண்பர் சாட்டில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாரா? 

இது போன்ற ஒரு சில தொல்லைதரும் நண்பர்களுக்கு மட்டும் நீங்கள் offline -இல் இருப்பது போன்று தோன்றவைக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் உங்கள் Facebook கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். பிறகு இடதுபுற பேனில் உள்ள Friends லிங்கை கிளிக் செய்யுங்கள்.



இப்பொழுது வலதுபுறம் வந்துள்ள Create List பொத்தானை அழுத்துங்கள்.

இப்பொழுது திறக்கும் Create List வசனப் பெட்டியில் ஏதாவது பெயரை கொடுங்கள். (Offline Friends)

Offline Friends என்ற பெயரில் ஒரு புதிய லிஸ்ட் உருவாகியிருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தொல்லைதரும் நண்பர்களை இணைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது Facebook chat ஐ திறந்து கொள்ளுங்கள். 
இங்கு Offline Friends லிஸ்டிற்கு நேராக உள்ள சிறிய பச்சை  பொத்தானை க்ளிக் செய்து Offline மோடிற்கு மாறிக்கொள்ளலாம். 

இனி இவர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.


.

Saturday, 21 August 2010

கூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி

நாம் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, Flickr போன்ற தளங்களில் காணும் புகைப்படங்களை முழுத்திரையில் மற்றும், ஸ்லைட் ஷோ வடிவில் காண கூகிள் க்ரோம் உலாவிக்கான ஒரு எளிய  நீட்சி SlideShow. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது). 

இந்த தளத்தில் உள்ள Install பட்டனை க்ளிக் செய்து உங்கள் க்ரோம் உலாவியில் எளிதாக பதிந்து கொள்ளலாம். 


அட்ரஸ் பாரின் வலது புறம் இந்த நீட்சி பதிந்து விட்டதற்கான குறிப்பு தோன்றும். இந்த நீட்சியின் பட்டன் அல்லது லிங்க் எதுவும் உங்கள் உலாவியில் தோன்றாது.

ஆனால் இந்த SlideShow நீட்சி எந்தெந்த தளங்களில் வேலை செய்யுமோ, அந்தந்த தளங்கள் திறக்கப்படும் பொழுது, தானாகவே இது வேலை செய்ய ஆரம்பிக்கும். உங்களுக்கு தேவையான பதத்தை க்ளிக் செய்த பிறகு, அந்த குறிப்பிடட்ட படம் மட்டும் பெரிதாக திரையில் தோன்றும், பிற படங்கள் கீழே சிறிதாக SlideShow போல தோற்றமளிக்கும். 


இந்த நீட்சி Flickr போன்ற புகைப்பட தளங்களை விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு நீட்சி என்பதில் ஐயமில்லை.
.

இணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க

நம்மில் பலர் இணையத்தில் யூ ட்யுப் போன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை வழக்கமாக Google Chrome, Firefox, IE போன்ற இணைய உலாவியில்தான் பார்த்து வருகிறோம். இதில் நமக்கு சிறிய அளவில்தான் படங்களை காண முடிகிறது.

இதோ சுதந்திர இலவச மென்பொருளான VLC மீடியா ப்ளேயரில் இது போன்ற வீடியோக்களை முழுத் திரையில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, நீங்கள் விரும்பும் வீடியோவிற்கான URL ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக http://www.youtube.com/watch?v=mhRIs_XhM3U&feature=fvsr . இப்பொழுது VLC Media Player ஐ திறந்து கொண்டு, Media Menu வில் சென்று 


Open Network Stream வசதியை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் Open Media வசன்ப்பெட்டியில் Network டேபில், Please enter a network URL என்பதற்கு கீழாக உள்ள பெட்டியில் நீங்கள் காப்பி செய்த URL ஐ பேஸ்ட் செய்து கீழே உள்ள Play பொத்தானை சொடுக்குங்கள்.


ஓரிரு வினாடிகளுக்கு மேலே உள்ளது போன்ற திரை தோன்றி மறைந்த பிறகு, உங்கள் அபிமான வீடியோ VLC Player -ல் ஓடத்துவங்கும், இப்பொழுது வீடியோ திரையில் வழக்கம்போல இரட்டை க்ளிக் செய்து முழுத்திரையில் காண முடியும்.

 

.

Wednesday, 18 August 2010

எம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பயன்பாட்டை உபயோகித்து வருபவர்கள், தங்களது Word, Excel அல்லது Powerpoint கோப்புகளில் புகைப்படங்களை இணைக்கும் பொழுது, அந்த புகைப்படங்களை தேவையான அளவு crop செய்து கொள்வது, சிறப்பு எபக்ட்கள் ஆகியவற்றை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 

வழக்கம் போல Insert இற்கு சென்று தேவையான படத்தை உங்கள் டாக்குமெண்டில் இணைத்துக் கொள்ளுங்கள். 


இப்படி இணைக்கப்பட்ட ஒரு சாதாரண Bird ஐ Love Bird (!)ஆக்குவது எப்படி?   


ரிப்பன் மெனுவிலிருந்து Crop வசதியை எடுத்துக்கொண்டு படத்தை தேவையான அளவு crop செய்து கொள்ளுங்கள்.


இனி அதே Picture Tools மெனுவிலிருந்து Picture shape வசதியை க்ளிக் செய்து தேவையான வடிவத்தை (Heart) தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த படம் அதே வடிவில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம். 


மேலும் இந்த மெனுவில் உள்ள Picture Border, Picture effects போன்ற வசதிகளை பயன்படுத்தி படத்தை மேலும் மெருகூற்றலாம்.  


இனி நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்டில் Shadow, Bevel  போன்ற வசதிகளை பயன்படுத்தி  படங்களை அழகாக வடிவாக்க முடியும். 


   

.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)