Hide any file inside any other file.
உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருந்தால் இது சாத்தியமாகும். FAT32 வில் இந்த வித்தை பலிக்காது.
உதாரணமாக Solitaire ஃபைலை (Sol.exe) ஒரு டெக்ஸ்ட் (Text) ஃபைலுக்குள் மறைத்து வைக்க என்ன செய்ய வேண்டும்...
நீங்கள் 'C' ட்ரைவை உபயோகிப்பதாக வைத்துக்கொள்வோம்.
1. 'TEST' என்ற போல்டரை உருவாக்கவும்.(C:\TEST) எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.
2. அந்த போல்டருக்குள் ஒரு டெக்ஸ்ட் ஃபைலை (Text Document) உருவாக்கி, அதனுள் ஏதாவது டைப் செய்து விட்டு அந்த ஃபைலுக்கு container.txt என பெயரிட்டு சேமித்து கொள்ளவும். (இந்த டெக்ஸ்ட் ஃபைலுக்குள் தான் Sol.exe ஃபைலை மறைத்து வைக்க போகிறோம்)
3. \windows\system32 என்ற போல்டரிலிருந்து sol.exe ஃபைலை C:\TEST க்கு காப்பி செய்யவும்.
4. இப்பொழுது Command Window ஐ திறந்து கொண்டு, C:\TEST போல்டருக்கு சென்று “Type Sol.exe > container.txt:sol.exe” இதை டைப் செய்து என்டர் அடிக்கவும்.
5. திரையில் எந்த மாற்றமும் தெரியாது. அந்த டெக்ஸ்ட் ஃபைலின் அளவு + .Sol.exe ஃபைலின் அளவு 50 கேபி ஆகியிருக்கும். அந்த டெக்ஸ்ட் ஃபைலை திறந்து பார்த்தால், நீங்கள் முன்பு டைப் செய்திருந்த அனைத்தும் அப்படியே இருக்கும்.
6. நீங்கள் C:\TEST. போல்டரில் காப்பி செய்த Sol.exe ஃபைலை அழித்துவிடவும்.
7. இப்பொழுது மறைத்து வைத்த ஃபைலை எப்படி திறப்பது? கீழ்கண்ட கட்டளையை கொடுக்கவும்.
“start c:\test\container.txt:sol.exe”அவ்ளோதான்.
இப்படி எந்த வகை ஃபைலையும், இன்னொரு எந்த வகை ஃபைலுக்குள்ளும் மறைத்து வைக்கலாம். (உங்கள் ஹார்ட் டிஸ்க் NTFS ஆக இருக்கும் பட்சத்தில்..)
குறிப்பு:- நீங்கள் மறைத்து வைக்கும் ஃபைலின் பெயரை மறந்துவிட்டால் சிரமம்.
10 comments:
நல்ல உபயோகமான பதிவு. இதற்கு யாரும் பின்னூட்டம் இடாதது மிகவும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.தொடருங்கள் இது போன்ற பதிவுகள் இட.
good one, thanks
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி! திரு.விஜயசாரதி அவர்களே! தொடர்ந்து எனது பதிவை பாருங்கள்
Usefull info
Thanks for the useful tip.-Hidha
சார், எப்படி என் ஹார்ட் டிஸ்க், NTFS ஆ என கண்டு பிடிக்கறது.?
வருகைக்கு நன்றி விஜய்! My Computer ஓபன் செய்து, உங்கள் டிரைவில் ரைட் கிளிக் செய்து Properties -ல் File System என்பதற்கு நேராக FAT32 அல்லது NTFS என்று இருக்கும். ஒருவேளை FAT32 ஆக இருந்தால் NTFS ஆக மாற்றமுடியும். "சார்" எல்லாம் வேண்டாமே, பெயர் சொல்லி அழையுங்கள்...
நன்றி கண்ணன்,என்னோடது NTFS தான். கன்பார்ம் பண்ணியாச்சி. டிரை பண்ணி பார்த்துட்டு பின்னூட்டம் இடுகிறேன்.vijay
இவ்வளவு வரிகளை பின்பற்ற வேண்டும். அதை விட இலவச மென்பொருட்களை கொண்டு வெகுஎளிதாக செய்யலாமே.இருப்பினும் நான் அறியாத வித்தியாசமான குறிப்புஅன்புடன்கொல்வின்இலங்கை
நல்ல உபயோகமான பதிவு.
Post a Comment