Friday 9 July, 2010

அடடா வடை போச்சே! - Blogger Backup - இலவச கருவி

ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க டைரியை விட மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்பதனையும் எவராலும் மறுக்க முடியாது. 

உங்கள் பிளாக்கில் நூற்றுக் கணக்கில் இடுகைகளை வைத்திருப்பீர்கள், திடீரென ஒரு நாளில் இவையனைத்தும் தொலைத்து விட்டு அடடா என் பிளாக்கை காணோமே.. இடுகைஎல்லாம் போச்சே என்று புலம்பி கொண்டிருப்பது சிலருக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இதற்கு ஒரு நல்ல தீர்வாக Blogger Backup எனும் சுதந்திர இலவச மென்பொருள் அமைந்துள்ளது ஒரு வரப்பிராசாதம் தான். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

இந்த சிறிய மென்பொருள் கருவியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு இதனை திறந்து, 
 
Available Blogs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Add/Update/Remove blog என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

இனி Log into Blogger to get and add your blogs டேபில் உங்கள் பிளாக்கர் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து கீழே உள்ள பட்டனை க்ளிக் செய்யுங்கள். அல்லது OR Manually add or edit a Blogger blog டேபை க்ளிக் செய்யுங்கள். (நான் கீழே உள்ள விளக்கப் படங்களில் இரண்டாவது முறையை கொடுத்துள்ளேன்.) 

இரண்டாவது வழியில்Blog Title/Name, Blogger Blog URL ஆகியவற்றை கொடுங்கள், Blogger Feed URL தெரிந்தால் கொடுங்கள், இல்லையெனில் Get Feed URL பட்டனை அழுத்தி பெற்றுக்கொண்டு, Add/Update Blog பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 

இனி அடுத்த திரை உங்கள் ப்ளாக் விவரங்களை காட்டும், இதில், உங்கள் வன்தட்டில் எந்த ட்ரைவில் உள்ள ஃபோல்டரில்  சேமிக்க வேண்டும் என்பதை கொடுங்கள். மேலும் பின்னூட்டங்களை சேமிக்க வேண்டுமெனில், Save Comments check box ஐ டிக் செய்யுங்கள். இப்படி சேமிக்கும் இடுகைகளை ஒரே கோப்பில் சேமிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு இடுகைக்கும் ஒவ்வொரு கோப்பை உருவாக்க வேண்டுமா என்பதை Save posts as format என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் தேர்வு செய்து கொள்ளுங்கள். மேலதிக விவரங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறிக் கொண்டு Backup posts என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள். 


இப்பொழுது உங்கள் பிளாக்கில் உள்ள ஒவ்வொரு இடுகைகளும், பின்னூட்டங்களும் Backup ஆக துவங்கும். இது அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை, எனது பிளாக்கில் 240 க்கு மேற்பட்ட இடுகைகளை Backup எடுக்க ஐந்து நிமிடங்கள் கூட எடுத்துக் கொள்ளவில்லை. 

 
இப்படி பேக்கப் எடுக்கும் பொழுது உங்கள் ஒவ்வொரு இடுகைகளும் ஒவ்வொரு XML கோப்புகளாக உங்கள் கணினியில் சேமிக்கப் படுகிறது. 


அவ்வளவுதான்! இனி எப்பொழுதாவது உங்கள் இடுகைகளை தொலைத்து விட்டு 'அடடா வடை போச்சே!.. என்று தலையில் கை வைப்பதை விட்டுவிட்டு மௌஸில் கை வைத்து, இதே மென்பொருள் கருவியை பயன் படுத்தி உங்கள் இடுகைகளை Restore செய்து கொள்ளுங்கள்.   



.

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks useful post

வழிப்போக்கன் said...

உபயோகமான பதிவு. நன்றி.

பின்னோக்கி said...

ரொம்ப தேங்க்ஸ்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

உபயோகாமான கருவி,இப்பொதே தரவிரக்கிவிடுகிறேன் நன்றி

Mrs.Menagasathia said...

thxs a lot!!

ஜெகதீஸ்வரன் said...

பிளாக்கருக்கு மட்டும் பொருந்தக் கூடியதா இல்லை எல்லாவற்றுக்குமா!.

விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்!,...

அமைதி அப்பா said...

எப்படி சார் இது? blogger backup பற்றி முன்னாடியே சொல்லியிருக்கீங்க?
எதோ, உங்கள் மனதில் தோன்றியிருக்கிறது.

Radhakrishnan said...

மிகவும் பயனுள்ள பதிவு.

தங்களுடைய வலைப்பூ தான் தொலைந்து போய் மீட்டீர்களா?

நல்ல நல்ல பதிவுகள், விரைவில் படிக்கிறேன். நன்றி.

வினோ said...

மிக்க நன்றி நண்பரே.. பயனுள்ள பதிவு..

தமிழ்க்காதலன் said...

உங்களின் அறிய முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மிக உபயோகமான தகவல் தந்துள்ளீர்கள். நான் உங்களின் ஆலோசனைப் படி பேக்கப் எடுத்து விட்டேன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இது போல் இன்னும் நிறைய நல்ல தகவல்கள் பகிர வாழ்த்துக்கள். வளர்க நலமே. அன்புடன் தமிழ்க்காதலன். வருகை தர இதயசாரல் வலைப்பூ. (ithayasaaral.blogspot.com )

http://obatsabunjerawatampuhalami22.blogspot.com said...

Thanks....
I LiKe This Site blog...
http://obatsabunjerawatampuhalami22.blogspot.co.id/

http://obatsabunjerawatampuhalami22.blogspot.com said...

I Like This Site blog...
Obat Jerawat

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)