Wednesday 30 December, 2009

க்ளிக் பண்ணுங்க கொண்டாடுங்க..

அன்பு நண்பர்களே! 


நாம் வரவிருக்கும் புத்தாண்டில் எல்லாவிதமான வளங்களையும் , நலன்களையும் பெறுவோம் என்று நம்பிக்கையில் 2010- ம் ஆண்டை இனிய மனதுடன்,  நம்பிக்கையோடு வரவேற்போம்!..,

அனைவருக்கும் எனது  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.., 









அன்புடன்
சூர்யாகண்ணன் 

.

Tuesday 29 December, 2009

வேர்டு 2007 -இல் தானாகவே தோன்றும் மினி டூல்பாரை நீக்க

நாம் Microsoft Word 2007 உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது டெக்ஸ்டை தேர்வு செய்ய ஹைலைட்  செய்தால் தானாகவே Mini Formatting Toolbar தோன்றிவிடும். 


இந்த வசதி சில சமயங்களில் உபயோகமாக இருந்தாலும், பல சமயங்களில் எரிச்சலூட்டுவதாக அமைந்து விடுகிறது. இந்த Mini Formatting Toolbar நிரந்தரமாக நீக்க முடியாதபடி உருவாக்கப் பட்டிருந்தாலும், நாம் டெக்ஸ்டை ஹைலைட் செய்யும் பொழுது இது தானாகவே தோன்றுவதை தடுக்க ஒரு எளிய வழி.


Word 2007 ஐ திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள Office Button ஐ கிளிக் செய்து Word Options க்ளிக் செய்யுங்கள்.



இனி திறக்கும் வசனப் பெட்டியில் Popular பொத்தானை சொடுக்குங்கள். வலது புற பேனில் “Show Mini Toolbar on selection”  என்பதை Uncheck செய்து விடுங்கள்.



அவ்வளவுதான்.. இனி இந்த மெனு தானாகவே தோன்றாது. இந்த மெனு தேவையெனில், மாற்றத்திற்கு தேவையான டெக்ஸ்டை தேர்வு செய்து வலது க்ளிக் செய்தால் போதுமானது.



.

Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க

கணினி உபயோகிப்பவர்களில் பலர், தாங்கள் உருவாக்கும் கோப்புகள், காப்பி செய்து வைக்கும் கோப்புகள், தரவிறக்கம் செய்து வைக்கும் கோப்புகள் போன்றவற்றை, வன்தட்டில் ஒரு பகுதியில் மட்டுமல்லாமல், சில சமயங்களில் வெவ்வேறு ஃபோல்டர்களில்  அல்லது ட்ரைவ்களில்  சேமித்து வைக்கிறோம். இப்படி செய்வதினால் ஒரே கோப்பு கணினியின் வன்தட்டில் பல இடங்களில் டூப்ளிகேட் ஆகிவிடுகிறது. சில சமயங்களில் வன்தட்டில் இடபற்றாக்குறையும்  இதனால் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.

இப்படி டூப்ளிகேட் ஆகியிருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்க Fast Duplicate File Finder எனும் மென் பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)



இந்த மென்பொருளை பதிவது எளிதான காரியமாகும்.
இதனுடைய திரையில் வலதுபுறமுள்ள Scan Subfolders என்பதை தேர்வு செய்து Start Scan பொத்தானை சொடுக்கினால் டூப்ளிகேட் கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதன் வேகமும் பாராட்டும்படியுள்ளது.



இதில் பட்டியலிடப்படும்  டூப்ளிகேட்  கோப்புகளில் நமக்கு தேவையில்லாதவற்றை தேர்வு செய்து நீக்கிக் கொள்ளலாம்.

இது நமது பென் ட்ரைவ் போன்றவற்றிலும் சிறப்பாக செயல்பட்டுக் கூடியது. இதனுள் உள்ளிணைக்கப் பட்ட Preview வசதி இதனுடைய சிறப்பம்சம் ஆகும்.







.

விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் பவர் பட்டன்

விண்டோஸ் 7 -இல் ஸ்டார்ட் மெனுவில் உள்ள பவர் பட்டன் வழக்கமாக Shutdown ஆப்ஷனிலும், விஸ்டாவில் Sleep ஆப்ஷனிலும் இருக்கும். இதனை விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் நமது தேவைக்கு ஏற்றவாறு எப்படி மாற்றியமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

விண்டோஸ் 7 :-
விண்டோஸ் ஏழில் இந்த பணி மிகவும் எளிதானது. Start Button -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இனி திறக்கும் Taskbar and Start menu Properties விண்டோவில் Start Menu டேபிற்குச் சென்று Power button action என்பதற்கு நேராகவுள்ள drop-down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


இனி Apply & OK கொடுத்தால் போதுமானது.


விண்டோஸ் விஸ்டா:-
விஸ்டாவில் கொஞ்சம் சுற்று, 
Control Panel  சென்று  Power Options -> Change Plan Settings -> Change Advanced Power Settings க்ளிக் செய்தால் திறக்கும் Power Options விண்டோவில் Advanced Settings டேபில் “Power buttons and lid” என்பதை க்ளிக் செய்யவும்.



இதில் Power button Action என்பது உங்கள் கணினியில் உள்ள ஹார்ட் வேர் பவர் பட்டனை குறிக்கிறது. இதில் நீங்கள் மாறுதல் செய்தால், ஸ்டார்ட் மெனுவிற்குச் சென்று ஷட் டவுன் செய்யவேண்டும் என்பதில்லை, CPU வில் உள்ள பவர் பட்டனை ஒரு முறை அழுத்தினால் போதுமானது. 

Start menu power button என்பது ஸ்டார்ட் மெனுவில் உள்ள பவர் பட்டனை குறிக்கிறது. இதில் உங்களுக்கு தேவையான Sleep, Hibernate or Shut Down போன்ற  வசதிகளை மாற்றி Apply & OK கொடுக்கவும்.


.

Monday 28 December, 2009

விண்டோஸ் மீடியா ப்ளேயரில் மினி ப்ளேயர்

Windows Media Player -ல் நாம் MP3 பாடல்களை திறக்கையில், முழுத் திரையில் Windows Media Player திறப்பதை கவனித்திருக்கலாம். ஆனால் பெரும்பாலும், பாடல்களை கேட்பதற்கு முழுத் திரை தேவையில்லை என்பதால்,  பயனர்கள் பலரும்  Mini Player தோற்றத்தையே விரும்புகிறார்கள்.  

ஒவ்வொருமுறையும் மினி ப்ளேயர் மோடிற்கு மாற்றுவதை விட, ஒரு குறிப்பிட்ட கோப்பு வடிவிற்கு மட்டும் (உதாரணமாக MP3) அல்லது ஒரு குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகளுக்கு மட்டும் (உதாரணமாக CD/DVD) நிரந்தரமாக மினி ப்ளேயர் மோடை  Windows Media Player -ல் உருவாக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

Windows Media Player ஐ திறந்து கொண்டு Options பக்கத்திற்கு செல்லுங்கள். இங்கு Player டேபில் “Start the mini Player for file names that contain this text” என்ற டெக்ஸ்ட் பாக்ஸ் இருப்பதை கவனிக்கலாம்.



உங்களுக்கு அனைத்து எம்பி3 கோப்புகளும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் இந்த டெக்ஸ்ட் பாக்ஸில் .mp3 என டைப் செய்யவும்.


குறிப்பிட்ட ட்ரைவிலிருந்து திறக்கப்படும் கோப்புகள் மட்டும் மினி ப்ளேயரில் திறக்க வேண்டுமெனில் அந்த ட்ரைவ் லெட்டரை மட்டிலும் கொடுத்தால் போதுமானது.


இனி Apply செய்தால் போதும், இதற்கு பின்னர் திறக்கப் படும் கோப்புகள் உங்கள் விருப்பப் படி மினி ப்ளேயரில் திறக்கும்.




.

My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?

இதோ உங்களுக்கான தீர்வு..,

My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.


இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Boxuncheck செய்து விடுங்கள்.



இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.


.

Sunday 27 December, 2009

Excel 2007 -இல் எளிதான Text Wrap வசதி

Excel  2007 -இல் நாம் பணிபுரியும் பொழுது ஒரு குறிப்பிட்ட செல்லில் உள்ள டெக்ஸ்ட், அந்த செல்லின் அகலத்தை விட பெரிதாக இருந்தால், வழக்கமாக நாம் F2 கீயை அழுத்தி தேவையான இடத்தில் Alt+Enter செய்து அடுத்த  வரிக்கு எடுத்துச் செல்வோம். அதன் பிறகு Row height ஐயும் மாற்ற வேண்டியிருக்கும்.

இதற்கு  Excel  2007 -இல் எளிதான  Text Wrap வசதி தரப்பட்டுள்ளது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

இப்படி உள்ள டெக்ஸ்டை அந்த செல்லிலேயே Wrap செய்ய, அந்த செல்லில் கர்சரை நிறுத்தி, ரிப்பன் மெனுவில் Wrap Text பட்டனை அழுத்துங்கள்.


அவ்வளவுதான்! இப்பொழுது அந்த செல்லின் அகலத்திற்கு ஏற்றவாறு Text Wrap செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம்.





.

Thursday 24 December, 2009

இப்படி இருந்த டெக்ஸ்ட் எப்புடி ஆயிடுச்சு

நம்மில் பலர் இன்னமும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.  இதில் நாம் பணிபுரியும் பொழுது வேர்டு, எக்சல் போன்றவற்றில் வேலை செய்யும் பொழுது அல்லது இணைய உலவிகளில் பணி புரியும் பொழுது,  அவற்றில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக அதாவது விஸ்டா, விண்டோஸ் 7  போன்ற இயங்குதளங்களில் உள்ளது போன்று இல்லாமல் கீழே உள்ள படத்தில் உள்ளது போல இருப்பதை கவனித்திருக்கலாம்.


இப்படி உள்ள தோற்றத்தில் பணிபுரியும் பொழுது கண்கள் விரைவில் சோர்வடைந்து விடுகின்றன. இப்படி உள்ள தோற்றத்தை கீழே படத்தில் காண்பிக்கப் பட்டிருப்பது போல தெளிவாக மாற்ற என்ன செய்யலாம்.



மைக்ரோசாப்டின்  ClearType Tuner PowerToy என்ற கருவி இந்த வசதியை தருகிறது. இது ஒரு Control panel applet ஆகும். இதை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு உங்கள் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Clear Type Tuner என்ற அப்லெட் உருவாகியிருப்பதை கவனிக்கலாம். இதை ரன் செய்து தொடரும் விசார்டில் நமக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து முடித்தப்பின், இது போன்ற கண்களை உறுத்தாத தோற்றத்தை பெறலாம்.




.

விண்டோஸ் எக்ஸ்பியில் பலூன் அறிவிப்பை நீக்க


கணினி உபயோகிப்பவர்களில் சிலர் தாங்கள் உருவாக்கும் கோப்புகள், வலைப்பக்கங்களிலிருந்து சேமித்து வைக்கும் கோப்புகள், படங்கள் ஆகியவற்றை அவர்களது டெஸ்க் டாப்பிலேயே  சேமித்து வைத்து விடுகிறார்கள். சில சமயங்களில் திரை முழுக்க ஐகான்கள் நிரம்பி வழியும்.

இது போன்ற கோப்புகளை சில தினங்கள் கழித்து பார்க்கும் பொழுது 'இதை எதற்காக சேமித்து வைத்தோம்' என்பதுகூட மறந்து போகும். இப்படி கேட்பாரற்று கிடக்கும் கோப்புகளை அவதானித்துக் கொண்டிருக்கும் விண்டோஸ் இயங்குதளம் சும்மா இருக்குமா?

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை உபயோகிப்பவர்கள் சில சமயங்களில் "There are unused icons on your desktop" என்கிற பலூன் அறிவிப்பை கவனித்திருக்கலாம்.


இந்த பலூன் அறிவிப்பை எப்படி நீக்கலாம்?
Desktop -இல் ஐகான்கள் ஏதுமற்ற பகுதியில் வலது கிளிக் செய்து, Properties க்ளிக் செய்து Display Properties திரைக்கு வாருங்கள். இதில் Desktop டேபிற்குச் சென்று Customise Desktop பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொழுது திறக்கும் Desktop Items டயலாக் பாக்ஸில் General டேபில் “Run Annoying Desktop Cleanup Wizard every 60 days” என்பதற்கு நேராக உள்ள Check BoxUncheck செய்துவிடுங்கள்.



அவ்வளவுதான்! இனி மேலே குறிப்பிட்டது போன்ற பலூன் அறிவிப்பு வராது.


.

கோப்புகளை தேர்வு செய்ய Check Box வசதி

விண்டோஸ் 7 -இல் காப்பி செய்யவோ அல்லது வேறு ஏதாவது நடவடிக்கைக்காகவோ எக்ஸ்ப்ளோரரில் நமக்கு தேவையான கோப்புகளை மட்டும் தேர்வு செய்ய, வழக்கமாக நாம் Shift மற்றும் Control விசைகளை உபயோகித்து தேர்வு செய்வோம். இந்த முறையை நாம் கையாளும்போழுது, சில சமயங்களில் ஏதாவது தவறாக தேர்வு செய்து அவதிபடுவதுண்டு. ஆனால் இதற்கு மாற்றாக கோப்புகளை அல்லது ஃபோல்டர்களை தேர்வு செய்ய Check Box வசதி இருந்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்.

விண்டோஸ் 7 -இல் இந்த வசதி தரப்பட்டுள்ளது. இதனை எப்படி கையாளுவது என்று பார்க்கலாம். முதலில் Start Menu -வில் உள்ள Search Box -இல் Folder Options என தட்டச்சு செய்து என்டர் கொடுக்கவும்.



இனி திறக்கும் Folder Options டயலாக் பாக்ஸில் View டேபில் கிளிக் செய்து, Advanced Settings -இல் Use Check Boxes to Select Items என்பதை தேர்வு செய்து Apply கொடுத்து OK கொடுக்கவும்.



இனி நீங்கள் My Computer அல்லது டெஸ்க்டாப் சென்றால் கோப்புகளை தேர்வு செய்யும்பொழுது, அதனருகில் Check box தோன்றியிருப்பதை பார்க்கலாம்.



இதில் Select All வசதியும் தரப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பு. 


.

Wednesday 23 December, 2009

மெனு டூல்பாரை ஒரு சிறிய பட்டனில் பொதிய

நம்மில் சிலர் மடி கணினி உபயோகித்துக் கொண்டிருப்போம், இன்னும் சிலர் மினி லேப்டாப் உபயோகிக்கிறோம். இவற்றின் திரை சிறிதாக இருப்பதால், வலைப் பக்கங்களை திறக்கும் பொழுது, உலவியில் உள்ள மெனு பார் திரையின் ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்துக் கொள்கிறது. மேலும் உலவியில் உள்ள டூல்பார் மெனுவை அடிக்கடி நாம் உபயோகிப்பதில்லை.

நெருப்புநரி உலவியில் இந்த டூல்பார் மெனுவை முற்றிலுமாக நீக்காமல் அவை அனைத்தையும் ஒரு சிறிய பட்டனில் பொதிந்து, தேவையான பொழுது அந்த பட்டனை கிளிக் செய்து மெனு வசதிகளை பெற Compact Menu 2 என்ற நீட்சி தரப்பட்டுள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

கீழே உள்ள படம் நீட்சியை பதிவதற்கு முன்,



அடுத்து வரும் நீட்சியை பதிவதற்கான உறுதி படுத்தும் டயலாக் பாக்ஸில் Yes பொத்தானை கிளிக் செய்து நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.


Compact Menu 2 நீட்சியை பதிந்த பிறகு நெருப்புநரியின் Toolbar menu நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஒரு சிறிய பட்டன் தோன்றியிருப்பதை பார்க்கலாம்.


இனி அந்த பட்டனை கிளிக் செய்தால் டூல்பார் மெனு திறக்கும்.






.

Thursday 17 December, 2009

விண்டோஸ் விஸ்டாவில் UAC (User Account Control) ஐ நமது வசதிக்கேற்ப மாற்றியமைக்க

நமது கணினியில் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7  இயங்குதளத்தை உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஏதாவது கான்பிகரேஷன் ஐ மாற்றியமைக்க முற்படும் பொழுதோ அல்லது புதிய மென்பொருளை நிறுவும் பொழுதோ, UAC என்கிற User Account Control எச்சரிக்கை திரை தோன்றி எரிச்சலூட்டும்.



 இது நமது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருந்தாலும், சிலருக்கு இது தொல்லை தருவதாக இருப்பதால் இதை நமது வசதிக்கு ஏற்ப எப்படி மாற்றியமைப்பது என்று பார்க்கலாம்.


விண்டோஸ் விஸ்டாவில் UAC ஐ கணினியிலிருந்து முடமாக்க 

முதலில் Control Panel சென்று சர்ச் பாக்ஸில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இப்பொழுது வலது புற பேனில் User Accounts என்பதற்கு கீழாக “Turn User Account Control (UAC) on or off” என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் திரையில் “Use User Account Control (UAC)” என்ற Check Box ஐ Uncheck செய்து பின் OK கொடுங்கள். பிறகு உங்கள் கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் உங்கள் கணினியில் இனி UAC திரை வராது.



விண்டோஸ் ஏழில்  UAC வசதியை மாற்றியமைக்க 


Control Panel லில்  உள்ள சர்ச் பாரில் UAC என டைப் செய்து என்டர் கொடுக்கவும். இனி வரும் Change User Account Control Settings லிங்கில் கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் திரையில் ஸ்லைடரை மேலும் கீழுமாக மாற்றியமைப்பதன் மூலமாக இந்த UAC வசதியை நமது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம்.


முற்றிலுமாக ஸ்லைடரை கீழிறக்கி விட்டால் UAC முற்றிலுமாக disable ஆகிவிடும்.


கடந்த மார்ச் 2008 இல் துவங்கிய எனது இந்த ப்ளாக் இப்பொழுது ஒரு லட்சம் ஹிட்ஸ்களை தொடவிருக்கிறது. எனது பதிவுகளுக்கு ஆதரவளித்த தமிலிஷ், யூத்ஃபுல் விகடன், தமிழ்10 , திரட்டி, தட்ஸ்தமிழ், தமிழ் வெளி, Tamilars, உலவு, நியூஸ் பானை ஆகிய தளங்களுக்கும், பதிவுலகில் நானும் ஒரு பதிவர்தான் என சொல்லும் அளவுக்கு எனக்கு ஆதரவளித்து, ஊக்குவித்த சக பதிவுலக தோழர்களுக்கும், இனிய வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

அன்புடன்
சூர்யா கண்ணன்

.       



Wednesday 16 December, 2009

My Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்க

Windows XP -ல்  மை கம்ப்யூட்டரில் USB ட்ரைவை காணவில்லையா? My Computer -ல் USB Drive அல்லது External Drive, Memory Card  ஐ காண்பிக்க வில்லை எனில், உங்கள் இயங்குதளம் உங்கள் ட்ரைவ் லெட்டரை, ஏற்கனவே உபயோகத்தில் உள்ள ட்ரைவ் லெட்டரை கொண்டு மாற்றியிருந்தால் இப்படி நிகழ வாய்ப்பு இருக்கிறது.

மறுபடியும் தேவையான ட்ரைவ் லெட்டரைக் கொண்டு ரீ நேம் செய்வதன் மூலமாக இதனை சரி செய்யலாம்.

My Computer -ல் வலது கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யுங்கள்.


Computer Management திரையில் Disk Mangement என்பதை தேர்வு செய்யுங்கள்.



இப்பொழுது திரையில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் அதனுடைய Healthy status ஐயும் காணலாம்.



இதில் உள்ள SONY என்ற USB Drive இன் ட்ரைவ் லெட்டரை மாற்ற, அந்த லிஸ்டில் உள்ள அந்த குறிப்பிட்ட ட்ரைவில் வலது கிளிக் செய்து Context Menu வில் “Change Drive Letters and Paths…”  என்பதை கிளிக் செய்யுங்கள்.


 
இனி திறக்கும் டயலாக் பாக்ஸில் Change  பட்டனை கிளிக் செய்யுங்கள்.



இனி ட்ராப் டவுன் லிஸ்டில் இருந்து தேவையான ட்ரைவ் லெட்டரை தேர்வு செய்யுங்கள்.


பிறகு வரும் கன்பர்மேஷன் திரையில் Yes கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்.


.

Monday 14 December, 2009

நெருப்புநரியில் தானியங்கி வீடியோக்களை நிறுத்த

நெருப்புநரி உலவியில் நாம் உலவிக் கொண்டிருக்கும் பொழுது ஒருசில வலைபக்கங்களை திறக்கும் பொழுது அதில் உள்ள Youtube வீடியோக்கள் அல்லது வேறு எம்பெட் செய்யப்பட்ட வீடியோக்கள் அல்லது ஆடியோக்கள், நாமாக ப்ளே செய்யாமல்  அதுவாகவே ப்ளே ஆகத் துவங்கிவிடும்.

சில சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் பொழுது, ஸ்பீக்கர் உங்களுக்கு தெரியாமலேயே அதிக வால்யூமில் இருக்கும் பொழுது நிகழலாம்.

ஒருவேளை உங்கள் இணைய இணைப்பு குறைந்த ஜி பி   கொண்டதாக இருக்கலாம். இவ்வாறு இருக்கும் பொழுது, இப்படி தானாகவே  இயங்கும் வீடியோக்களால் உங்கள் இணைய கணக்கில் தேவையில்லாமல் கணிசமான டவுன்லோடிங் லிமிட்டை நீங்கள் இழக்க நேரிடும்.

இதற்கான தீர்வாக நெருப்பு நரிக்கான Stop Autoplay என்ற நீட்சி தரப்பட்டுள்ளது. இந்த நீட்சியை நிறுவிய பிறகு, வீடியோ உள்ள வலைப்பக்கத்தில் வீடியோ லோட் ஆகாது. அதற்கு பதிலாக அவ்விடத்தில் ஒரு சிகப்பு பெருக்கல் குறி காணப்படும், ஒரு வேளை அந்த வீடியோ உங்களுக்கு பார்க்கவேண்டுமெனில் இதை கிளிக் செய்தால் அதன் பிறகு வீடியோ லோட் ஆகி ஓட ஆரம்பிக்கும். 





            
.

Saturday 12 December, 2009

Microsoft Office 2007 -ல் Office 2003 -இன் மெனு வடிவை அமைக்க

நீங்கள் மைக்ரோசாப்ட் ஆஃபீஸ்  2007 உபயோகித்துக் கொண்டு இருக்கிறீர்களா? ரிப்பன் மெனுவில் நீங்கள் தேடும் கட்டளை எங்கு உள்ளது என்ற குழப்பம் தீர நெடு நேரமாகலாம். சில சமயங்களில் உங்கள் பாஸ் குறிப்பிட்ட சமயத்திற்குள்ளாக முடித்து தரச்சொல்லி  கொடுத்த வேலையை இந்த ரிப்பன் மெனு குழப்பத்தின் காரணமாக டென்ஷனாகி முடியை பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஒரு வேளை 2007 -ல்  2003 -இன் மெனு வடிவை அமைக்க வழி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறதா?

இதோ உங்களுக்காக.., UBitMenu Add-in.  இது ஒரு புதிய ரிப்பனில் 2003 மெனுவை உங்கள் 2007  அல்லது 2010 பதிப்பில் கொண்டு வரும். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த Add-in உங்கள் Word, Excel, மற்றும்  PowerPoint 2007 மற்றும் 2010 -ல் 2003 பதிப்பின் கிளாசிக் மெனுவை நிறுவும். அதுமட்டுமல்லாமல் 2007 -ல் உள்ள அனைத்து புதிய வசதிகளும் அப்படியே இருப்பது இதன் சிறப்பு. கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இதில் 2003 -nam மெனுவும் நிறுவப்பட்டுள்ளது, அதோடு 2007- ல் உள்ள PDF ஆக சேமிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.


Power Point -ல் எளிதாக வேலை செய்யுங்கள்.



இந்த UBitMenu நிறுவிய பிறகும் 2007-ல் தரப்பட்டுள்ள Mini Formatting Toolbar வசதி மாறாமல் அப்படியே உள்ளது இதன் சிறப்பு.


இந்த Add-in சொந்த உபயோகத்திற்கு மட்டும் இலவச உரிமத்துடன் தரப்பட்டுள்ளது.



 இந்த குழப்பம் சம்பந்தமாக எனது மற்றொரு பதிவு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 -ல் எளிதாக வேலை செய்ய
.

.

உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ பதிய முடியுமா?

தற்பொழுது நீங்கள் உபயோகித்துக் கொண்டிருக்கும் கணினி, விண்டோஸ் 7  பதிவதற்கு தகுதியானதாக உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது? இப்படி உங்கள் கணினி, விண்டோஸ் 7  இயங்குதளம் ஒழுங்காக வேலை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளதா, என்பதை உறுதி செய்யாமல் இதை நிறுவ முயற்சி செய்வது  உசிதமான காரியமல்ல.

இந்த சோதனையை செய்வதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள Windows 7 Upgrade Advisor என்ற சிறிய மென்பொருள் உதவுகிறது. இதை கீழே தரப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதை பதிந்து கொள்வது எளிதானதுதான்.








இந்த சோதனை முடிவடையும் நேரம் உங்கள் கணினியின் வேகத்தை பொறுத்து மாறுபடும்.




.


Friday 11 December, 2009

விண்டோஸ் விஸ்டா/ஏழில் 50 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.

விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் ஏழு இயங்குதளமாகக் கொண்ட உங்கள் கணினியில், CD/DVD ஐ காண்பிப்பதில்லையா? டெஸ்க்டாப்பிலிருந்து  Recycle bin ஐ காணவில்லையா? Task Manager மற்றும் Registry Editor திறப்பதில்லையா?

இது போன்ற 50 பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரே ஒரு சிறிய வெறும் 529 KB மட்டுமே அளவுள்ள இலவச மென்பொருள் FixWin உங்களுக்காக..,


தரவிறக்கம் செய்தபின் அதில் உள்ள Readme கோப்பை முதலில் படித்தப்பின் பயன் படுத்தவும்.



.

Tuesday 8 December, 2009

படங்களை தேவைக்கேற்ற அளவுகளுக்கு மாற்ற

 நாம் டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள்  கேமராவில் நாம் அமைத்துள்ள மாற்றங்களுக்கு ஏற்றவாறு கோப்புகளின் அளவுகள் மாறுபடும். சில சமயங்களில் 2  எம் பி க்கும் மேலாக இருக்கலாம்.

இப்படிப்பட்ட கோப்புகளை மின்னஞ்சல் செய்யும் பொழுது குறைந்த வேகமுள்ள இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த படங்களை சிறிதாக்க மைக்ரோசாப்டின் பவர் டாய்ஸ் இமேஜ் ரீசைசர் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.

இதை உங்கள் கணினியில் நிறுவியவுடன், உங்களுக்கு தேவையான படத்தை வலது கிளிக் செய்தால் Context menu வில் Resize Pictures என்ற வசதி தோன்றியிருப்பதை காணலாம்.



இந்த வசதியை கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் தரப்பட்டிருப்பது போல திறக்கும் விண்டோவில், உங்களுக்கு தேவையான அளவுகள் மற்றும் வசதிகளை தேர்வு செய்து பயனடையலாம்.







.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)