Monday 31 August, 2009

நெருப்பு நரி உலவியில் எளிதாக உலவ சில வழிமுறைகள்..,

உலவும் திரையின் அளவை மேலும் பெரிதாக்க..,
View - Toolbars - Customize சென்று "Use Small Icons". என்பதை தேர்வு செய்யுங்கள்.

கீபோர்டு ஷார்ட்கட்:-

Space: Scroll down செய்ய.
Shift + Spacebar: Scroll up செய்ய.
Ctrl + D: வலைப்பக்கத்தை புக்மார்க்ஸ் செய்ய.
Ctrl + T: புதிய டேபை திறக்க.
Ctrl + K: Search Box ஐ ஃபோகஸ் செய்ய.
Ctrl + L: Address bar க்கு செல்ல.
Ctrl + +: எழுத்துக்களின் அளவை பெரிதாக்க.
Ctrl + -: எழுத்துக்களின் அளவை சிறிதாக்க.
Ctrl-W: Current tab ஐ மூட.
F5: Refresh அல்லது Reload செய்ய.
Alt + Home: உங்களுடைய homepage இற்கு செல்ல.

Ctrl + Tab: அடுத்த டேபிற்கு செல்ல.
Ctrl + Shift + Tab: முந்தைய டேபிற்கு செல்ல.
Ctrl +1-9: குறிப்பிட்ட டேப் எண்ணிற்கு செல்ல.,




ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கத்திற்கு செல்ல (உதாரணமாக GOOGLE) அட்ரஸ் பாரில், www.google.com என டைப் செய்வார்கள். எளிதான வழி.,
அட்ரஸ் பாரில் google என டைப் செய்து Ctrl+Enter கீயை அழுத்தினால் அதுவாகவே "www" மற்றும் ".com" ஐ சேர்த்துக்கொள்ளும்.
தேவையான வலைப்பக்கம் ".net" ஆக இருந்தால் Shift+Enter. ".org" ஆக இருந்தால் Ctrl+shift+Enter.

மௌஸ் ஷார்ட்கட்:-

தேவையான லிங்கில் ஸ்க்ரோல் பட்டனை (Center Button) அழுத்தினால் புதிய டேபில் வலைப்பக்கம் திறக்கும்.

Shift + Wheel down: முந்தைய பக்கத்திற்கு செல்ல.
Shift + Wheel up: அடுத்த பக்கத்திற்கு செல்ல.
Ctrl + Wheel up: எழுத்துக்களை சிறிதாக்க.
Ctrl + Wheel down: எழுத்துக்களை பெரிதாக்க.
டேபில் வைத்து ஸ்க்ரோல் பட்டனை அழுத்தினால் அந்த டேப் மூடிவிடும்.


உபுண்டு Transformation Pack உங்களுக்காக..,

விண்டோஸ் Vista விற்கான Ubuntu Transformation Pack இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



சக பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு.

வணக்கம்.

தமிழ் 10 தளத்தில் இந்தவார 'கிரீடம்' எனக்கு தந்து கௌரவித்திருக்கிறார்கள்.

இந்த கிரீடத்திற்கு என்ன தெரிவு செய்த தமிழ் 10 தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றி!.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களோடு பகிர்வதோடல்லாமல், என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணமான சக பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,
சூர்யா கண்ணன்


குறிப்பு:-
விரிவான இடுகை இடுவதற்கு நேரம் போதாமையால், இடவில்லை. நண்பர் திரு. கிருஷ்ணமூர்த்தி, கேட்டிருந்தது போல் 'தொழில்நுட்பம் எனக்கு போரடிக்கவில்லை' (தொழிலே அதுதானே!, ) விரிவான இடுகையோடு விரைவில் வருகிறேன்.

Saturday 29 August, 2009

அருமையான கணினி Morphing

அருமையான கணினி Morphing




இதை அவசியம் படிங்க.

ஒன்று எங்கள் சாதியே..


Friday 28 August, 2009

Cut & Paste?..,

Cut & Paste..,


Align Left


.

உலகத்தின் முதல் லேப்டாப்

உலகத்தின் முதல் லேப்டாப் ஏப்ரல் 1981 ல் உருவாக்கப்பட்டது.
இதன் பெயர் Osbourne 1.



5" மானிட்டர்.
64K RAM
Dual 5 1/4" - 91 K Floppy Drive
24.5 pounds weight.
விலை $1795.00

உண்மைதானா?

Wednesday 26 August, 2009

உபுண்டு - Synaptic Package Manager ஒரு அலசல்.

apt-get எனப்படும் Command line கருவியின் எளிமையாக்கப்பட்ட Graphical வடிவமே Synaptic Package Manager ஆகும். (விண்டோசில் Add/Remove Programs போன்றது).

இந்த விண்டோ மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

Package Browser இடது புறமும், Package List வலது மேல் புறத்திலும், Package Details வலது கீழ் புறமும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாம் புதிய மென்பொருள் பேக்கேஜ்களை Install செய்வது மற்றும் ஏற்கனவே பதிந்த பேக்கேஜ்களை remove, configure மற்றும் upgrade அல்லது மொத்த உபுண்டு இயங்குதளத்தையே upgrade செய்து கொள்ளலாம்.

மேலும் புதிதாக நிறுவப்போகும் பேக்கேஜிற்கும் ஏற்கனவே நிறுவியுள்ள பேக்கேஜிற்கும் உள்ள தொடர்புகளை மற்றும் முரண்பாடுகளை அறிவது போன்றவற்றை இந்த Synaptic Package Manager உள்ளடக்கியுள்ளது.

உபுண்டுவில் System > Administration > Synaptic Package Manager. என்பதை கிளிக் செய்தால் Synaptic Package Manager ஐ திறக்கலாம்.



ஒரு குறிப்பிட்ட பேக்கேஜின் மேலதிக விவரங்களை அறிய அந்த குறிப்பிட்ட package ல் வலது கிளிக் செய்து Properties சென்றால் தெரிந்து கொள்ளலாம்.



புதிய பேக்கேஜை நிறுவ,

  • Reload என்ற பொத்தானை அழுத்தவும் அல்லது Ctrl+R அழுத்தவும்.
  • தேவையான பேக்கேஜை வலது கிளிக் செய்து context menu வில் உள்ள Mark for Installation என்பதை கிளிக் செய்யவும். (நீங்கள் தேர்ந்தெடுத்த பேக்கேஜிற்கு, துணை பேக்கேஜ் ஏதும் தேவைப்பட்டால் அல்லது ஏதாவது Conflict இருந்தால் கீழ் கண்ட டயலாக் பாக்ஸ் வரும்).
  • இதில் Mark என்பதை கிளிக் செய்யவும்.
  • இதே போன்று தேவையான பேக்கேஜ்களை தேர்ந்தெடுத்த பிறகு Apply கிளிக் செய்யவும்.
  • Apply the following changes என்ற டயலாக் பாக்ஸிலும் Apply என்பதை கிளிக் செய்யவும்.
பேக்கேஜ்களை நீக்க,

  • உங்கள் கணினியிலிருந்து நீக்க விரும்பும் பேக்கேஜை வலது கிளிக் செய்து Context menu வில் Mark for removal என்பதை கிளிக் செய்யவும்.
  • இதே போன்று நீக்க விரும்பும் பெக்கேஜ்களைஎல்லாம் மார்க் செய்த பிறகு Apply கொடுக்கவும்.
  • அனைத்தையும் உறுதி செய்த பிறகு, வரும் உறுதிபடுத்தும் டயலாக் பாக்ஸில் Apply என்பதை கிளிக் செய்யவும்.
பேக்கேஜ்களை அப்கிரேடு செய்ய,
  • மேற்கண்ட முறையிலேயே Mark for upgrade என கொடுக்கலாம்.

இது ஒரு சிறு பகுதி மட்டுமே, நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் அலசலாம்.







ஒரே கிளிக்கில் கணினியை க்ளீன் செய்வது எப்படி?

உங்கள் கணினியை சுத்தம் செய்து ரொம்ப நாளாகிறதா?
கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்.


.

Tuesday 25 August, 2009

நெருப்பு நரி உலவியில் Smooth Wheel நீட்சி.,

நம்மில் பலர் அதிக நேரம் இணையம் உபயோகிப்பவர்களாக இருப்பதால், மௌஸில் ஸ்க்ரோல் சக்கரத்தை உருட்டி உருட்டியே நடுவிரல் ஒருவழியாகி விடுகிறது. விரல்களில் குடைச்சல் மற்றும் வலி அடிக்கடி வந்து போவது வாடிக்கை.

எனக்கு தொழிலே கணினி என்றாகிவிட்ட பிறகு வலியும், குடைச்சலும் பழக்கமாகிவிட்டது. எப்பொழுதாவது, மருந்து கடைகளில் கிடைக்கும் Finger Grip எனும் சாதனத்தை உபயோகிப்பேன்.

சரி!

இதற்கு மென்பொருள் தீர்வு ஏதாவது உண்டா?

உண்டு! நீங்கள் நெருப்பு நரி உலவியை உபயோகிப்பவராக இருந்தால்..,

கீழ்கண்ட சுட்டியிலிருந்து Smooth Wheel எனும் நீட்சியை பதிந்து கொள்ளுங்கள்.

http://clicks.aweber.com/y/ct/?l=MKKCx&m=1a3Dyc1_QzfhRm&
b=fakc1sMrmGXMunNjc2P_eQ


பிறகு,

Tools -> Add-ons -> Extensions சென்று SmoothWheel(AMO) என்பதில் Options - ல் கிளிக் செய்யவும்.

இதில் Basic Tab இற்கு சென்று Scroll Speed, Step Size Hotkey போன்றவற்றை நம் வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

Scroll Speed என்பதின் Drop Down மெனுவில் கீழ்கண்ட Option கள் தரப்பட்டிருக்கும்.

Scroll Step Size - Drop Down மெனுவில் ஒரு ஸ்டெப்இற்கு எவ்வளவு பக்கங்கள், என்பது மட்டுமன்றி எவ்வளவு ஸ்க்ரீன் பிக்சல் கள் என்பதை கூட மாற்ற முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

Advanced Tab இற்கு சென்றால் Adaptive Duration, Adaptive Step, Bigger Step, Smaller Step, FPS Limit மற்றும் Enable Soft-edge ஆகியவற்றை மாற்றியமைப்பதன் மூலம், எளிதாக, சிரமமில்லாமல் 'நடுவிரல் மட்டும் நான்கடி வளர்ந்து விடுமோ' என்ற பயமில்லாமல் ஸ்க்ரோல் செய்யலாம்.

ஒருவேளை இந்த டிராப் டவுன் லிஸ்டில் உள்ள ஏதாவது ஒன்றை மாற்றினால் என்ன ஆகும் என்ற குழப்பம் இருந்தால் உங்களுக்கு சந்தேகம் உள்ள Option -ல் மௌசின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதற்கான விளக்கம் உங்கள் திரையில் தெரியும். (சூப்பர்!)





Monday 24 August, 2009

உபுண்டு லினக்ஸ் ஐ எளிதாக Install செய்வது எப்படி?




Thursday 20 August, 2009

நெருப்பு நரி உலவியில் Close செய்த TAB மற்றும் Window -ஐ மறுபடியும் திறக்க

நாம் Fire Fox - உபயோகித்துக் கொண்டிருக்கும்பொழுது, ஏதாவது ஒரு TAB ஐ அல்லது Window ஐ தவறுதலாக Close செய்து விட்டு, பிறகு அந்த TAB / Window - திரும்ப கிடைத்தால் நன்றாக இருக்குமே என யோசித்தவர்களுக்கு.

Fire Fox 3.5

History Menu விற்கு சென்று Recently Closed Tabs / Recently Closed Windows -ல் கிளிக் செய்தால் போதும் Restore செய்து விடலாம்.




Shortcut Keys:-

Recently Closed Tabs - Ctrl + Shift + T
Recently Closed Windows - Ctrl + Shift + N

Monday 17 August, 2009

AutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க

நண்பரின் கேள்வியும், என் அறிவுக்கு எட்டிய பதிலையும் கீழே தந்துள்ளேன். (மற்றவர்களுக்கும் உபயோகப்படட்டும் என்று)

அன்பு சகோதரர் சூர்யகண்ணனுக்கு...
AutoCad ல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.
என்னுடைய DWGS ஐ Read only
shapeக்கு மாற்றவேண்டும். மற்றவர்கள்
என்னுடைய dwg ஐ Open செய்யலாம்
objectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.
முக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]
குறிப்பு:
right click-properties-tic read only என்ற முறையில் வேண்டாம்.
வேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
ஆஷிக்


கேள்வியின் சாரம்சம்:-

உங்களுடைய வரைபடத்தை வேறு யாரும் எடிட் செய்ய கூடாது.
Object களின் அளவுகளை (Distance, Area, Volume Etc..,) தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கவேண்டும்.
Print செய்யும்படியாக இருக்கவேண்டும்.

வழி ஒன்று:-

உங்கள் வரைபடத்தை DWF கோப்பாக Export செய்வது.

இந்த முறையில் உருவாக்கப்படும் DWF கோப்பானது AutoDesk DWF Viewer -ல் திறக்கும்படியாக இருக்கும்.

இந்த கோப்பை பிரிண்ட் செய்ய இயலும்.
எடிட் செய்ய இயலாது.

ஆனால் Object களின் அளவுகளை பார்க்க முடியாது என்பதனால் இந்த வழி உங்களுக்கு தீர்வாக அமையாது.

வழி இரண்டு:-

CADLock மற்றும் DWGLock போன்ற மென்பொருளை உபயோகிக்கலாம்.
இந்த வழியில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆனால் இந்த மென்பொருட்கள் எதுவுமே இலவசம் கிடையாது. நீங்கள் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.

இந்த மென்பொருட்களின் Trial Version களை தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கீழே..,

CADLock

DWGLock

AutoCAD லேயே ஏதாவது ட்ரிக் இருக்கா, என ஆராய்ந்து பார்த்ததன் விளைவு..,

வழி மூன்று:-

தேவையான வரைபடத்தை திறந்து கொண்டு,
Wblock கட்டளையை கொடுத்து, உங்கள் வரைபடத்தை ஒரு மற்றொரு கோப்பில் இன்செர்ட் செய்யும்படியான Block ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்பொழுது, ஒரு புதிய Drawing File ஐ திறந்து, அதன் Command Window வில் MINSERT என்ற கட்டளையை கொடுத்து, Number of Row - 1 எனவும், Number of Columns - 2 எனவும் Specify distance between columns - 0 எனவும் கொடுத்து insert செய்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள கட்டளை வரிகளை கவனிக்கவும். (NEW BLOCK என்பது wblock கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட Drawing File ஆகும்)

Command: MINSERT
Enter block name or [?] : NEW BLOCK

Units: Inches Conversion: 1.0000
Specify insertion point or [Basepoint/Scale/X/Y/Z/Rotate]:
Enter X scale factor, specify opposite corner, or [Corner/XYZ] <1>:
Enter Y scale factor :

Specify rotation angle <0>:

Enter number of rows (---) <1>: 1

Enter number of columns (|||) <1>: 2

Specify distance between columns (|||): 0



இந்த கோப்பை தேவையான பெயரில் சேமித்துக் கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.


இந்த முறையில் உருவாக்கப்படும் வரைபடத்தை Explode செய்ய முடியாது.
எடிட் செய்ய முடியாது.
பிரிண்ட் எடுக்கலாம்.
அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த வழி உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்.


இந்த ட்ரிக்கை கண்டறிய என்னை யோசிக்க வைத்த நண்பர் திரு. ஆஷிக் அவர்களுக்கு நன்றி!

Prevent/Protect copy, edit your AutoCAD drawings

Thursday 13 August, 2009

Word அல்லது PowerPoint 2007 -ல் Excel Worksheet ஐ உள்ளிணைக்க..,

Insert Excel Worksheet in MS Word / Power Point


முதலில் நீங்கள் எந்த வேர்டு டாக்குமென்டில் அல்லது பவர்பாயின்ட் பிரசன்டேஷனில் எக்சல் வொர்க் ஷீட்டை இணைக்க வேண்டுமோ அந்த கோப்பை திறந்து கொள்ளுங்கள். இதில் Insert மெனுவிற்கு சென்று Object என்பதை தேர்வு செய்யுங்கள்.


Insert Object டயலாக் பாக்ஸில் 'Microsoft Office Excel Worksheet' என்பதை தேர்வு செய்யுங்கள்.



இப்பொழுது உங்களால் புதிய எக்சல் வோர்கஷீட்டில் டேட்டாக்களை பதிய முடியும். அதோடு Excel Control tools அடங்கிய ரிப்பனும் தோன்றும். இதை உபயோகித்து எளிதாக வேர்டு அல்லது பவர் பாயிண்டில் உள்ளிணைக்கப் பட்ட எக்சல் வோர்கஷீட்டில் எளிதாக பணிபுரியலாம்.


ஏற்கனவே உருவாக்கப்பட்ட வோர்கஷீட்டை இணைக்க Insert மெனுவில் Object தேர்வுசெய்து 'Create from File' என்பதை தேர்ந்தெடுத்து 'Browse' பொத்தானை கிளிக் செய்து தேவையான வோர்கஷீட்டை இணைக்கலாம்.



வேர்டில் உள்ளிணைக்கப்பட்ட எக்சல் வோர்கஷீட்..,





Tuesday 11 August, 2009

MS Outlook -ல் இமெயில் மற்றும் தொடர்புகளை Backup எடுப்பது எப்படி?

MS Outlook ஐ பொறுத்தமட்டில் உங்களுடைய இமெயில் மற்றும் தொடர்பு விவரங்கள் அனைத்தும் Personal Folders File என்ற அமைப்பில் .pst என்ற நீட்சியுடன் உங்கள் கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

உங்கள் ஹார்ட் டிஸ்கை ஃபார்மேட் செய்வதாக இருந்தாலோ, அல்லது, ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு உங்களுடைய MS Outlook -ல் உள்ள மெயில் மற்றும் தொடர்புகளை பதிவதாக இருந்தாலோ இந்த ஒரு கோப்பை காப்பி செய்வதன் மூலம் எளிதாக செய்ய முடியும். இந்த .pst நீட்சியுள்ள கோப்பை எப்படி பேக்கப் எடுப்பது என்று பார்ப்போம்.

முதலாவதாக, நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் MS Outlook, MS Exchange, Windows Messaging போன்றவற்றை மூடிவிடுங்கள்.

Control Panel க்கு சென்று Classic View வில் தான் உள்ளதா? என உறுதிப்படுத்தி, இல்லையெனில் இடது புற பேனில் Classic View என்பதனை சொடுக்கி Control Panel ஐ Classic View விற்கு மாற்றி விடுங்கள்.



இதில் Mail ஐ திறந்து, 'Show Profiles' என்பதை கிளிக் செய்யுங்கள். இவற்றில் உங்களுக்கு தேவையான Profile ஐ தேர்வு செய்து Properties என்ற பொத்தானை அழுத்தவும். இனி வரும் டயலாக் பாக்ஸில் 'Data Files' என்பதை கிளிக் செய்து 'Name' இற்கு கீழாக உள்ள Personal Folders Service ஐ தேர்ந்தெடுக்கவும்.



(ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட Personal Folders Service கள் உங்கள் Profile -ல் இருந்தால், ஒவ்வொரு .pst file ஐயும் தனித்தனியாக காப்பி எடுக்க வேண்டும்.)



இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Settings என்ற பொத்தானை கிளிக் செய்து, இதில் File Name என்பதற்கு நேராக குறிப்பிடப்பட்டிருக்கும் .pst file இன் இருப்பிடத்தை குறித்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக, 'C:\Documents and Settings\......\Local Settings\Application Data\Microsoft\Outlook\Outlook.pst')


பிறகு, My Computer அல்லது Windows Explorer உபயோகித்து மேலே குறிப்பிட்ட ஃபோல்டருக்கு சென்று அந்த ஃபைலை பென் ட்ரைவிலோ அல்லது வேறு ஏதாவது மீடியாவிலோ காப்பி செய்து கொண்டு பயனடையலாம்.


How to Backup Outlook email & Address Book.


Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)