Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Wednesday, 17 August 2011

Facebook: நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி!..

இணையத்தில் Facebook போன்ற தளங்களில் நாம் பணிபுரியும் பொழுது அவற்றில்  உள்ள படங்களின் thumbnail மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றை தெளிவாக நம்மால் காண இயலுவதில்லை. இது போன்ற தளங்களில் உள்ள சிறு படங்களை முழுமையாக காண உதவும் நெருப்பு நரிக்கான நீட்சி Thumbnail-Zoom மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

Add to Firefox பொத்தானை அழுத்தி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொள்ளுங்கள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


Status bar இல் இதற்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம். 


இந்த நீட்சி Facebook மட்டுமின்றி Twittter, Picassa, Flickr, Wikipedia போன்ற பல தளங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற தளங்களில் உலாவும் பொழுது, குறிப்பிட்ட Thumbnail மீது மவுசை கொண்டு செல்கையில் அந்த படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும் நமக்கு காண கிடைக்கிறது. 

  



.

Friday, 5 August 2011

Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய

Facebook சமூக இணையத்தில் வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நண்பருடன் மட்டமே சாட் செய்யும் வசதி உள்ளதாக மட்டுமே நம்மில் பலரும்  அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் உள்ள நாம் விரும்பும் பல நண்பர்களை ஒரு குழுவாக சேர்த்து சாட் செய்ய முடியும் என்பது நம்மில் சிலருக்கு தெரியாது. .
Facebook கணக்கில் நுழைந்து கொண்டு, ஆன்லைனில் இருக்கும் விரும்பிய நண்பர் ஒருவரை சாட்டில் க்ளிக் செய்யுங்கள். 





இப்பொழுது திறக்கும் சாட் பெட்டியில் வலது மேற்புறமுள்ள கியரை க்ளிக் செய்து Add Friends to Chat.. என்பதை க்ளிக் செய்யுங்கள். 





கீழே தோன்றும் பெட்டியில் நீங்கள் சாட் குழுவில் இணைக்க விரும்பும் நண்பர்கள் பெயரை ஒவ்வொன்றாக டைப் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 




அவ்வளவுதான் இனி இப்பொழுது உருவாக்கிய குழுவில் உள்ள நண்பர்களிடம் ஒரே சமயத்தில் சாட் செய்திட முடியும். 


.

Tuesday, 18 January 2011

Facebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க

வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.


ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.


இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..




.

Friday, 14 January 2011

Google Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி!

சமீப காலமாக, தமிழ் உட்பட பல இந்திய மொழி வலைப்பக்கங்கள் யுனிகோட் வடிவமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒரு சில வலைப்பக்கங்கள், யுனிகோட் அல்லாத பழைய எழுத்துருக்களை பயன்படுத்தியே உருவாக்கப்படுவதால், நமது உலாவிகளில் அந்த பக்கங்களை வாசிப்பதற்கு, அந்த குறிப்பிட்ட எழுத்துருவை ந்மது கணினியில் நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 


இல்லையெனில் அவற்றை வாசிப்பது சாத்தியமற்று போகிறது. 


இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவியில் (நெருப்புநரி உலாவிக்கும்) எளிதான,சரியான இலவச தீர்வாக அமைவது Padma Transformer for Indic Scripts  நீட்சியாகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த நீட்சியை தரவிறக்கி Google Chrome உலாவியில் நிறுவியபிறகு, இதற்கான அறிவிப்பு தோன்றுவதை கவனிக்கலாம்.


இனி அந்த வலைப்பக்கங்களை திறக்கையில், எழுத்துருக்களை நிறுவாமலேயே தெளிவாக வாசிக்க இயலும்.


எழுத்துருக்களை தரவிறக்க தேவையில்லை.



அனைவருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்! 


.

Wednesday, 15 December 2010

Gmail Tricks: பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்-(புதியவர்களுக்கு)

ஒரு பதிவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், உங்களது இடுகைக்கு வருகின்ற பின்னூட்டங்கள், மட்டுறுத்தப்பட்டிருந்தாலும் இல்லையெனிலும்,  அதற்கான அறிவிப்பு மின்னஞ்சல் (ஏற்கனவே பிளாக்கர் செட்டிங்க்ஸ் கொடுத்திருப்பதனால்) மூலமாக உங்கள் ஜிமெயிலுக்கு வரும். அதனோடு சேர்த்து உங்களுக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களும் இருக்கும்.      





ஒரு சில சமயங்களில் இந்த பின்னூட்டங்களுக்கான மின்னஞ்சல்கள் நிறைய சேர்ந்து விடும். இவற்றை மட்டும் மொத்தமாக தேர்வு செய்து எப்படி டெலிட் செய்வது என்பதை பார்க்கலாம். உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, Search Mail பட்டனுக்கு முன்பு உள்ள பெட்டியில் new comment on your post என டைப் செய்து Search Mail   பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது, பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்கள் மட்டும் பட்டியலில் கிடைக்கும். இவற்றை மொத்தமாக தேர்வு செய்து டெலிட் செய்து கொள்ளலாம். 


இதே முறையில் தேவைப்படும் மின்ன்னஞ்சல்களை எளிதாக கையாள முடியும். இதென்ன மொக்கையான இடுகை என்று கேட்பவர்கள், தலைப்பில் புதியவர்களுக்கு என்று குறிப்பிட்டிருப்பதை கவனித்து விட்டு, ஓட்டு போட்டு செல்லவும்..
.

Saturday, 11 December 2010

Gmail Tricks: காலம் நேரம் பார்ப்பது நன்று

நாம் நமது தனிப்பட்ட மற்றும் அலுவல் சம்பந்தமான தொடர்புகளுக்கு, ஜிமெயில் சேவையினை பயன்படுத்தி வருகிறோம். 


 நமக்கு வருகின்ற மின்னஞ்சல்கள் வெவ்வேறு நாடுகளிலில் உள்ள தொடர்புகளிலிருந்து வருகிறது. வழக்கமாக ஜிமெயில் கணக்கில் வரும் மின்னஞ்சல்களில் நமது இருப்பிடத்தின் நேரம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. 
ஒரு சில சமயங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சலை பார்த்தவுடன் அவரை உடனடியாக தொலைபேசியிலோ அல்லது சாட்டிங்கிலோ தொடர்பு கொள்வதற்கு முன்பாக, அவர் மின்னஞ்சல் அனுப்பிய நாட்டின் நேரத்தை அறிந்து கொண்டால், இந்த சமயத்தில் அவரை தொடர்பு கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை முடிவெடுப்பதற்கு வசதியாக இருக்கும். இந்த வசதியை ஜிமெயிலில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்யுங்கள், பிறகு திறக்கும் திரையில் Labs என்ற பகுதிக்குச் சென்று, அங்கு உள்ள பட்டியலில், Sender Time Zone பகுதிக்குச் சென்று, Enable செய்து, அந்த பக்கத்தின் இறுதியில் உள்ள Save Changes பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.


இனி உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனுப்பபட்ட பகுதியின் நேரத்தை எளிதாக அறிந்து கொண்டு, தேவையற்ற நேரத்தில் தொல்லை செய்வதை தவிர்க்கலாம்.




.

Google Chrome: பயனுள்ள Hover Zoom நீட்சி!

நாம் வழக்கமாக Google, Yahoo, Facebook, Twitter, Flickr போன்ற தளங்களில் உலாவும் பொழுது, அதில் உள்ள படங்கள் Thumbnail ஆக இருப்பதால், ஒவ்வொரு முறையும் அதை க்ளிக் செய்து, பெரிதாக்கி பார்க்கவேண்டியுள்ளது.


இதற்கு தீர்வாக அமைவது, கூகுள் க்ரோம் உலாவிக்கான Hover Zoom நீட்சி! (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)

இந்த நீட்சியை தரவிறக்கி க்ரோம் உலாவியில் நிறுவிய பிறகு, இதற்கான ஐகான் அட்ரஸ் பாரின் அருகில் தோன்றியிருப்பதை கவினிக்கலாம்.

இனி நீங்கள் திறக்கும் வலைப்பக்கங்களில் இந்த நீட்சி செயல்பட முடியும் என்றால் இது அட்ரஸ் பாரின் வலது புறத்தில் தோன்றும். வலைப்பக்கங்களை திறக்கும் பொழுது, படங்களின் மீது மவுசின் கர்சரை கொண்டு செல்கையில் படங்கள் தானாகவே அதன் உண்மையான அளவிற்கு zoom செய்யப்படும்.


இந்த நீட்சி Facebook, Google, Twitter போன்ற தளங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.





.

Saturday, 4 December 2010

Google Chrome: படங்களை கையாளுவதற்கான அருமையான நீட்சி!

வழக்கமாக படங்களுக்கான Google Images போன்ற தளங்களில் Thumbnail view வில் காட்டப்படும் படங்களில் நமக்கு தேவையான படங்கள் ஒவ்வொன்றாக க்ளிக் செய்து மற்றொரு டேபில் பெரிதாக பார்க்க வேண்டியுள்ளது. 


இந்த பணியை எளிதாக்க கூகுள் க்ரோம் உலாவிக்கான iSlide நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறாக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)



இந்த நீட்சியை தரவிறாக்கி உங்கள் க்ரோம் உலாவியில் நிறுவிகொண்டவுடன், இதன் ஐகான் டூல்பாரில் தோன்றியிருக்கும்.


இனி நீங்கள் thumbnail படங்கள் உள்ள வலைப்பக்கங்களில் உலாவும்பொழுது, இந்த பொத்தானை அழுத்தினால், அடுத்த டேபில் அந்த குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள Thumbnail படங்கள் அதனுடைய உண்மையான அளவில் Slide show ஆக உருவாக்கப்பட்டு நமது திரையில் தோன்றும்.
எத்தனை படங்களை உள்ளடக்கியுள்ளது என்பதையும் இந்த ஐகானில் தோன்றும்.


மேலும் இந்த ஐகானை வலது க்ளிக் செய்து Options பகுதிக்கு சென்று நமக்கு தேவையான பல்வேறு மாறுதல்களை செய்து கொள்ளலாம்.


இந்த வசதிக்கான ஷார்ட்கட் கீகளின் பட்டியல்.



.

Tuesday, 30 November 2010

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

நாம் நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,


உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.


இதை செய்து முடித்த பிறகு  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்து விட்டு மறுபடியும் வந்து பார்க்கையில் அந்த குறிப்பிட்ட ட்ரைவ் My Computer லிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் அந்த குறிப்பிட்ட ட்ரைவை தோன்ற வைக்க இதே மென்பொருளை இயக்கி, குறிப்பிட்ட ட்ரைவிற்கு நேராக உள்ள டிக் மார்க்கை நீக்கிவிட்டு,  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off  செய்தால் போதுமானது.



 
.

Thursday, 25 November 2010

Facebook: உலாவியின்றி Desktop - இல் Chat செய்ய

Facebook சமூக இணையதளத்தில் Chat செய்வதற்கு நாம் ஏதேனும் ஒரு உலாவியில் ( Browser) Facebook தளத்திற்குள் நுழைந்த பின்னரே Chat செய்யும் வசதி உண்டு. அப்படி இல்லாமல் Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று Browser இல்லாமல், Desktop இல் chat செய்யும் படி உருவாக்கப் பட்டுள்ள ChitChat for Facebook எனும் இலவச மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த மென்பொருள் கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளும் பொழுது, Installation Wizard இல் Install Auto Complete Pro எனும் வசதியை வேண்டாமென்றால் அதனை நீக்கி விடுங்கள்.


நிறுவி முடித்த பிறகு, உங்கள் Facebook பயனர் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள்.


இனி  Yahoo messenger / Gtalk / MSN Messenger போன்று உலாவியின்றி, டெஸ்க்டாபில் Chat செய்ய முடியும்.


இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களுடன் chat செய்யும் பொழுது, ஒவ்வொரு Chat திரையையும் ஒவ்வொரு டேபில் திறந்து கொள்ளும் வசதி இதில் உண்டு. இந்த இடுகை எழுதும் பொழுது, எந்த நண்பர்களும் ஆன்லைனில் இல்லாத காரணத்தினால், கீழே உள்ள படத்தை கூகுள் இமேஜஸ் லிருந்து சுட்டது.





.

Wednesday, 24 November 2010

Facebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி?

Facebook சமூக வலைப்பின்னல் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. Facebook இல் நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் chat செய்யும் பொழுது, அந்த முழு உரையாடலையும், ஆவணபடுத்த விரும்பி அவற்றை Record செய்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் உபயோகிக்க நெருப்பு நரி (FireFox) உலாவியில் Facebook Chat History Manager எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 



(231,784 பயனாளர்கள் உபயோகிக்கும் இந்த நீட்சியின் தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்பு நரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, முதலாவதாக செய்ய வேண்டியது.. Tools menu விற்கு சென்று Facebook Chat Manager மற்றும் Get Facebook ID ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் வசன பெட்டியில் Facebook -இல் லாகின் செய்து, Allow என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து உங்கள் Facebook இன் ID ஒரு வசனப் பெட்டியில் தோன்றும், இதனை தேர்வு செய்து காப்பி செய்து கொள்ளுங்கள்.



மறுபடியும் Tools - Facbook Chat Manager - Create Account க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில், ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் Facebook ID ஐ பேஸ்ட் செய்து, உங்களுக்கான பயனர் கணக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.



இனி Facebook இல் உங்கள் உரையாடல்கள் (Chat) அனைத்தும் பதிவு செய்யப்படும். இனி பிறகு உங்களுக்கு இந்த உரையாடல்கள் தேவைப்படும் பொழுது, Tools - Facebook Chat Manager -View History க்ளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+Alt+F கீகளை அழுத்துவதன் மூலமாகவோ, சேமிக்கப்பட்ட அனைத்து உரையாடல்களையும் பட்டியலில் காண முடியும்.


Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)