Showing posts with label Windows Security. Show all posts
Showing posts with label Windows Security. Show all posts

Friday, 6 January 2012

Windows7: மறந்துபோன கடவு சொல்லை ரீசெட் செய்யலாம்

கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் அட்மின் கடவு சொல்லை மறந்து போவது, அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை மாற்றிவிடுவது.  



இதுபோன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள்  அனைத்தும் இழந்துவிடுவோம் என்பது பலரது அச்சமாக இருந்து வருகிறது. 

விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். இதனை செயல்படுத்த விண்டோஸ் 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 

விண்டோஸ் 7  Bootable DVD மூலமாக குறிப்பிட்ட கணினியை துவக்குங்கள். Install திரையில் Repair your Computer லிங்கை க்ளிக் செய்யுங்கள். 


 
அடுத்து வரும் Options  திரையில், Command Prompt ஐ கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில், கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\sethc.exe c:\

இப்பொழுது Sticky Keys கோப்பானது C:\ இல் காப்பி செய்யப்படும். அடுத்ததாக cmd.exe கோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள். 

copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe   

Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும்பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.       

 
 
   
 






இப்பொழுது கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்து, வன்தட்டிலிருந்து பூட் செய்யுங்கள்.  Login திரை தோன்றும் பொழுது, Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல், அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)




Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர் பெயர் (surya) மற்றும் கடவு சொல்லை (newpassword) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)


net user surya newpassword














அவ்வளவுதான் கடவுச்சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை ரீ ஸ்டோர் செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் விண்டோஸ் 7  DVD யில் பூட் செய்து Command Prompt சென்று, கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.

 c:\sethc.exe  c:\windows\system32\sethc.exe.


 Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.


.

Monday, 15 August 2011

விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி

விண்டோஸ் இயங்குதளத்தை  உபயோகிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் NirCmd எனும் ஒரு சிறிய இலவச Command Line Utility ஐ குறித்து ஒரு விளக்கம். 

நமது கணினியில் அல்லது மடிக்கணினியில் உள்ள DVD ட்ரைவை திறக்க / மூட, வால்யூமை மியூட் செய்ய  மற்றும் சத்தத்தை கூட்ட, குறைக்க, மானிட்டரை அணைக்க, ஸ்கிரீன் சேவரை துவக்க, Logoff செய்ய Standby mode இற்கு செல்ல, கணினியை அணைக்க, திறந்துள்ள அனைத்து இன்டர்நெட் Explorer விண்டோக்களை ஒரே நொடியில் மூட, என 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்களுக்கான டெஸ்க்டாப்  ஷார்ட்கட்களை  உருவாக்க இந்த NirCmd கருவி பயன்படுகிறது. (தரவிறக்கவும், இதன் மேலதிக பயன்பாட்டின் பட்டியலை காணவும்  சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)      

உதாரணமாக இந்த கருவியை பயன்படுத்தி நமது கணினியில் இணைக்கப்பட்டுள்ள CD /DVD ட்ரைவை Eject செய்ய ஒரு ஷார்ட்கட்டை உருவாக்குவது எப்படி என்பதை காணலாம். முதலில் கீழே தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து NirCmd கருவியை உங்கள் வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக D:\)

இப்பொழுது  Desktop இல் வலது க்ளிக் செய்து, திறக்கும் Context மெனுவில் New மற்றும் Shortcut ஐ க்ளிக் செய்யுங்கள்.      


அடுத்து திறக்கும் விசார்ட்டில்  Type the Location of the Item என்பதற்கு நேராக, D:\nircmd.exe cdrom open F: என டைப் செய்து Next பட்டனை சொடுக்குங்கள். (D:\ என்பது NirCmd.exe கோப்பை நமது கணினியில் சேமித்து வைத்திருக்கும் லொகேஷனை குறிக்கும், F: என்பது CD/DVD ட்ரைவை குறிக்கும், உங்கள் கணினிக்கு தகுந்தவாறு இவற்றை மாற்றிக் கொள்ளவும்).


  அடுத்து திறக்கும் உரையாடல் பெட்டியில், ஷாட்கட்டிற்கான பெயராக Eject CD/DVD என தட்டச்சு செய்து Wizard ஐ முடித்து, உருவாக்கிக் கொள்ளலாம். அடுத்து இதனை வலது க்ளிக் செய்து Prperties சென்று,  இந்த ஷார்ட்கட்டிற்கு தகுந்த ஐகானை நமது விருப்பத்திற்கு ஏற்ற படி உருவாக்கிக் கொள்வதோடு, சுருக்கு விசையையும் உருவாக்கி கொள்ளலாம். 


இதே வழிமுறையில் CD/DVD ட்ரைவை Close செய்ய,  Cdrom open f: என்பதற்கு பதிலாக CdRom Close f: என மற்றொரு ஷார்ட் கட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். 


இந்த NirCmd கருவியில் உள்ள 50 க்கும்  பிற கட்டளைகளை காணவும், தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.

.  

Wednesday, 1 December 2010

Rainlendar: விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவி!

விண்டோஸ் Vista/7 இயங்குதளங்களில் உள்ளது போன்று, Calendar Gadget விண்டோஸ் எக்ஸ்பியில் இல்லை. இதனை ஈடு செய்ய பல கருவிகள் இருந்தாலும், Rainlendar Lite  எனும் இலவச (இதன் Pro Version ஐ பணம் செலுத்தி வாங்க வேண்டும்) மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த Gadget உடன் Events மற்றும் To Do: ஆகிய இரண்டு வசதிகளும் இருப்பது சிறப்பு. இதனை டெஸ்க்டாப்பில் தேவையான பகுதிக்கு நகர்த்திக் கொள்ளலாம். மேலும் இதனை வலது க்ளிக் செய்து, New Event மற்றும் New Task ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.



தேவையான சமயத்தில் நோட்டிபிகேஷன், அலாரம் ஆகிய வசதிகளும் நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.


Event மற்றும் Task கள் டாஸ்க் பாரில் பலூன் அறிவிப்புகளாக தெரியும்.


இந்த காலண்டரின் தோற்றம் மற்றும் opacity ஆகியவற்றை வலது க்ளிக் செய்து Options பகுதிக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

Tuesday, 30 November 2010

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க

நாம் நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,


உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.


இதை செய்து முடித்த பிறகு  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்து விட்டு மறுபடியும் வந்து பார்க்கையில் அந்த குறிப்பிட்ட ட்ரைவ் My Computer லிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் அந்த குறிப்பிட்ட ட்ரைவை தோன்ற வைக்க இதே மென்பொருளை இயக்கி, குறிப்பிட்ட ட்ரைவிற்கு நேராக உள்ள டிக் மார்க்கை நீக்கிவிட்டு,  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off  செய்தால் போதுமானது.



 
.

Thursday, 25 November 2010

Windows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க

Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். 



இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம். 

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.


இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரபட்டுள்ளது). இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.


இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு  மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.



இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




(இந்த ப்ளாக் 5 லட்சம் ஹிட்ஸ்களை நோக்கி... அனைவருக்கும் எனது பணிவான நன்றி)
.

Friday, 19 November 2010

Facebook: இணையத்தில் பணிபுரிந்த படியே Chat செய்ய

நம்மில் பெரும்பாலும் அனைவரும் Facebook கணக்கை வைத்திருக்கிறோம். நாம் இணையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, Facebook இல் Chat செய்ய வேண்டியிருந்தால் ஒவ்வொரு முறையும், Facebook உள்ள டேபிற்கு அல்லது விண்டோவிற்கு சென்று Chat செய்யவேண்டியுள்ளது. 

இவ்வாறு அன்றி, நமது நெருப்புநரி (Firefox) உலாவியில், சைடு பாரில் Facebook ஐ லோடு செய்து, இணைய பக்கங்களிலும், Facebook இலும் ஒரே சமயத்தில் பணி புரிய என்ன செய்யலாம்? என்பதை பார்க்கலாம்.
நெருப்புநரி உலாவியை திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனுவில் Bookmarks menu ஐ க்ளிக் செய்து, Organize Bookmarks  ஐ க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் Library விண்டோவில்,  Organize menu ஐ க்ளிக் செய்து New Bookmark க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் New Bookmark வசனப்பெட்டியில், Name க்கு நேராக Facebook Chat (அல்லது ஏதோ ஒன்று) கொடுக்கவும். Location க்கு நேராக உள்ள பெட்டியில் http://www.facebook.com/presence/popout.php என்ற URL ஐ கொடுத்து கீழே உள்ள Load this bookmark in the sidebar ஐ தேர்வு செய்து, ADD பொத்தானை அழுத்தவும்.


இனி நெருப்புநரி உலாவியில் View menu ஐ திறந்து, Sidebar மற்றும் Bookmarks ஐ க்ளிக் செய்யவும்.


இப்பொழுது இடது புற சைடுபாரில் Facebook chat எங்குள்ளது என கண்டு, அதனை க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான். இனி இணையத்தில் பிற வலைப்பக்கங்களில் உலாவியபடியே, Facebook chat செய்து கொள்ளலாம்.






.

Friday, 8 October 2010

விண்டோஸ் பழுதுபார்ப்பு!

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் உபயோகிப்பவர்கள் அவ்வப்போது, தங்களது கணினி பூட் ஆகும் பொழுது, விண்டோஸ் லோடு ஆகும் திரை வந்த பிறகு, உடனடியாக ரீஸ்டார்ட்  ஆகும் பிரச்சனையை சந்தித்து இருக்கலாம். 


இப்படி முதல் முறை ரீஸ்டார்ட்  ஆகி மறுபடி பூட் ஆகும் பொழுது Safe mode ஆப்ஷனோடு திரை வந்திருக்கும். 
இதில் Safe mode இல் சென்றாலும், Last known Good Configuration -இல் சென்றாலும், இதே போன்று தொடர்ந்து ரீஸ்டார்ட் ஆகிக் கொண்டிருக்கும், உள்ளே இருக்கும் உங்களது முக்கியமான டேட்டாக்கள் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் வருவது இயற்கை. 

சரி, விண்டோஸ் சீடியை வைத்து பூட் செய்து இந்த இயங்குதளத்தின் மேலேயே over write செய்து விடலாம் என்று முயலும் போது, அங்கேயும் ஆப்பு காத்திருக்கும்.  விண்டோஸ் சீடியில் பூட் செய்து முதலாவது Repair ஆப்ஷனை தவிர்த்து  Agreement பக்கத்திற்கு அடுத்து வரும் திரையில் கீழே உள்ளது போல உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷன் காண்பிக்கப்பட்டால் 'R' கீயை அழுத்தி ரிப்பேர் செய்து கொள்ளலாம். 


 ஆனால், விண்டோஸ் ரிப்பேர் வசதியில் செல்லும் போது உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனை Unknown partition என்றோ அல்லது விண்டோஸ் ஏற்கனவே நிறுவப்படாத மற்ற பார்ட்டிஷன்களை போலவே உங்கள் விண்டோஸ் பார்ட்டிஷனும் பட்டியலிடப்பட்டிருக்கும். இது போன்ற நிலை வரும்பொழுது சற்று சிக்கல்தான். 

முதலாவதாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இந்த நிலைக்கு முந்தைய வரலாறு (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!..) அதாவது இந்த ரீஸ்டார்ட் பிரச்சனை வருவதற்கு முன்பாக என்ன நிகழ்ந்தது? முழுவதுமாக ஷட் டவுன் ஆவதற்கு முன்பாக பவரை அனைத்து விட்டீர்களா? அல்லது கரண்டு போய்விட்டதா? யாராவது Reset பட்டனை அழுத்திவிட்டு போய் விட்டார்களா? அல்லது இதில் ஏதுமில்லையா? 

இந்த கேள்வியெல்லாம் எதற்கு? என்றால், இது போன்ற ரீ ஸ்டார்ட் பிரச்சனை பெரும்பாலும் பூட் பார்ட்டிஷனில் கோப்புகள் கிராஸ் லிங்க் ஆகிவிடவதால் ஏற்படுபவை, அல்லது (மிக அரிதாக) உங்கள் வன்தட்டிற்கு வயதாகி கொண்டிருக்கிறது அல்லது (மிகமிக அரிதாக) பிராசசர் ஃபேனில் தூசி அதிகம் படிந்து, ஃ பேனின் வேகம் குறைந்தது  என்றும் கொள்ளலாம். கிராஸ் லிங்க் ஆவதற்கு முக்கிய காரணம் முறையாக ஷட் டவுன் செய்யாமலிருப்பது.

இந்த பிரச்சனை வரும் பொழுது எடுத்தவுடனே விண்டோஸ் Over write செய்து விடலாம் அல்லது புதிதாக வேறு ட்ரைவில் நிறுவிவிடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு முன்பாக, விண்டோசின் தாத்தா DOS கருவியான Chkdsk ஐ பயன்படுத்தி இந்த பிரச்னைக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம். 

விண்டோஸ் பூட் சீடியை வைத்து உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். பிறகு முதலாவதாக வரும் Repair திரையில் 'R' கீயை அழுத்தி Recovery Console திரைக்கு வந்து விடுங்கள். 

     
இந்த பிரச்சனை உள்ள கணினிகளில், விண்டோஸ் பார்ட்டிஷன் உள்ள ட்ரைவை குறிப்பிடும்படி கேட்காது. தேர்வு செய்ய சொல்லி வந்தால் தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து, C:\> ப்ரோம்ப்டில் CHKDSK /R கட்டளை கொடுக்கலாம். ஒரு சில சமயங்களில் இந்த கட்டளை இயங்காமல் போனால், CD/DVD   ட்ரைவிற்கு   சென்று (உதாரணமாக g:) அங்கு CD\i386 கட்டளை கொடுத்து அந்த டைரக்டரிக்கு சென்று அங்கு CHKDSK கட்டளையை கொடுங்கள். 


இது முடிந்த உடன் Exit கொடுத்து கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டால் போதுமானது. கிராஸ் லிங்க ஆன சிஸ்டம் கோப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, கணினி முன்பு போல இயங்கும்.  பெரும்பாலான கணினிகளில் இந்த வழியை பயன்படுத்தி விண்டோஸ் எக்ஸ்பி ரீ ஸ்டார்ட் பிரச்சனையை சரி செய்யப் பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிய எனது பிற இடுகைகளை வாசிக்கவும். 

.

Wednesday, 6 October 2010

Microsoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி!

Microsoft OneNote பயன்பாட்டை குறித்து இடுகை எழுதும் போதெல்லாம் தைரியமாக "தொடரும்.." போட்டு விடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்க்கு பல வசதிகளை உள்ளடக்கியது இந்த OneNote. ஏதாவது கணினி பயன்பாட்டில் ஒரு தேவை வரும்பொழுது, எதற்கும் OneNote -இல் முயற்சி செய்து பார்க்கலாமே, என தைரியமாக யோசிக்கலாம் என நினைக்கிறேன்!. 

இந்த இடுகை மாணவர்களுக்கானது. இனி பள்ளி கல்லூரிகளில் நோட்டு புத்தகம் அன்றி, நெட்டு புத்தகம் பயன்படுத்தும் மிக அருகாமையில் நாம் இருக்கிறோம்.  சரி விஷயத்திற்கு வருவோம். இந்த OneNote பயன்பாட்டை ஒரு நோட்டு புத்தகம் போல பயன்படுத்தி அதன் பலன்களை பெறுவது எப்படி? என்பதை பார்க்கலாம். 

முதலாவதாக OneNote பயன்பாட்டை திறந்து கொண்டு, பாடத்திற்கான பெயரை தலைப்பாக கொடுத்து விடுங்கள். 

 
அதற்கு கீழாக க்ளிக் செய்து subtitle அல்லது பாடம் எண் கொடுக்கலாம்.


அடுத்து சிறிது கீழாக குறிப்பிட்ட கேள்வி அல்லது Topic ஐ டைப் செய்து, என்டர் கொடுத்து அடுத்த வரியில் அதற்கான பதில் அல்லது விளக்கங்களை டைப் செய்யவும்.

அடுத்து இந்த வரிகளை மட்டிலும் italic செய்து கொள்வது, கேள்வியையும் பதிலையும் தனித்து பிரித்தறிய உதவும். இந்த வரிகளை மட்டும் தேர்வு செய்து Toolbar இல் Increase Indent க்ளிக் செய்து கொள்ளவும். 

இப்பொழுது கீழே உள்ளது போன்று தோற்றமளிக்கும்.

இனி இதன் மீது மௌஸ் கர்சரை எடுத்துச் செல்லும் பொழுது ஒரு சிறு பெட்டி தோன்றுவதை கவனிக்கலாம். 

இதை இரட்டை க்ளிக் செய்யும் பொழுது, விளக்கம் அல்லது பதிலை மறைத்து விடும்.


மறுமுறை இரட்டை க்ளிக் செய்யும் பொழுது, பழையபடி விரிவாக காண்பிக்கும். 


இந்த வசதியை Flash கார்டு போல பயன்படுத்தி வகுப்பறையில் எடுத்த பாடங்களை, மனனம் செய்ய, மற்றும் சரிபார்க்க, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து. 

OneNote பற்றிய இடுகை இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன்..    

OneNote குறித்த எனது பிற இடுகைகள்:

Microsoft OneNote - உபயோகமான பயன்பாடு

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை!

இது என்னுடையை 300 வது இடுகை!. ஆதரவளித்து வரும் திரட்டிகள்! சக பதிவுலக நண்பர்கள்!, வாசகர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள்! 

.

Wednesday, 29 September 2010

இணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபுரியும்பொழுது

சில தவிர்க்க முடியாத சமயங்களில் உங்கள் நண்பரது கணினியில் நீங்கள் பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. அவசரமாக மின்னஞ்சல்  பார்க்கவோ அல்லது இணையத்தில் வேறு ஏதாவது தகவல்களை பார்க்கவோ வேண்டியிருக்கலாம். நீங்களும் பணி முடித்து அவரது கணினி அல்லது மடிக்கணினியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள்.

மற்றொரு இடுகையில் நான் சொன்னது போல யாரை நம்ப முடியும்? நீங்கள் சென்றபிறகு, நீங்கள் பயன்படுத்திய உலாவியை திறந்து, நீங்கள் சென்ற தளங்களின் விவரங்களை பார்ப்பது, உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறக்க முயல்வது  (தவறுதலாக ஏதேனும் தளத்தில் லாக்அவுட் செய்துவிட மறந்தால் அவ்வளவுதான்.) என ஒரு சில குறுக்கு புத்திகாரர்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு தப்பலாம்? 

கூகிள் க்ரோம் உலாவியில் இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது. அதுதான்  Incognito mode எனும் private browsing. இந்த முறையில் நாம் இணையத்தில் உலாவும் பொழுது,  Browser History, Search History மற்றும் கூகீஸ் அந்த கணினியில் சேமிக்கப் படுவதில்லை. எனவே உங்கள் நண்பருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் தவிர்க்கலாம். 

இதற்குமேல் நண்பர்களது அல்லது பொது கணினிகளில் Google Chrome உலாவியில் பணிபுரியும்பொழுது, Tools பட்டனை க்ளிக் செய்து, மெனுவில்  New incognito window. ஐ க்ளிக் செய்து Private Browsing துவங்கலாம். 

   

அல்லது Ctrl+Shift+N ஷார்ட் கட் கீகளை அழுத்தியும் துவங்கலாம்.  இவ்வாறு துவங்கும் பொழுது, முதல் முறை கீழே உள்ளது போன்ற செய்தி வரும்.


இந்த வகையில் க்ரோம் பயன்படுத்தும் பொழுது உலாவியில் ஏற்கனவே நிறுவியுள்ள நீட்சிகள் அனைத்தும் முடக்க பட்டிருக்கும். தேவையான நீட்சிகளை நீங்கள் enable செய்து கொள்ளலாம். இப்படி Browsing துவங்கும் பொழுது, ஒரு புதிய ஐகான் இடது மூலையில் வந்திருப்பதை கவனிக்கலாம். 


ஏதாவது வலைப்பக்கத்தில் உள்ள லிங்குகளை மட்டிலும் இந்த மோடில் திறக்க, அந்த லிங்கில் வலது க்ளிக் செய்து Open link in incognito window. என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. 




ஹைலைட்:-
இந்த incognito முறையில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளில் நுழைந்து கொண்டு பணியாற்றலாம்.  


எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட உலாவிகளை கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை.

.

Tuesday, 28 September 2010

விஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க

கடந்த சில வருடங்களாக நமது கணினியில் நாம் பயன்படுத்தி வருவது Serial ATA (SATA) வகையை சார்ந்த வன் தட்டுக்களைத்தான். இதற்கு முன்பு சந்தையிலிருந்த IDE வன்தட்டுக்களை விட இந்த SATA வகை வன் தட்டுக்கள் வேகம் மற்றும் டேட்டா பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து காணப்படுகிறது. 





விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இந்த SATA வகை வன் தட்டுக்களுக்கான மேலதிக வசதி தரப்பட்டிருந்தாலும், Default  ஆக  இது enable செய்யப்பட்டிருப்பதில்லை. இந்த advanced write caching features வசதியை நாம்  enable செய்வதன் மூலமாக நமது கணினியின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Start menu வில் உள்ள Search பாக்ஸில் device என டைப் செய்து தோன்றும் Device Manager லிங்கை க்ளிக் செய்து, அல்லது Computer -இல் வலது க்ளிக் செய்து Properties சென்று Device Manager லிங்கை க்ளிக் செய்து Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்கு உள்ள பட்டியலில் Disk Drives என்பதற்கு கீழாக உங்கள் வன்தட்டின்  மாடல் எண் தரப்பட்டிருக்கும் இதை வலது க்ளிக் செய்து Properties ஐ க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Policies டேபை  க்ளிக் செய்து அதிலுள்ள Enable advanced performance எனும் Check box ஐ தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்!

.

Monday, 27 September 2010

விண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது..

நீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் 'ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா?' என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு  நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள். 

இந்த காலத்தில் எத்தனை நண்பர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்? நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு!  இன்று அவர் உங்களை அறியாமல் பார்த்த அந்த குறிப்பிட்ட டாக்குமெண்ட் சம்பந்தமானதாக இருக்கலாம் யார் கண்டது? 

இது போன்ற சமயங்களில், நீங்கள் மினிமைஸ் செய்யாமல் அனைத்தையும் மூடிவிட்டு, உங்கள் நண்பருக்கு கொடுத்தால், அவர் உங்களை தவறாக நினைத்து விடுவாரோ? என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis! எனும் இலவச மென்பொருள் கருவி! 

இந்த மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இதில் உள்ளிருப்பு கடவு சொல்லை மாற்ற வேண்டும். System tray யில் உள்ள இந்த LockThis! ஐகானை வலது க்ளிக் செய்து, Admin panel ஐ சொடுக்குங்கள். 


பிறகு கடவு சொல் கேட்கும் பொழுது LockThis! என்பதை கொடுங்கள். இதுதான் முதன் முதலாக இதை பயன்படுத்தும் பொழுது உள்ளிருக்கும் கடவு சொல். இதைத்தான் நாம் மாற்ற வேண்டும். இனி Admin panel லில் Change Admin Password பொத்தானை சொடுக்கி புதிய கடவு சொல்லை கொடுக்கவும். 


இரண்டு முறை கடவு சொல்லை கொடுத்து OK பட்டனை சொடுக்கிய பின்னர் வரும் சிறு வசனப் பெட்டியில் OK பட்டனை சொடுக்கி புதிய கடவு சொல்லை activate செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்! இனி உங்கள் நண்பருக்கு கணினியை கொடுக்கும்பொழுது, உங்கள் டாக்குமெண்டை கண்ட்ரோல் கீயை அழுத்திய படி Minimize பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது. 

 
மறுபடி கடவு சொல் கொடுத்துதான் திறக்க முடியும்! 
.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)