Wednesday 29 September, 2010

இணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபுரியும்பொழுது

சில தவிர்க்க முடியாத சமயங்களில் உங்கள் நண்பரது கணினியில் நீங்கள் பணிபுரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. அவசரமாக மின்னஞ்சல்  பார்க்கவோ அல்லது இணையத்தில் வேறு ஏதாவது தகவல்களை பார்க்கவோ வேண்டியிருக்கலாம். நீங்களும் பணி முடித்து அவரது கணினி அல்லது மடிக்கணினியை அவரிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள்.

மற்றொரு இடுகையில் நான் சொன்னது போல யாரை நம்ப முடியும்? நீங்கள் சென்றபிறகு, நீங்கள் பயன்படுத்திய உலாவியை திறந்து, நீங்கள் சென்ற தளங்களின் விவரங்களை பார்ப்பது, உங்கள் மின்னஞ்சல் கணக்கை திறக்க முயல்வது  (தவறுதலாக ஏதேனும் தளத்தில் லாக்அவுட் செய்துவிட மறந்தால் அவ்வளவுதான்.) என ஒரு சில குறுக்கு புத்திகாரர்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு தப்பலாம்? 

கூகிள் க்ரோம் உலாவியில் இதற்கான எளிய வழி ஒன்று உள்ளது. அதுதான்  Incognito mode எனும் private browsing. இந்த முறையில் நாம் இணையத்தில் உலாவும் பொழுது,  Browser History, Search History மற்றும் கூகீஸ் அந்த கணினியில் சேமிக்கப் படுவதில்லை. எனவே உங்கள் நண்பருக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் தவிர்க்கலாம். 

இதற்குமேல் நண்பர்களது அல்லது பொது கணினிகளில் Google Chrome உலாவியில் பணிபுரியும்பொழுது, Tools பட்டனை க்ளிக் செய்து, மெனுவில்  New incognito window. ஐ க்ளிக் செய்து Private Browsing துவங்கலாம். 

   

அல்லது Ctrl+Shift+N ஷார்ட் கட் கீகளை அழுத்தியும் துவங்கலாம்.  இவ்வாறு துவங்கும் பொழுது, முதல் முறை கீழே உள்ளது போன்ற செய்தி வரும்.


இந்த வகையில் க்ரோம் பயன்படுத்தும் பொழுது உலாவியில் ஏற்கனவே நிறுவியுள்ள நீட்சிகள் அனைத்தும் முடக்க பட்டிருக்கும். தேவையான நீட்சிகளை நீங்கள் enable செய்து கொள்ளலாம். இப்படி Browsing துவங்கும் பொழுது, ஒரு புதிய ஐகான் இடது மூலையில் வந்திருப்பதை கவனிக்கலாம். 


ஏதாவது வலைப்பக்கத்தில் உள்ள லிங்குகளை மட்டிலும் இந்த மோடில் திறக்க, அந்த லிங்கில் வலது க்ளிக் செய்து Open link in incognito window. என்பதை க்ளிக் செய்தால் போதுமானது. 




ஹைலைட்:-
இந்த incognito முறையில் உள்ள முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு ஜிமெயில் கணக்குகளில் நுழைந்து கொண்டு பணியாற்றலாம்.  


எனவே ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட உலாவிகளை கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை.

.

Tuesday 28 September, 2010

விஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க

கடந்த சில வருடங்களாக நமது கணினியில் நாம் பயன்படுத்தி வருவது Serial ATA (SATA) வகையை சார்ந்த வன் தட்டுக்களைத்தான். இதற்கு முன்பு சந்தையிலிருந்த IDE வன்தட்டுக்களை விட இந்த SATA வகை வன் தட்டுக்கள் வேகம் மற்றும் டேட்டா பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து காணப்படுகிறது. 





விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இந்த SATA வகை வன் தட்டுக்களுக்கான மேலதிக வசதி தரப்பட்டிருந்தாலும், Default  ஆக  இது enable செய்யப்பட்டிருப்பதில்லை. இந்த advanced write caching features வசதியை நாம்  enable செய்வதன் மூலமாக நமது கணினியின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Start menu வில் உள்ள Search பாக்ஸில் device என டைப் செய்து தோன்றும் Device Manager லிங்கை க்ளிக் செய்து, அல்லது Computer -இல் வலது க்ளிக் செய்து Properties சென்று Device Manager லிங்கை க்ளிக் செய்து Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்கு உள்ள பட்டியலில் Disk Drives என்பதற்கு கீழாக உங்கள் வன்தட்டின்  மாடல் எண் தரப்பட்டிருக்கும் இதை வலது க்ளிக் செய்து Properties ஐ க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Policies டேபை  க்ளிக் செய்து அதிலுள்ள Enable advanced performance எனும் Check box ஐ தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள். 
அவ்வளவுதான்!

.

Monday 27 September, 2010

விண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது..

நீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் 'ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா?' என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு  நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள். 

இந்த காலத்தில் எத்தனை நண்பர்கள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்? நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும் அவர், நீங்கள் மினிமைஸ் செய்து வைத்த டாக்குமெண்டை திறந்து பார்த்து, பின்னர் ஒன்றும் தெரியாதது போல உங்களிடம் கணினியை, அவரது பணி முடிந்து விட்டதாக கூறி ஒப்படைத்து விடுவார். ஆனால் பின்னாளில் அவர் வைக்கப் போகும் ஆப்பு!  இன்று அவர் உங்களை அறியாமல் பார்த்த அந்த குறிப்பிட்ட டாக்குமெண்ட் சம்பந்தமானதாக இருக்கலாம் யார் கண்டது? 

இது போன்ற சமயங்களில், நீங்கள் மினிமைஸ் செய்யாமல் அனைத்தையும் மூடிவிட்டு, உங்கள் நண்பருக்கு கொடுத்தால், அவர் உங்களை தவறாக நினைத்து விடுவாரோ? என்று வெள்ளந்தியாக யோசிப்பது புரிகிறது. சரி, இதற்கு சரியான தீர்வு LockThis! எனும் இலவச மென்பொருள் கருவி! 

இந்த மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு, இதில் உள்ளிருப்பு கடவு சொல்லை மாற்ற வேண்டும். System tray யில் உள்ள இந்த LockThis! ஐகானை வலது க்ளிக் செய்து, Admin panel ஐ சொடுக்குங்கள். 


பிறகு கடவு சொல் கேட்கும் பொழுது LockThis! என்பதை கொடுங்கள். இதுதான் முதன் முதலாக இதை பயன்படுத்தும் பொழுது உள்ளிருக்கும் கடவு சொல். இதைத்தான் நாம் மாற்ற வேண்டும். இனி Admin panel லில் Change Admin Password பொத்தானை சொடுக்கி புதிய கடவு சொல்லை கொடுக்கவும். 


இரண்டு முறை கடவு சொல்லை கொடுத்து OK பட்டனை சொடுக்கிய பின்னர் வரும் சிறு வசனப் பெட்டியில் OK பட்டனை சொடுக்கி புதிய கடவு சொல்லை activate செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்! இனி உங்கள் நண்பருக்கு கணினியை கொடுக்கும்பொழுது, உங்கள் டாக்குமெண்டை கண்ட்ரோல் கீயை அழுத்திய படி Minimize பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது. 

 
மறுபடி கடவு சொல் கொடுத்துதான் திறக்க முடியும்! 
.

Saturday 25 September, 2010

360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்க..

இணையத்தில் 360º வியூவில் பல முக்கியமான இடங்களை நாம் பார்த்திருப்போம், கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனையின் 360º வியூ.
மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 


21 பணரோமிக் படங்களை உள்ளடக்கியது. சிறந்த ஆடியோ விளக்கமும் உண்டு..
ஆங்காங்கே உள்ள கேமராவை க்ளிக் செய்து மேலதிக விவரத்தை பார்க்கலாம். 




அரண்மனையின் உள்ளே உள்ள ஒவ்வொரு அறையும், அதன் விளக்கமும் மிக அருமை. 


அசத்தலான ஆர்க்கிடேக்ச்சர்! நேரில் பலரும் பார்த்திருந்தாலும், இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம். 
அவசியம் பாருங்க.. 



.

ஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி

நமது கணினியின் வன்தட்டில் சில சமயங்களில், குறிப்பட்ட பார்டிஷனில் இடம் குறைவாக உள்ளது என்று செய்தி வரலாம். (Low Disc space warning) அல்லது நீங்களாக வன்தட்டில் தேவையில்லாத கோப்புகளை களைந்து, சுத்தம் செய்யலாம் என்று கருதி செயலில் இறங்கி இருக்கலாம். 

இது  போன்ற சமயங்களில், 'சிறிய அளவிலான கோப்புகள் மற்றும் கோப்புறைகள் தானே இருக்கிறது, ஆனால் இவ்வளவு இடத்தை எது அடைத்திருக்கிறது' என்ற சந்தேகம் வருவது இயற்கை. 

இது ஏதாவது temp files , தரவிறக்கம் செய்து வைத்த படங்கள், பாடல்கள், மென்பொருட்கள், அவசரத்திற்கு உருவாக்கிய கோப்புறைகளை களையாமல் வைத்த்திருப்பது போன்றவற்றால் இருக்கலாம். 

சரி இந்த சூழலில், நமது வன்தட்டில் எந்த எந்த கோப்புகள் அதிக இடம் பிடித்திருக்கிறது என்பதை, Search சென்று *.* கொடுத்து தேடி Size வாரியாக வரிசைப்படுத்தி பார்ப்பதற்குள்ளாக சில சமயங்களில் கணினி தொங்கி விடலாம் அல்லது ரீஸ்டார்ட் ஆகிவிடலாம். 

இந்த பிரச்னைக்கு தீர்வாக ஒரு மிகச் சிறிய சுதந்திர இலவச மென்பொருளான Folder Size ஐ பயன்படுத்தி பார்க்கலாம் என்ற முயற்சி வெற்றியடைந்தது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)               

இந்த சிறிய மென்பொருள் கருவியை உங்கள் கணினியில் தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, இதனை இயக்கி,

Explore பொத்தானுக்கு நேராக உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில், எந்த பார்ட்டிஷனில், எந்த ஃபோல்டருக்குள் எனும் path ஐ கொடுத்து, GO பொத்தானை சொடுக்கினால் போதுமானது. 


உடனடியாக அந்த ட்ரைவில் குறிப்பிட்ட ஃபோல்டருக்குள் உள்ள சப் ஃபோல்டர்கள் என அனைத்தையும் திரட்டி அதன் அளவுகளோடு வரைபடமாகவே காண்பித்துவிடும். இதனை மௌஸ் வீல் கொண்டு காட்சி பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும், இடது பட்டனை அழுத்தி நகர்த்தவும், வலது பட்டனை அழுத்தி reset செய்யவும் வழியுண்டு. 

இப்படி காண்பிக்கும் வரைபடத்தில் எந்த ஃபோல்டரில் அதிக அளவு கோப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு, சந்தேகமான ஃபோல்டரை க்ளிக் செய்து Explore பொத்தானை அழுத்தினால் விண்டோஸ் Explorer இல் அந்த ஃபோல்டர் திறக்கும், அதனை சோதித்து, தேவையற்ற பெரிய கோப்புகளை நீக்கி விடலாம். 

    

.

Friday 24 September, 2010

விண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க

விண்டோஸ் XP/விஸ்டா/7 இயங்குதளங்களை பயன்படுத்தி வரும்பொழுது, ஒரு சில சமயங்களில், Error Reporting அறிவிப்பு உங்களுக்கு அலுப்பை தரலாம். Windows (app name) has stopped working திரையும், விண்டோஸ் XP யில் Send , Don't send திரையும் வந்து உங்களை டென்ஷன் ஆக்கலாம்.


மற்றும்


இந்த பிழைச்செய்தியை விண்டோஸ் XP யில் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். My Computer - ஐ வலது கிளிக் செய்து properties செல்லவும். அங்கு Advanced tab -ஐ கிளிக் செய்து அதில் உள்ள  error reporting பொத்தானை அழுத்தி, திறக்கும் Error Reporting வசனப் பெட்டியில்  ' Disable error reporting ஐ தேர்வு செய்து OK கொடுக்கவும்.
விண்டோஸ்  விஸ்டாவில், Control Panel சென்று, முதலில் Classic View விற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு, Problem Reports and Solutions  ஐ  க்ளிக் செய்யுங்கள். 

அடுத்து திறக்கும் Problem Reports and Solutions திரையில், இடது புற பேனில் உள்ள Change Settings link ஐ க்ளிக் செய்து, 
அடுத்த திரையில், Advanced settings லிங்கை க்ளிக் செய்து  Advanced settings for problem reporting என்பதற்கு கீழாக உள்ள Off ரேடியோ பட்டனை க்ளிக் செய்து, OK கொடுங்கள்.  
 
இந்த பிழைச் செய்தியை விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் நீக்க, Start menu வில் சர்ச் பாக்ஸில் problem reporting settings என டைப் செய்து, மேலே தோன்றும் Choose how to report problems லிங்கை  க்ளிக் செய்து கொள்ளுங்கள். 

அடுத்து திறக்கும் விண்டோவில்,
Never check for solutions ஐ தேர்வு செய்து, OK பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள். 
.

Thursday 23 September, 2010

வலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய

வலைபக்கங்களில் நாம் உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, நமக்கு தேவையான சில விபரங்கள் Table வடிவில் இருக்கலாம்.

 

இவற்றை நாம் Excel 2007 பயன்பாட்டில் தேவைப்படும் பொழுது வலைப்பக்கத்திலிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யும்பொழுது, டேபிள் வடிவில் அல்லாமல், ஒரு அமைப்பில்லாமல் பேஸ்ட் ஆகியிருப்பதை கவனிக்கலாம். 



இது போன்ற சமயங்களில், இணையத்தில் நமக்கு தேவையான விவரங்கள் அடங்கிய டேபிளை Excel 2007 -இல் எப்படி இறக்குமதி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான வலைப்பக்கத்திற்கு சென்று, குறிப்பிட்ட டேபிள் உள்ள பக்கத்தின் url ஐ காப்பி செய்து கொள்ளுங்கள். Excel ஐ திறந்து கொண்டு Data டேபில் உள்ள Get External Data பகுதியில் உள்ள From Web பொத்தானை சொடுக்குங்கள்.


இப்பொழுது திறக்கும் New Web Query வசனப் பெட்டியில், அட்ரஸ் பாரில் காப்பி செய்து வைத்த url ஐ பேஸ்ட் செய்து Go பொத்தானை சொடுக்குங்கள்.   

   
இப்பொழுது அந்த url க்கான வலைப்பக்கம் Query திரையில் திறக்கும். இங்கு தேவையான Table க்கு மேற்புறமுள்ள மஞ்சள் நிற பெட்டியை க்ளிக் செய்வதன் மூலம் அந்த table ஐ தேர்வு செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டேபிள்களை தேர்வு செய்து கொள்ள இயலும்.   


Import பொத்தானை சொடுக்கிய பிறகு Excel sheet -இல் எந்த செல்லில் இந்த டேபிளை இருத்த வேண்டும் என்று தேர்வு செய்து கொண்டு, OK பொத்தானை சொடுக்குங்கள்.    


இதோ உங்களுக்கு தேவையான டேபிள் இப்பொழுது உங்கள் எச்செல் ஷீட்டில்.



.

Wednesday 22 September, 2010

பவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்

மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பயன் படுத்தி பிரசண்டேஷன்களை ப்ரொஜெக்டரில், காண்பிக்கும் பொழுது, லேசர் பாயிண்டரை பயன் படுத்துவது வழக்கம். 
 
 சமயத்தில் லேசர் பாயிண்டர் நம்மிடம் இல்லையெனில், நமது மௌஸ் பாயிண்டரையே லேசர் பாயிண்டராக பயன்படுத்தும் வசதி மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2010 -இல் தரப்பட்டுள்ளது. 

பவர் பாயிண்டில் ஸ்லைடு ஷோவை உருவாக்கியபிறகு F5 கீயை அழுத்தியோ அல்லது From beginning, அல்லது From Current Slide பொத்தானை, Slide Show டேபிலிருந்து க்ளிக் செய்து  ஸ்லைடு ஷோவை துவக்குங்கள்.


ஸ்லைடு ஷோ ஆரம்பித்தவுடன், Ctrl கீ மற்றும் மௌஸ் இடது பட்டனை அழுத்துவதன் மூலமாக, சிவப்பு நிற லேசர் பாயிண்டரை திரையில் தோன்றவைக்க முடியும். 

 
இந்த வசதி 2010 பதிப்பில் மட்டுமே உண்டு. மேலும் இந்த லேசர் பாயின்டரின் நிறத்தை default ஆக உள்ள சிவப்பு நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற, Slide show tab -இல் Set up Slide show பொத்தானை அழுத்துங்கள். 


இப்பொழுது திறக்கும் Set up show வசனப் பெட்டியில், Laser Pointer Color க்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் சிவப்பு, பச்சை அல்லது நீல நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். 

 

.

Tuesday 21 September, 2010

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை!

எம்.எஸ் ஆஃபீஸ் 2007 அல்லது 2010 தொகுப்பு உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாடும் தானாகவே நிறுவப்பட்டிருக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த பயன்பாட்டை உபயோகித்திருக்கிறோம்? 

OneNote என்பது ஏதோ ஒரு குறிப்பேடு போன்ற ஒரு மென்பொருள் என்றே பலரும் கருதி வருகிறோம். ஆனால் அதன் அதி முக்கிய பயன்பாட்டை அறிந்து கொண்டால் இது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிடும். 

வழக்கமாக நம்மில் பலர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, இணைய முகவரி, விலாசம், பள்ளிப் பாடங்கள் பற்றிய குறிப்புகள், பொருட்களின் விலைக் குறிப்புகள், செலவு கணக்கு  மற்றும்  வேறு ஏதேனும் சிறு குறிப்புகள் ஆகியவற்றை ஏதேனும் ஒரு நோட்டு புத்தகத்தின் பக்கத்திலோ, அல்லது டைரி, நாட்காட்டி இவற்றில் எழுதி வைப்பது வாடிக்கை. இவையனைத்தையும் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாட்டில் எளிதாக பயன்படுத்தலாமே!
இதனுடைய சக்திவாய்ந்த தேடுதல் வசதி இதன் சிறப்பம்சம்.  இது மற்ற வேர்டு processor  போலல்லாமல், இதன் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் க்ளிக் செய்து டைப் செய்யும் வசதி உண்டு. மேலும், இதில் டெக்ஸ்ட், படங்கள், டிஜிட்டல் கையெழுத்து, ஆடியோ வீடியோ ரெகார்டிங், OCR கன்வெர்ஷன் (இது குறித்தான எனது விரிவான இடுகையை Microsoft OneNote - உபயோகமான பயன்பாடு  பார்க்கவும்) நண்பர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் இந்த OneNote பயன்பாடு பதிவர்களுக்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பதையும்  இதில் ஆடியோ வீடியோ ரெகார்டிங் வசதி குறித்தும் எழுதியிருந்த இடுகையை (1 நோட்) அறிந்தும் அறியாமலும்  பார்க்கவும். 

சரி இதில் இது தவிர வேறு என்ன பயன்பாடு உள்ளது என்று பார்க்கலாம். கணக்குகளை இதில் போட முடியும் என்பது சிறந்த விஷயம். One Note -இல் தேவையான் பகுதியில் க்ளிக் செய்து, உதாரணமாக 365*78= என டைப் செய்து என்டர் கொடுத்தால்,
உடனடியாக கணக்கு அதுவே போட்டுக் கொள்ளும்.

 கொஞ்சம் கடினமாக (7^8) * sqrt(1250) + 1798 = என்று கொடுத்துப் பார்த்தால் உடனடி பதில்

என்று வருகிறது.  அது மட்டுமின்றி, Insert tab இல் உள்ள Symbol பொத்தானை அழுத்தி தேவையான கணித மாறிலிகளை இணைத்தும் கணக்கு போட முடிகிறது. 

உதாரணமாக ,

இப்படி பல கணக்குகளை போடும் வசதியை நாம் Onenote -இல் பெறலாம். இதில் நாம் பயன்படுத்தக் கூடிய கணித குறியீடுகள்:
 
இன்னும் கடினமான கல்லூரி கணக்குகளை எளிதாக, இந்த OneNote மற்றும் பிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 /10 தொகுப்புகளில் பயன்படுத்துவது குறித்தான எனது மற்றுஒரு இடுகையை பார்க்கவும் (மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி  ) 


இது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

இந்த OneNote குறித்தான மேலதிக விவரங்களை மற்றொரு இடுகையில் பார்க்கலாம்.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)