Tuesday 23 August, 2011

FireFox: மவுஸ் கர்சரை இன்ஸ்டன்ட் சர்ச் டூலாக மாற்றுங்கள்..

நாம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கோ அல்லது அலுவல் நிமித்தமாகவோ இணையத்தில் ஏதேனும் ஒரு முக்கியமான கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்போம். அந்த குறிப்பிட்ட கட்டுரையில் அல்லது செய்தி தொகுப்பில் இடம்பெற்றுள்ள நாம் அறியாத ஏதாவது ஒரு விபரத்தை குறித்த மேலதிக தகவல்கள், விளக்க காணொளிகள், படங்கள் ஆகியவற்றை காண வழக்கமாக மற்றொரு டேபில் விக்கி பீடியா, யூ ட்யுப், கூகுள் இமேஜஸ் போன்ற தளங்களுக்கு சென்று தேடிப் பெற்றுக்கொள்வோம். இதற்காக நாம் செலவழிக்கும் நேரம் அதிகம். 



இந்த பணியை நமக்கு எளிதாக்க, நாம் இருக்கின்ற வலை பக்கத்திலேயே மேற் குறிப்பிட்ட விவரங்களை காண, நெருப்புநரி உலாவிக்கான மிகவும் பயனுள்ள நீட்சி Apture (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

 
இதனை தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு ஒருமுறை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். பிறகு உங்கள் அபிமான வலைப்பக்கத்தில் உங்களுக்கு மேலதிக விவரங்கள் தேவைப்படும் பட்சத்தில் தேவையான வார்த்தையை, வாக்கியத்தை மவுஸ் கர்சரில் தேர்வு செய்யுங்கள். 


இப்பொழுது புதிதாக Learn More எனும் பொத்தான் தோன்றுவதை கவனியுங்கள். இந்த பொத்தானில் மவுஸ் கர்சரை கொண்டு செல்லுங்கள். இப்பொழுது அந்த பக்கத்தில் புதிதாக திறக்கும் பெட்டியில் அதற்கான விளக்கத்தை பிற தகவல் தளங்களிலிருந்து காணலாம். 


இந்த பெட்டியில் உள்ள Videos டேபை க்ளிக் செய்து, அந்த குறிப்பிட்ட தகவல் சம்பந்தமான காணொளிகளையும் காணலாம். 
மேலும், Images டேபை க்ளிக் செய்து தகவல் சம்பந்தமான படங்களையும் காணலாம். 




.

Wednesday 17 August, 2011

Facebook: நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி!..

இணையத்தில் Facebook போன்ற தளங்களில் நாம் பணிபுரியும் பொழுது அவற்றில்  உள்ள படங்களின் thumbnail மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றை தெளிவாக நம்மால் காண இயலுவதில்லை. இது போன்ற தளங்களில் உள்ள சிறு படங்களை முழுமையாக காண உதவும் நெருப்பு நரிக்கான நீட்சி Thumbnail-Zoom மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 

Add to Firefox பொத்தானை அழுத்தி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொள்ளுங்கள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


Status bar இல் இதற்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம். 


இந்த நீட்சி Facebook மட்டுமின்றி Twittter, Picassa, Flickr, Wikipedia போன்ற பல தளங்களில் பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்ற தளங்களில் உலாவும் பொழுது, குறிப்பிட்ட Thumbnail மீது மவுசை கொண்டு செல்கையில் அந்த படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும் நமக்கு காண கிடைக்கிறது. 

  



.

Monday 15 August, 2011

விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி

விண்டோஸ் இயங்குதளத்தை  உபயோகிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் NirCmd எனும் ஒரு சிறிய இலவச Command Line Utility ஐ குறித்து ஒரு விளக்கம். 

நமது கணினியில் அல்லது மடிக்கணினியில் உள்ள DVD ட்ரைவை திறக்க / மூட, வால்யூமை மியூட் செய்ய  மற்றும் சத்தத்தை கூட்ட, குறைக்க, மானிட்டரை அணைக்க, ஸ்கிரீன் சேவரை துவக்க, Logoff செய்ய Standby mode இற்கு செல்ல, கணினியை அணைக்க, திறந்துள்ள அனைத்து இன்டர்நெட் Explorer விண்டோக்களை ஒரே நொடியில் மூட, என 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்களுக்கான டெஸ்க்டாப்  ஷார்ட்கட்களை  உருவாக்க இந்த NirCmd கருவி பயன்படுகிறது. (தரவிறக்கவும், இதன் மேலதிக பயன்பாட்டின் பட்டியலை காணவும்  சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)      

உதாரணமாக இந்த கருவியை பயன்படுத்தி நமது கணினியில் இணைக்கப்பட்டுள்ள CD /DVD ட்ரைவை Eject செய்ய ஒரு ஷார்ட்கட்டை உருவாக்குவது எப்படி என்பதை காணலாம். முதலில் கீழே தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து NirCmd கருவியை உங்கள் வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக D:\)

இப்பொழுது  Desktop இல் வலது க்ளிக் செய்து, திறக்கும் Context மெனுவில் New மற்றும் Shortcut ஐ க்ளிக் செய்யுங்கள்.      


அடுத்து திறக்கும் விசார்ட்டில்  Type the Location of the Item என்பதற்கு நேராக, D:\nircmd.exe cdrom open F: என டைப் செய்து Next பட்டனை சொடுக்குங்கள். (D:\ என்பது NirCmd.exe கோப்பை நமது கணினியில் சேமித்து வைத்திருக்கும் லொகேஷனை குறிக்கும், F: என்பது CD/DVD ட்ரைவை குறிக்கும், உங்கள் கணினிக்கு தகுந்தவாறு இவற்றை மாற்றிக் கொள்ளவும்).


  அடுத்து திறக்கும் உரையாடல் பெட்டியில், ஷாட்கட்டிற்கான பெயராக Eject CD/DVD என தட்டச்சு செய்து Wizard ஐ முடித்து, உருவாக்கிக் கொள்ளலாம். அடுத்து இதனை வலது க்ளிக் செய்து Prperties சென்று,  இந்த ஷார்ட்கட்டிற்கு தகுந்த ஐகானை நமது விருப்பத்திற்கு ஏற்ற படி உருவாக்கிக் கொள்வதோடு, சுருக்கு விசையையும் உருவாக்கி கொள்ளலாம். 


இதே வழிமுறையில் CD/DVD ட்ரைவை Close செய்ய,  Cdrom open f: என்பதற்கு பதிலாக CdRom Close f: என மற்றொரு ஷார்ட் கட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். 


இந்த NirCmd கருவியில் உள்ள 50 க்கும்  பிற கட்டளைகளை காணவும், தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.

.  

Friday 12 August, 2011

Google Chrome: பதிவர்களுக்கான அட்டகாசமான நீட்சி!

பதிவர்களில் பெரும்பாலோனோர் தங்களது இடுகைகளை உருவாக்க கூகிள் ப்ளாக்கரில் உள்ள ப்ளாக் எடிட்டரையே பெரும்பாலும் உபயோகித்து வருகின்றனர். இதில் சில சமயங்களில் படங்களை இணைப்பதிலும், காணொளிகளை இணைப்பதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

நமது வசதிக்கேற்றவாறு இடுகைகளை உருவாக்க கூகுள் க்ரோம் மற்றும் நெருப்புநரி உலாவிக்கான ScribeFire எனும் நீட்சி மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.


Add to Chrome பொத்தானை சொடுக்கி இந்த நீட்சியை உங்கள் க்ரோம் உலாவியில் பதிந்து கொண்டபிறகு, இது நிறுவப்பட்டதற்கான அறிவிப்பும் ஐகானும் உலாவியில் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இதனை முதல் முறையாக பயன்படுத்தும் பொழுது, உங்கள் பிளாக்கின் விவரங்களை உள்ளிணைக்க சொல்லும் கீழ்கண்ட அறிவிப்பு வரும்.

இந்த அறிவிப்பை பெட்டியை மூடிவிட்டு, இடது புற பேனில் உள்ள Add a New Blog லின்க்கை க்ளிக் செய்து உங்கள் பிளாக்கின் URL மற்றும் பயனர் பெயர், கடவு சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்யுங்கள். 


இப்பொழுது இடது புற பேனில் உங்கள் பிளாக்கில் உள்ள சிட்டைகள், மற்றும் தலைப்புக்கள் விவரமாக தொகுக்கப்பட்டிருப்பதை பாருங்கள்.

வலதுபுற பேனில் பல வசதிகளை உள்ளடக்கிய ப்ளாக் எடிட்டர்.


படங்களை இணைப்பது ப்ளாக்கரில் அதிக சமயம் எடுப்பது போலல்லாமல், நொடியில் இணைக்கப்படுகிறது.


இதே போன்று யூ ட்யுப் தளத்திலிருந்து நமக்கு தேவையான காணொளியின்   URL அல்லது Embed Code இணைப்பதும் மிகவும் சுலபமாக இருக்கிறது.
இந்த இடுகை இந்த நீட்சியில்தான் உருவாக்கப்பட்டது.

ScribeFire நீட்சி தரவிறக்க - Google Chrome
ScribeFire நீட்சி தரவிறக்க - Firefox

.



Monday 8 August, 2011

Microsoft OneNote - ஒரு அருமையான பயன்பாடு!

"Microsoft OneNote பயன்பாட்டை குறித்து இடுகை எழுதும் போதெல்லாம் தைரியமாக "தொடரும்.." போட்டு விடலாம் என தோன்றுகிறது. அந்த அளவிற்க்கு பல வசதிகளை உள்ளடக்கியது இந்த OneNote. ஏதாவது கணினி பயன்பாட்டில் ஒரு தேவை வரும்பொழுது, எதற்கும் OneNote -இல் முயற்சி செய்து பார்க்கலாமே, என தைரியமாக யோசிக்கலாம் என நினைக்கிறேன்!. "

என மைக்ரோசாப்ட் ஒன்நோட் பற்றிய எனது பழைய இடுகையில் ஒரு முறை நான் குறிப்பிட்டிருந்தேன். அது எந்த அளவிற்கு உண்மை என அதன் மேலதிக பயன்பாட்டை  அறிந்துக் கொள்ளும்பொழுது உணர முடிகிறது. 

உங்கள் அலுவலக காரியமாகவோ அல்லது தனிப்பட்ட வேலைக்காகவோ, ஏற்கனவே பிரின்ட் செய்யப்பட்ட ஒரு ஆவணத்தை மறுபடி தட்டச்சு செய்து, ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டியிருந்தால், அல்லது அந்த ஆவணம் ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு JPG/PDF வடிவில் இருந்தால், வேறு எந்த OCR மென்பொருளும் இல்லாமல், மைக்ரோசாப்ட் ஒன்நோட் மூலமாக எளிதாக டெக்ஸ்ட்டை மட்டும் பிரித்தெடுத்து வேர்டு போன்ற பயன்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

தேவையான ஆவணத்தை ஸ்கேன் செய்து JPG/PDF வடிவில் சேமித்துக் கொள்ளுங்கள். 


இனி வழக்கமாக பிரிண்ட் செய்வது போல, இந்த குறிப்பிட்ட கோப்பை பிரின்ட் செய்கையில் வழமையான பிண்டருக்கு பதிலாக Send to OneNote 2007/10 தேர்வு செய்து பிரின்ட் கொடுங்கள். இப்பொழுது அந்த கோப்பு படி எடுக்கப்பட்டு, ஒன்நோட்டில் திறக்கும். இப்பொழுது இதில் உள்ள படத்தின் மீது வலது க்ளிக் செய்து, திறக்கும் context menu வில் Copy Text from this Page of the Printout என்பதை சொடுக்குங்கள்.


இப்பொழுது டெக்ஸ்ட் பிரித்தெடுக்கப்படும்.


இனி வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு அங்கு பேஸ்ட் செய்திடுங்கள். இதில் ஒழுங்கமைப்பு மற்றும் வேறு மாறுதல்களை செய்து கொள்ளலாம். 



Microsoft OneNote - உபயோகமான பயன்பாடு

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை!

Microsoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி!

 

.

Friday 5 August, 2011

Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய

Facebook சமூக இணையத்தில் வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நண்பருடன் மட்டமே சாட் செய்யும் வசதி உள்ளதாக மட்டுமே நம்மில் பலரும்  அறிந்திருக்கிறோம்.  ஆனால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் உள்ள நாம் விரும்பும் பல நண்பர்களை ஒரு குழுவாக சேர்த்து சாட் செய்ய முடியும் என்பது நம்மில் சிலருக்கு தெரியாது. .
Facebook கணக்கில் நுழைந்து கொண்டு, ஆன்லைனில் இருக்கும் விரும்பிய நண்பர் ஒருவரை சாட்டில் க்ளிக் செய்யுங்கள். 





இப்பொழுது திறக்கும் சாட் பெட்டியில் வலது மேற்புறமுள்ள கியரை க்ளிக் செய்து Add Friends to Chat.. என்பதை க்ளிக் செய்யுங்கள். 





கீழே தோன்றும் பெட்டியில் நீங்கள் சாட் குழுவில் இணைக்க விரும்பும் நண்பர்கள் பெயரை ஒவ்வொன்றாக டைப் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 




அவ்வளவுதான் இனி இப்பொழுது உருவாக்கிய குழுவில் உள்ள நண்பர்களிடம் ஒரே சமயத்தில் சாட் செய்திட முடியும். 


.

Wednesday 3 August, 2011

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 
பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 
ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 





டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 



.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)