Showing posts with label Alexa Rank. Show all posts
Showing posts with label Alexa Rank. Show all posts

Wednesday, 17 November 2010

Gmail Tricks: மின்னஞ்சல்களை கோப்புகளாக சேமித்து வைக்க

வழக்கமாக நமக்கு Gmail லில் வருகின்ற முக்கியமான மின்னஞ்சல்களை, ஆவணப் படுத்துவதற்காக வேர்டு கோப்புகளாக மாற்ற, மின்னஞ்சலில் உள்ள விவரங்களை தேர்வு செய்து, காப்பி செய்து பின்னர் வெற்று வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்து சேமித்துக் கொள்வோம். 

இந்த பணியை மேலும் எளிதாக்க வந்துள்ளது Gmail Labs இன் Create a Document வசதி! இதனை நமது Gmail இல் இணைத்து எப்படி பயன் படுத்துவது என்பதை பார்க்கலாம்.

முதலில் உங்கள் Gmail கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். பிறகு வலது மேற்புற மூலையில் உள்ள Settings லிங்கை க்ளிக் செய்து, Settings பக்கத்திற்கு செல்லுங்கள்.


இங்குள்ள வசதிகளில் Labs லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

இங்கு Available Labs பட்டியலில் உள்ள ஒவ்வொரு வசதியாக பார்த்து, Create a Document பகுதிக்கு சென்று அதிலுள்ள Enable பொத்தானை அழுத்துங்கள்.


பிறகு அந்த பக்கத்தின் இறுதிக்கு சென்று அங்குள்ள Save changes பொத்தானை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி தேவையான மின்னஞ்சலை திறக்கும் பொழுது, வலது புறத்தில் புதிய மெனு தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.




இதில் Create a Document லிங்கை க்ளிக் செய்தால், அடுத்த டேபில் Google Docs திறக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒரு Google டாக்குமெண்டாக உருவாக்கப்படும்.


அடுத்து மேலே உள்ள File menu விற்கு சென்று, Download as க்ளிக் செய்து,

 


ODT, PDF, RTF, Text, Word, Html என தேவையான கோப்பு வகையை க்ளிக் செய்து தரவிறக்கி வைத்துக் கொள்ளலாம்.




.

Wednesday, 1 September 2010

இதற்குத்தானே ஆசைபட்டாய்.. நன்றி நண்பர்களே!..

இன்று காலை நண்பர் சாய்தாசன் அவர்களின் இடுகையை பார்த்ததில் (சுதந்திர இலவச மென்பொருள்)   எனது இந்த ப்ளாக் அலெக்சா ரேங்கில் 100785 ஆக இருந்தது. அவரது இடுகைக்கு ஓட்டு போட்டுவிட்டு ஒரு அரைமணிநேரம் கழித்து எனது அலெக்சா ரேங்கை பார்த்த பொழுது.. இன்ப அதிர்ச்சி 99,325 அதாவது ஒரு லட்சத்திற்குள்ளாக வந்து விட்டது. 


பல மாதங்களாக இந்த இலக்கை அடைய வேண்டுமென்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது, ஆனால் கடந்த ஜூலை மாதம் எனது ஜிமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எனது இந்த ப்ளாக்கும் நீக்கப்பட்ட பொழுது, மனம் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தது உண்மை. 



இன்று இது என்னால் சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும், சக பதிவுலக நண்பர்கள், திரட்டிகள் (தமிலிஷ் இன்ட்லி, தமிழ்மணம், உலவு, யாழ்தேவி, திரட்டி, தமிழ்வெளி) மேலான ஆதரவை தொடர்ந்து வழங்கிய வாசகர்கள் தான். 

அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. 

தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வேண்டி நிற்கும்,

அன்புடன்
சூர்யா கண்ணன் 


.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)