Monday 29 June, 2009

FireFox -ல் தேவையான ஃபோல்டரில் படங்களை எளிதாக சேமிக்க..,

நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் உபயோகித்து இணையத்திலிருந்து நிறைய படங்களை (Pictures) தரவிறக்கம் செய்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருக்கலாம்.

வழக்கமாக நாம் இணைய பக்கங்களில் உள்ள படங்களை வலது கிளிக் செய்து 'Save Image As' கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்வோம். ஆனால் அனைத்து படங்களும் ஒரே ஃபோல்டரில் சேமிக்கப்படும்.

படங்களை இனம் வாரியாக பிரித்து, உதாரணமாக Amazing Pictures,Technology, Wall papers,Flowers, Animals என தனித்தனி ஃபோல்டர்களில் ஒரே கிளிக்கில் சேமிக்க ஃபயர் ஃபாக்ஸில் வழி இருக்கிறது.


இங்கே கிளிக் செய்து Save Image in Folder என்ற Add-on ஐ தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.

இந்த Add-on ஐ உபயோகிப்பதன் மூலமாக நீங்கள் சேவ் செய்யும் பொழுதே நமக்கு தேவையான ஃபோல்டரை கிளிக் செய்தால் போதுமானது. (Save Image -ல் சென்று ஒவ்வொரு முறையும் தேவையான ஃபோல்டரை தேர்ந்தெடுக்க வேன்டிய அவசியம் இல்லை).

உங்களுக்கு தேவையான ஃபோல்டர்களை முதலில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

Save Image in Folder ஐ கணினியில் பதிந்த பிறகு பிரவுசரில் தேவைவான படத்தை வலது கிளிக் செய்தால் Context menu-ல் Save in Folder என்ற புதிய மெனு உருவாகியிருக்கும். இதில் 'Edit Folders..' ல் கிளிக் செய்து Main Tab இற்கு செல்லுங்கள். இங்கு New பட்டனை கொடுக்கி Folders டயலாக் பாக்சில் Description மற்றும் path கொடுத்து, தேவைப்பட்டால் Individual Folder Settings ல் மாற்றங்கள் செய்து OK சொடுக்கி மறுபடியும் OK கொடுத்து சேமித்துக் கொள்ளுங்கள். இதே போல் தேவையான அனைத்து ஃபோல்டர்களயும் இதே முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.




அவ்வளவுதான்.

இனி படங்களை சேமிக்கும் பொழுது Context menu வில் Save in Folder கிளிக் செய்தால், அதில் உங்களுக்கு தேவையான ஃபோல்டர்கள் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும். அதில் கிளிக் செய்து பயனடையுங்கள்.




Kamal Unnaipol Oruvan Official Posters, Kamal Unnaipol Oruvan Wallpapers, Kamal Unnaipol Oruvan stills, Kamal Unnaipol Oruvan Pics, Kamal Unnaipol Oruvan Photo Gallery



Thursday 25 June, 2009

கூகுள் ட்ரிக்ஸ்



ட்ரிக் - ஒன்று: உங்கள் திரையில் பறக்கும் படங்கள்

www.google.com சென்று images ல் சொடுக்கி Google Image Search க்கு செல்லுங்கள்.

இதில் Search Box -ல் Cat, Dog, Car என ஏதாவது ஒன்றை டைப் செய்து Search Images சொடுக்குங்கள். இப்பொழுது சம்பந்தப் பட்ட படங்களின் தம்ப்நேயில் படங்கள் திரையில் தோன்றும்.

அட்ரஸ் பாரில் உள்ள URL ஐ நீக்கிவிடுங்கள். உதாரணமாக,
http://images.google.co.in/images?hl=en&q=car&btnG=Search+Images&gbv=2&aq=f&oq=

இப்பொழுது இங்கே கிளிக் செய்து அதிலுள்ள Code ஐ காப்பி செய்து காலியாக உள்ள அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யுங்கள்.


இதோ உங்கள் திரையில் பறக்கும் படங்கள்.

ட்ரிக் - இரண்டு: குறிப்பிட்ட நாட்டின் தற்போதைய நேரத்தை அறிய..,

www.google.com சென்று சர்ச் பாரில் Time Canada என டைப் செய்து பாருங்கள்..,

Clock 5:20am Thursday (EDT) - Time in Ottawa, Canada
Newfoundland 6:50am NDT
Halifax 6:20am ADT
Winnipeg 4:20am CDT
Regina 3:20am CST
Edmonton 3:20am MDT
Vancouver 2:20am PDT


ட்ரிக்-மூன்று: ரூபாய் மதிப்பை அறிய..,

www.google.com சென்று சர்ச் பாரில்,

100$ in Euro
10 Euro in $
473$ in INR
50000 INR in $

மேலே குறிப்பிட்ட முறைகளில் முயற்சித்துப் பாருங்கள்.




Thursday 18 June, 2009

AutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிராயிங் ஃபைலை எந்த வடிவில் மாற்றினால் நல்லது?


வழக்கமாக ஆட்டோ கேடில் நாம் ஒரு வரைபடத்தை உருவாக்கி சேமிக்கும் பொழுது அது DWG கோப்பாக இருக்கும். இந்த கோப்பு ஆட்டோ கேட் மென்பொருள் உள்ள கனினியில் மட்டுமே திறக்கும் படியாக இருக்கும்.

சில சமயங்களில் நமது வாடிக்கையாளருக்கு ஒரு டிராயிங்கை மின் அஞ்சல் செய்யும்படி இருக்கும். அதேவேளை அவரது கணினியில் ஆட்டோ கேட் மென் பொருள் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆட்டோ கேட் உபயோகிக்க தெரியாதவராக இருக்கலாம்.

இதற்கு நம்மில் பலர் உபயோகிக்கும் வழி, அந்த கோப்பை JPG or Tiff கோப்பாக மாற்றி அனுப்புவது. ஆனால் இந்த முறையில் மாற்றப்படும் படங்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை அத்தோடு Background colour கருப்பு நிறமாக இருப்பதால், படத்தை பார்ப்பவருக்கும் ஒரு வித சலிப்பை தட்டும் விதமாக இருக்கும். பெரிய வரைபடமாக இருந்தால் அதை Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதுடன். அதில் ஒரு Proffessional Touch இருக்காது. PDF கோப்பாக மாற்றுவதற்கும் நம்முடைய கணினியில் வசதி இருக்க வேண்டும்.

இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க..,

விண்டோசில் WMF (Windows Meta File) என்ற வடிவம், அனைத்து கணினியிலும் திறக்கக் கூடியதாகவும் (Windows Picture and Fax viewer), எவ்வளவு பெரிதாக்கினாலும் தரம் குறையாமல் இருக்கும்.

வழக்கமாக ஆட்டோ கேடில் டிராயிங் ஏரியா கருப்பு நிறமாக இருக்கும். இதை வெள்ளை நிறமாக மாற்றுவோம்.

Tools menu விற்கு சென்று Options கிளிக் செய்யவும். இதில் Display tab-ல் Colours பட்டனை கிளிக் செய்து Window Element - இன் கீழ் Model Tab Background என்று இருப்பதில் நிறத்தை Black இற்கு பதிலாக White ஐ தேர்வு செய்து கொள்ளவும். Apply&Close மற்றும் Apply பிறகு Close கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் டிராயிங் ஏரியா வெண்மையாக மாறியிருக்கும்.



இப்பொழுது Command Window வில் wmfout என்ற கட்டளையை கொடுத்து என்டர் செய்து, கோப்பின் பெயரை கொடுத்து, பிறகு டிராயிங் ஏரியாவை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் போதுமானது.

WMF கோப்பு ரெடி! இனி இந்த கோப்பு எல்லா கணினியிலும் ஆட்டோ கேட் துணையின்றி திறக்கும்படியாக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட வழியை பின்பற்றி டிராயிங் ஏரியாவின் நிறத்தை பழையபடி கருப்பாக மாற்றிவிடவும்.

இந்த ஆட்டோ கேட் பற்றிய பதிவுகள் தொடர்ந்து இடலாம் என கருதுகிறேன். (வரவேற்பு இருந்தால்... உங்களுக்கு உபயோகமாக இருந்தால்)

Monday 15 June, 2009

Task Manager -இன் பயன்பாடுகள்.

வழக்கமாக விண்டோஸ் எக்ஸ்பியில் Task Manager ஐ நாம் 'Not Responding' என பிழைச் செய்தி வரும்பொழுது, 'End Task' செய்வதற்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறோம். அதன் இன்னும் சில அவசியமான பயன்பாடுகளை இங்கு பார்க்கலாம்.

டாஸ்க் மேனேஜருக்கு செல்ல கீழ்கண்ட வழிகள் உள்ளன.
1. Ctrl + Alt + Del.
2. Ctrl + Shift + Esc
3. Task Bar-ல் காலியாக உள்ள இடத்தில் மௌசின் வலது பொத்தானை அழுத்துவதன் மூலம்.

டாஸ்க் மேனேஜரில் 'Applications, Processes, Perfomance, Networking' மற்றும் 'Users' டேபுகள் உள்ளன.

Applications:-

நமது கணினியில் தற்பொழுது இயங்க்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும்.

சில சமயங்களில் ஒருசில அப்ளிகேஷன்கள் 'Not Responding' என வரும்பொழுது, இங்குள்ள பட்டியலில் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனில் வலது கிளிக் செய்து End Task செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை ஷிப்ட் கீயை அழுத்தி தேர்ந்தெடுத்து பின் வலது கிளிக் செய்து End Task செய்யலாம்.

இந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு அப்ளிகேஷனை வலது கிளிக் செய்து அதில் Go to Process கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனின் EXE file -இன் மெமரி உபயோகத்தை அறிந்து கொள்ளலாம். அப்ளிகேஷன் பெயரும் exe பைலின் பெயரும் மாறுபடலாம்.

ஒரு ஃபோல்டரிலிருந்து மற்றொரு ஃபோல்டருக்கு கோப்புகளை டிராக்(Drag) செய்யும் பொழுது, அந்த இரு விண்டோக்களும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஓவர்லேப் ஆகாமல் சரியாக Tile மோடில் arrange செய்யப்பட்டிரா விட்டால் சிரமமாக இருக்கும். அதற்கு ஒரு எளிய வழி விண்டோஸில் இங்கு மட்டுமே உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்டோக்களை ஒன்றின்மீது மற்றொன்று வராமல் திரையில் ஒரே அளவில் வரிசைப்படுத்த, அந்த அப்ளிகேஷன்களை, Applications tab- ல் தேர்ந்தெடுத்து வலது கிளிக் செய்து 'Tile Horizontally / Vertically' என்பதை தேர்வு செய்யலாம்.

Processes:-

இந்த டேபில், நம் கணினியின் பிராசஸரையும், மெமரியையும் எந்த பிராசஸ் எவ்வளவு உபயோகிக்கிறது என்பது இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். CPU / Mem usage - Tiltle லில் கிளிக் செய்வதன் மூலம் அஸென்டிங்/டெஸென்டிங் மாறிக்கொள்ளலாம். தேவையில்லாத அல்லது அதிக மெமரியை உபயோகிக்கும் எந்த ப்ராசஸையும் வலது கிளிக் செய்து End Process செய்யலாம்.



தற்பொழுது வரும் சில வைரஸ் மற்றும் வெர்ம்கள் ஒரு ப்ராசஸ் ஆகவே அமர்ந்து கணினியின் வேகத்தை குறைத்துவிடுகிறது. இதுபோன்ற ப்ராசஸ்களையும் இனம் கண்டு End Process செய்து விடலாம். (உதாரணம்: Svcchost, msblast.exe, Wowexec.)

வழக்கமாக நாம் மினிமைஸ் செய்யும் அப்ளிகேஷன்கள் சில சமயங்களில் RAM இல் சிறிதும் மற்றவை Virtual memory க்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. virtual memory யில் எவ்வளவு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் மற்றும் CPU, Mem usage தவிர பிற உபயோகங்களை டேபில் சேர்க்க View menu விற்கு சென்று Select Column கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

Performance:-

இந்த டேபில் CPU/ Memory usage ஆகியவற்றை வரைபடம் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும்.



டிப்ஸ்:-

தற்சமயம் உபயோகிக்காத அப்ளிகேஷன்களை மினிமைஸ் செய்வதன் மூலம் மெமெரி உபயோகத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும்.

Options menu -வில் Hide when minimized கிளிக் செய்து மினிமைஸ் செய்துவிட்டால், டாஸ்க் மேனேஜர் ஒரு சிறிய பச்சை நிற ஐகானாக உங்கள்
சிஸ்டம் ட்ரேயில் தெரியும். அதில் கர்சரை கொண்டுபோனால் சிபியு உபயோக சதவீதத்தை அறிந்து கொள்ளலாம்.



(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)

விகடனுக்கு எனது நன்றி

Friday 12 June, 2009

கணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன?


Computer Management என்பது 'Services, Applications, Disk tools மற்றும் User and Group Administration' ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டுள்ள கருவியாகும்.

மை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும். இதில் ஒவ்வொன்றிலும் என்ன வசதிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.



System Tools:-
இந்த பகுதியில் கணினியின் கண்காணிப்பு, பயனாளர்கள் மற்றும் பயனாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் Shared Folders ஐ கிளிக் செய்தால் 'Shares, Sessions மற்றும் open files' ஆகிய மூன்றும் பட்டியலில் வரும். 'Shares' ஐ தேர்வு செய்தால் Network Shared Folders மற்றும் Windows Administrator ஆல் ரிமோட் அக்ஸஸ் இற்காக உருவாக்கப்பட்ட Shared Folders ஐ பார்க்கலாம். இதில் ஏதாவது குறிப்பிட்ட Folder இன் பகிர்வை நீக்க அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்து Sharing and Security யில் Share this Folder என்பதை uncheck செய்து விடுங்கள்.

Sessions என்பது தற்பொழுது உங்கள் கணினிக்கு தொடர்பிலிருக்கும் பயனாளர்கள் பற்றிய தகவல்கள், பயனாளர்களின் வகை, கணினியின் பெயர், திறந்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை, தொடர்பு கொண்ட நேரம் ஆகியவற்றை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பாராத ஒரு பயனாளர் தொடர்பிலிருந்தால், அவர் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த ஃபோலடரிலிருந்து எந்த கோப்பை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை 'Open Files' ஐ கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு அட்மினிஸ்டிரேட்டராக நீங்கள் அதை முடக்கவும் செய்யலாம்.

Local Users and Groups:-

உங்கள் கணினியில் உள்ள பயனாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். புதிய பயனாளர் கணக்கு உருவாக்குவது, கணக்கை முடக்குவது, நீக்குவது, கடவுசொல்லை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் குறிப்பிட்ட பயனாளர் மறுமுறை லாகின் ஆகும்பொழுது கட்டாயமாக கடவுசொல்லை மாற்றும்படி கட்டளை கொடுப்பது என பல உபயோகமான கருவிகள் இருப்பதால் இது ஒன்றுக்க்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட கணினிக்கு மிகவும் உபயோகமானதாகும்.

Storage:-
இந்த பகுதியில் Disk Defragmenter மற்றும் Disk Management ஆகிய முக்கியமான கருவிகளும் Removable Storage கருவியும் உள்ளன.

இதில் Disk Defragmentation என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் அதை இந்த பதிவில் தவிர்த்துவிடலாம்.

Disk Management ல் Partitions உருவாக்குவது மற்றும் Format மிகவும் எளிதாக செய்யலாம். இது நமது ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்து partitions மற்றும் சிடி/டிவிடி போன்ற அனைத்து வால்யூம்களையும் காண்பிக்கும். இந்த கருவியின் மூலம் Dos Command அல்லது Stratup Disk எதுவும் இல்லாமல் partition களை உருவாக்க முடியும். ட்ரைவ்களுக்கு தேவையான ட்ரைவ் லெட்டர்களையும் கொடுக்க முடியும்.



புதிய partition ஐ உருவாக்க, Unpartition Space ல் வலது கிளிக் செய்து New Partition ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான partition வகையை தேர்வு செய்து (Primary, Extended or Logical) அடுத்து வரும் திரையில் partition size, Volume Label மற்றும் partition வகை (FAT32/NTFS). Format வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

எச்சரிக்கை:-
இந்த கருவியை உப்யோகிக்கும் பொழுது மிகவும் கவனமாகவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படியும் உபயோகிக்கவும்.
Services and Applications:-

இந்த கருவியை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட Service ஐ Start, Restart, Stop மற்றும் Pause செய்யலாம்.

இதிலுள்ள மற்றொரு அவசியமான (நொடியில் உங்கள் கோப்புகளை தேட..,) கருவியைப்பற்றி இந்த பதிவில் பார்க்கவும்.


(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)

விகடனுக்கு எனது நன்றி


Monday 8 June, 2009

விண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..,


Start க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது ரெஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control

என்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள "WaitToKillServiceTimeout" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.

வழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.

(3000 க்கு கீழே செல்வது கொஞ்சம் ரிஸ்க் தான்.)


Friday 5 June, 2009

Windows Vista வில் 'Copy to' மற்றும் 'Move to' வசதிகளை ரைட் கிளிக் Context மெனுவில் கொண்டுவருவது எப்படி?



Start Menu விற்கு சென்று Search Box இல் Regedit என டைப் செய்து என்டர்கொடுக்கவும்.


ரெஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_CLASSES_ROOT

AllFilesystemObjects

shellex

ContextMenuHandlers

இல் ரைட் கிளிக் செய்து New Key -> Name > Move To > இல் கீழ்கண்ட Value யைகொடுக்கவும்.

{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}

இப்பொழுது 'Move To' ஆப்ஷன் context menu வில் சேர்ந்திருக்கும்.

அடுத்து 'Copy To'

மேலே குறிப்பிட்டுள்ளது போல் செய்து Name - Copy To , என கொடுத்து கீழ்கண்ட Value யை கொடுக்கவும்.

{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}










Monday 1 June, 2009

பென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க..,

Tamil Computer, Tamil Songs, Tamil mp3, Tamil movies download

நாம் உபயோகிக்கும் பென் ட்ரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் அடிக்கடிதொல்லைத் தருவது, AutoRun.inf, REGSVR, SVCCHOST, Loverahul.vbs, r8.bat, Newfolder.exe போன்ற மால்வேர்கள்.


இவை நம் கணினியில் லைசன்ஸ்டு ஆண்டிவைரஸ் ப்ரோகிராம் இருந்தால் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை.

சில சமயங்களில் ஒவ்வொரு ஃபோலடர் பெயரிலும் ஒரு EXE file உருவாவது, Exe file கள் அனைத்தும் காணாமல் போவது, Windows Generic 32 error வருவதுபோன்ற பல சிக்கல்களை உருவாக்கும்.

இது போன்ற மால்வேர்களை அழிக்க என்ன செய்யலாம்.

http://pcsafety.us

என்ற தளத்திலிருந்து Combofix.exe என்ற சிறு கோப்பை தரவிறக்கம் செய்து ரன் செய்யுங்கள்.

இதை உபயோகிக்கும் பொழுது. 'Do you want to download Windows recovery console?' என்று கேட்கும். அதற்கு No கொடுத்துவிடுங்கள். மேலும் இதை ரன் செய்வதற்கு முன்பாக உங்கள் பென்டிரைவ், மெமரி கார்டுகளை கணினியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி தரவிறக்கம் செய்யும் Combofix ஒரு வாரத்திற்கு மட்டுமே வேலைசெய்யும். மறுபடியும் வேண்டுமென்றால் திரும்பவும் தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.

மேலும் இது ஏற்கனவே உள்ள மால்வேர்களை அழிக்குமே தவிர புதிதாக வருவதை தடுக்காது.


Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)