Monday 28 November, 2011

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு


(www.suryakannan.in - புதிய தளத்திற்கான சோதனை பதிவு..) 

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 



பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்)  அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல்  போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள  அவற்றின் ஷார்ட்கட்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். 






ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். 
 
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல்  ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப் செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி,  அந்த குறிப்பிட்ட ட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ள அனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். 

இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? 

இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள் மீட்கப்பட்டன.  பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். 





டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். 

 
 
.

20 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தொழில்நுட்பக் குறிப்பு நண்பரே..

dsfs said...

Thanks Sir

நட்புடன் ஜமால் said...

எளிமையா சொல்லப்பட்டுருக்கும் நல்ல தகவல் நன்றி

vasu balaji said...

thanks surya

சத்ரியன் said...

மிக மிக பயனுள்ள பதிவுங்க சூர்யா.

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன??"

தமிழார்வன் said...

நல்ல பதிவு... நன்றி சூர்யா...

-தமிழார்வன்.

2009kr said...

நல்ல பதிவு.

எனது பெண்டிரைவை சிஸ்டத்தில் இருந்து வெளியேற்றும் போது


Problem Ejecting USB Mass Storage Device

The device 'Generic volume' cannot be stopped right now. Try stopping the device again later.

என்னும் error message வருகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்பதை சொன்னால் உதவியாக இருக்கும்.

Unknown said...

இலகுவான வழி உள்ளது.
Tools> Folder Options> View> Trick Show Hidden Files And folders , Hide Protected Operating System Files> Ok

Guru said...

THANK YOU SO MUCH SIR

hassan said...

நண்பர் ஒருவரின் கணிணியில் ஃபோல்டர்கள் காணாமல் போயிருந்தன. நீங்கள் கொடுத்திருந்த Folder Shortcut Healer Piracyde25 NO VIRUS LAH.bat பேட்ச் ஃபைல் வழி மூலம் மீட்டு விட்டோம். நன்றி நண்பரே.

muthu123 said...

Sir, I have a doubt. Please clarify. When i see a good blog post, i want to share it to my friends through mail. But in my office i cant see images. So i have to send it as embedded image. Can you please tell an easy way to this problem. Advance thanks.

M.Muthukumar

vadakaraithariq said...

உங்கள் வலைப்பூவை வலைசரத்தில் அறிமுக படுத்தி இருக்கிறேன். பார்வைஇட்டு கருத்துக்களை பகிரவும்.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_15.html

தாரிக்

mansoor said...

really helpful trick to get my data back thanks to you

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Ganesh.G said...

Sir,Its been since 6months I used my memory card...recently I sloted it into ma new phone it shows an error that ma card was damaged..is there any way to recover my datas?

Ganesh.G said...

Sir,Its been since 6months I used my memory card...recently I sloted it into ma new phone it shows an error that ma card was damaged..is there any way to recover my datas?

Ganesh.G said...

Sir,Its been since 6months I used my memory card...recently I sloted it into ma new phone it shows an error that ma card was damaged..is there any way to recover my datas?

Unknown said...

Thank you for yr information I am no able to share this content to my friends through WhatsApp. Pls help me.

Unknown said...

Thank you for yr information I am no able to share this content to my friends through WhatsApp. Pls help me.

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)