Tuesday 23 August, 2011

FireFox: மவுஸ் கர்சரை இன்ஸ்டன்ட் சர்ச் டூலாக மாற்றுங்கள்..

நாம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கோ அல்லது அலுவல் நிமித்தமாகவோ இணையத்தில் ஏதேனும் ஒரு முக்கியமான கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்போம். அந்த குறிப்பிட்ட கட்டுரையில் அல்லது செய்தி தொகுப்பில் இடம்பெற்றுள்ள நாம் அறியாத ஏதாவது ஒரு விபரத்தை குறித்த மேலதிக தகவல்கள், விளக்க காணொளிகள், படங்கள் ஆகியவற்றை காண வழக்கமாக மற்றொரு டேபில் விக்கி பீடியா, யூ ட்யுப், கூகுள் இமேஜஸ் போன்ற தளங்களுக்கு சென்று தேடிப் பெற்றுக்கொள்வோம். இதற்காக நாம் செலவழிக்கும் நேரம் அதிகம். 



இந்த பணியை நமக்கு எளிதாக்க, நாம் இருக்கின்ற வலை பக்கத்திலேயே மேற் குறிப்பிட்ட விவரங்களை காண, நெருப்புநரி உலாவிக்கான மிகவும் பயனுள்ள நீட்சி Apture (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

 
இதனை தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு ஒருமுறை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். பிறகு உங்கள் அபிமான வலைப்பக்கத்தில் உங்களுக்கு மேலதிக விவரங்கள் தேவைப்படும் பட்சத்தில் தேவையான வார்த்தையை, வாக்கியத்தை மவுஸ் கர்சரில் தேர்வு செய்யுங்கள். 


இப்பொழுது புதிதாக Learn More எனும் பொத்தான் தோன்றுவதை கவனியுங்கள். இந்த பொத்தானில் மவுஸ் கர்சரை கொண்டு செல்லுங்கள். இப்பொழுது அந்த பக்கத்தில் புதிதாக திறக்கும் பெட்டியில் அதற்கான விளக்கத்தை பிற தகவல் தளங்களிலிருந்து காணலாம். 


இந்த பெட்டியில் உள்ள Videos டேபை க்ளிக் செய்து, அந்த குறிப்பிட்ட தகவல் சம்பந்தமான காணொளிகளையும் காணலாம். 
மேலும், Images டேபை க்ளிக் செய்து தகவல் சம்பந்தமான படங்களையும் காணலாம். 




.

12 comments:

dsfs said...

பயனுள்ள பதிவு. நன்றி

நட்புடன் ஜமால் said...

Thanks for Sharing ...

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தொழில்நுட்பமும்..
சிறப்பான விளக்கங்களும் அருமை நண்பா.

Anonymous said...

மிகவும் உபயோகமான பதிவு, என்னைப் போன்ற இணையதளத்தில் அதிகம் படிப்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும், மிக்க நன்றி,

suvaiyaana suvai said...

Hi remba nalla irukku unga site and usefullavum irukku thanks for sharing

enakku oru help pannunga please en kitta some CD's irukku computer and audiola work aagala:(( athila ulla songs aa eppdi copy panna mudiyum idea please thanks


Sutha

Unknown said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி Boss.

சந்தியா said...

இப்பவே செய்திட்டால் போச்சு.

கூகுலுக்கு வந்த தலையிடியை பார்த்தீர்களா ?500 மில்லியன் டொலரினை தண்டப் பணமாக வழங்கிய கூகிள்

COOL said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

அன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
அல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.

பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
பயப்படுகிறேன்!...
http://www.kaleelsms.com/2011/09/blog-post_9533.html

Tamil Baby Names said...

தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.

Tamil Boy baby Names

Admin said...

Dear sir
can you tell how to remove ms power point password in 2003 or 2007

please sir..........
I forgot my presentation slide password.so that time i can't edit that anyway so please help me sir.....

sent any answer for mail id-(msmujidh123@gmail.com)

2009kr said...

நண்பரே,
எனது நெருப்பு நரி திடீரென்று open ஆகாமல் தகறாறு செய்கிறது.... Your Firefox profile cannot be loaded. It may be missing or inaccessible என்று error message காட்டுகிறது. நான் windows 7 உபயோகப்படுத்துகிறேன்... இதை சரி செய்ய வழி சொல்லுங்களேன் பிளீஸ்....

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)