Wednesday 2 December, 2009

உலவிகளில் புக்மார்க்குகளை பேக்கப் எடுக்க

நாம் அவ்வப்பொழுது நமக்கு தேவையான வலைப் பக்கங்களை புக்மார்க் செய்து வைக்கிறோம். சில சமயங்களில், நாம் அந்த உலவியை கணினியிலிருந்து நீக்கும் பொழுது அல்லது கணினியை பார்மேட் செய்த பிறகு,  ஏற்கனவே சேமித்து வைத்த புக்மார்க்குகள் இல்லாமல் அவஸ்தை படுவோம். அதற்கு மாற்றாக, அந்த புக் மார்க்குகளை பேக்கப் எடுத்து வைத்தால் தேவையான சமயத்தில் மறுபடியும் உபயோகித்துக் கொள்ளலாம்.

இனி,

நெருப்புநரி உலவியில் புக் மார்க்குகளை பேக்கப் எடுக்க, உலவியில் உள்ள Bookmarks மெனுவில் கிளிக் செய்து Organise Bookmarks என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Library என்ற டயலாக் பாக்ஸில், Import and Backup மெனுவை கிளிக் செய்து, Backup எனும் வசதியை தேர்வு செய்தால், உங்கள் புக் மார்க்குகளை JSON என்ற கோப்பு வகையில் பேக்கப் எடுத்து தேவையான ஃபோல்டரில்   சேமித்து, தேவைப்படும் பொழுது, ரீ ஸ்டோர் செய்து கொள்ளலாம்.



இதே மெனுவில் உள்ள Export HTML எனும் வசதியில் புக் மார்க்குகளை சேமித்து வைத்தால் பிறகு, இதை வேறு எந்த உலவியிலும் திறக்கும் வகையில் HTML கோப்பாக சேமிக்கப்படும்.

Internet Explorer இல் Favorites ஐ பேக்கப் எடுக்க,

Internet Explorer ஐ திறந்து கொண்டு, File மெனுவில் Import and  Export  என்பதை கிளிக் செய்து,  


திறக்கும் விசார்டில் Export Favorites வசதியை தேர்வு செய்து, HTML கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.






.

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பா

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ஆ.ஞானசேகரன்

JKR said...

இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com

சூர்யா ௧ண்ணன் said...

வருகைக்கு நன்றி JKR

கிருஷ்ணா (Krishna) said...

உண்மையிலேயே யாருக்கும் அவ்வளவு தெரியாத தகவல். இருந்தாலும், Xmarks கூடுதல் தொகுப்பு மூலம் ஆன்லைன் backup செய்வது நன்று என்று நினைக்கிறன். அன்புடன்,கிருஷ்ணா. http://rvkrishnakumar.blogspot.com/

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)