Saturday 5 December, 2009

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? விண்டோஸ் சிடியை உபயோகித்து ரிப்பேர் செய்யலாம் என்று விண்டோஸ் சிடியில் பூட் செய்தால் ரிப்பேர் வசதி வரவில்லையா?

இனி பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் முக்கியமான கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது. இப்படி பூட் ஆகாத கணினியில், விண்டோஸ் லைவ் சிடி மூலமாக பூட் செய்து மீட்டெடுக்கலாம் ஆனால் இதே பணியை கட்டற்ற  இலவச மென்பொருளான உபுண்டு சிடியை உபயோகித்து எப்படி பேக்கப் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

இதற்கு உங்களிடம் Ubuntu சிடி இருக்க வேண்டும், வேண்டுமானால் தரவிறக்கச் சுட்டி வலது புறம் உள்ளது. அதோடு பேக்கப் எடுக்க ஏதாவது எக்ஸ்டெர்னல் ட்ரைவ் அல்லது யுஎஸ்பி ட்ரைவ் தேவைப்படும்.

இப்பொழுது, உபுண்டு சிடியில் உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். இதன் திரையில் “Try Ubuntu without any change to your computer”. என்ற வசதியை தேர்வு செய்து கொண்டு பூட் செய்யவும்.



கணினி உபுண்டுவில் பூட் ஆன பிறகு, Places மெனுவில் Computer வசதியை கிளிக் செய்யவும்.



இந்த File Browser இல்  உங்கள் கணினியில்  உள்ள அனைத்து வன்தட்டு பிரிவுகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் உங்கள் விண்டோஸ் ட்ரைவை இரட்டை கிளிக் செய்யவும். விண்டோஸ் ட்ரைவ் திறந்துவிட்டால் உங்கள் வேலை சுலபம். தேவையான கோப்புகளை எக்ஸ்டர்னல் ட்ரைவில் காப்பி செய்து கொள்ளலாம்.



ஆனால் சில சமயங்களில் “Unable to mount the volume” என்ற பிழைச் செய்தி வரும். நீங்கள் இறுதியாக விண்டோஸ் இயங்குதளத்தை முறையாக ஷட்டவுன் செய்யாமலிருந்தால் இந்த பிழைச் செய்தி வரும்.



இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள். இதில் Choice 2 -இல் என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்று கவனியுங்கள். ஏதாவது பிழை வந்தாலும், அந்த ட்ரைவை திறப்பதற்கான டெர்மினல் கட்டளை கொடுக்கப் பட்டிருக்கும்.



சரி, இனி  Applications  மெனுவில்   Accessories -> Terminal விண்டோவிற்கு சென்று கீழே தரப்பட்டுள்ள கட்டளைகளை கொடுங்கள். (இதை செய்வதற்கு நீங்கள் Administrator மோடில், லினக்ஸ் மொழியில் Root இற்கு செல்ல வேண்டும், இதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்)

sudo /bin/bash
இனி விண்டோஸ் ட்ரைவ் மவுன்ட் ஆவதற்காக ஒரு டைரக்டரியை உருவாக்க வேண்டும்.

mkdir /media/disk
இப்பொழுது கீழே உள்ள கட்டளையை உங்கள் வன்தட்டிற்கு ஏற்றவாறு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். அதாவது இந்த கட்டளையில் தரப்பட்டுள்ள /dev/sda1 என்பது எல்லா கணினிக்கும் பொதுவானதல்ல. முன்பு வந்த எர்ரர் விண்டோவில் தரப்பட்டிருந்ததை கொடுங்கள். இந்த கட்டளையானது, பிரச்சனையுள்ள பார்ட்டீஷனையும் மவுன்ட் செய்ய முயற்சிக்கும்.


mount -t ntfs-3g /dev/sda1 /media/disk -o force
உங்கள் விண்டோஸ் ட்ரைவ் NTFS அல்லாமல் FAT32 ஆக இருந்தால் இதற்கு பதிலாக கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

mount -t vfat -o umask=000 /dev/sda1 /media/disk


இனி உங்கள் விண்டோஸ் ட்ரைவ் உபுண்டு டெஸ்க்டாப்பில் வந்திருக்கும்.


உங்கள் எக்ஸ்டர்னல் ட்ரைவை செருகுங்கள், இது தானாகவே டெஸ்க்டாப்பில்  வந்துவிடும்,  இனி விண்டோஸ் ட்ரைவிலிருந்து உங்களக்கு அவசியமான கோப்புகளை (முக்கியமாக Documents and Settings ஃபோல்டரில் உள்ள உங்கள் பயனர் ஃபோல்டர்) எக்ஸ்டர்னல் ட்ரைவிற்கு  காப்பி செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்!



.

13 comments:

thiruthiru said...

Thank you for this posting. Recently my hard drive totally failed to boot and my service engineer says due to power supply to hard drive failed, it is not recognised by the system. Hence I replaced with a newer one. Now can I restore my data with this guidance? will it work in my case?

சூர்யா ௧ண்ணன் said...

Bios இல் Hard disk ஐ எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த முறையில் பேக்கப் எடுக்க முடியும்.

வானம்பாடிகள் said...

தலைவா! உங்களுக்கு சமய சஞ்சீவி சூர்யா தான் சரி. ஒரு வாரமா நம்ம கணினி நோ சிக்னல்னு சுத்துது. டாப் டென்ல இரண்டாவதுக்கு வாழ்த்துகள் சூர்யா.

பலா பட்டறை said...

இனிய நண்பரே ubuntu 9.10 இலவசமாக தபாலில் வரப்பெற்றேன்.. என்னுடையது compaq presario A900 with windows Vista Basic preloaded.. adsl broadband இணைப்பும் உள்ளது. ubuntu கணினியில் பதிந்துவிட்டேன் பூட் செய்து உபுண்டு திறந்து firefox மூலம் இன்டர்நெட் இணைப்பு கிடைக்க வில்லை என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாய் விளக்கவும் என் மின் அஞ்சல் palaapattarai@gmail.com. நன்றி.

கிருஷ்ணா (Krishna) said...

எளிமையான சிறப்பான விளக்கம்.லினக்ஸ் இல் உங்களுக்குள்ள ஆர்வம், ஆச்சர்யப்பட வைக்கிறது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள். அன்புடன் கிருஷ்ணாhttp://rvkrishnakumar.blogspot.com/

thiruthiru said...

Thanks. Is there anyway to repair this power supply problem? I am in a remote village near Ramanathapuram. Is there any service centres who can attend this type of faults? Mine is a 80GB Wetern Digital hard disk.

சிங்கக்குட்டி said...

நல்ல தகவல் ஆனால் ஒரு சந்தேகம்? என் மடிகணினி ட்ரைவ் பழுதாகி விட்டது (Hard Drive is not able to deduct by Windows XP CD to reinstall)இந்த முறையில் பழுதான என் விண்டோஸ் ட்ரைவை பார்க்க முடியுமா?

நித்தியானந்தம் said...

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி!!!ஒரு ஐயம்...நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முறையில் RAID (+ or - =0)செய்யப்பட்டுள்ள hard disk இல் இருந்து தகவலை மீட்டெடுக்க இயலுமா? இயலுமென்றால் நல்லது.. காரணம் நான் bart pe யில் SATA RAID Controllers ஐ manualஆக ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள bootable usb பென்டிரைவின் மூலமாகவே தகவல்களை மீட்டெடுக்கிறேன். இது RAID செய்யப்பட்ட hard disk லிருந்தும் தகவலை மீட்டெடுக்கிறது..நன்றி

HariV is not a aruvujeevi said...

Boot aagama makkar panniye HDD irunthu data urruviachice. Ananalum ubuntun 9.10-il side by side HDD il pathivu seiyum vasathi illaye, enna seiya? CD mulam boot seithu firefox moolamaga browing seiyum vasathi supero super. Atlast nangalum Linux-il kalli nanichi, thainni alli thalayil theli atchi, yellam surya kannan ponniyum. Nalla irrupa mavaraja.

HariV is not a aruvujeevi said...

Hi Surya, At last i have installed Ubuntu in my HDD. daily or update manager file vanthu konda irruke, enna seiya? avast anti-virus install panalama? fire wall? mega mukiyamana oru kelvi, how to vote in your blog?Thanks

சூர்யா ௧ண்ணன் said...

ஆண்டி வைரஸ் எதுவும் தேவையில்லை.., ஏனெனில் உபுண்டு இயங்குதளத்தில் வைரஸ் எதுவும் வரவே வராது என்பதுதான் அதனுடைய சிறப்பம்சம்.. www.tamilish.com சென்று உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கை துவங்கிக் கொள்ளுங்கள் .. பிறகு எனது பதிவுகளுக்கு ஓட்டளிக்க இயலும்..நன்றி...அன்புடன்சூர்யா கண்ணன்

Dinesh said...

என்னங்க எல்லாத்தயும் இவ்வளவு ஈசியா சொல்லிடீங்க... எல்லாருக்கும் புரியுற மாதிரி சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தினேஷ்

Labels

Alexa Rank (2) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)