நெருப்புநரி உலாவியில் வலைப் பக்கங்களில் உள்ள படங்கள் மற்றும் லிங்க்களை நாம் நமது கணினியில் சேமிக்கும் பொழுது, வழக்கமாக தேவையான படத்தில் அல்லது லிங்கில் வலது க்ளிக் செய்து context menu வில் Save Image as அல்லது Save Link as என்பதை க்ளிக் செய்து பிறகு எங்கு சேமிக்க வேண்டும் என்று Browse செய்து சேமித்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் வலைப்பக்கங்களில் நாம் சேமிக்கும் படங்களை எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்று context மேனுவிலேயே வந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். இதை சாத்தியப் படுத்த நெருப்பு நரிக்கான ஒரு எளிய நீட்சி Save File To Extension (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.)
இதனை உங்கள் நெருப்பு நரி உலாவியில் நிறுவிய பிறகு, இதன் Option இற்கு சென்று Save File to Options வசனப் பெட்டியில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.
இதில் Desktop, My Documents ஃபோல்டர்கள் default ஆக இருக்கும். இதிலுள்ள Page, Link, Image ஆகிய டேபிற்கு சென்று அந்த அந்த வகை கோப்புகளை எந்த ஃபோல்டரில் சேமிக்க வேண்டும் என்பதை கொடுக்கவும். உதாரணமாக வலைப் பக்கங்களை Desktop -இல் Software Downloads என்ற ஃபோல்டரில் மற்றும் படங்களை Desktop - Image Downloads என்ற ஃபோல்டரிலும் சேமிக்க வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட டேபிற்கு சென்று இந்த ஃபோல்டர்களை ADD செய்து விடுங்கள்.
இனி உங்கள் Context மெனுவில் இந்த ஃபோல்டர்கள் இணைக்கப்பட்டு விடும்.
No comments:
Post a Comment