விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டா பயனாளர்கள் தங்களது இயங்குதளத்தில் அடிக்கடி ஒரு அறிவிப்பை பார்த்திருக்கலாம். Program Compatibility Assistant என்ற வசனப் பெட்டியில் 'This Program might not have installed correctly' என்ற பிழைச் செய்தி அந்து குறிப்பிட்ட மென்பொருள் வேலை செய்தாலும் கூட, அவ்வப்பொழுது வந்து உங்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.
இந்த PCA என்கிற Program Compatibility Assistant கணினியை புதிதாக உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு தேவை என்றாலும், தொடர்ந்து கணினியை உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் இந்த அறிவிப்பை (நமக்குத்தான் தெரியுமே.. பிறகு என்ன திரும்ப திரும்ப.. ) விரும்புவதில்லை. இதனை நீக்க என்ன செய்யலாம்?
விண்டோஸ் 7 / விஸ்டாவில் சர்ச் பாக்ஸில் gpedit.msc என டைப் செய்து Local Group Policy Editor ஐ திறந்து கொள்ளுங்கள். இதன் இடது புற பேனில் கீழ்கண்ட பகுதிக்கு செல்லுங்கள்.
User Configuration
Administrative Templates
Windows Components
Application Compatibility
இனி இதன் வலது புற பேனில் Turn off Compatibility Assistant என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது திறக்கும் திரையில் enabled என்பதை தேர்வு செய்து Apply மற்றும் Close கொடுங்கள்.
.
6 comments:
அப்பாடா! இந்த கொடுமைக்கு விடுதலை கிடைச்சுது சாமி. நல்லாயிருங்க:))
தமிழிஷ் ஓட்டு பட்டைய கானோமே!!
தொல்லை நீக்கும், வழி காட்டியதற்கு நன்றி சூர்யாகண்ணன்.
நண்பரே தங்கள் என்னுடைய google Talk மூலமாக தொடர்பு கொள்ளமுடியுமா?ஒரு சின்ன விஷயம் பேசவேண்டியுள்ளது.என்னுடைய ID : globerahman@gmail.com
:)
தொல்லை நீக்கும், வழி காட்டியதற்கு நன்றி.
Post a Comment